பாக்யராஜ் நடிக்கும் 'அய்யா வழி'
ஆன்மிகத்தையும் சமத்துவத்தையும் இரு கண்களாக கருதிய வைகுண்டசாமி வேடத்தில் நடிக்க தயாராகிறார் பாக்யராஜ்
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரிமாவட்டம் சாமிதோப்பு என்னும் ஊரில் பல அற்புதங்களை நிகழ்த்தி மக்களிடம் மகானாக காட்சியளித்தவர் அய்யா வைகுண்டசாமி.
அன்றை மன்னராட்சி காலத்தில் மக்களை அடிமைப்படுத்திய அரசர்களுக்கே சிம்மசொப்பணமாக விளங்கி மனிதர்களை கடவுளாக நினைத்தவர் வைகுண்டசாமி. அம்பேத்கார், பெரியார் போன்றோருக்கு முன்பே சமத்துவம் அமைத்த அவரது வாழ்க்கை வரலாறு 'அய்யாவழி' என்ற பெயரில் திரைப்படமாகிறது.
இதில் வைகுண்டசாமியாக பாக்யராஜ் நடிக்கவுள்ளார். இவருடன் மணிவண்ணன், சஞ்சய், செந்தில், மதன்பாப், சார்லி, பாலாசிங், சந்திரசேகர், தியாகு,'வெண்ணிறஆடை' நிர்மலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
முரளி - லைலா நடித்த 'காமராசு' படத்தை இயக்கிய பி.சி. அன்பழகன் திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குகிறார். கதை ஆய்வுக்குழுவில் எழுத்தாளர் பொன்னீலன், தினகரன் - மணிபாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
30 Comments:
///ஆன்மிகத்தையும் சமத்துவத்தையும் இரு கண்களாக கருதிய வைகுண்டசாமி வேடத்தில் நடிக்க தயாராகிறார் பாக்யராஜ் ///
அவருக்கே உரிய இயல்பான நகைச்சுவை குன்றாமல் நடித்தால்
சரி!
சுப்பையா கூற்றே எனதும்..
ஆவணப்படுத்தும் நல்ல முயற்சி. திரைக்கதை எப்படியிருக்கிறது என காண திரையில் வரும் வரை ஆவலுடன். தகவலுக்கு நன்றி சிவா!
அய்யா வைகுண்டரை விஷ்ணுவின் அவதாரமாக பார்க்கின்றனர் அய்யா வழியினர். சாதீய வெறியர்கள், மதமாற்றிகள் எனும் கலியின் இரு பெரும் தீமைகளை அழிக்க வந்த வைகுண்ட அவதாரம் அய்யா வைகுண்டர். மக்களின் நம்பிக்கையை முழுமையாக உள்வாங்கியவர்கள் அவரை பற்றி படம் எடுப்பது நல்லது. மாறாக எடுக்கப்படும் படங்கள் அரைகுறையாக அமையும் என்பதுடன் சித்தாந்த அஜெண்டாக்களுடனும் அமையக்கூடும். பாக்கியராஜ்ஜுக்கு என்று ஒரு ஆளுமையும் எதிர்ப்பார்ப்பும் மக்களிடம் இருக்கிறது. ஏற்கனவே இரண்டு பின்னூட்டங்களில் அது வெளிப்பட்டும் விட்டது. அய்யா வைகுண்டர் தம் தனிமனித ஆளுமையினை எவ்விடத்திலும் சுவடு விடாமல் தத்துவங்களையே மக்களுக்கு அளித்த அவதார புருஷர் ஆவார். சாதீயமழிந்து ஒரே சாதியாக மக்கள் பாரதத்தை ஆளவும் வாழவும் அன்புக்கொடி என காவிக்கொடி இயக்கத்தை ஆரம்பித்தவர் அய்யா வைகுண்டர். அனுமானைப் போன்ற தந்நலமற்ற தொண்டர் படை மூலம் பாரதம் மேலெழ வேண்டுமென கட்டியம் கூறியவர். பார்ப்போம் அய்யாவின் இந்து சமுதாயத்தை சாதியத்தின் பிடியிலிருந்து விடுவித்து ஒருங்கிணைக்கும் தரும பார்வைக்கு ஏற்ற விதத்தில் இத்திரைப்படம் அமைகிறதா என.
http://ta.wikipedia.org/wiki/அய்யாவழி
திரைக்கதையில் ஏமாற்றமாட்டார் என்று தான் நினைக்குறேன்...ரொம்ப நாளைக்கு அப்புறம் பாக்கியராஜ் படம் ஒன்னு..
அய்யா வழி பற்றி கேள்வி பட்டிருந்தாலும் தமிழ்மணம் வந்த பின் தான் அவரை பற்றிய நிறைய விஷயங்கள் தெரிஞ்சது..
சுப்பையா சார்,
சரித்திர முக்கியதுவம் வாய்ந்த பாத்திரம் என்பதால் அந்த பாத்திரத்தை தான் பிரதிபலிக்க முடியும் என நினைக்கிறேன்..
பார்க்கலாம்... என்ன நடக்கின்றது என்று..
வருகைக்கு நன்றி
வாங்க கார்த்திகேயன்,
இந்த படத்தில் பாத்திர முக்கியதும் என்பதால் அவர் எவ்வாறு செய்வார் என தெரியவில்லை.
வருகைக்கு நன்றி
திரு
இந்த ஆவணப்படுத்தும் முயற்சி வெற்றியடைய வேண்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அரவிந்தன் நீலகண்டன்,
வாங்க,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
பாக்ய ராஜ் சரியான தேர்வாகத் தெரியவில்லை.
//பாக்ய ராஜ் சரியான தேர்வாகத் தெரியவில்லை. //
நானும் அதை சொல்ல விரும்பினேன். எப்படியோ மறந்து விட்டுவிட்டேன். ஏற்கனவே ஊரில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியாச்சு. டைரக்டர் வீரமா 'நான் எடுக்கத்தான் போறேன் பார்த்துறலாம்' அப்படீன்னு சவால் விட்டாச்சு. அய்யா வைகுண்டருக்கு பல பரிமாணங்கள் இருக்கின்றன. ஒன்று: பக்தி கொண்டவர்களுக்கு அவதாரம் ஆவார். கலி அழிக்க வந்த வைகுண்ட அவதாரம். தருமத்தை காக்க வந்த விஷ்ணுவின் இறுதி அவதாரம். சமுதாய ஆர்வலர்களுக்கு அன்றைய கால கட்டத்தில் சாத்தியமே இல்லாத சமுதாய புரட்சியை நடத்தி காட்டியவர். இந்து சமுதாயத்தின் வருங்காலம் மேன்மையுற இப்படி சென்றால்தான் சரி என்கிறதாகப்பட்ட சில திட்டவட்டமான வழிமுறைகளை காட்டியவர். சாதீய கொடுமையை அழித்தவர். மதமாற்றத்தை தடுத்தவர். கிறிஸ்தவ மிசிநரிகளுக்கு அவர் 'வஞ்சகர். போலி வேசதாரி'. சாதீய வெறியர்களுக்கு அலட்சியப்படுத்தப்பட வேண்டியவர். இந்த திரைப்படத்தில் ஈடுபட்டுள்ள பொன்னீலன் ஒரு விசித்திர பேர்வழி. சாகித்திய அகாடமி விருது பெற்றவர். நல்ல கதை எழுதுபவர். கற்பனை வளம் சாஸ்தி. மார்க்சிய அடிப்படைவாதி. இவர் அய்யா வைகுண்டரை எப்படி பார்ப்பார்? அதிகமாக போனால் நிலவுடமை சமுதாயத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு தலைமை தாங்கியவர். அந்த காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இருந்திருந்தால் அய்யா வைகுண்டர் ஐந்து ரூபாய் செலுத்தி கட்சியில் தொண்டராகி பொலிட் பீறோ வரை போயிருப்பார். அது இல்லாததால் அவர் அய்யா வழியை ஆரம்பித்தார் என்கிற ரீதியில் இல்லாமல் அவருக்கு அய்யாவை ஒரு அவதாரமாக காணத் தெரியுமா என்பது தெரியவில்லை. அப்படி பார்ப்பதும் கூட தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அய்யாவழி குறித்த அனைத்து தரவுகளும் மக்களை வெகுவாக சென்றடையாத தருணத்தில் இப்படி ஒரு குறிப்பிட்ட விதமான சார்பியல் பார்வையை -அய்யா வழி நம்பிக்கைகளை புறக்கணித்து ஒரு குறுகியல் பார்வையை - முதலாவதாகவே முன்வைப்பது எவ்வளவு சரி? மிசிநரிகளுக்கு இது கொண்டாட்டமாக கூட இருக்கலாம். அய்யாவின் அவதாரத்தன்மையை அழித்து அவரை வெறும் சமுதாய போராளியாக மட்டும் காட்டுவது ஒருவிதத்தில் மிசிநரிகளுக்கு வெற்றி என்று கூட கூறலாம். அய்யாவை மகாவிஷ்ணுவின் அவதாரமாக பார்க்கிற சாதாரண அய்யாவழி பக்தனுக்கு இந்த திரைப்படம் எத்தகைய உணர்ச்சியை ஏற்படுத்தும்? எதுவானாலும் படம் வரட்டும். பார்க்கலாம்.
திறந்த கருத்துடைய பாக்கியராஜ் இதில் நடிப்பது எல்ல வகையிலும் பொருத்தமே!
தமிழ் மக்களுக்குத் தேவையான ஒரு படம் இது.
அப்படியே அமைய வாழ்த்துகிறேன்.
முருகனருள் முன்ன்னிற்கும்
தருமி அய்யா
பாக்கியராஜ் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற அடிப்படை எனக்கு தெரியவில்லை..
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
அரவிந்தன் நீலகண்டன்,
மேல் விபரங்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
SK அய்யா
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
நன்றி சிவபாலன். கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பளித்தமைக்கு. எஸ்.கே ஐயா, பாக்கியராஜுக்கு ஆழமான சிந்தனையை வெளிப்படுத்த தெரியுமா தெரியவில்லை. சங்கராச்சாரியார் குறித்த இருபடங்களை இந்த இடத்தில் சிந்திக்கலாம். ஒரு படம் முழுக்க முழுக்க புராண தரவுகளை கொண்டு வெளிவந்தது. உதாரணமாக பத்மபாதர் கங்கையில் நடக்க அவர் கால் வைத்த இடங்களில் தாமரை மலரும். மற்றொரு படத்திலோ பத்மபாதர் வெள்ளத்தில் அடித்து கொண்டு போய் மீண்டும் தப்பிவிடுவதால் அந்த பெயர் அவருக்கு சங்கரரால் அளிக்கப்படும். இரண்டாவது படத்தில் நம்பிக்கை அழிக்கப்படவில்லை. அது போல பகுத்தறிவும் தட்டப்படவில்லை. ஆனால் இரண்டுக்குமே ஆடியன்ஸ் வேறு வேறே. தளங்கள் வேறு வேறு. ஒரு மனிதனுக்கே இந்த இரு படங்களும் அவன் மனம் சஞ்சரிக்கும் தளத்தினை பொறுத்து அப்பீல் ஆகலாம். சுவாமி விவேகானந்தர் குறித்து வைக்கப்பட்டுள்ள இரண்டு ஓவிய கண்காட்சிகள். ஒன்று கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் உள்ளது. ஆர்.எஸ்.எஸ்காரர்களுக்கு அவதார கோட்பாட்டில் சிறிது சங்கடம் உண்டு. ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அக தரிசனத்தில் சப்த ரிஷிகளில் ஒருவர் விவேகானந்தராக வந்ததாக சொல்வார். எனவே விவேகானந்த கேந்திர ஓவிய கண்காட்சியில் அந்த நிகழ்ச்சியிலிருந்து தொடங்க வேண்டும் என இராமகிருஷ்ண மிஷன் தலைமை துறவி கூறியதை இதமாக விவேகானந்த கேந்திர நிறுவனர் மறுத்து விட்டார். மாறாக பாரத கலாச்சார நெடும் மரபில் வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்தில் ஒருவராக சுவாமி காட்டப்பட்டார். ஐஸ்ஹவுஸ் விவேகானந்த இல்ல கண்காட்சியில் இவை இரண்டுமே காட்டப்படுகின்றன என நினைக்கிறேன். அய்யா வைகுண்டர் குறித்து புராண பார்வையும் சரி சமுதாய பார்வையும் சரி சரியான விதத்தில் இசைவு செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே இதை கூறினேன். அது மார்க்சியம் அல்லது இதர பொருளாதார அடிப்படையின் மேல் கட்டமைக்கப்பட்ட மதிப்பீட்டு வாதங்கள் போன்றவற்றால் இயலாது. மாறாக நம் தேச ஆன்மிக மரபில் வேரூன்றிய ஒரு இதயத்தினாலேயே இயலும். அது இந்த இயக்குநருக்கோ அல்லது பொன்னீலனுக்கோ அல்லது அதனை வெளிப்படுத்தும் திறன் கே.பாக்கியராஜுக்கோ இருக்குமா என்பதுதான் கேள்வி. இல்லையெனில் அது ஒரு தவறான சித்திரத்தையே தரும்.
//பாக்ய ராஜ் சரியான தேர்வாகத் தெரியவில்லை//
எனக்குக்கூட சரியான தேர்வாகத் தெரியவில்லை அய்யா.எனக்கென்னவோ அய்யா வழியில நடக்கும்,மிகச்சிறந்த நடிகர் மஞ்சதுண்டு அய்யாதான்.தமிழ்நாட்டின் தலைசிறந்த ஃபில்ம் க்ரிடிக் வெளியே மிதக்கும் அய்யா கூட மஞ்சதுண்டு அய்யா ஹாலிவுட் ரேஞ்சுல நடிப்பவர்னு செர்டிஃபிகேட் கொடுத்தாரு.ஆஹா.கலைஞர் நடித்து இந்த படம் வெளிவந்தால் சரித்திரம் படைக்கப்படும்.நமக்கு அந்த கொடுப்பினை உண்டா?
பாலா
பாலா
உங்கள் நகைச்சுவைக்கு ஒரு அளவே இல்லையா?!! mmmmm
//பாலா
உங்கள் நகைச்சுவைக்கு ஒரு அளவே இல்லையா?!! mmmmm //
மிக நல்ல நகைச்சுவை ...!! :(
தருமி அய்யா
ஆமாம. மிக மிக நல்ல நகைச்சுவை..
என்னமோ போங்க..
கருத்து சுதந்திரம்.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......
பாலா
உமது வியபாரத்தை வேறு இடத்தில் சென்று முயற்சிக்கவும்!
பாலா,
கருத்து சுதந்திர சான்றிதழுக்கு நன்றி!!
சிவபாலன், செய்திக்கு நன்றி.
அரவிந்தன் கருத்தை வழிமொழிகிறேன்.
சங்கரர் படம் பற்றி அரவிந்தன் குறிப்பிட்டார். மிக நன்றாக எடுக்கப் பட்டதாகக் கருதப் படும் காந்தி படம் பற்றியே இந்த விமரிசனம் உள்ளது. படம் முழுக்க மேற்கத்திய பார்வையிலேயே உள்ளது என்று.
மண்ணின் மைந்தரான அய்யா பற்றிய படம் மண்ணின் நம்பிக்கைகளை, குறிப்பாக அவரை தெய்வமாகப் போற்றி வணங்குபவர்களது நம்பிக்ககைகளை மதித்து எடுக்கப் பட வேண்டும்.
இனது கருத்தை கூறும்முன்,
இங்கு கூறப்பட்டுள்ள அனைவரது பார்வைகளும் கருத்துடையனவாகவே தெரிகின்ற போதும், ஒப்பீட்டு அடிப்படையில் நீலகண்டன் அவர்கள் அய்யாவை, குறிப்பாக அகிலத்திரட்டையும் நன்கு அறிந்துள்ளார் என தோன்றுகிறது.
முதலாவதாக வைகுண்டர் யார்?
அகிலத்திரட்டின் விளக்கவுரைகள் தவிர பல புத்தகங்களில், (அவற்றை எழுதியது அய்யாவழி ஆசிரியரானாலும் அல்ல என்றாலும்) வைகுண்டருக்கு சீர்திருத்தவாதி, புரட்சியாளர், சமயவாதி, துறவி, தீர்க்கத்தரிசி, என பல பட்டங்கள் கொடுக்கப்பட்டிருப்பதை பார்த்து வியந்திருக்கிறேன். வியப்புக்கு காரணம், அவரை எதன் அடிப்படையில் மேற்கூறிய பாத்திரமாக அடையாளம் கண்டார்கள் என்பது தான்.
முழுமையாக செவிவழிச்செய்தியாக இருக்கும் ஒருவரை மேற்கூறிய எதுவாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. எழுத்து ஆதாரம் என்ற ஒன்று அதற்கு இன்றியமையாததாகும். அப்படியானல், மேற்கூறிய பாற்வையாளர்கள் எந்த ஓலைச்சுவடியை, அல்லதி செம்பு பட்டயத்தை அல்லது புத்தகத்தை ஆதாரமாக எடுத்துக்கொண்டார்கள்? வைகுண்டரை வசை பாடும் பல LMS ஆண்டறிக்கைகள் தவிர வேறு எந்த எழுத்தாதாரமும் அவருக்கு இல்லை. ஆனால் வைகுண்டரைப் பற்றிய ஒரு பிம்பத்தை மனதில் உருவாக்கவும், அவரது செயல்கள் எவ்வாறு புரட்சியை ஏற்படுத்தியது, அவ்வாறு ஒருவர் இருந்தது உண்மைதான் போன்றவற்றை நம்ப வைக்கவும் இந்த LMS ஆண்டறிக்கைகள் பேருதவிபுரியும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒரு திரைப்படம் எடுக்கும் அளவுக்கு எழுத்தாதாரமில்லை. ஒரேயொரு ஆதாரம் அய்யாவழியின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மனை தான்.
ஆனால் இப்படத்தின் அடிப்படையைப்பற்றி இயக்குநர் தரப்பிடமிருந்து வெளிவந்துள்ள தகவல்களை பார்க்கும் போது அப்படம் அகிலத்திரட்டு அம்மனையை சற்றும் பொருட்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. இப்படத்தின் இயக்குநர் ஒரு தமிழ் தினசரியில் தன்னை ஒரு அய்யாவழிக்காரர் என அடையாளப்படுத்தியிருந்தார். அகிலத்திரட்டு அடிப்படையில் தான் படம் எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார் அதேயறிக்கையில். ஆனால் படத்தின் கருத்தோட்டம் பற்றிய அவரது தரப்பு தகவல்கள் இதற்கு பெரிதும் முரண்பாடாக இருப்பது அதிசயம்.
மேலும் படத்தின் தலையங்கம் 'அய்யாவழி' என அறிவிக்கப்பட்டிருப்பதை காண்க. அய்யாவழி என்பது அவரை கடவுளாக நம்பும் சாராரையே குறிக்குமேயன்றி அவரை புரட்சியாளர் என கூறும் வரலாற்றாய்வாளர்களை அல்ல. எனவே இத்தலைப்பு அவரை சீர்திருத்தவாதியாக அடையாளம் காட்டுமேயானால் அதைவிட மிகப்பெரிய தவறு மனித வரலாற்றில் வேறெதுவும் இருக்க முடியாது. அவரது செயல்பாடுகள் அன்றைய சமுதாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் 'அவர்' புரட்சியாளரல்ல. அவரது செயல்கள் பெரும்சீர்திருத்தமாக அக்காலகட்டத்தில் இருந்திருக்ககூடும். ஆனால் அதற்காக அவரை சீர்திருத்தவாதியாக்கிவிட முடியாது. அவர் ஒரு துறவியாக கட்சியளித்திருக்கலாம். ஆனால் உண்மையில் துறவியல்ல. ஆனால் அவ்வாறு அடையாளம் காணப்பட்டார்.
கிருஷ்ணனை நினைப்பவர்களுக்கு அவரை ஒரு சீர்திருத்த்வாதி எனற பிம்பம் யாருக்கும் மனதில் விழுவதில்லை; மாறாக கடவுளாக தான் விழும்; அவரி எற்றுகொண்டாலும் இல்லாவிட்டாலும். ஆனால் வைகுண்டர் விடயத்தில் நிலைமை வேறு; வைகுண்டரை பற்றி எழுதுபவர்களில் பெரும்பாலானோர் சிர்திருத்தவாதி, புரட்சியாளர், துறவி, என்றே கூறுகிறார்கள். இதற்கு இரண்டே காரணம்;
1. இவரது காலகட்டம் பிந்தியது;
2. இவரது அவதார செயல்கள் புரட்சி ரூபத்தில் இருந்தது.
ஆனால் திரைப்படம் தயாரிப்பவர்கள் இவையிரண்டில் எதையும் ஆதாரமாக கொள்ளுவது எந்த விதத்தும் சரியென்று வாதிடமுடியாது. மாறாக அவரைப்பற்றிய முழு செய்திகளை கொடுக்கும் அகிலத்திரட்டை ஆதாரமாக கொண்டே அமைய வேண்டும்.
மேலும், வைகுண்டரைப் பற்றிய கருத்துக்கு,
திரு அவர்கள் வைகுண்டரை இந்து சமயத்துக்கு எதிரானவராகவும், நீலகண்டன் அவர்கள் அவரை சனாதன தர்மத்தை பறைசாற்றுபவராகவும் அடையாளம் காட்ட முனைந்த நிகழ்வுகள் அடிக்கடி இணையத்தில் கண்ணில் பட்டன. இதில் முக்கியமான் விடயம் யாதுவெனில், இருவரும் அகிலத்திரட்டு வரிகளை ஆதாரமாக காட்டியே தங்களது கருத்துக்களை நிலைநிறுத்த முற்சித்திருந்தார்கள். ஆனால் அவர்கள் எடுத்தண்டிருந்த அகிலத்திரட்டு வரிகளை இடம் பொருள் ஏவல் அடிப்படையில் சிந்தித்தோமேயானால், இருவரது கருத்தும் உண்மையல்ல; ஆனால் இருவரது கருத்துக்களிலும் உண்மை முற்றிலும் இல்லாமலும் இல்லை. ஏனனில் அகிலத்திரட்டு இவ்விரண்டு கருத்துக்களுக்கும் மட்டுமல்ல, அவரை ஒரு கம்யூனிச வாதி என கூறுவோருக்கும் ஆதரவான வரிகளை உள்ளடக்கியுள்ளது.
சாதிய இந்து மதத்தை யார் எதிர்ப்பார்களோ, இந்து புனிதநூல்களை தற்போதைய சமுதாயச் சிந்தனையோட்டத்தில் யார் குறைகூறுவார்களோ, அவர்கள் கூறும் பெரும்பாலான கருத்துகள் கண்டிப்பாக அகிலத்திரட்டில் இருக்கும். ஆனால் இதைவைத்து இந்து மததுக்கெதிரானவர் அவர் என்பது சரியல்ல. அதுபோல் சனாதனச் சிந்தனைகளின் உச்ச கட்ட பரிணாமம் என எது அடையாளம் காட்டபட்டுள்ளதோ (தர்மம் - முழுமுதல் உண்மை) அதையே வைகுண்டரது மக்கள் அடைய வேண்டிய உன்னத பதவி என்று அகிலத்திரட்டில் அரிகோபாலன் சீடர் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இதனடிப்படையின் இந்துமதம் (தற்போதையது) எதுவோ அது தான் அய்யாவழி எனக்கூறுவதும் சரியானதல்லவே. அவரது போதனைகள் கம்யூனிஸ்டுகள் கூறும் சமுக-சமத்துவத்தை ஒத்திருந்ததென்பதற்காக அவரை கம்யூனிஸ்ட்டாக்குவதும் ஞாயமற்றது. மேலும் இவையனைத்துக்கும் மேலாக ஒரு மிகப்பெரிய புராணக்கதையோட்டம் (உலகம் தோன்றியதுமுதல் இறுதி வரை) வைகுண்டருக்கு இருப்பதாக அகிலத்திரட்டின் மூலம் வெளிப்படுவது சிந்திக்கத்தக்கதாகும்.
மேலும் அவர் ஒரு தீர்க்கத்தரிசி என கூறுவோரையும் அவரது தீர்கத்தரிசனங்கள் கண்டிப்பக நடக்கும் எனவும் பல நடந்துவிட்டதாகவும் உச்சகட்ட உணர்ச்சியில் கூறுவதை கேட்டிருக்கிறேன். இவர்களில் பல எழுத்தாளர்களும் அடங்குவர். மேலும் அவரது தீர்க்கத்தரிசனங்கள் (100க்கும் மேற்பட்டவைகளை) தொகுத்து வெளியிடப்பட்டுள்ளதையும் கண்டிருக்கிறேன். அய்யாவின் தீர்க்கத்தரிசனங்கள் என எவையெல்லாம் தொகுக்கப்பட்டதோ அவ்வரிகள் அனைத்தும் அய்யாவழியின் புனித நூல்களான அகிலத்திரட்டு அல்லது அருள் நூல் ஆகியவைகளிருந்து எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் இக்கூறினர் அனைவரும் முக்கியமான ஒன்றை மறந்து விட்டர்கள் என்பது வேதனை. இவ்விரண்டு நூல்களின் ஒருவரியைக்கூட வைகுண்டர் நீரடியாக எழுதவில்லை என்றும், இவையனைத்தின் உண்மைகள் வைகுண்டரால் சீடர்களுக்கோ அருளாளர்களுக்கோ உணர்த்தப்பட்டவைகள் என்பது தான் அது. சுருங்கக்கூறின் அகிலத்திரட்டில் படி சீடர்களோ அருளாளர்களோ தான் தீர்கத்தரிசிகளேயன்றி, அய்யா அல்ல. வைகுண்டர் இறைவன் அவ்வார். ஆனால் அவர் தீர்க்கதரிசியாக்கப்பட்ட கொடுமை அறியாமையா அல்லது திட்டமிட்டு பரப்பபட்டத என்பது தெரியவில்லை. ஆனால் அகிலத்திரட்டு அடிப்படையில் அய்யாவை முழுமையாக இறைவன் என நம்புவோரும் கூட 'அவர் சொன்னதெல்லாம் அப்படியே நடக்கிறது' என்ற கூற்றை வைகுண்டருக்கான புகழாரம் என எண்ணி பெருமைபட்டுக்கொள்ளும் அறியாமை வேதனை. அவ்வறியாமை கல்வியாளர்களிடமும் கணிசமாக இருப்பது மேலும் வெதனை.
நான்கண்டவரை உண்மைகள்........
மேலும் இறைக்கண்ணோட்டதில் இந்துமதம் கூறும் கல்கியவதாரமும் விவிலியம் கூறும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் வைகுண்டரே என்னும் சிந்தனை பல ஆய்வாளர்களிடத்தும் சில புத்தகங்களிலும் வெளிப்பட்டுள்ளது கண்டிருக்கிறேன். இக்கருத்தின் உண்மையளவு எத்தகையது என்பது தெரியவில்லை என்றாலும், இவைகளை (அகிலத்திரட்டு, இந்து நூல்கள் மற்றும் விவிலியம்) இணைக்கும் ஒரு ஒப்பாய்வு () சிறந்ததாக இருக்கும் என கருதுகிறேன்.
மேலும் இந்துமதத்தின் ஆதிமுதல் இதுவரை உள்ள அனைத்து செய்திகளை (புராணங்கள், ஆகமங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள், உபனிடதங்கள்....) என அனைத்து நூல்களின் கருத்துக்களின் தொகுதியை ஒருவர் அறிய விரும்பினால் அவரை மிகவும் மகிழ்சியடையச் செய்யும் நூல் கண்டிப்பாக அகிலத்திரட்டாக தான் இருக்கமுடியும் என நினைக்கிறேன். ஆனால் மறு முனையில் உலக சமயக்குடும்பங்கள் அனைத்தின் சாரம் எது, என ஒரு கேள்வி எழுப்பப்படுகிறதெனில் அக்கேள்வியின் பதிலையே அகிலத்திரட்டு ஒரு மிகப்பெரிய கதையோட்டத்தின் மையக்கருத்தாக கொண்டு செல்வதும் அக்கேள்விக்கான மிகப்பொருத்தமான பதிலைக்கொடுக்குமென்பது பெருமைக்குரியது.
உலகம் தோன்றியது முதல் அனைத்துலோகங்களின் ஆட்சிப்பொறுப்பு சிவபெருமானிடம் இருப்பதும், கலியுக தொடக்கம் முதல் பல காரணங்களுக்காக அது திருமாலிடம் வருவதும், பின்னர் வைகுண்ட அவதாரத் துவக்கத்துடன் அனைத்து ஆளுமையும் (ஈரேழு பதினலு லோகங்களையும் ஆளும் பொறுப்பு உட்பட) சிவனின் திருத்தாண்டவம் வழியாக வைகுண்டரிடம் ஒப்படைக்கப்படுவதும் இறைக்கருத்தோட்டதில் பிரபஞ்ச உற்பத்தி முதல் நடந்தவைகளும், தற்போது நடப்பவைகளும் இனி நடக்கபோவதுமான (தீர்க்கத்தரிசனங்கள்) முக்கல சம்பவங்களின் தொகுதியாக அகிலம் விளங்குவது சிறந்த உதாரணம்.
மேற்கூறிய கருத்துக்களை 'வெறும் மிகைப்படுத்தல்' என எடுத்துக்கொள்ளாமல் அகிலத்திரட்டை படிப்பவர்கள் அதனை மேற்கூறிய அடிப்படையில் சிந்திக்குமாறு கேட்டுக்கொள்வதோடு, திரைப்படம் எடுப்பவர்கள் அனைத்து வகைக் கருத்தோட்டத்திலும் ஆய்வு மேற்கொள்ளுதல் மிகச்சிறப்பாக இருக்குமென நம்புகிறேன்.
இக்கதாபாத்திரத்துக்கு பாக்கியராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சிறந்ததாக தெரியவில்லை. திரைப்படங்களில் மிகவும் பிடித்த பகுதி நகைச்சுவை தான். அதுவும் குறிப்பாக பாக்கியராஜ் விடயத்தில் அவரது முக பாவனைகளும், அதற்கியைந்தாற்போலான வசனங்களும் நகைச்சுவைதுறையில் அவருக்கென ஒரு தனி நிரந்தர இடம் வழங்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் வைகுண்டர் நகைச்சுவைச் சின்னமாக்கப்படவேண்டியவரல்ல. கண்ணன் பார்த்தனுக்கு கீதாச்சாரம் உபதேசிக்குமிடத்தில் கவுண்டமணியையும் செந்திலையும் வைத்து கற்பனை செய்து பாருங்கள்!!!!
எனது கருத்தை கூறும்முன்,
இங்கு கூறப்பட்டுள்ள அனைவரது பார்வைகளும் கருத்துடையனவாகவே தெரிகின்ற போதும், ஒப்பீட்டு அடிப்படையில் நீலகண்டன் அவர்கள் அய்யாவை, குறிப்பாக அகிலத்திரட்டையும் நன்கு அறிந்துள்ளார் என தோன்றுகிறது.
முதலாவதாக வைகுண்டர் யார்?
அகிலத்திரட்டின் விளக்கவுரைகள் தவிர பல புத்தகங்களில், (அவற்றை எழுதியது அய்யாவழி ஆசிரியரானாலும் அல்ல என்றாலும்) வைகுண்டருக்கு சீர்திருத்தவாதி, புரட்சியாளர், சமயவாதி, துறவி, தீர்க்கத்தரிசி, என பல பட்டங்கள் கொடுக்கப்பட்டிருப்பதை பார்த்து வியந்திருக்கிறேன். வியப்புக்கு காரணம், அவரை எதன் அடிப்படையில் மேற்கூறிய பாத்திரமாக அடையாளம் கண்டார்கள் என்பது தான்.
முழுமையாக செவிவழிச்செய்தியாக இருக்கும் ஒருவரை மேற்கூறிய எதுவாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. எழுத்து ஆதாரம் என்ற ஒன்று அதற்கு இன்றியமையாததாகும். அப்படியானல், மேற்கூறிய பாற்வையாளர்கள் எந்த ஓலைச்சுவடியை, அல்லதி செம்பு பட்டயத்தை அல்லது புத்தகத்தை ஆதாரமாக எடுத்துக்கொண்டார்கள்? வைகுண்டரை வசை பாடும் பல LMS ஆண்டறிக்கைகள் தவிர வேறு எந்த எழுத்தாதாரமும் அவருக்கு இல்லை. ஆனால் வைகுண்டரைப் பற்றிய ஒரு பிம்பத்தை மனதில் உருவாக்கவும், அவரது செயல்கள் எவ்வாறு புரட்சியை ஏற்படுத்தியது, அவ்வாறு ஒருவர் இருந்தது உண்மைதான் போன்றவற்றை நம்ப வைக்கவும் இந்த LMS ஆண்டறிக்கைகள் பேருதவிபுரியும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒரு திரைப்படம் எடுக்கும் அளவுக்கு எழுத்தாதாரமில்லை. ஒரேயொரு ஆதாரம் அய்யாவழியின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மனை தான்.
ஆனால் இப்படத்தின் அடிப்படையைப்பற்றி இயக்குநர் தரப்பிடமிருந்து வெளிவந்துள்ள தகவல்களை பார்க்கும் போது அப்படம் அகிலத்திரட்டு அம்மனையை சற்றும் பொருட்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. இப்படத்தின் இயக்குநர் ஒரு தமிழ் தினசரியில் தன்னை ஒரு அய்யாவழிக்காரர் என அடையாளப்படுத்தியிருந்தார். அகிலத்திரட்டு அடிப்படையில் தான் படம் எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார் அதேயறிக்கையில். ஆனால் படத்தின் கருத்தோட்டம் பற்றிய அவரது தரப்பு தகவல்கள் இதற்கு பெரிதும் முரண்பாடாக இருப்பது அதிசயம்.
மேலும் படத்தின் தலையங்கம் 'அய்யாவழி' என அறிவிக்கப்பட்டிருப்பதை காண்க. அய்யாவழி என்பது அவரை கடவுளாக நம்பும் சாராரையே குறிக்குமேயன்றி அவரை புரட்சியாளர் என கூறும் வரலாற்றாய்வாளர்களை அல்ல. எனவே இத்தலைப்பு அவரை சீர்திருத்தவாதியாக அடையாளம் காட்டுமேயானால் அதைவிட மிகப்பெரிய தவறு மனித வரலாற்றில் வேறெதுவும் இருக்க முடியாது. அவரது செயல்பாடுகள் அன்றைய சமுதாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் 'அவர்' புரட்சியாளரல்ல. அவரது செயல்கள் பெரும்சீர்திருத்தமாக அக்காலகட்டத்தில் இருந்திருக்ககூடும். ஆனால் அதற்காக அவரை சீர்திருத்தவாதியாக்கிவிட முடியாது. அவர் ஒரு துறவியாக கட்சியளித்திருக்கலாம். ஆனால் உண்மையில் துறவியல்ல. ஆனால் அவ்வாறு அடையாளம் காணப்பட்டார்.
கிருஷ்ணனை நினைப்பவர்களுக்கு அவரை ஒரு சீர்திருத்த்வாதி எனற பிம்பம் யாருக்கும் மனதில் விழுவதில்லை; மாறாக கடவுளாக தான் விழும்; அவரி எற்றுகொண்டாலும் இல்லாவிட்டாலும். ஆனால் வைகுண்டர் விடயத்தில் நிலைமை வேறு; வைகுண்டரை பற்றி எழுதுபவர்களில் பெரும்பாலானோர் சிர்திருத்தவாதி, புரட்சியாளர், துறவி, என்றே கூறுகிறார்கள். இதற்கு இரண்டே காரணம்;
1. இவரது காலகட்டம் பிந்தியது;
2. இவரது அவதார செயல்கள் புரட்சி ரூபத்தில் இருந்தது.
ஆனால் திரைப்படம் தயாரிப்பவர்கள் இவையிரண்டில் எதையும் ஆதாரமாக கொள்ளுவது எந்த விதத்தும் சரியென்று வாதிடமுடியாது. மாறாக அவரைப்பற்றிய முழு செய்திகளை கொடுக்கும் அகிலத்திரட்டை ஆதாரமாக கொண்டே அமைய வேண்டும்.
மேலும், வைகுண்டரைப் பற்றிய கருத்துக்கு,
திரு அவர்கள் வைகுண்டரை இந்து சமயத்துக்கு எதிரானவராகவும், நீலகண்டன் அவர்கள் அவரை சனாதன தர்மத்தை பறைசாற்றுபவராகவும் அடையாளம் காட்ட முனைந்த நிகழ்வுகள் அடிக்கடி இணையத்தில் கண்ணில் பட்டன. இதில் முக்கியமான் விடயம் யாதுவெனில், இருவரும் அகிலத்திரட்டு வரிகளை ஆதாரமாக காட்டியே தங்களது கருத்துக்களை நிலைநிறுத்த முயற்சித்திருந்தார்கள். ஆனால் அவர்கள் எடுத்தாண்டிருந்த அகிலத்திரட்டு வரிகளை இடம் பொருள் ஏவல் அடிப்படையில் சிந்தித்தோமேயானால், இருவரது கருத்தும் உண்மையல்ல; ஆனால் இருவரது கருத்துக்களிலும் உண்மை முற்றிலும் இல்லாமலும் இல்லை. ஏனனில் அகிலத்திரட்டு இவ்விரண்டு கருத்துக்களுக்கும் மட்டுமல்ல, அவரை ஒரு கம்யூனிச வாதி என கூறுவோருக்கும் ஆதரவான வரிகளை உள்ளடக்கியுள்ளது.
சாதிய இந்து மதத்தை யார் எதிர்ப்பார்களோ, இந்து புனிதநூல்களை தற்போதைய சமுதாயச் சிந்தனையோட்டத்தில் யார் குறைகூறுவார்களோ, அவர்கள் கூறும் பெரும்பாலான கருத்துகள் கண்டிப்பாக அகிலத்திரட்டில் இருக்கும். ஆனால் இதைவைத்து இந்து மததுக்கெதிரானவர் அவர் என்பது சரியல்ல. அதுபோல் சனாதனச் சிந்தனைகளின் உச்ச கட்ட பரிணாமம் என எது அடையாளம் காட்டபட்டுள்ளதோ (தர்மம் - முழுமுதல் உண்மை) அதையே வைகுண்டரது மக்கள் அடைய வேண்டிய உன்னத பதவி என்று அகிலத்திரட்டில் அரிகோபாலன் சீடர் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இதனடிப்படையின் இந்துமதம் (தற்போதையது) எதுவோ அது தான் அய்யாவழி எனக்கூறுவதும் சரியானதல்லவே. அவரது போதனைகள் கம்யூனிஸ்டுகள் கூறும் சமுக-சமத்துவத்தை ஒத்திருந்ததென்பதற்காக அவரை கம்யூனிஸ்ட்டாக்குவதும் ஞாயமற்றது. மேலும் இவையனைத்துக்கும் மேலாக ஒரு மிகப்பெரிய புராணக்கதையோட்டம் (உலகம் தோன்றியதுமுதல் இறுதி வரை) வைகுண்டருக்கு இருப்பதாக அகிலத்திரட்டின் மூலம் வெளிப்படுவது சிந்திக்கத்தக்கதாகும்.
மேலும் அவர் ஒரு தீர்க்கத்தரிசி என கூறுவோரையும் அவரது தீர்கத்தரிசனங்கள் கண்டிப்பக நடக்கும் எனவும் பல நடந்துவிட்டதாகவும் உச்சகட்ட உணர்ச்சியில் கூறுவதை கேட்டிருக்கிறேன். இவர்களில் பல எழுத்தாளர்களும் அடங்குவர். மேலும் அவரது தீர்க்கத்தரிசனங்கள் (100க்கும் மேற்பட்டவைகளை) தொகுத்து வெளியிடப்பட்டுள்ளதையும் கண்டிருக்கிறேன். அய்யாவின் தீர்க்கத்தரிசனங்கள் என எவையெல்லாம் தொகுக்கப்பட்டதோ அவ்வரிகள் அனைத்தும் அய்யாவழியின் புனித நூல்களான அகிலத்திரட்டு அல்லது அருள் நூல் ஆகியவைகளிருந்து எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் இக்கூறினர் அனைவரும் முக்கியமான ஒன்றை மறந்து விட்டர்கள் என்பது வேதனை. இவ்விரண்டு நூல்களின் ஒருவரியைக்கூட வைகுண்டர் நீரடியாக எழுதவில்லை என்றும், இவையனைத்தின் உண்மைகள் வைகுண்டரால் சீடர்களுக்கோ அருளாளர்களுக்கோ உணர்த்தப்பட்டவைகள் என்பது தான் அது. சுருங்கக்கூறின் அகிலத்திரட்டில் படி சீடர்களோ அருளாளர்களோ தான் தீர்கத்தரிசிகளேயன்றி, அய்யா அல்ல. வைகுண்டர் இறைவன் அவ்வார். ஆனால் அவர் தீர்க்கதரிசியாக்கப்பட்ட கொடுமை அறியாமையா அல்லது திட்டமிட்டு பரப்பபட்டத என்பது தெரியவில்லை. ஆனால் அகிலத்திரட்டு அடிப்படையில் அய்யாவை முழுமையாக இறைவன் என நம்புவோரும் கூட 'அவர் சொன்னதெல்லாம் அப்படியே நடக்கிறது' என்ற கூற்றை வைகுண்டருக்கான புகழாரம் என எண்ணி பெருமைபட்டுக்கொள்ளும் அறியாமை வேதனை. அவ்வறியாமை கல்வியாளர்களிடமும் கணிசமாக இருப்பது மேலும் வெதனை.
நான்கண்டவரை உண்மைகள்........
மேலும் இறைக்கண்ணோட்டதில் இந்துமதம் கூறும் கல்கியவதாரமும் விவிலியம் கூறும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் வைகுண்டரே என்னும் சிந்தனை பல ஆய்வாளர்களிடத்தும் சில புத்தகங்களிலும் வெளிப்பட்டுள்ளது கண்டிருக்கிறேன். இக்கருத்தின் உண்மையளவு எத்தகையது என்பது தெரியவில்லை என்றாலும், இவைகளை (அகிலத்திரட்டு, இந்து நூல்கள் மற்றும் விவிலியம்) இணைக்கும் ஒரு ஒப்பாய்வு () சிறந்ததாக இருக்கும் என கருதுகிறேன்.
மேலும் இந்துமதத்தின் ஆதிமுதல் இதுவரை உள்ள அனைத்து செய்திகளை (புராணங்கள், ஆகமங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள், உபனிடதங்கள்....) என அனைத்து நூல்களின் கருத்துக்களின் தொகுதியை ஒருவர் அறிய விரும்பினால் அவரை மிகவும் மகிழ்சியடையச் செய்யும் நூல் கண்டிப்பாக அகிலத்திரட்டாக தான் இருக்கமுடியும் என நினைக்கிறேன். ஆனால் மறு முனையில் உலக சமயக்குடும்பங்கள் அனைத்தின் சாரம் எது, என ஒரு கேள்வி எழுப்பப்படுகிறதெனில் அக்கேள்வியின் பதிலையே அகிலத்திரட்டு ஒரு மிகப்பெரிய கதையோட்டத்தின் மையக்கருத்தாக கொண்டு செல்வதும் அக்கேள்விக்கான மிகப்பொருத்தமான பதிலைக்கொடுக்குமென்பது பெருமைக்குரியது.
உலகம் தோன்றியது முதல் அனைத்துலோகங்களின் ஆட்சிப்பொறுப்பு சிவபெருமானிடம் இருப்பதும், கலியுக தொடக்கம் முதல் பல காரணங்களுக்காக அது திருமாலிடம் வருவதும், பின்னர் வைகுண்ட அவதாரத் துவக்கத்துடன் அனைத்து ஆளுமையும் (ஈரேழு பதினலு லோகங்களையும் ஆளும் பொறுப்பு உட்பட) சிவனின் திருத்தாண்டவம் வழியாக வைகுண்டரிடம் ஒப்படைக்கப்படுவதும் இறைக்கருத்தோட்டதில் பிரபஞ்ச உற்பத்தி முதல் நடந்தவைகளும், தற்போது நடப்பவைகளும் இனி நடக்கபோவதுமான (தீர்க்கத்தரிசனங்கள்) முக்கல சம்பவங்களின் தொகுதியாக அகிலம் விளங்குவது சிறந்த உதாரணம்.
மேற்கூறிய கருத்துக்களை 'வெறும் மிகைப்படுத்தல்' என எடுத்துக்கொள்ளாமல் அகிலத்திரட்டை படிப்பவர்கள் அதனை மேற்கூறிய அடிப்படையில் சிந்திக்குமாறு கேட்டுக்கொள்வதோடு, திரைப்படம் எடுப்பவர்கள் அனைத்து வகைக் கருத்தோட்டத்திலும் ஆய்வு மேற்கொள்ளுதல் மிகச்சிறப்பாக இருக்குமென நம்புகிறேன்.
சிவபாலன், செய்திக்கு நன்றி.
//அய்யா வழி பற்றி கேள்வி பட்டிருந்தாலும் தமிழ்மணம் வந்த பின் தான் அவரை பற்றிய நிறைய விஷயங்கள் தெரிஞ்சது..
//
ரொம்ப நல்லா சொன்னீங்க, மங்கை!
சங்குமன்னன்,
சுத்தி போடுங்க. (உங்களுக்கும் எனக்கும் அதில் நம்பிக்கை இல்லாட்டாலும் கூட) :) அருமையான பார்வை தொகுப்பு. இந்து தருமம் என்றால் சாதீயம் மட்டும்தான். என்கிற பார்வை காலனியவாதிகளின் வரையறை. அந்த வரையறையில் மதமாற்றிகளுக்கும் சில உயர்சாதி பீடங்களுக்கும் நன்மைகள் இருந்திருக்க கூடும். ஆனால் இந்து தேசியத்தின் வேர்களை நாம் கண்டறிய கூடிய இயக்கங்களின் கருத்தியல்கள் இந்த வரையறையை கடுமையாக எதிர்த்துள்ளன. உதாரணமாக சுவாமி விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி ஆகியோர். ஸ்ரீ நாராயண குரு தம்மை வெளிப்படையாகவே இந்து என அடையாளம் கண்டவர். இன்று அய்யா வழி மக்களில் சிலர் அகிலதிரட்டின் தீர்க்கதரிசன பார்வைகளை ஏன் முன்னிலை படுத்துகிறார்கள்? இதற்கான பதிலை நீங்கள் கூறுவது போல 'இந்த கொடுமை திட்டமிட்டு செய்யப்படுவதா' என்று கூறினால், அதற்கான பதில் இது ஒருவிதமான இயற்கை எதிர்வினை ஆகும். தாமரைகுளம் பகுதிகளில் இன்றைய காலகட்டத்தில் எளிய மனம் கொண்ட மக்களிடம் (குறிப்பாக சுனாமிக்கு பிறகு) மோகன் லாசரஸ் என்கிற மதமாற்றி விவிலிய தீர்க்கதரிசனங்களை பயன்படுத்தி மதமாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறான். இவன் நடத்தும் இதழின் ஜனவரி 2005 இதழில் விக்கிர ஆராதனை, விபச்சாரம் ஆகியவற்றால் இத்தகைய அழிவுகள் ஏற்படுவதாக பிரச்சாரம் செய்தான். இந்த 'கன்வென்ஷன்களை' எதிர்கொள்ள அய்யாவழி மக்கள் இயல்பாகவே அய்யா வைகுண்டரை முன்வைத்து இப்பிரச்சாரத்தை எதிர்கொள்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக எதிரி நம் இறையியலை நிர்ணயிக்கும் தன்மையிலிருந்து மேலெழுந்து அகிலதிரட்டு பார்க்கப்பட வேணுமென்பதில் பல அருமையான சிந்தனையாளர்கள் அகிலதிரட்டின் ஆன்மிக உள்ளர்த்தங்களை எழுதிவருகின்றனர் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மீண்டுமொரு முறை அருமையான பார்வைக்கு நன்றி.
ஜடாயு, சங்குமன்னன், Vasantham , அரவிந்தன் நீலகண்டன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment
<< Home