Tuesday, January 16, 2007

அடியாத மாடு படியாதா??!!

மாணவர்களை தண்டிக்க தடை: தமிழக அரசு அறிவிப்பு

சில பள்ளிகளில் மாணவர் களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப் படுவதாகப் பெற்றோர், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவைகள் மூலம் அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. ஊடகங்களிலும் இத்தகைய சம்பவங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.

இத்தகைய தண்டனைகள் காரணமாக உணர்ச்சிவயப் படும் மாணவ-மாணவிகளில் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு வந்து விடுகின்றனர்.

இத்தகைய போக்குகள் முதல்-அமைச்சர் கருணாநிதி கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்தும், பள்ளிக்கல்வித்துறையின் ஓய்வு பெற்ற முன்னாள் இயக்குனர் முத்துகிருஷ்ணன் தலைவராகவும், பத்ம சேஷாத்திரி குழும கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஒய்.ஜி.பார்த்தசாரதியை துணைத்தலைவராகவும் கொண்ட உயர்நிலைக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலும், பள்ளி களில் முறை கேடாக நடக்கும் மாணவ- மாணவிகளுக்கு தண்டனை வழங்க வகை செய்திடும் தமிழ்நாடு கல்வி விதிகளில் உள்ள பிரிவு 51 என்பது நீக்கப்படுகிறது என அரசு அறிவிக்கிறது.

14 Comments:

Blogger Sivabalan said...

எங்க ஊரு பக்கம் பள்ளிக்கூடத்தில வாத்தியார் இதைத்தான் அடிக்கடி கூறுவார்.. அடியாது மாடு படியாது என்று..

ஆனால் இன்று காலம் மாறிவிட்டது.

குழுந்தைகளை அடிப்பது எந்த விதத்திலும் சரி கிடையாது என்பது என் எண்ணம். பள்ளிகளில் குழந்தைகளை அடிக்க கூடாது என்று அரசின் இந்த அறிவிப்பு வரவேற்க தக்கது.

அடித்து படிக்க வைப்பதைவிட பாட திட்டங்களில் இன்னும் மாற்றங்கள் கொண்டுவந்து படிக்க செய்வதே சரியான முறை.

January 16, 2007 9:03 AM  
Blogger Sivabalan said...

superqq3000,

Please give appropriate links only!!

Anyway Thanks for your visit!

January 16, 2007 9:08 AM  
Anonymous Anonymous said...

இந்த மாதிரி தமிழகமெங்கும் மாணவர்களை அடிப்பது அல்லது அதிகமாக வீட்டுப்பாடங்கள் கொடுத்து தண்டிப்பது நடக்கிறது. பிறமாநிலங்களில் இந்த தன்மை எப்படியோ தெரியவில்லை. இது மாற்றப்படவேண்டிய விடயம். நல்ல பதிவு!

இப்போது சென்னையிலா?

January 16, 2007 9:21 AM  
Blogger நாமக்கல் சிபி said...

ரொம்ப நல்ல விஷயம்.

ஒரு 15 வருஷத்துக்கு முன்னாடி வந்திருக்கக்கூடாது???

January 16, 2007 9:55 AM  
Blogger மங்கை said...

இப்பதான் டீவி ல போட்டாங்க.. ஒரு சின்னக் குழந்தைக்கு ஆசிரியர் பண்ண கொடுமையை..ஹ்ம்ம்... நல்லதொரு மாற்றம் / முன்னேற்றம்

மிக நல்ல பதிவு..

மங்கை

January 16, 2007 10:50 AM  
Blogger PRABHU RAJADURAI said...

சரியான முடிவுதான்...அடிப்பது என்பதே நம்மில் எஞ்சியிருக்கும் விலங்கு குணம்தானே!

'பிரம்பைக் கையாடதவன் தன் மகனை பகைக்கிறான்' என்று கிறிஸ்தவ பைபிளில் கூறப்பட்டிருக்கிறது...ஆனால், அடித்து ஒரு குழந்தையினை திருத்த முடியும் என்பதில் எனக்கு துளியளவும் நம்பிக்கையில்லை!

January 16, 2007 10:54 AM  
Blogger Sivabalan said...

திரு,

உண்மையில் இது நல்ல விசயம்தான்.. தமிழ்கம் முழுவதும் இது அமல்படுத்தப் படுகிறது?! என நினைக்கிறேன்.

வருகைக்கு மிக்க நன்றி

January 17, 2007 8:06 AM  
Blogger Sivabalan said...

பாலாஜி,

உங்க ஏக்கம்தான் எனக்கும்.. ஒரு 25 வருடத்திற்கு முன்னாடி வந்திருக்க கூடாதா?!!!
Ha Ha Ha...

வருகைக்கு மிக்க நன்றி

January 17, 2007 8:07 AM  
Blogger Sivabalan said...

மங்கை,
நிச்சயம் இது நல்ல மாற்றம்தான். குழந்தைகளை அடிப்பதைவிட பெரியவர்கள் ஆக்கப்பூர்வமா சிந்திச்சு சரியான பாதையில் எடுத்துச் செல்வதுதான் நல்லது. நிச்சயம் இது பயனளிக்கும்.

அடிப்பதால் குழந்தைகளுக்கு பய உணர்ச்சி அதிகமாகிவிடுகிறது. இது குழத்தையின் தனித்தன்மை, கற்பனை திறன் தன்னபிக்கை ... எல்லாவற்றுக்கும் பாதிப்பை உண்டு பண்ணுகிறது.

தமிழக அரசின் இந்த முடிவு நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

எங்க கணக்கு வாத்தியார் எப்பவும் கடின சொல்லோ அடிப்பதோ கிடையாது. பாடமும் நன்றாக எடுப்பார். அதனாலேயே கணக்கு வகுப்பு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.. நல்ல மார்க் பெறுவோம்..

எல்லா குழ்ந்தைகளும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!!


வருகைக்கு மிக்க நன்றி

January 17, 2007 8:23 AM  
Blogger Sivabalan said...

பிரபுராஜாதுரை சார்,

மிக அருமையாக சொன்னீர்கள்..

வருகைக்கு மிக்க நன்றி

January 17, 2007 8:25 AM  
Blogger ரவி said...

இந்த சட்டத்தை ஒரு பதினைஞ்சு வருசம் முன்னாலெயே கொண்டுவந்திருக்க கூடாதா ? என்னோட கெமிஸ்டரி வாத்தியார் தலையில கொட்டி கொட்டி நான் ரெண்டு இஞ்சு உயரம் கம்மியாகிருக்க மாட்டேனே !!!

January 17, 2007 8:33 AM  
Blogger Sivabalan said...

ரவி,

உங்க ஏக்கதான் எனக்கும்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...

வருகைக்கு மிக்க நன்றி

January 17, 2007 8:37 AM  
Anonymous Anonymous said...

அடிப்பதால் படிப்பு வராது, மாறாக அந்த ஆசிரியர், அந்தப்பாடம் ஆகியவற்றின் மீது வெறுப்புத்தான் வரும். இது எனது சொந்த அனுபவம்.

மிக இலகுவாக சொல்லிக் தரக்கூடிய கணக்குப்பாடத்தில் அடித்துப் படிப்பித்ததால் எனக்கு கணக்கு என்றாலே வெறுப்புத்தான். படித்து முடிக்கும்வரை நான் 30 மார்க்கிற்கு மேல் வாங்கியதில்லை.(வீட்டில் அடிவாங்கியது வேறு கதை)

அடிக்காமல் சொல்லித்தந்த மற்றப் பாடங்கள் மிக இலகுவாக வந்தது.

ஆனால் இன்று கனடாவில் நிதித்துறையில் முதலீட்டு ஆலோசகராக இருக்கிறேன்.

அன்று வகுப்பில் போட்டதைவிட சிக்கலான கணக்குகளுக்கு விடை கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் முடிகிறது.

காரணம் கற்பித்தல் முறை. ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் முறை புரியாவிட்டால் நமக்குப் புரியும் விதத்தில் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கிறார்.

அடிப்பதால் சொல்லிக்கொடுக்க முடியாது, திணிக்கத்தான் முடியும். திணித்தால் ஏறாது!!

January 17, 2007 10:29 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

எனக்கு, இந்த பதிவுக்கு நம்ம சுப்பையா வாத்தியார் என்ன விளக்கம் சொல்லுவார் என்று கேட்க ஆவலாக உள்ளது !

January 17, 2007 11:15 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv