நாயே?! உடல் கூசுகிறது?!
பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் "Big Brother" என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. ஒரு வீட்டில் 6 பிரபலங்களை குடிவைத்து, அவர்களின் அன்றாட நிகழ்ச்சிகளை தொலைகாட்சியில் ஒளிபரப்பும். இந்த நிகழ்ச்சியை காணும் நேயர்கள் பிரபலங்களின் அன்றாட நடவடிக்கையை பார்த்து அவர் அந்த வீட்டில் வாழத் தகுதியானவரா இல்லையா என்பதை தொலைக்காட்சி நிறுவனத்துக்கு தெரிவிக்கும். அதன் அடிப்படையில் ஒருவர் பின் ஒருவராக வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவர். யார் கடைசி வரை வீட்டில் குடியிருக்கிறாரோ அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு பெரிய தொகை வழங்கப்படும்.
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கு ரூ.3 கோடி சம்பளம் தனியாக தரப்படும்.
கடந்த 2ம் தேதி இந்தப் போட்டிக்கான புதிய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி இடம் பெற்றிருந்தார். மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் ஜெர்மைன் ஜேக்சன், பிரபல பாடகர் வாட்கின்ஸ், முன்னாள் அழகி டேனியல்லி லாயிட், ஜோ மீரா, ஜேட் குட்டி, கரோல் மலோன் ஆகியோர் இதர போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை கரோல் மலோன் இந்தப்போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்கு ஷில்பா ஆறுதல் அளித்த போது மற்ற பெண் போட்டியாளர்கள் அவரை கேலி செய்துள்ளனர்.
டேனியல்லி லாயிட், ஷில்பாவை நாய் என திட்டியதும், ஷில்பாவை பார்த்தால் உடல் கூசுகிறது என ஜேட் குட்டி விமர்சித்ததும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதைக் கேட்ட ஷில்பா கண்ணீர் விட்டுக் கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இங்கிலாந்து முழுவதும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை நேரடியாக பார்த்த இந்தியர்கள் மத்தியில் மட்டும் அல்லாது இனபேதம் பார்க்காத ஒரு சில ஆங்கிலேயர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்காணிக்கும் அமைப்புக்கு நேற்று வரை 4500 புகார்கள் குவிந்துள்ளன. லண்டன் பாராளுமன்றத்திலும் இப்பிரச்னையை தொழிலாளர் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளி எம்.பி. கீத் வாஸ் எழுப்பியுள்ளார். சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனமும் இக்குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்ள மற்றவர்களைக் காட்டிலும் ஷில்பா ஷெட்டிக்கு கூடுதலாக ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டதே பிரச்னைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
10 Comments:
கண்டிக்கப்பட வேண்டியது. மிகவும் தவறான செயல்.
இன்று மாலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த செய்தி ஒலிபரப்புத் துறை மந்திரி பிரியரஞ்சந்தாஸ் முன்ஷி....தனது கவலையை தெரிவித்ததுடன் இது தொடர்பாய் இந்திய தூதரகத்திடம் விளக்கம் கேட்டிருப்பதாயும்...தேவைப்பட்டால் இதுகுறித்து பிரிட்டன் அரசுடன் பேசுமென தெரிவித்துள்ளார்.
ஜீரா,
ஆமாங்க.. கண்டிகப்படவேண்டிய ஒன்றுதான்.. இனபேதம் கூட இது போன்ற செயல்களுக்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.
வருகைக்கு நன்றி
/மைக்கேல் ஜாக்சனின் தம்பி ஜெர்மைன் ஜேக்சன்/
அண்ணன்
பங்காளி,
தகவலுக்கு நன்றிங்க..!
வருகைக்கு நன்றி!
-/பெயரிலி,
பிழையை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி!
வருகைக்கு நன்றி
http://news.bbc.co.uk/2/hi/entertainment/3826561.stm
வாய்ப்புக் கிடைத்தால் தானும் மேலேறி மிதிக்கலாம் நினைப்பதில் நம் ஆட்களும் ஒன்றும் குறைந்தவர்களில்லை என்பதுதான் நிஜம் ;-).
நீங்க ரியாலிட்டி ஷோக்களே பார்ப்பதில்லை போல இருக்கு, இதைவிடக் கொடுமை எல்லாம் நடக்கும். அதுக்குத்தான் அம்புட்டு பணம். இதுக்கு எல்லாம் உணர்ச்சிவசப்படறது தப்பு என்பது என் எண்ணம்.
சன்னாசி,
பகிர்தலுக்கு நன்றி
வருகைக்கு நன்றி
இகொ
நீங்க சொல்வது ஓரளவு சரிதான்... ஏற்றுக் கொள்கிறேன்..
ஆனா பாருங்க இதில இந்தியன், இந்தியா என்று வந்ததால் பிரச்சனைக்கு உள்ளே குத்தித்துவிட்டேன்..Hi Hi Hi..
வருகைக்கு நன்றி
Post a Comment
<< Home