Tuesday, July 17, 2007

பூஜை பொருட்கள் - சிறுகதை.

ஊரில் பெரிய ஜோதிடர். அந்த வட்டாரத்தில் இவரை தெரியாதவர்களே இல்லை. ஆனால் அதெல்லாம் சுமார் 20 வருடங்களுக்கு முன். கிராமச் சூழ்நிலையில் இருந்து படிப்படியே நகரச்சுழ்நிலைக்கு மாறிவிட்ட அந்த ஊரில் சின்னசாமி சோதிடரின் வட்டம் குறுகிவிட்டது. சோதிட வருமாணத்தை வைத்தே தனது இரு மகன்களுக்கும் நல்ல படிப்பு சொத்து என நல்ல முறையில் முன்னேற்றிவிட்டார்.

ஆனால் ஓடி ஆடிய அந்த ஜீவன் தற்பொழுது மரணப்படுக்கையில்.. அது கிட்டதட்ட அவருடைய கடைசி நிமிடங்கள். அனைத்து நெருங்கிய பந்தகளும் அவருடைய வீட்டில்.

ஏம்பா சிவஞானம்! உங்க அப்பா கடைசியா எப்ப சாபிட்டார்?

இரண்டு நாளா வெறும் தண்ணீர்தான் உள்ளே இறங்குகிறது!

பதில் சொன்ன சிவஞானத்தை சற்று நிமிர்ந்து பார்த்தார் உறவினர் ஒருவர்.

அதற்குள் இன்னொருவர் அப்படின்னா, இன்றைக்கு இரவு கடப்பதே ரொம்ப கஷ்டம்..ம்ம்ம்..




சற்று நேரத்தில் சிவஞானத்தின் மகள் ஓடி வந்து, அப்பா "உங்களை உள்ளே உடனே வர சொன்னாங்க" என்றாள்.

கிட்டதட்ட முக்கிய உறவுகள் சின்னசாமியை சுற்றி..

ஒருவர். ஏம்பா, புறப்பாடு ஆரம்பித்துவிட்டது. எல்லாரும் தேவாரம் திருவாசகம் பாடுங்க. ஆன்மா நல்லதை கேட்டுவிட்டு செல்லட்டம்.

"நமசிவாய வாழ்க" என சிவஞானம் ஆரம்பிக்க அனைவரும் கூட பாட ஆரம்பித்தனர்.

ஆம், தனது சிறுவயதில் இருந்தே உழைப்பு உழைப்பு என்று இருந்த அந்த ஜீவன் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது.




சரி எல்லாம் நல்ல படியா முடிந்துவிட்டது. அவருக்கும் வயது 75ஐ கடந்துவிட்டது. அதுனால சும்மா அழுது ஆர்ப்பாடம செய்யாதீங்க. அடுத்தது ஆகவேண்டியதை பாருங்க.

அப்ப, பூஜை செய்து ஒப்படைத்துவிடலாமே! என்றார் ஒருவர்.

சிவஞானம் பூஜை பொருட்களுக்கு ஏற்பாடு செய்யுப்பா! என்றது வீட்டின் வெளியில் இருந்து வந்த ஒரு குரல்.

சிவஞானம் சற்று யோசித்தார். அட மணி 2.30 ஆகிவிட்டதே. இந்த அர்தராத்திரியில் எப்படி பொருள் வாங்குவது.?. ம்ம்..

அதற்குள் அவருடைய மைத்துனர் ஏங்க ரொம்ப யோசிக்கிறீங்க? நம்ம அண்ணாச்சி கடை, ரங்கசாமி அண்ணன் கடை, விசாலாட்சி ஸ்டோர் எல்லாம் இருக்கு. வாங்க பார்த்துக்கொள்ளுவோம்.





சரி என சிவாஞானம் தனது பைக்கில் மைத்துனரையும் ஏற்றிக்கொண்டு கிளம்பினார்.

அந்த கடைத்தெருவில் வெறும் நிசப்த்தம்.

"அண்ணாச்சி அண்ணாச்சி" என்று குரல் கொடுத்தனர். உபயோகமில்லை. சரி வா!, அடுத்த கடைக்கு செல்வோம்.

ரங்கசாமியை எப்படியோ எழுப்பிவிட்டார்கள். ஆனால் அவர், "சரக்கு சுத்தாம இல்லை", "நாளைக்குத்தான் கிடைக்கும் என்றார்!"

ஒருவித ஏமாற்றத்துடனும் ஒரு துளி நம்பிக்கையுடனும் விசாலாட்சி ஸ்டோர் சென்றனர். அங்கே இருந்த காவலாளி " கடை இரண்டு நாளா லீவு.! முதலாளி வீட்டில் விசேசம்.!"

சிவஞானதின் மனதில் கவலை தொற்றிகொண்டது.




அதற்குள் அவருடைய மைத்துனர்.. மாமா!, "ஒன்னு சொன்னா கோபிக்க மாட்டீங்களே?!"

"நம்ம சேவியர் கடையில் போய் பார்க்கலாம்!" என்றார் மைத்துனர்.

இந்து அமைப்பின் தலைவர் என்ற முறையில் கோவில் அருகில் "சர்ச்" கட்டும் விசயத்தில் சேவியருடன் போன வாரம்தான் பெருத்த வாக்குவாதம்.

இப்ப, அதுவும் இந்த நேரத்தில் அவனைப்போய் எழுப்பவது சரியா? என சிவஞானத்தின் சிந்தனை தடுமாறியது.

என்னா ஆனாலும் சரி.. கேட்டுப் பார்த்துவிடுவோம் என இருவம் சேவியர் கடை நோக்கி.




காலிங் பெல் சத்தம் கேட்டு வெளியே வந்த சேவியர்.. "யாரது".. "யாருங்க இந்த நேரத்தில்?!"

"நான் தான் சிவஞானம்.!"

சேவியருக்கு "திக்" என்று ஆகிவிட்டது.

அவனுடைய மனதில் பல எண்ணம்.. இருப்பினும்
"என்ன அண்ணே இந்த நேரத்தில்?" என்றான்.

"எங்க அப்பா கொஞ்ச நேரத்திற்கு முன் இறந்துவிட்டார்."

"அடடா.. சரிண்ணே??" என்றான் சேவியர்.

"அதான் பூஜை பொருள் வாங்கனும். அது தான் இங்கே! இந்த நேரத்துல உன்னை எழுப்பவதற்கு மன்னிச்சுவிடுப்பா.."

"என்ன அண்ணே இப்படி சொல்லிடீங்க.! முப்பது வருசமா தாயா புள்ளையா பழகுகிறோம். இது போல சமயத்தில் உதவாவிட்டால் எப்படி? "

"வாங்கண்ணே" என்று சிவஞானத்தின் கைகளை பற்றினான் சேவியர்.

31 Comments:

Blogger கோவி.கண்ணன் said...

சிபா,

சிறுகதை முயற்சியா ?

நன்றாக வந்துருக்கு... சமய நல்லிணக்கம் கருப்பொருளில்.

//சோதிட வருமாணத்தை வைத்தே தனது இரு மகன்களுக்கும் நல்ல படிப்பு சொத்து என நல்ல முறையில் முன்னேற்றிவிட்டார்.
//

உண்மைதான். சோதிடத்தில் நல்ல வருமானம் இருக்கிறது

July 17, 2007 9:02 PM  
Blogger சிவபாலன் said...

நன்றி GK!

July 17, 2007 9:27 PM  
Anonymous Anonymous said...

Good plot

நல்லாயிருக்கு

July 17, 2007 10:39 PM  
Blogger வைசா said...

கதை நன்றாக இருக்கிறது, சிவபாலன். இது போல இன்னும் சிறுகதைகள் எழுதுங்கள்.

வைசா

July 18, 2007 4:29 AM  
Blogger Thekkikattan|தெகா said...

வாவ் சிவபாலா,

இது உங்க ஒரிஜினல் சிறுகதையா? அய்யோ, நான் யார் மேல அடிச்சு சத்தியம் பண்றது :-)), நிஜமாகவே நீங்க கட் அண்ட் பேஸ்ட் பண்ணி மத நல்லிணக்க பதிவு போட்டிருக்கீங்கன்னு நினைச்சேன். ஆனா, பின்னாலேதான் தெரிஞ்சது இது உங்களின் சொந்தப் படைப்பென்று. அசத்தல்ம்மா.

இது போல நிறைய கொடுங்க, அடிக்கடி.

வாழ்த்துக்கள்!!

July 18, 2007 7:33 AM  
Blogger VSK said...

முதல் முயற்சியே முழுமையாக சொல்ல வந்த கருத்தைத் துல்லியமாகச் சொல்லிச் சென்றிருக்கிறது!

மிகவும் மகிழ்கிறேன்.

வாழ்த்துகள்.

இன்று காலை தான் ஒருவருடன் கதைக்கும் போது, இதே போன்ற ஒரு பேச்சு வந்தது.

இங்கு நீங்களும் அதையே எழுதியிருக்கீங்க.

மற்ற இருவரும் கூட இல்லையெனச் சொல்லவில்லை.

ஒருவரிடம் சரக்கு இல்லை. அடுத்தவர் வீட்டில் விசேஷம்; கடையில் யரும் இல்லை.

எவரையும் குறைக்காமல் சொன்னது இன்னும் நல்லா இருக்கு.

July 18, 2007 7:44 AM  
Blogger ரவி said...

நல்ல முயற்சி...!!!

நிறைய எழுதவும்...!!!!!!!!

July 18, 2007 7:48 AM  
Blogger சிவபாலன் said...

அனானி

நன்றி!

July 18, 2007 8:36 AM  
Blogger சிவபாலன் said...

வைசா

நன்றி

July 18, 2007 8:37 AM  
Blogger Unknown said...

Good one sivabalan.Human love and affection shines throughout the story.

Congrats

July 18, 2007 9:02 AM  
Blogger வெட்டிப்பயல் said...

கதை அருமையாக வந்திருக்கிறது சி.பா...

இன்னும் நிறைய எழுதவும்...

July 18, 2007 9:30 AM  
Blogger சிவபாலன் said...

தெகா

நான் நானேதான் எழுதியது. மடத்தில் யாரோ எழுதிகொடுத்து வாங்கி வந்தது அல்ல.. Ha Ha Ha,..




பாராட்டுக்கு மிக்க நன்றி தெகா!

July 18, 2007 10:45 AM  
Blogger SP.VR. SUBBIAH said...

சொல்லவந்ததைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்லியிருக்கிறீர்கள் சிவா! பாராட்டுக்கள்

July 18, 2007 10:57 AM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
முதன்முறையாக நீங்கள் எழுதிய சிறுகதையைப் படித்தேன். நீங்கள் சிறுகதைகள் எல்லாம் எழுதுவீர்கள் என நான் அறிந்திருக்கவில்லை.

இனி என்ன, கவிதையும் எழுத வேண்டியதுதானே? :-))

பி.கு:- ஆட்சேபனை இல்லையெனின் ஒரு சின்ன feedback. உங்களின் பதிவில் ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் தலைகாட்டுகின்றது. :-))

July 18, 2007 11:30 AM  
Blogger மங்கை said...

ஆஹா..இது என்ன?...

ஹ்ம்ம் நல்லா இருக்கு சிவா...as usual short and sweet

July 18, 2007 11:50 AM  
Blogger குமரன் (Kumaran) said...

அப்பாடா. வற்புறுத்தி உங்களைப் பதிவுகள் இட வைத்ததற்கு ஒரு நல்ல பயன். :-) சிறு கதை நன்றாக இருக்கிறது சிவபாலன். நீங்கள் பார்த்ததைக் கேட்டதை வைத்து எழுதியிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. பேச்சுகளும் மிக இயற்கையாக யதார்த்தமாக இருக்கின்றன. முயற்சிகள் தொடரட்டும்.

July 18, 2007 12:48 PM  
Blogger சிவபாலன் said...

VSK அய்யா

உங்கள் பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி

July 18, 2007 2:57 PM  
Blogger சிவபாலன் said...

செந்தழல் ரவி,

மிக்க நன்றி!

July 18, 2007 2:58 PM  
Blogger சிவபாலன் said...

செல்வன் சார்,

மிக்க நன்றி !

July 18, 2007 2:59 PM  
Blogger சிவபாலன் said...

வாங்க பாலாஜி!

ரொம்ப நன்றிங்க!

July 18, 2007 3:00 PM  
Blogger சிவபாலன் said...

SP.VR.சுப்பையா அய்யா,

வாத்தியாரின் பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது!

மிக்க நன்றி !

July 18, 2007 3:02 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

நல்லாருக்கு சி.பா.
யதார்த்தமா முடிச்சிருக்கீங்க.

July 18, 2007 3:06 PM  
Blogger சிவபாலன் said...

வெற்றி

பாராட்டுக்கு மிக்க நன்றி!

பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் கொஞசம் சுட்டிக்காட்டவும்.. நான் Wood Head அதனால் கேட்கிறேன்! :-)

July 18, 2007 10:30 PM  
Blogger சிவபாலன் said...

மங்கை வாங்க!

சும்மா பொழுது போகவில்லை.. அதுதான்.. :-)

July 18, 2007 10:32 PM  
Blogger சிவபாலன் said...

குமரன்

எல்லா உங்கள் விருப்பம்..!!

எதோ உலகில் தனியா சுத்திகிட்டு இருந்தேன்..(வெறும் பின்னூடம் மட்டும் போடுவது)

இந்த உலகிற்கு கொண்டுவந்தது நீங்களும் VSK அய்யாவும் தான்!

பாராட்டுக்கு மிக்க நன்றி!

July 18, 2007 10:35 PM  
Blogger சிவபாலன் said...

சிறில்

மிக்க நன்றிங்க!

July 18, 2007 10:36 PM  
Blogger வினையூக்கி said...

நல்லா இருக்கு சார்.
உங்களோட முதல் சிறுகதையா!! :) :)
அடிக்கடி எழுதுங்க ...

July 19, 2007 10:35 AM  
Blogger வினையூக்கி said...

//சோதிட வருமாணத்தை வைத்தே தனது இரு மகன்களுக்கும் நல்ல படிப்பு சொத்து என நல்ல முறையில் முன்னேற்றிவிட்டார். //
:) :) :)

July 19, 2007 10:37 AM  
Blogger சிவபாலன் said...

வினையூக்கி,

மிக்க நன்றிங்க..

நான் பார்த வரையில் வறுமையில் வாடும் சோதிடர் இல்லை.

எனக்கு தெரிந்த ஒரு சோதிடர் நல்ல சம்பாத்தித்தார். பொது அவர் சொல்வது சரியா இருக்கும் என ஒரே கூட்டமா இருக்கும் அவர் வீட்டில்.


உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

July 19, 2007 10:42 AM  
Blogger siva gnanamji(#18100882083107547329) said...

முதல் சிறுகதையா?
நல்ல மெசேஜ்......

July 19, 2007 10:48 AM  
Blogger சிவபாலன் said...

சிவஞானம்ஜி,

மிக்க நன்றிங்க!


கதையின் கதாநாயகனே வாழ்த்துவது போல் ஒரு உணர்வு. மிக்க நன்றி!!

July 19, 2007 10:59 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv