Wednesday, January 24, 2007

WHAT IS முருகா!

(இப்பதிவு நகைச்சுவைக்காக மட்டும்....)என்னுடைய நண்பர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது அவருடை ஐந்து வயது மகன் வந்து DADDY, " WHAT IS முருகா!" என்றான்.


இப்ப ஏன் அதை கேட்கிறாய்? என்றார் எனது நண்பர்.

அதற்கு அவரது மகன், "பாட்டி அடிக்கடி சொல்லறாங்க.."

எனது நண்பர் சற்று நேரம் மவுனம்காத்தார்.அதற்குள் அவரது மனைவி IT IS NAME OF A GOD! என்றார்.


அப்பொழுதும் அவருடைய மகனுக்கு ஏனோ அந்த பதிலில் உடன்பாடில்லாமல் மீன்டும்.. DADDY, " WHAT IS முருகா!" என்றான்.


அதற்கு நாத்திகரான எனது நண்பர்..

..
..
..
..


IT IS A FUNNY WORD! என்றார்.

13 Comments:

Blogger Sivabalan said...

இது யார் மனதையும் காயப்படுத்த அல்ல.. ஒரு நாத்திகருக்கும் ஒரு சிறு குழந்தையின் கேள்விக்கும் நடந்த விவாதத்தை இங்கே பதிவு செய்தேன்.

யார் நம்பிக்கையும் அவமத்திக்க அல்ல..

நன்றி

January 24, 2007 8:38 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

இந்தியாவில் 100 கணக்கான கடவுள்கள் உள்ளன, அவற்றில் முருகன் என்ற கடவுளை தமிழர்கள் அதிகம் வழிபடுகின்றனர். அவர் கைவில் வேலும் பக்கத்தில் மயிலும் வைத்திருப்பார் என்று ஆங்கிலத்தில் சொல்லச் சொல்லி உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள் !

அடுத்து அந்த குழந்தை கேட்கும்.

Why Muruga Choose Peacock as pet ?
:))

January 24, 2007 8:57 AM  
Blogger மங்கை said...

சிவா அண்ணே....

இது நிஜஜஜமாவே உங்க பிரண்டு தானா..

இதுவும் சும்மா தான்..
ஸ்மைலி போட்டுடறேன்..:-)))

January 24, 2007 9:00 AM  
Blogger Sivabalan said...

GK,

நல்ல கமென்ட்ங்க..//Why Muruga Choose Peacock as pet ? //

எனக்கு தெரிஞ்சு இந்த கேள்வியை கட்டயாம் அந்த குழந்தை கேட்கும்.. (ஆமா இவ்வள்வ சரியா சொல்லறீங்களே .. அனுபவமா?)

January 24, 2007 9:07 AM  
Blogger Sivabalan said...

மங்கை,

நாம எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்களாம்.. அதற்கா இப்படி பொதுவில் மாட்டிவிடலாமா?

நிச்சயமா எனது நண்பர்தானுங்க.. நம்புங்க.. Ha Ha Ha..

January 24, 2007 9:09 AM  
Blogger சீனு said...

இந்தக் கேள்வி என்று இல்லை. எந்த கேள்வியை குழந்தைகள் கேட்டாலும் அதற்கு விளக்கம் கட்டாயம் சொல்ல வேண்டும். இல்லையென்றால், குழந்தைகள் தவறான அர்த்தத்தை தான் புரிந்து கொள்ளும்.

January 24, 2007 12:43 PM  
Blogger Sivabalan said...

சீனு

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி!

வருகைக்கு மிக்க நன்றி

January 24, 2007 12:53 PM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
இதை நீங்கள் நகைச்சுவைப் பதிவாகப் போட்டாலும், இதன் பின்னால் ஒரு சோகக் கதையே இருக்கிறது என்பதுதான் என் எண்ணம்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சிறார்கள், குறிப்பாக இங்கே பிறந்து வளர்பவர்கள் அல்லது மிகச் சிறிய வயதில் வந்தவர்கள் எமது கலாச்சார/சமய நிகழ்வுகளைப் பார்த்து வளரும் வாய்ப்பை இழந்தவர்கள். அதனால் இச் சந்ததி எமது பல பண்புகளை என்னெவென்றே தெரியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையில் வாழ்கிறது. உங்களின் நண்பரின் குழந்தையைப் போல நான் இங்கே பல குழந்தைகளைக் கண்டிருக்கிறேன்.

சொன்னால் நம்புவீர்களோ தெரியாது, எனது சகோதரியின் பிள்ளைகள் இங்கே பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களுக்கு நாம் ஊரில் எப்படித் துலாவில் தண்ணியள்ளிக் குளிப்பது, துலா என்றால் என்னவென்றே தெரியது. நான் ஈழத்திற்குச் சென்ற போது இதையெல்லாம் வீடியோவில் எடுத்து வந்து காட்டினேன்.

எமது பண்பாடுகளை தொலைத்த ஒரு தமிழ்ச் சந்ததி புலம்பெயர் நாடுகளில் உருவாகி வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இதற்காகவேனும் பெற்றோர்கள் விடுமுறை தினங்களில் பிள்ளைகளைத் தாய் நாட்டிற்கு அழைத்துச் சென்று எமது வாழ்வியல்புகளைக் காட்ட வேண்டும். எமது ஆலயத் திருவிழாக்கள் இன்ன பிற போன்றவற்றை இவர்களுக்குக் காட்ட வேண்டும்.

January 24, 2007 1:12 PM  
Blogger Sivabalan said...

வெற்றி

இப்பதிவின் நோக்கத்தை மிக அழகாக எடுத்து கூறினீர்கள். அருமை..

நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.

என் குழந்தையிடமே பல (நீங்கள் குறிப்பிடுவன போன்ற) நிகழ்வுகளை காண்கிறேன்..

ஏதோ காரனத்திற்காக எல்லாவற்றையும் இழந்துவிட்டு அநாதை போன்ற வாழ்க்கைதான் வெளிநாட்டில் வாழும் மனிதர்களின் நிலைமை. இதில் கலாச்சார இழப்பு வருந்தக்கூடியதே!!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

January 24, 2007 1:21 PM  
Blogger குமரன் (Kumaran) said...

வெற்றி சொன்னது தான் பதிவின் நோக்கமா? நான் என்னடா தேவையில்லாமல் இப்படி எழுதுகிறாரே என்று எண்ணினேன். எப்படி ஆத்திகர்கள் தங்களின் நம்பிக்கைகளை குழந்தைகளிடம் ஊட்டுகிறார்களோ அதே போல் தான் நாத்திகர்களும் தங்கள் நம்பிக்கைகளைக் குழந்தைகளிடம் ஊட்டுகிறார்கள். உங்கள் நண்பரும் அதனையே செய்திருக்கிறார். ஆனால் அதில் முழு செய்தியும் குழந்தைகளுக்குச் சென்று சேராமல் போய்விடுகிறது. அது மட்டும் இல்லாமல் அந்த நண்பரின் தாயையும் அது கிண்டல் செய்வது போல் இருக்கிறது. அந்தக் குழந்தை 'பாட்டி ஏன் அந்த Funny Wordஐ எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? பாட்டி Funny' என்று சொல்ல ரொம்ப நேரம் ஆகாது.

January 24, 2007 1:34 PM  
Blogger வெற்றி said...

/*அந்தக் குழந்தை 'பாட்டி ஏன் அந்த Funny Wordஐ எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? பாட்டி Funny' என்று சொல்ல ரொம்ப நேரம் ஆகாது.*/

வழிமொழிகிறேன். ஆகவே பெற்றோர்கள் பிள்ளைகள் அறியும் ஆவலுடன் ஒரு விடயத்தைக் கேட்டால் அமைதியாக அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.

January 24, 2007 1:43 PM  
Blogger Sivabalan said...

குமரன் சார்,

நீங்க சொல்லவரும் கருத்து ஏற்புடையதே. ஆனால் அதே குழ்ந்தையிடம் அதன் தாய் " அது கடவுள் பெயர்" என்று கூறியுள்ளார். அதே போல் அந்த குழந்தை கடவுள் என்றால் என்ன என்று கேட்கவில்லை. ( நான் இல்லாத போது கேட்டிருக்கலாம்).

வெற்றி சொல்ல வந்ததுதான் பதிவின் கருத்து தளம்.

நண்பரின் அனுமதியோடு மிகுந்த யோசனைக்கு பிறகு பதிவிட்டேன். (மிகப் பெரிய டிஸ்கியோடு).

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

அப்பறம் உங்கள் கேள்விக்கு பதில் என்னவென்றால், என் நண்பரைப் பொருத்தவரை அது Funny Word தான். நகைச்சுவை விசயங்களை சொன்னால் நகைச்சுவையாளர்தான். ( மீன்டும் சொல்கிறேன் யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல)

January 24, 2007 2:03 PM  
Blogger Sivabalan said...

வெற்றி

குமரன் சாருக்கு (தெரிந்தவரையில்) பதில் கூறியுள்ளேன்.. படித்துப் பாருங்க.. அதுதான் உங்கள் கேள்விக்கும்..

மற்றபடி எது போன்ற விசயங்களை குழ்ந்தைகளிடம் பகிர்ந்துகொள்லாம், அது எவ்வாறு, எந்த வயதில் என்பது விவாதத்திற்கு உரியது..

January 24, 2007 2:08 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv