ஆண்களுக்கு மட்டும்
இது ஆண்களுக்கு வரும் சில புற்று நோய்களைப் பற்றியது.
விந்தகப் புற்று
விந்தகத்தில் புற்றுநோய் வந்தால் விதைப்பகுதியில் வீக்கம், அதனால் பாரம், சிறுநீர்ப் பையில் நீர் தேங்கியிருக்கும். வலியிருக்கும்.
சில குழந்தைகளின் ஆணுறுப்பு மிக நீளமாக வளர்ந்திருக்கும். இது சாதாரணமானது என நினைத்திருப்பார்கள். பரிசோதனை செய்து பார்த்தால் டெரட்டோமா என்ற புற்றுநோய் வந்திருக்கும். விந்தகப் புற்று நோயில் சுமார் 32 விழுக்காடு அளவு இந்தப் புற்று நோய்தான்.
வயதான ஆண்களை செமினோமா புற்றுநோய் தாக்குகிறது.
புராஸ்டேட் புற்றுநோய்
அதிகமாக உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது என அந்தக் காலத்திலிருந்து பெரியவர்கள் வலியுறுத்தி வருவது ஏன் தெரியுமா? ஆணின உறுப்புகள் அழற்சியடைந்தால் அதில் நோய் வரும் என்பதால்தான்.
குறிப்பாக புராஸ்டேட் அழற்சியடைந்து நாளடைவில் புற்றுநோயைக் கொண்டு வந்துவிடும். இந்தப் பகுதியில் புற்று நோய் வந்தால் அது அங்கிருந்து சிறுநீரகம், இடுப்புப் பகுதி, தண்டுவடம், எலும்புகள் என பரவும்.
இப்பகுதியில் புற்றுநோய் வந்திருந்தால் அடி வயிற்றில் வலியிருக்கும். நோய் நிண நீர் வழியாக பரவியிருந்தால் தொண்டையில் கூட வலிக்கும். சிறுநீர் கழிக்க இயலாது. கணுக்கால் வீங்கியிருக்கும். ரத்த சோகையும் எலும்புகளில் வலியும் தோன்றும்.
வருடத்திற்கு ஒருமுறையாவது விந்தகத்தில் மாற்ற மிருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும். அப்படி ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற் கொள்வது அவசியம்.
ஆணுறுப்பு புற்றுநோய்
செல்களில் இயல்பு மாற்றம், உறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளாதது, ஆணுறுப்பின் முன் பகுதியில் மாவுமாவாக உள்ள ஸ்மெக்மா என்ற மாவுப்பொருளில் ஏற்படும் கிருமித் தொற்று, பாப்பிலோமா போன்ற வைரஸ் கிருமிகள், ஆணுறுப்பில் தோன்றும் மச்சம், மருக்கள் ஆகியவற்றை அலட்சியம் செய்வது, புகை மற்றும் மதுப்பழக்கம், சுற்றுச்சூழல் காரணிகள், பணிகள் போன்றவையும் இந்தப் புற்றுநோயை உண்டாக்குகின்றன.
நன்றி: தினகரன்
6 Comments:
மேலே உள்ள படம், அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியில் வெளியான ஒரு சர்வே.. உங்கள் பார்வைக்கு..
நன்றி: அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி
ரொம்ப பயமுறுத்துருங்க சிபா !
டாக்டர் எஸ்கே ஐயா தான் வந்து பயத்தை தெளிவிக்கனும்.
சிவபாலன்,
தகவலுக்கு நன்றி.
GK,
ம்ம்ம்.. பயமாகத்தான் இருக்கு..
வருகைக்கு மிக்க நன்றி
வெற்றி ,
வருகைக்கு மிக்க நன்றி
Karthi,
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment
<< Home