Thursday, January 25, 2007

யார் முட்டாள்?











முழு விடியோவப் பார்க்க இங்கே கிளிக் செயுங்க..

22 Comments:

Blogger Sivabalan said...

வீடியோ டவுன்லோடு ஆக கொஞ்சம் லேட் ஆகும்.. பொருமையா பாருங்க..

January 25, 2007 10:28 PM  
Anonymous Anonymous said...

உலகின் சிறந்த விஞ்ஞானியாக கருதப்படும் ஐன்ஸ்ட்டீனுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது!!!

January 25, 2007 11:24 PM  
Blogger Boston Bala said...

கேள்வி: யார் முட்டாள்?

பதில்: அடுத்தவன் 'முட்டாள்' என்று சொல்பவன் எல்லாருமே முட்டாள்.

பகுத்தறிவாளரும் சரி என்பாரா : )

January 25, 2007 11:42 PM  
Anonymous Anonymous said...

இவர்களை எல்லாம் படச்சதே கடவுள்தானே.

இவங்க இல்லன்னு சொல்லிட்டா ஆச்சா?

போற்றுவால் போற்றலும், தூற்றுவார் தூற்றலும், போகட்டும் கண்ணனுக்கே!

இவங்கள எல்லாம் தூக்கி போட்டு சாப்பிட்ட இன்னொரு அதி மேதாவி Sir Isaac Newton. இவர் ஒரு தீவிர கடவுள் பக்தர்.

so?

January 25, 2007 11:44 PM  
Blogger குமரன் (Kumaran) said...

நல்ல ஒலி ஒளிப்படம் சிவபாலன். இன்னும் முழுதாகப் பார்க்கவில்லை. நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.

All fools day is meant to celebrate all these fools? Hmm. Makes sense.

இறை மறுப்பாளர்களான கண்டுபிடிப்பாளர்களை நன்றாகத் தொகுத்திருக்கிறார்கள். ஆனால் இறை நம்பிக்கை உள்ள கண்டுபிடிப்பாளர்களும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள் என்பது இந்த படம் சொல்லும் செய்திக்கு மறு பக்கம்.

பைபிளின் ஒரு வசனத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு இந்த அறிஞர்கள் எல்லாம் முட்டாள்களா என்று கேட்டிருக்கிறார்கள். நல்ல கேள்வி. இவர்கள் முட்டாள்கள் இல்லை. அதே போல் 'பகுத்தறிவு' என்று 'கடவுள் மறுப்பை'க் கூறிக் கொள்ளும் அன்பர்களும் ஆயிரக்கணக்கில் இருக்கும் கடவுள் நம்பிக்கை உள்ள அறிவியலாளர்கள் பகுத்தறிவு இல்லாதவர்களா என்று சொல்ல வேண்டும்.

January 26, 2007 6:11 AM  
Blogger Sivabalan said...

பாலாஜி

உங்கள் கருத்துக்கு நன்றி!!

நிச்சயம் மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் முட்டாள்கள் இல்லை என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என எனக்கு தெரியும்..

வருகைக்கு நன்றி

January 26, 2007 10:37 PM  
Blogger Sivabalan said...

பாபா,

பொதுவுல எல்லாரையும் போட்டுதாக்கிட்டீங்க.. இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை... Ha Ha Ha..


வருகைக்கு மிக்க நன்றி

January 26, 2007 10:41 PM  
Blogger Sivabalan said...

சர்வே சன்

கடவுள்தான் படைச்சாரா?? சரி விடுங்க.. இன்னொரு இடத்தில் நேரம் கிடைக்கும் போது பேசிக்குவோம்..

அப்பறம் நீங்க சர்வே எடுப்பது நல்லாயிருக்கிறது..
வாழ்த்துக்கள்!

வருகைக்கு நன்றி

January 26, 2007 10:46 PM  
Blogger Sivabalan said...

Bopower

Thanks for your visit!

January 26, 2007 10:48 PM  
Blogger Sivabalan said...

குமரன் சார்,

உங்கள் கருத்து ஏற்புடையதே!

வருகைக்கு மிக்க நன்றி

January 26, 2007 10:50 PM  
Anonymous Anonymous said...

மிஸ்டர் சிவபாலன்,

ஒரு முடிவோடு இருப்பவர்களை யாரும் மாற்ற முடியாது. இறைநம்பி்க்கையும், நம்பிக்கையின்மையும் அப்படித்தான்.

யாரும், யாரையும் மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை!

கவியரசர் கண்ணதாசன் இதற்கு தீர்வு சொல்லியீருக்கிறார்.

"உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை!"

ஆகவே அவரவர்கள் வழியில் அவரவரகள் செல்லட்டும்

"பாதை வகுத்த பின்னே
பயந்தென்ன லாபம்
பயணம் நடத்திடு
முடிந்திடும் பாபம்!""
----- கண்ணதாசன்

January 27, 2007 12:16 AM  
Blogger PRABHU RAJADURAI said...

"ஆகவே அவரவர்கள் வழியில் அவரவரகள் செல்லட்டும்"

முட்டாள் என்பதும், நரகத்தில் கொப்பரைதான் உனக்கு என்பதும் அடுத்தவர் வழியில் செல்வதாகாதா?

January 27, 2007 10:57 AM  
Blogger வெற்றி said...

+

January 27, 2007 10:58 AM  
Blogger Sivabalan said...

Hi Every one!

I do know, How come comment counter change like this!!

Anybody has the answer?

January 27, 2007 11:34 AM  
Anonymous Anonymous said...

சிவபாலன்,
இது உங்களுக்கு மட்டுமல்ல. வேறு சிலரின் பதிவுகளிலும் இதைப் பார்த்திருக்கிறேன்.

இன்று காலை என்னால் என் Blogger account ஐத் திறக்கவே முடியவில்லை என்றால் பாருங்களேன். புதிய Blogger க்கு மாற்றினால்தான் உள்ளே போகலாம் என்று என்னை புது Blogger க்கு மாற்ற கட்டாயப்படுத்தி விட்டார்கள். Template ல் பல மாற்றங்கள் செய்ய வேண்டும். இப்போதைக்கு நேரம் இல்லை. ம்ம்ம்...

January 27, 2007 12:25 PM  
Blogger Sivabalan said...

Thanks வெற்றி !!

January 27, 2007 2:44 PM  
Blogger இராம்/Raam said...

சி.பா,

புது பிலாக்கர் மாத்திட்டிங்களா?? அப்போ நண்பர் ஜெகத் எழுதிய நிரலை உங்கள் வார்ப்புறுவிலே சேருங்கள். :)

(please remove the new window option for comment)

January 28, 2007 8:02 AM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

//I do know, How come comment counter change like this!!

Anybody has the answer? //
வேறென்ன சிவபாலன், தெய்வ குத்தம் தான் :))))


புது ப்ளாக்கருக்கு மாறினால் என்ன வேணாலும் ஆகும் ஹி ஹி :))))

January 28, 2007 8:12 AM  
Blogger சிவபாலன் said...

சுப்பையா அய்யா,

கடவுள் என்ற கான்சப்டை வைத்துக் கொண்டு மூட நம்பிக்கைகள் இப்பொழுது கொடிகட்டி பறக்கிறது. (உ.ம். நடு ரோட்டில் பூசனிக்காய் உடைப்பது)

இன்றைய சூழலில்தான் முன் எப்பொழுதும் விட கடவுள் மறுப்பு கொளகைகள் வெகு அளவு கொண்டு செல்லப் படவேண்டும்.

அதுவும் மதங்கள் மனிதனை அடிமையாக்கி ஆட்சி புரிகின்றன..ம்ம்ம்ம்ம்ம்

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

January 28, 2007 6:33 PM  
Blogger சிவபாலன் said...

பிரபு ராஜா துரை சார்,

நீங்கள் கூறுவது போல் என்னையும் சில பேர் திட்டியுள்ளனர்..

கடவுள் பற்றி கேள்வி கேட்டாலே இப்படி ஏதாவது சொல்லிவிடுகிறார்கள்.. ( கடவுள் கான்சப்ட் என்பதே பயத்தின் அடிபடைதானே!)

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

January 28, 2007 6:37 PM  
Blogger சுபமூகா said...

என் பெயரில் வெளியாகி உள்ள கருத்தை நான் அனுப்பவில்லை.
தயவு செய்து அதை நீக்கி விடவும்.

http://puthupunal.blogspot.com/2007/01/blog-post_30.html

நன்றி,

சுபமூகா

February 06, 2007 2:05 AM  
Blogger சிவபாலன் said...

சுபமுகா

வந்து தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!!

வருகைக்கு மிக்க நன்றி

February 06, 2007 8:37 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv