CNN-IBN TV க்கு எனது கண்டனங்கள்
கிரிகெட்டில் நம்ம ஆளுங்க மண்ணை கவ்வியது அனைவருக் அறிந்ததே. கிரிகெட் மீது நாம் வைத்திருக்கும் ஆதித வெறியால் நம்மால் அந்த தோல்வியை ஒரு விளையாட்டில் ஏற்பட்ட தோல்வியாக பார்க்க முடியவில்லை மேலும் அது ஒரு பெருங் குற்றமாகவே பார்க்கிறோம்.
அதற்கு ஒரு சான்று இந்த தொலைகாட்சி நிறுவனம் செய்திருக்கும் செயல். "அதை காண இங்கே செல்லுங்க.."
இதில் விளையாட்டு வீரர்களை வேவ்வேறு தொழில் செய்வது போல் சித்தரித்துள்ளனர். இதன் மூலம் அந்த தொழில்கள் கேவலமானவை என்கிறார்களா?
வருத்தமளிக்கிறது. அந்த தொலைக் காட்சிக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Youtube.con நிறுவனத்தின் நிறுவனர் இங்கே சிகாகோவில் Jewel-Oscoவில் பில் போடும் தொழிலாளியாக பணி புறிந்தவர். அதை பெறுமையாகத்தான் இன்னும் நினைக்கிறார்..
எங்கே செல்கிறோம் நாம்.
இதோ தமிழக முன்னோடி பத்திரிக்கை தினமலர் இந்த கேலி சித்திரத்தை வெளியிட்டு தனது தரத்தை தாழ்த்தி கொண்டது.
16 Comments:
குறைந்தளவு வருமானம் தரும் தொழில்கள் என்ற அளவில் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். இதை ஒரு தனிப்பட்டவர் செய்கின்றபோது நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு நிறுவனம்..?
வைசா
இந்த படங்களை ஈ-மெயில் பார்த்த பொழுது காமெடியாக இருந்தது.
ஆனால், இது CNN-IBN தளத்தில் வந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
அவர்களுக்கு நம் கண்டனத்தை எப்படி தெடியப்படித்துவது?
தகவலுக்கு நன்றி, சிவபாலன்!
வைசா
உண்மைதான். இதை ஒரு தனி நபர் செய்தாலும் ஏதோ நகைச்சுவை உணர்வுடன் செய்தார் அல்லது இன்னும் முதிர்ச்சியடையாதவர் என்று கூட கொள்ளலாம். ஒரு முன்னோடி செய்தி தொலைக்காட்சி இவ்வாறு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் விளைவே இப்பதிவு.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Nonsense Joke ..
இதில் சிரிப்பதற்கும் ஓன்றுமில்லை. உண்மையை ஒட்டியும் இல்லை ..கிரிக்கட்டர் ஒவ்வொருவரும் பல தலைமுறைகள் பலவற்றிற்கு சொத்து சேர்த்து வைத்துள்ளனர் .
தனிப்பட்ட நபர்கள் இந்த மாதிரி செய்தாலே ஒரு கற்பனைவளம் இல்லாத ஜோக்காகத்தான் இது தோன்றும் ..ஒரு நிறுவனம் செய்வது??
கிரிக்கெட் ஜோக்குனா அது சாத்தான்குளத்தானோடுதான்... அது ஜோக் .. இதெல்லாம் த்தூ...
தென்றல்,
ஆமங்க.. இந்த தொலைக் காட்சியின் முன்னோடி திரு. ராஜ்தீப் சர்தேசாயை மிகவும் இரசிப்பவன் நான். அவரின் தலைமையில் இயங்கும் இந்த நிறுவனம் இவ்வாறு செய்த்தது எனக்கு அதிர்ச்சியும் வேதனையும்..
எல்லாம் TRP Rating நோக்கியே அனைத்து தொலைக்காட்சியும்..ம்ம்ம்.. என்னமோ போங்க..
அவர்கள் தளத்திலேயே கண்டனங்களை தெரிவிக்க வழியிருக்கும் என நம்புகிறேன்.
-L-L-D-a-s-u,
சரியா சொன்னீங்க.. இதில் பெரிய நகைச்சுவை இருப்பதாக நான் உணரவில்லை.. அப்படி நினைத்ததால் என்னவோ அதை ஒரு பெரிய விசயமாக இந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. வேதனை.
அரசியல்வாதிகளின் பார்வையில் பார்த்து எழுதி இருக்கிறீர்கள்.
:))
திராவிட் படம் சூப்பருங்க !
GK,
உங்களுக்கு குறும்பு அதிகம்.. Ha Ha Ha..
ஒரு கண்டனத்தை தெரிவிக்க விடமாட்டீங்களே.. Ha Ha Ha..
Anna...
i too got this mail from my frends..பார்த்துட்டு இருக்கும்போது சிரிப்பு வந்துச்சு...ஆனா ஒரு டீ வில் போட்டா கஷ்டமாதான் இருக்கு..ஹ்ம்ம்
நீங்க குடுத்த லிங்க் problem வருது
சி.பா, அந்த லிங்க் வேலை ச்ந்ய்யலை. IBnல தூக்கிட்டாங்கனு நினைக்கிறேன். இருந்தாலும் கேடுகெட்ட இந்திய அணியினரை, இவர்களைப் போன்ற உழைக்கும் வர்கத்தினராக சித்தரித்தது கண்டனத்துக்குரியது.
காமிடி என்ற பெயரில் மீன்டும் வீடியோவாக இந்த டிவி ஒளிபரப்புகின்றது..
http://www.ibnlive.com/videos/
37009/fans-find-relief-in-cricket-comedy.html
சிவபாலன்,
நேற்று இவை எனக்கு மின்னஞ்சலில் வந்த போதே இதே எண்ணம் தான் தோன்றியது. தேவையில்லாத கேலி, சுவையில்லாத நையாண்டி..
சிவ,
உங்கள் பதிவை இன்று தான் பார்த்தேன். வேறு ஒரு வலைப்பதிவில் இந்த படங்களை பார்த்தேன். அப்போது தோன்றிய எண்ணங்களை இங்கேயே பதிவு செய்கிறேன்.
சாதாரண ஒரு விளையாட்டின் தோல்வியை கூட ஒத்துக்கொள்ளாத படி இந்திய தேசிய மாயை நம் கண்ணை மறைக்கிறதா? பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடும் போது ஒருவித மாயையை தேசியவெறி கிளம்புவது கவனித்திருக்கிறேன். கிரிக்கெட் தோல்வியால் தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்தவர்கள், தற்கொலை செய்தவர்கள், கிரிக்கெட் போட்டியை காண செல்வதற்காக சிறுநீரகத்தை விற்க முனைபவர்கள் என மனநோயாளிகளை உருவாக்கிருக்கிறது இந்திய கிரிக்கெட். கிரிக்கெட் மாயையில் மற்ற விளையாட்டுக்களுக்கு முக்கியதுவமில்லாது ஒற்றைத்தன்மையின் ஆதிக்கம் வலுத்திருக்கிறது. பன்னாட்டு கம்பெனிகளின் சரக்குகளை இந்தியனின் தலையில் திணிக்க கிரிக்கெட் விளையாட்டாளனின் விளம்பர மாயை விற்பனையாகிறது. காலனியாதிக்க கண்டுபிடிப்பின் எச்சமான கிரிக்கெட்டில் சுதேசியாளர்கள் மயக்கம் என எங்கும் கிரிக்கெட் மாயை.
இந்த வரிசையில் புதிய வரவாக சாதாரண மக்கள் செய்யும் உடல் உழைப்பு தொழில்கள் தோற்ற இந்திய அணியை திட்ட 'கெட்ட வார்த்தையாக' பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த படங்களின் வழி 'உழைக்கும் மக்களும், அவர்களது தொழில்களும் கேவலமானது' என அவலச்சுவையை பார்ப்பனீய மனங்கள் விற்பனை செய்கின்றன. இவர்களின் துவக்கம் மனுதர்மத்தில்!
சமூக பொறுப்புள்ளவர்களை ஊருவாக்கும் வரை இது போன்ற அவலச்சுவைகளே தொடரும். படிப்பிற்கும், பண்பிற்கும் சம்பந்தமில்லை என மீண்டும் நிரூபித்த இது ஒரு நிகழ்வு!
சிவபாலன்,
தினமலர்-ல முதல் பக்கத்தில போட்டுக்காங்க...
பார்த்தீங்களா?
நன்றி தென்றல்.. அப்டேட் செய்திருக்கிறேன்.
தினமலர் இவ்வாறு செய்தது சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது
//சிவபாலன் said...
தினமலர் இவ்வாறு செய்தது சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது//
:)
Post a Comment
<< Home