(Weird) என்னிடம் சற்று மாறுபட்டவைகள்
நம்ம மணிகண்டன், முத்துக்குமரன், சந்தோஷ், மற்றும் நந்தக்குமார், இவர்கள் என்னை என்னிடம் இருக்கும் மாறுபட்டவைகள் பற்றி பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்திருந்தனர்.
அவர்களின் அன்பிற்காகவும் இந்த சங்கில்த் தொடருக்காவும் இங்கே என்னிடம் சற்று மாறுபடுபவைகளை பகிர்ந்துகொள்கிறேன்.
1. தருமபுரம் சுவாமிநாதனின் தேவாரப் பாடல்கள்
நான் பிறந்த வளர்ந்த சூழ்நிலை தேவாரம் திருவாசகம் என ஒரே அமர்க்களப்படும். நமக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் எனது தாத்தா (அவரும் சுவாமிநாதன் தான்) பாட பாட கேட்டுக் கொண்டே இருக்கலாம். அதனாலோ என்னவோ தருமபுரம் சுவாமிநாதனின் குரல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு நாள் முழுவதும் கேட்க சொன்னாலும் கேட்பேன். அவருடைய தேவாரப் பாடல்கள்தான் எனது காரில் (நான் மட்டும் பயனம் செய்யும் போது) அதிகமாக ஒலிக்கும்.
2. சக்கரை,பால் இல்லா "டீ"
எனக்கு எப்போதும் சக்கரை பால் இல்லா டீ தான் பிடிக்கும். இதனால் பல இடங்களில் எனக்கும் மற்றவர்களும் தர்ம சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன. எங்க வீட்டிலும் தான். என்னுடை மகள் இதை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருப்பாள்.
3. THE HINDU பேப்பர்
நான் இந்தியாவை விட்டு கிளம்பும் வரை காலையில் Hindu பேப்பருடன் டீ.. ஆகா.. சுகமான காலை.. ஆனால் வீட்டில் இதனால் பலமுறை சண்டையும் வந்திருக்கிறது.
4. நடப்பது.
எவ்வள்வு தூரம் வேண்டுமானலும் சலிக்காமல் நடப்பேன். காந்திபுரம் To வடவள்ளி சுமார் 20 கி.மி. அடிக்கடி நண்பர்களுன் நடப்பேன்.. ஆனால் சுமார் மூன்று (Bakery) பேக்கரியாவது ஏறி இறங்கிவிடுவோம்..
தற்பொழுது சுத்தமாக நடையே இல்லை. சற்று வருத்தம்தான்.
5. Weirdனா நிகழ்வு
நண்பர் ஒருவர், (இங்கே அமெரிக்காவில்தான்) தொடர்து இரு நாட்கள் தூங்காமல் வேலை. ஏதோ Critical Issue போல.
வேலை முடித்து காரில் வீடு திரும்பும் போது, ஒரு சிக்னலில் வந்து நின்று இருந்தார். அப்போது லேசா தூக்கம் வர, சற்று கண்ணை மூடி விட்டார். அவ்வளவு தான் ஒரு 10 நிமிடம் ஆழ் தூக்கம். பின்னாடி நின்றிருந்த ஒருவர் (Cop)போலிஸ்க்கு சொல்லிவிட, Cop வந்து நண்பரை எழுப்பியிருக்கிறார்.
ஏன் இப்படி தூங்கிட்டீங்க என கேட்க, இல்லையே சும்மா 2 வினாடிதான் கண்ணை மூடினேன், இன்னும் சிக்னல் மாறலேயே என சொல்ல.. அவ்வளவுதான், உடனே எங்கே வேலை செய்கிறீர்கள் என கேட்டு, DUI Test செய்து, நண்பரின் மேலாளருடன் பேசி இரு நாட்கள் தொடர்ந்து வேலை செயவது முதல் எல்லாம் தெரிந்துகொண்டார்.
பிறகு அறிவுரை எல்லாம் கூறிவிட்டு, அருகில் உள்ள கடையில் காபி வாங்கி கொடுத்துள்ளார்.
நம் நண்பருக்கு மகிழ்ச்சி தாங்க முடியல.. என்ன இருந்தாலும் அமெரிக்கன் COP சூப்பர் என..
கடைசி வரை மிக நன்றாக பேசி நன்றி கூறி விடை பெறும் முன் கையில் US $250 Ticket தினித்துவிட்டு சென்றுவிட்டார்.
நான் அழைக்க விரும்பும் பதிவர்கள்
1. பீம்பாய் - ஈரோடு
2. ஆதிசேஷன்
3. தொட்டாராயசுவாமி
4. சர்தார்
5. சூர்யா
32 Comments:
நானும் உங்களை கூப்பிட்டி இருந்தேனுங்கோவ். :-)
நடை உங்களுக்குமா..வடவள்ளி பாதைல நடப்பதற்கு கசக்குமா என்ன..
சின்ன வயசுல வடவள்ளி வரைக்கும் கார்ல வந்துட்டு அங்க இருந்து மருதமலைக்கு நடந்து போவோம்...
ஹ்ம்ம்ம்ம்...என்னமோ ஊரு நியாபகம் கிளரிவிட்டுடீங்க...ஹ்ம்ம்ம்
முத்துக்குமரன்,
மிக்க மகிழ்ச்சி! நான் கவனிக்காமல் விட்டுவிட்டதற்கு மன்னித்துவிடுங்கள்..
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
//தருமபுரம் சுவாமிநாதனின் தேவாரப் பாடல்கள்//
சிவபாலன். இது நினைவில் இருக்கிறது. ஏதோ ஒரு பின்னூட்டத்தில் ஓதுவார் குடும்பம் என்று நீங்கள் சொல்ல தேவார திருவாசகங்களைப் பற்றி நீங்கள் எழுதுவீர்கள்; எழுதவேண்டும் என்று விரும்பி உங்களைப் பதிவெழுத வற்புறுத்தியது நினைவில் இருக்கிறது. இதுவரை அவற்றைப் பற்றி எழுதாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். :)
மங்கை
1989லிருந்து 1992 வரை கல்லூரியில் படிக்கும் போது நான் என் நண்பர்கள் மூவருடன் எப்போது நடைதான். எதோ பேசிக் கொண்டே செல்வோம்..( இந்தியாவை ஆளாப் போவது மாதிரி.. Ha Ha Ha..)
விவாசயக் கல்லூரி கடப்பது சுகம்.. அது மட்டுமில்லாமல் அப்பொழுகு அங்கே அவ்வளவு வளர்ச்சியடையவில்லை..
இப்ப நினைக்கும் போது சிரிப்புதான் வருகிறது..
ஆமாம் சிவா சிரிப்பு தான் வருது
ஒருத்தி தனியா வருவான்னு அவள விடறதுக்கு PRS மைதானத்துல நுழைந்து நடக்குறது..மறுபடியும் நாங்க தனியா வருவோம்னு அவ கொஞ்ச தூரம் வர்ரது...கடைசியில இருட்னதுக்கு அப்புறம் எல்லாரும் பயந்துட்டே வீட்டுக்கு வந்து திட்டு வாங்குறது...பைத்தியக்காரத்தனமா இருக்கும்...ஆனா அது எல்லாம் எவ்வளவு சுகமா இருந்துசுன்னு அந்த வயசுல தான் தெரியும்..ஹ்ம்ம்... சிரிப்ப தவிர வேறெதுவும் தெரியாத வயது...
குமரன் சார்
என் மேல் இருக்கும் அன்பினால் நான் எங்கோ எப்போதோ சொன்னதை இன்னும் நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
என்னிடம் சுவாம்நாதன் அவர்கள் பாடிய தேவாரப்பாடல்களின் MP3/ Audio Files இருக்கிறது. உங்களுக்கு கேட்க ஆர்வம் இருந்தால் சொல்லுங்கள் அனுப்பிவைக்கிறேன்.
(வேறு யாரேனுக்கும் விருப்பம் இருந்தால் தெரிவியுங்கள்.. ஆவன செய்யப்படும்.)
வருகைக்கு மிக்க நன்றி
மங்கை
நீங்க சொன்ன மாதிரி.. கொஞ்ச தூர நடந்து வருவது எங்க குருப்பிலும் நடக்கும்.(பேச்சு சுவாரசியம் அதிகமாகும் போது).. Ha Ha Ha..
அனுப்புங்கள் சிவபாலன். நன்றி.
ஒரு காஃபிக்கு 250$ அதிகம் தான் :)
அதுசரி சி.பா அது உங்க நண்பருக்கு நடந்ததா இல்லை உங்களுக்கா??
அழைப்பை ஏற்று வியர்டுனதுக்கு நன்றி.
மணி
இப்படி உண்மையெல்லாம் பொதுவில் கேட்கலாமா? Ha Ha Ha..
என் நண்பருக்குத்தான் நடந்தது என்று சொன்ன நம்புங்க.. :)
குமரன் சார்
இவ்வார இறுதியில் நிச்சயம் அனுப்புகிறேன்
பகிர்ந்துக்கொள்ள என்ன இருக்கின்றது என்றென்னியபோது.!
என்னுள் இருப்பதும் அவளுள்ளும் இருப்பதாய் நான் நினைப்பதும்
எங்களுள் எதோ இருப்பதாக நண்பர்கள் நினைப்பதும்,
இவை உண்மையாகிவிடக்கூடாதா
என்று வடவள்ளி நவகிரகங்களை
நான் நன்பிக்கையில்லாமல் சுற்றியதும்,
கவிதைகளே எழுதாவிட்டாலும்
அவைகள் கவிதைகள்
என்று அவன்காதலிக்கு கொடுத்து
திருப்திஅடைந்த நண்பர்களும்,
என்னை இன்று கணிப்பொறி ஆசிரியாராக
கல்லூரியில் வலமிட்டு அழகுப்பார்ப்பதும்,
பகிர்வுப் பெயரில் என் பெயர் வந்ததின்
காரணமும்
எவைகளாக இருக்கக்கூடும் என்பதையே
இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
பகிர்வுக்கு என்னை அழைத்த சிவபாலன் அவர்களுக்கு நன்றி
திரு. தொட்டாராயசுவாமி அவர்களே,
என்ன அருமையான கவிதை.. கலக்கிடீங்க..
//என்னுள் இருப்பதும் அவளுள்ளும் இருப்பதாய் நான் நினைப்பதும்
எங்களுள் எதோ இருப்பதாக நண்பர்கள் நினைப்பதும் //
இது சூப்பர்..
நேரம் கிடைக்கும் போது கவிதையாகவே கொடுத்துவிடுங்கள்..
வியர்டினதுக்கு ரொம்ப நன்றி சி.பா.
//எவ்வள்வு தூரம் வேண்டுமானலும் சலிக்காமல் நடப்பேன். காந்திபுரம் To வடவள்ளி சுமார் 20 கி.மி. அடிக்கடி நண்பர்களுன் நடப்பேன்.. ஆனால் சுமார் மூன்று (Bakery) பேக்கரியாவது ஏறி இறங்கிவிடுவோம்..
//
என்னாது 20 கி.மீ ஆகா இது கொஞ்சம் அதிகமா தான் இருக்கு.
//இவ்வார இறுதியில் நிச்சயம் அனுப்புகிறேன்//
எனக்கும் அப்படியே முடிந்தால் அனுப்பவும். sjsanthose@gmail.com
சந்தோஷ்,
வாங்க..
ஆமாங்க கொஞ்ச தூரம் தான்.. வாரம் ஒரு முறையாவது நடப்போம்.. அதுவும் வெள்ளிக்கிழமை நிச்சயம்..
இந்த பேக்கரியில் டீ தேங்காய் பன் சாப்பிட்டுவிட்டு நடப்பது ஒரு சுகம்..
நடுவில் பஸ் ஏறி செல்லனும் நினைச்சால் அதுவும் அப்ப அப்ப நடக்கும்.. சுகமான காலங்கள்.. ம்ம்ம்ம்ம்ம்..
அந்த MP3 உங்களுக்கும்
அனுப்புகிறேன்.
நன்றி சிவபாலன்.என்னை எப்படிக் கூப்பிட்டீர்கள்.திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி தனித்திருந்தேன்.உங்க பதிவுல பார்த்த்போது கூட அது வேறு
'சூர்யா'ன்னு நினைச்சேன்.நெஜம்மா நான் தானா?நானே ஒரு 'odd'[வியர்டுக்கு இப்படியும் அர்த்தமுண்டு]நன்றி பாலன்
சூர்யா
வாங்க..
சூர்யா என்று பெயர் வைத்துவிட்டு எப்படி தனி ஆள் என்கிறீர்கள்.. Ha Ha Ha.. (இன்றைக்கு தமிழ் நாட்டை கலக்கும் இளைஞர்களில் சூர்யாதான் நெ:1)
நீங்களும் Tamil Blog Spaceல் கலக்க வாழ்த்துக்கள்
நேரம் கிடைக்கும் போது உங்கள் மாறுபட்டவைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்..
நன்றி
என்னங்க பகிர்ந்துக்கொண்ட
எண்ணங்களை
ஒன்றன் பின்
ஒன்றாக எழுதியதை
//கவிதைகளே எழுதாவிட்டாலும்
அவைகள் கவிதைகள்
என்று அவன்காதலிக்கு கொடுத்து
திருப்திஅடைந்த நண்பர்களும்,
//
கவிதைகள் என்று நீங்கள்
ஒப்புக்கொண்டதிலிருந்து என் நண்பரகிவிடீர் போங்கள்.
கண்டிபாக,
கால்லூரில் நான் ஓரு உயிர்த்தின்னியிடம்
மாட்டிக்கொண்டு ஆசையாய் அனுபவித்த
அந்த கனாக்காலங்களை கவிதைப்பதிவாக தருகின்றேன்.
விரைவில் ...
send me: jicthotta4u@gmail.com
சுவாம்நாதன் அவர்கள் பாடிய தேவாரப்பாடல்களின் MP3/ Audio Files
20kms walkingaa? yabbaa.
veetlerundhu parking lot poradhakke mel moochu keezh moochu vaangudhu enakku :)
தொட்டாராயசுவாமி அவர்களே,
நண்பனாக் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி..!!
சர்வேசன்
ஆமாங்க.. தூரம் அதிகம்தான்.. இருப்பினும் அது மாதிரி நிறைய பேர் குறிப்பா கூலி ஆட்கள் நடந்து போயிட்டு இருப்பாங்க. அதனால் அது அப்ப ஒரு வித்தியாசமாக தெரியவில்லை.
ஆனால் இன்று நிறைய மாற்றங்கள்.. கட்டிட தொழிளாலிகள் நிறைய பேர் TVS 50 வைத்திருக்கும் நிலைக்கு மாறியுள்ளதை மறுக்க முடியாது..
இங்கே எனக்கு இப்போ நடையே இல்லை.. Tread Millல் தான் ஒட்டமும் நடையுமாக வாழ்க்கை ஓடுது..Ha Ha Ha..
வருகைக்கு மிக்க நன்றி
சிவபாலன் சார்,
உங்களை யார் என்னவென்றே எனக்குத் தெரியாது. என்னையும் மதித்து அழைத்ததமைக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
இதோ எனது கிறுக்குத்தனங்களை எழுதுகிறேன்.
மீண்டும் நன்றி சார்.
சிவபாலன்,
வணக்கம்.
"சற்று முன்" செய்தித் தளத்தின் நிருபரான பின்னர் உங்கள் தளத்தில் பதிவுகள் போடுவதை வெகுவாகக் குறைத்து விட்டீர்கள் போலும்.
நடப்பது எனக்கும் பிடித்த ஒன்று.
சக்கரை, பால் இல்லாமல் தேநீரா?
ம்ம்ம்... நான் இவ் விடயத்தில் மிகவும் எதிர்... இன்னிபு இல்லாவிட்டால் ஒன்றும் இறங்காது :)))
/* (வேறு யாரேனுக்கும் விருப்பம் இருந்தால் தெரிவியுங்கள்.. ஆவன செய்யப்படும்.) */
சிவபாலன், ஆட்சேபனை இல்லையெனின், உங்களுக்குச் சிரமம் இல்லையென்றால், எனக்கும் சுவாமிநாதன் அவர்களின் தேவாரம்/திருவாசகப் பாடல்களை அனுப்பி வைக்க முடியுமா?
முன் கூட்டியே மிக்க நன்றிகள்[Thanks in advance]
ஆதிசேஷன,
என்னிடமிருந்து அழைப்பு சற்று உங்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கலாம். இருப்பினும் இது வலை உலக புது முகங்களுடன் நட்பு பாராட்டும் முயற்சி.
அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.
பி.கு. என்னை சார் என்று அழைக்க வேண்டியதில்லை..
வெற்றி
உண்மைதாங்க.. கொஞ்சம் மாறுதலுக்காக நிருபர் வேலை.
ஆமாங்க, Black Tea எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் Srilankan Tea விரும்பி பருகுவேன்.
உங்களுக்கு அந்த Mp3 ஐ அனுப்பி வைக்கிறேன்.
நீங்களும் ரொம்ப நாளா அளையே கானோம்.. ஏதாவது ஒரு பதிவை தட்டிவிடுங்க.. படிப்பொம்
வருகைக்கு மிக்க நன்றி
Sorry சிவபாலன், கொஞ்சம் லேட். (கொஞ்சம் இல்லை. ரொம்பவேங்கறீங்களா?)
//சுமார் 20 கி.மி. அடிக்கடி நண்பர்களுன் நடப்பேன்.//
ச்சே. இது ஒரு சுகமான அனுபவம் இல்லை. நண்பர்களுடன் பேசிக் கொண்டே நடப்பது. விடிய விடிய அரட்டை அடிக்கறது. ஆனாலும் 20 கி.மீ பயமுறுத்துது.
அப்புறம் தேவாரப் பாடல்கள். எனக்கு கூட அதைப் படிக்கணும் அர்த்தம் புரிஞ்சுக்கணும்னு ஆசையாதான் இருக்கு.
தொட்டாராயசுவாமி உங்க கவிதை இன்னும் மனசுலயே இருக்கு. கலக்குங்க.
நந்தா
என்னை பதிவிட அழைத்ததற்கு மீன்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..
ஆமாங்க, 20 கி.மி. கிட்டதட்ட 3 மணி நேரம் நடப்போம்.. நிங்க சொன்ன மாதிரி 3 மணி நேரமும் அரட்டைதான். அதனால் போவதே தெரியாது. (வழக்கம் போல் எங்க குருப்பிலும் ஒரு அப்பாவி இருக்கிறார். அவரை ஓட்ட ஆரம்பிச்சா நேரம் போவதே தெரியாது)
தேவாரப் பாடல்கள் Mp3 அனுப்பி வைக்கிறேன். கேட்டு பாருங்க.
வருகைக்கு நன்றி
சிவபாலன்,
வணக்கம்.
/* உங்களுக்கு அந்த Mp3 ஐ அனுப்பி வைக்கிறேன். */
மிக்க நன்றி.
என் மின்னஞ்சல் முகவரி :- vettri_kandaswamy@yahoo.com
பாலராஜன்கீதா has left a new comment on your post "(Weird) என்னிடம் சற்று மாறுபட்டவைகள்":
அன்புள்ள சிவபாலன் மற்றும் வலை உலக நண்பர்களுக்கு,
என்னிடமும் 61 தேவாரப் பாடல்கள், தலத்திற்கு ஒரு பாடல் என்ற தலைப்பில் MP3 வடிவில் உள்ளன. மொத்த பாடல்கள் அடைத்துக் கொள்ளும் இடம் 97 MB. மொத்தமாக zip செய்தாலும் அதன் அளவு 73 MB ஆக வருகிறது. ஒவ்வொரு பாடலும் ஏறக்குறைய 1 MB முதல் 2.5 MB வரை உள்ளது. பாடியவர் தருமபுரம் சுவாமிநாதன் (என்றுதான் நினைக்கிறேன்).
பாடல் (தலங்களின்) பெயர்கள்:
= = = = = = = = = =
001 CHIDAMBARAM.mp3
001 CHIDAMBARAM.mp3
002 THIRUVETKALAM.mp3
003 THIRUNELVAYIL.mp3
004 THIRUK KAZHIPPALAI.mp3
005 THIRUNALLUR PERUMANAM.mp3
006 THIRUMAYENDIRA PALLI.mp3
007 THEN THIRU MULLAI VAYIL.mp3
008 THIRU KALIKKAAMUR.mp3
009 THIRU CHAAIKKADU.mp3
010 THIRU PALLAVANEECHARAM.mp3
011 THIRU VENGAADU.mp3
012 KEEZHAI THIRUKKAATTUPPALI.mp3
013 THIRUKKURUGAVUR VELLAADAI.mp3
014 THIRU BRAMMAPURAM.mp3
015 THIRU KOLAKKA.mp3
016 THIRU PULLIRUKKU VELLUR.mp3
017 THIRUKANNAR KOIL.mp3
018 THIRU KADAI MUDI.mp3
019 THIRU NINDTIYUR.mp3
020 THIRU PUNKUR.mp3
021 THIRU NEDUR.mp3
022 THIRU VANNIYUR.mp3
023 THIRUTTHURUTTHIYUM THIRUVELVIKUDIYUM.mp3
024 THIRUVEDHIRKOLPADI.mp3
025 THIRUMANANJERI.mp3
026 THIRUKKURUKKAI VEERATTAM.mp3
027 THIRU KARUPPARIYALUR.mp3
028 THIRUKKURANGUKKA.mp3
029 THIRUVAAZHKOLI PUTTHUR.mp3
030 THIRUMANNI PADIKARAI.mp3
031 THIRU OMAAN PULIYUR.mp3
032 THIRU KANNKATTU MULLUR.mp3
033 THIRU NAARAIYUR.mp3
034 THIRUKKADAMBUR.mp3
035 THIRU PANDANAI NALLUR.mp3
036 THIRU KANJANUR.mp3
037 THIRU KODIKKA.mp3
038 THIRU MANGALA KUDI.mp3
039 THIRU PANANDAAL.mp3
040 THIRUVAPPAADI.mp3
041 THIRU CHAINYALUR.mp3
042 THIRU DEVANKUDI.mp3
043 THIRU VIYALUR.mp3
044 THIRU KOTTAIYUR.mp3
045 THIRU VINNAMBAR.mp3
046 THIRU PURAMBAYAM.mp3
047 THIRU VISAYA MANGAI.mp3
048 THIRU VAIGAVUR.mp3
049 THIRU VADAKURANGADUTHURAI.mp3
050 THIRU PAZHANAM.mp3
051 THIRU VAYYARU.mp3
052 THIRU NEIYTHAANAM.mp3
053 THIRU PERUMPULIYUR.mp3
054 THIRU MAZHAPADI.mp3
055 THIRU PAZHAVUR.mp3
056 THIR KANUR.mp3
057 THIRU ANBILALANTHURAI.mp3
058 THIRU MANTHURAI.mp3
059 THIRU PATTRURAI.mp3
060 THIRUVAANAIKKAA.mp3
061 THIRUPAINGELLI.mp3
தேவை எனில் ***************** என்ற மின்முகவரிக்கு மடல் அனுப்பினால் பாடல்களை அனுப்புகிறேன்.
Hi sir,
i like this web page very much,u look like too slim but u have a smart mind,
"silencein the face may create many problem,but smile in the face may solve many problems", so keep smiling..........from NELSON,I B.SC(CS)-A.
எனது கவிதைத் தொகுப்பு "ஊரெல்லாம் தூரல்"
கவிதை நேசிக்கும் தமிழ் உள்ளங்களுக்காக இணையத்தில்.
தட்டுங்கள்
படித்து உங்கள் கருத்துக்களை, பதித்துச் செல்லவும்.
அடுத்தத் தொகுப்புக்கான விதைகளை தூவிச் செல்லுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
தொட்டராயசுவாமி.அ
கோவை.
Post a Comment
<< Home