Monday, July 16, 2007

தமிழகத்தின் புதிய முதல்வர் Dr.ராமதாஸ்?!!!


தி.மு.க. அரசை மூச்சுக்கு முந்நூறு தடவை ‘மைனாரிட்டி அரசு, மைனாரிட்டி அரசு’ என்று சொல்லி வரும் ஜெயலலிதா, ஒரு மைனாரிட்டி அரசின் ஸ்திரத்தன்மை எந்தளவுக்கு இருக்கும் என்பதைப் புரிய வைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்.

ஜெயலலிதா, திரைமறைவில் காங்கிரஸக்குள் கல்லெறிந்திருக்கிறார். கோஷ்டிகளுக்குப் பஞ்சமில்லாத காங்கிரஸில் பலவகையிலும் பலவீனமான பத்து எம்.எல்.ஏ.க்களைக் குறிவைத்து செங்கோட்டையனை இந்தக் குதிரை பேரத்தில் ஈடுபடவைத்திருக்கிறாராம். ஒரே சமூகத்தைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஐந்துபேர் இதற்குச் சம்மதித்துப் பணப் பரிவர்த்தனைகளும் முடிந்துவிட்டதாம்.

இது தவிர, ராமதாஸின் சம்பந்தியான கிருஷ்ணசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தி.மு.க.வை விளாசும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் என கணக்குப் போட்டு, கிட்டத்தட்ட காங்கிரஸை சரிபாதியாக உடைத்து விடும் வேலையும் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறதாம்.

இப்படி பா.ம.க., காங்கிரஸின் ஒரு பிரிவு, அ.தி.மு.க., ம.தி.மு.க. ஆகியவற்றுடன், மார்க்சிஸ்ட்டை சரிக்கட்டி அழைத்து வந்துவிட்டால், இந்திய கம்யூனிஸ்டும் தானாக வந்துவிடும் என்று கணக்குப் போடும் ஜெயலலிதா, இதெல்லாம் சேர்ந்தால் நூலிழை மெஜாரிட்டியிலாவது ஓர் ஆட்சியை அமைத்துவிட முடியும் என்று நம்புகிறாராம்!’’

அதாவது, திட்டமிட்டபடி எல்லாம் கைகூடி வந்தால், அ.தி.மு.க. ஆட்சி அமைக்காதாம். இத்தனை தூரம் தன்னை நம்பிவரும் ராமதாஸின் மனம் குளிரும்படி பா.ம.க. தலைமையில் ஆட்சி அமைய வெளியில் இருந்து ஆதரவளிக்கவும் தயார் என்ற மனநிலையில் இருக்கிறாராம் ஜெ.

முழுவதும் படிக்க " குமுதம் ரிப்போட்டர் செல்லவும்... "

நன்றி: குமுதம் ரிப்போட்டர்

3 Comments:

Blogger சிவபாலன் said...

மருத்துவர் பதிவி வகிக்காத பட்சத்தில் பாமக முதல்வர்.. சரிதானே?!

என்னமோ ..அரசியல் எல்லாம் நடக்கும்..

யாரும் மறுப்பதற்கில்லை..

July 16, 2007 10:11 AM  
Blogger சிவபாலன் said...

இதில் இன்னொரு விசயம், இவ்வளவு தூரம் கணக்கு போடும் ஜே தேர்தலுக்கு முன்பே சுதாரித்துக் கொண்டிருக்கலாம்.

ஆனால் கலைஞரும் சளைத்தவர் அல்ல..

அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை அரசியல் வட்டாரத்தை சுவரசியமாக்கும்.. பார்க்கலாம்.

July 16, 2007 11:31 AM  
Blogger G.Ragavan said...

ஜெயலலிதாவின் கணக்கு அவ்வளவு எளிதானதல்ல. கருணாநிதியைத் தவிர யாரிருந்திருந்தாலும் நீங்கள் சொன்னது இந்நேரம் நடந்திருக்கும்.

July 16, 2007 12:43 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv