Monday, January 22, 2007

அமெரிக்க அதிபர் ஹிலாரி கிளிண்டன் ?!

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு (2008) நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது.

இந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்து இருக்கிறார். 59 வயதான ஹிலாரி இப்போது நியுயார்க் சென்ட்ராக இருக்கிறார்.

பார்க்க " வலைதளம்...."

அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முடிவு செய்துள்ள ஹிலாரி பிரசாரத்தையும் தொடங்கி விட்டார். கட்சி அளவில் பல்வேறு கட்டங்களில் தேர்தல் நடத்த பிறகே முறைப்படி அதிகாரபூர்வ வேட்பாளர் யார் என்பதை கட்சி மேலிடம் அறிவிக்கும்.ஜனநாயக கட்சி சார்பில் இல்லினாயிஸ் (நான் இருக்கும் மாகானம்) செனட்டர் பராக் ஒபாமா ( பார்க்க " வலைதளம்...." ) என்பவரும் அதிபர் வேட்பாளராக போட்டியிட முடிவு செய்திருக்கிறார். இவர் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர். இவரை இன்னொரு மார்டின் லூதர் அரசர் என மக்கள் புகழாரம் செய்கின்றனர்.


இது தவிர ஜான் எட்வர்ட்ஸ், கவர்னர் டாம்வில்சாக், அலாங்கா கவர்னர் மைக் கிராவல், ஜோ பிடன், டென் னிஸ் குசினிச், கிறிஸ்டாப் ஆகியோர் பெயர்களும் அடி படுகின்றன.

இதுபற்றி அங்குள்ள ஒரு நிறுவனம் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது.

இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன்தான் அதிபர் பதவிக்கு வேட்பாளராக முறைப்படி அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு கட்சியில் 41 சதவீத ஆதரவு உள்ளது.

அதிபர் தேர்தலிலும் ஹிலாரிதான் அமோக வெற்றி பெறுவார் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

பராக் ஒபமாவுக்கு 17 சதவீத ஆதரவே உள்ளது.

55 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 60 சத வீதம் பேர் ஹிலாரியை ஆதரிக்கிறார்கள்.

ஆளும் குடியரசு கட்சியில் அதிபர் தேர்தல் வேட்பாளராக கன்சாஸ் செனட்டர் சாம் புபன்பாக், ஜிம்கில்மோர், மேயர் ரூடி குலியானி, ஜான் மெக்கேன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.

9 Comments:

Blogger Boston Bala said...

---இவர் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர். ---

சன் டிவியிலும் இதே பிரயோகத்தைக் கேட்டேன். இவ்விதம் சொல்வது சரியா, தப்பா என்று அப்பொழுதில் இருந்து குழப்பம். தவறு என்றால் 'ஆப்பிரிக்க அமெரிக்கர்', அவரின் இனத்தை முழுமையாகக் குறிக்கிறதா? Colored people என்னும் பதத்தை இங்கு சிலர் உபயோகிக்கிறார்கள். அமெரிக்காவிலும் black என்ற அடைமொழியுடனேயே ஒபாமாவை அறிமுகம் செய்கிறார்கள்!

இவர்களுடன் கூட இன்னொருவர் களத்தில் குதித்திருக்கிறார்: New Mexico's Richardson poised to join the race

ஒன்றரை வருடம் முன்பு நான் எழுதிய கட்டுரை: Who's the next republican candidate / அமெரிக்காவின் அடுத்த குடியரசு நாயகர் யார்?

January 22, 2007 9:14 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

அடுத்த பெரியண்ணன் யார் என்பதைப் பற்றிய பதிவா ?
:)))))))

January 22, 2007 9:15 AM  
Anonymous Anonymous said...

நல்ல ஆரம்பம்.முடிவை எதிர்பார்த்து. அமெரிக்காவும், மக்களும். காண்டலீசா அக்கா என்ன ஆனாங்க? போட்டியில இல்லையா? :)

January 22, 2007 9:17 AM  
Anonymous Anonymous said...

அடுத்த பெரியண்ணன் யார் என்பதைப் பற்றிய பதிவா ?
:)))))))

January 22, 2007 9:21 AM  
Blogger Sivabalan said...

பாபா,

இங்கே நீங்கள் சொல்வதுபோல் கருப்பினத்தவர் என்று சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.. ஆனால் அது சரியா என்று கேட்டால், அது தவறுதான்.

இங்கே பொதுவாகவே இது போன்ற ஆட்களை குறிப்பிடும்போதே அவரின் நிறம்/இனம் சர்வசாதரணமாக செய்திகள்/ஊடகங்கள் வெளியிடுகின்றன. இங்கே இருப்பவர்களுக்கு அது பழகிவிட்டதா?ம்ம்ம்ம்ம்.. வருத்தமாகத்தான் இருக்கிறது.

உங்கள் பதிவு படித்தேன்.. நன்றாக எழுதியுள்ளீர்கள்.

உண்மையில் ஹிலாரி திறமையானவர்தானா? ....

குடியரசு கட்சியின் கேள்விகனைகளை எதிர் கொள்வாரா?

குறிப்பாக,
1. Illegal Immigration
2. Abortion
3. Iraq
4. Tax reforms
5. Medicare

and so on ..

Hmmmmmmmmmmmmmmmmmmmmmm...

பார்ப்போம்.. என்ன நடக்கிறது என்று.


ஆனால் ் பராக் ஒபாமா, நான் கேள்விப் பட்டவரையில் மிகவும் திறமையானவர். அவருக்குத்தான் என் ஆதரவு!

January 22, 2007 11:27 AM  
Blogger Sivabalan said...

GK,

இந்த பெரியண்ணன் யாரென்று தெரிவதில்தான் இப்போ சுவாரசியமே..

அதுவும் சென்ட் ஜனநாயக கட்சியிடம் சென்ற பிறகு புஷ் டம்மியாகிவிட்டார்..

அதனால்தான் இப்ப ஹிலார பேச்சு எங்கு பார்த்தாலும்..

January 22, 2007 11:34 AM  
Blogger Sivabalan said...

திரு

ஏனோ காண்டலீசா இன்னும் போட்டியில் குதிக்கவில்லை.. அவர் ஈராக் பிரச்சனையில் பேரை கொஞ்சம் கெடுத்துவிட்டார்..

ஆனால் குடியரசு கட்சியின் இன்னொரு நம்பிக்கை நட்சத்திரம் காண்டலீசா ..

January 22, 2007 11:39 AM  
Blogger Boston Bala said...

இன்று கண்ணில் பட்டவை...

Candidates Face New Test: Winning Netroots Primary - WSJ.com: Candidates for the 2008 race are already seeking to win bloggers' favor.

WSJ.com: Circling the Oval Office - Speculation about the contenders in the 2008 presidential election has been swirling for months, and with last year's midterm election out of the way, the race for the White House is starting to heat up. Who will throw their hats into the ring? A look at who's in the race, who's out and who's somewhere in the middle for 2008.

January 22, 2007 7:18 PM  
Blogger Sivabalan said...

பாபா

சுட்டிக்கு நன்றி!

January 22, 2007 7:25 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv