பூணூல் இல்லாததால் பொற்காலமில்லை!? - கலைஞர் எழிச்சியுரை!
பெரியார் படம் 100வது நாள் விழாவில் முதல்வர் கலைஞர்.மு.கருணாநிதி கலந்து கொண்டு கலைஞர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி ஆற்றிய எழுச்சியுரையில் சில பகுதி கிழே.. முழுவதும் படிக்க "விடுதலை" செல்லுங்கள்.
பெரியார் பிறக்காமல் இருந்தி ருந்தால், இன்றைக்கு நாமெல்லாம் இவ்வளவு சிறப்பாக வாழ முடியாது. ஏதோ ஓரளவு நாம் சிறப்பாக இருக்கிறோமென்றால் - நான் ஒரு முதலமைச்சராக இருக்கிறேன் என்றால் - பலரும் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றால் - தம்பி சத்யராஜ் ஒரு திறமையுள்ள நடிகர் என்று பாராட்டப்படுகிறார் என்றால் - நம்முடைய சிவகுமாருக்குப் புகழும் பெருமையும் கிடைத் திருக்கிறது என்றால் - இது கிடைக்கவேண்டுமேயானால் நான் சொல்வதற்காக யாரும் தவறாக எண்ணிக் கொள்ளக்கூடாது - அவர்களுடைய திறமைகளைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று எண்ணக் கூடாது. ஒரு நூல் குறுக்கே இருந்தால்தான் எந்தச் சிறப்பும் இல்லாமல் எங்களுக்குப் பெருமையும், புகழும் இந்த நாட்டிலே கிடைக்கும்.
இங்கே பேசியவர்களில் பல பேர் பொற்காலம் என்று சொன்னார்களே, பொற்காலம்தான். ஆனால் இந்தப் பொற்காலத்தை மதிக்கின்றவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இந்தப் பொற்காலத்திற்குக் காரணகர்த்தாவாக இருப்பவன் பூணூல் அணியாத ஒரே குறையினால் இதைப் பொற் காலம் என்று ஏற்க மறுக்கிறவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இந்தக் கேள்வியை என்னுடைய மண்டைக்குள்ளே, நெஞ்சுக்குள்ளே, மூளைக்குள்ளே திணித்த ஒருவர் என்னுடைய ஆசான் பெரியார் அல்லவா? அந்த வினாக்குறிப் பிறந்த காரணத்தால் தானே விழிப்புற்றது தமிழகம். விழிப்புற்றது இந்த இனம், விடுதலை பெற்றது இந்த இனம். இல்லா விட்டால் ஆண்டான் அடிமைகளிலே நாம் அடிமைகளாக இருந்திருப்போம்.
நம்மையெல்லாம் மனிதர்களாய் ஆக்கிட தம்மையே தியாகம் செய்தவர் தந்தை பெரியார்
சிலர் ஆண்டவர்களாக இருப்பார்கள். சிலர் உயர்சாதிக்காரர் களாக வாழ்வார்கள். நாம் மடிந்து மடிந்து அடிமையிலும் கீழாய், பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய் இன்றைக்கு நலிந்து போய் கிடப்போம். இப்படித்தானே இருந்தது சமுதாயம். இன்றைக்கும் 50 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் பிறப்பதற்கு முன்பு வரலாற்றை எண்ணிப் பார்த்தால், திரும்பிப் பார்த்தால் என்ன நிலைமை? அந்த நிலைமையை எல்லாம் தடுத்து நிறுத்தி, நம்மையெல்லாம் மனிதர்களாய் ஆக்குகின்ற அந்த மாபெரும் தியாகத்தைச் செய்து, அதற்காகப் போரிட்டு, சமுதாயத்திலே சண்டாளன், நாத்திகன் என்றெல்லாம் திட்டப்பட்டு, ஏகப்பட்ட வசைமாரிகளுக்கு உட்பட்டு, நமக்காக அல்லவா தந்தை பெரியார் தியாகியாக மாறினார், நமக்காக அல்லவா தந்தை பெரியார் இவ்வளவு பெரும் வேதனைகளையெல்லாம் சுமந்தார், இவ்வளவு பெரும் இழிவுகளையெல்லாம் ஏற்றுக் கொண்டார், அவர் இழிவுகளை ஏற்றுக் கொண்டார். நாம் ஏற்றம் பெற்றோம்.
34 Comments:
சிவபாலன்,
பதிவுக்கு மிக்க நன்றி.
வெற்றி
மிக்க நன்றி
Arambichacha...Avangala nondalanae sila perukku thookamae varadhu!!!
கமல்
ஆரம்பிக்கவில்லை. முடிய போகிறது!
நன்றி!
உரையில் என்ன பேசப்பட்டிருக்கிறது என்று படித்துப் பார்த்துவிட்டு பின்னூடமிடவும்.
நன்றி
//இந்தப் பொற்காலத்திற்குக் காரணகர்த்தாவாக இருப்பவன் பூணூல் அணியாத ஒரே குறையினால் இதைப் பொற் காலம் என்று ஏற்க மறுக்கிறவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?//
Sivabalan!!!
Kamarajar aachi oru "PORKALAM" nu solromae...Kamarajar enna "Poonoola" potrundaru..Ellam aachi nadathum vidhatha paathu solradhudhan!!!!
Thanx :)
பெரியார் பட விழாவில் இந்த மாதிரி பேச்சு. அடுத்து சிவாஜி பட விழாவில் இன்னொரு பேச்சு.
தண்ணியில் கிடக்கிற நாக்குதானே
கமல்
நீங்கள் சரியாக புரியவில்லையா அல்லது நான் சரியாகப் புரியவில்லையா என்பதில் எனக்கு இப்ப ஒரு குழப்பம். :-)
இங்கே பேசப்படும் கருத்து பெரியாரைப் பற்றி. கலைஞரைப் பற்றி அல்ல.
கலைஞர் ஆட்சியைப் பற்றி No Comments :-)
பாபா
சரியாகத்தான் சொன்னீங்க.. :-)
ஆனால் பெரியாரைப் பற்றி அவர் கூறிய கருத்துக்கள் ஏற்புடையதே!
நன்றி!
பெரியார் பெயரை சொல்லி பூணூலை நோண்டுறது கலைஞர் ஆட்சியை பத்தி பேசத்தானே?
Siva!!
Poonoolai pathi avar sonnadharku than naan comment potten...Itha padikkum podhu enaku yaerpatta sandhegam than adhu!!!
Thanx again :)
அனானி
நீங்கள் சொல்வதை மறுக்கவில்லை.
ஆனால் பெரியார் பூணூல் இல்லாதவர் என்பதற்காக அவர் சொன்ன எல்லா கருத்துக்களும் கண்மூடித்தனமாக எதிர்க்கப்படுகிறது.
அந்தப் பொருளில்தான் இந்தப் பதிவு.
மற்றபடி பாபா சொன்னதுதான்.
நம்மில் எத்தனை பேருக்கு கடவுள் மறுப்புக் கொள்கை சின்ன வயதில் அறியக் கிடைத்தது. கடவுள உண்டு என்பதற்கும் இல்லை என்பதற்கும் உள்ள கருத்துக்களை அறிந்த பிறகுதானே எதில் ஒன்றிலும் நம்மை ஐக்கியப்படுத்த முடியும்.
சின்ன வயதில் எல்லோரும் சொன்னார்கள் என்பதற்காக பார்க்காத ஒரு பொருளை நாம் கடவுள் என்று வணங்கி முட்டாள்தன்ம் செய்கிறோம் என்கிறேன் நான். இதை நீங்கள் மறுக்கலாம். இதை இரண்டையும் சீர் தூக்கி பார்த்து தெளிவு பெற வேண்டு. இல்லையா?
கமல்
விளக்கத்திற்கு மிக்க நன்றி!
கல்லெரிபவர்கள் முதலில் கவனிக்க வேண்டியது.
கலைஞர் ராஜாஜியுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர்.
கலைஞர் பார்ப்பனர்களுக்கு,அந்தக் காலத்திலிருந்து இந்தக் கால சீரங்கம் ரெங்கராஜ அய்யங்கார் 1-வாலி,சீரங்கம் ரெங்கராஜ அய்யங்கார்2-சுஜாதா வரை, மிகவும் இடம் கொடுக்கிறார் என்று மற்ற தமிழர்கள் மிகவும் கவலையும்,வேதனையும் வெறுப்பும் அடைந்திருக்கிறார்கள்.
கடந்த தேர்தல் வரை ஏதோ கொஞ்சமாவ்து நேர்மையாக எழுதி வந்த பத்திரிக்கைகள் அனைவரும் சேர்ந்து ஒரு நடிகரின் காதலி என்ற தகுதியுடன் உள்ள சர்வாதிகாரியை ஒட்டு மொத்தமாக ஆதரித்ததுதான் கடைசி மணி.
மும்மூர்த்திகள் சோமாரி,நரசிம்மன்,குருமூர்த்தியின் ரகசியக் கூட்டங்கள்,எப்படியாவது இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிடத் துடிக்கும் திட்டங்கள்!
அவருடைய வார்த்தைகள எழுச்சியுடன் கூடிய வாழ்நாள் வடி கட்டிய துரோகத்தின் எதிரொலி என்பதை நூல்கள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
பார்ப்பனர்களாக நடிக்க விரும்பும் போலித் தமிழர்கட்கு ஒரு அநுபவசாலியின் அறிவுரைதான் இது!
தமிழன்,
கருத்துக்கு மிக்க நன்றி!
கட்டுரைக்கு நன்றி !
யோகன் அண்ணா,
மிக்க நன்றி!
கட்சிக்கு உள்ளேயோ, வெளியேயோ
என்ன நெருக்கடியோ?..இப்படிப்பட்ட
நேரங்களிலெல்லாம், 'எதையும் கண்டுக்காத' ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டி, கலைஞர் இப்படியெல்லாம் பேசுவது வேடிக்கையான வாடிக்கை. யாரும் சீரியஸாக, எடுத்துக் கொள்ளாதீர்கள்..
பிரிதொரு வேளை, வேறு மாதிரி பேசுவார்.. அப்பொழுது எல்லா
ஜனங்களும், அவா இவா எல்லாம்
சேர்ந்து கைதட்டிக்கொள்ளலாம், என்ன?
//சின்ன வயதில் எல்லோரும் சொன்னார்கள் என்பதற்காக பார்க்காத ஒரு பொருளை நாம் கடவுள் என்று வணங்கி முட்டாள்தன்ம் செய்கிறோம் என்கிறேன் நான். இதை நீங்கள் மறுக்கலாம். இதை இரண்டையும் சீர் தூக்கி பார்த்து தெளிவு பெற வேண்டு. இல்லையா? //
சிவபாலன்,
நமது, மற்றும் சிறுசிறு ஜீவன்களின், உடல் அற்புதம் ஒன்று போதும், நம்மை விஞ்சிய ஒரு சக்தியின் இருப்பின் மேன்மையை எடுத்துச்சொல்ல..
உள்ளே போகும் உணவு வெளியே
வருவதில், ஒரு 'சின்ன' நெருடல்
ஏற்பட்டால் என்ன ஆகும்?..சீரான சுவாசம், தடுமாறினால்?.. நினைத்துப் பாருங்கள்.. அந்த 'சக்தி'யைப் போற்றாமல் வேண்டுமானாலும் இருங்கள்..
தூற்றாமல் இருக்கலாம் இல்லையா?
சிவபாலன், 'சீர்தூக்கிப் பார்த்துத்
தெளிவடைய' நீங்கள் வேண்டியதால் தான், இதை எழுதினேன். மொத்தத்தையும் வேறு ஒரு தனிப்
பதிவில் வைத்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
ஜிவி,
கலைஞர் சொல்ல வரும் கருத்து தான் இதில் பொருள்.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
ஜிவி
அடடா எனர்ஜி எல்லாம் கடவுளா? இது தெரியாமல் போய் விட்டது.. ம்ம்ம்..அப்பறம் சொல்லுங்க.. கதை நல்லாயிருக்கு.
தனிப் பதிவில் மீதிக் கதையா? Ha Ha Ha..சரி அப்படி ஆகட்டும்.
கற்பனை வளத்தை என்ன சொல்ல.. ஆனாலும் உங்களுக்கு குறும்பு ஜாஸ்திங்க..Ha Ha Ha..
கருத்துக்கு மிக்க நன்றிங்க!ஜிவி!
வாங்க.. தனிப்பதிவிலும் வைத்துக்கொள்ளலாம்..
//சிவபாலன்,
நமது, மற்றும் சிறுசிறு ஜீவன்களின், உடல் அற்புதம் ஒன்று போதும், நம்மை விஞ்சிய ஒரு சக்தியின் இருப்பின் மேன்மையை எடுத்துச்சொல்ல..
உள்ளே போகும் உணவு வெளியே
வருவதில், ஒரு 'சின்ன' நெருடல்
ஏற்பட்டால் என்ன ஆகும்?..சீரான சுவாசம், தடுமாறினால்?.. நினைத்துப் பாருங்கள்.. அந்த 'சக்தி'யைப் போற்றாமல் வேண்டுமானாலும் இருங்கள்..
தூற்றாமல் இருக்கலாம் இல்லையா?
//
அடேங்கப்பா,
முதலில் ஆண்டவன் காலில் விழும்பாங்கே, அப்பறம் சாமியார் (ஐயர் ?) காலில் விழும்பாங்கே எனென்றால் அவர்கள் தான் தூதுவர்களாம்.
சாமி பேரை சொல்லி கற்பழிக்கும் சாமியார்களைவிட சிவபாலன் என்ன இழிவு செய்துவிட்டார் ஜீவி அவர்களே ?
கோவிலுக்குள் கொலை நடப்பது இறைவனை போற்றுவதா ?
சிவபாலன் said...
//அடடா எனர்ஜி எல்லாம் கடவுளா? இது தெரியாமல் போய் விட்டது..//
கரெக்டாகக் கண்டுபிடித்துவிட்டீர்களே!
//சாமி பேரை சொல்லி கற்பழிக்கும் சாமியார்களைவிட //
"கோயில் கூடாதென்று சொல்லவில்லை; கொடியவர்களின்
கூடாராமாக இருக்கக்கூடாதென்று
தான் சொல்கிறோம்" என்று பராசக்தி
காலத்திலேயே கலைஞர் இதற்கு
பதில் சொல்லிவிட்டாரே!
சிவா பதிவுக்கு நன்றி... புழுக்கத்தால் நெளியும் பார்ப்பண பாம்புகளுக்கு என் கண்டணம்.
யாராவது ஒரு கருத்தை சொன்னால், அந்த கருத்தைப் பற்றி விவாதிக்காமல்
கருத்து கூறியவரின் யோக்கியதை என்ன என்று ஆராயும் சமூகம் நம்முடையது
இப்படி தான் பெரியாரையும் வசைப் பாடினார்கள்
இப்போது கலைஞரையும் வார்த்தைகளால் பூஜிக்கிறார்கள்
எது எப்படி இருந்தாலும் பெரியார், கலைஞர் போன்றோர் நம்மில் ஊன்றிய விதை வீரியம் மிக்கது
அது எப்போதும் பிராமணர்களுக்கு எதிராக தான் விருட்சமாய் வளரும்
நன்றி சிவபாலன்
Dear Sivabalan,
So far you havent answered the following questions.Will you kindly do so now?
1) Why do morbid creamy layer OBC Dravida Tamils like yourself have to be such ,vicious caste fanatics?
2) Why do people like you go about with such arrogance just because you call yourself OBCs?
3)Why do characters like yourself have to be compulsive SOBs?
வாங்க அனானி
நீங்கதான் "SON OF BITCH" என்று திருவாய் மலர்தவரா? சரி விடுங்க.. வீட்டை விட்டு வெளியே போனால் எல்லாம் சந்தித்துதான் ஆகவேண்டும்.
1. எனக்கு சாதி வெறி எல்லாம் கிடையாதுங்க.. நீங்க சொல்லற obc சாதி வெறி (கவுண்டர், தேவர், முதலியார்....Etc..etc..) அதுக்கு ஒரு பெரிய போராட்டமே இருக்கு. இனையத்திலும் ஏற்கனவே நிறைய பேர் எழுதியிருக்காங்க..
2. நான் கேட்பதெல்லாம், இட ஒதுக்கீடுதான். அதில் சாதி அடிப்படையிலான பொருளாதார இட ஒதுக்கீட்டுக் கொள்கை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
3. அப்ப ஏழை பிராமணர்களுக்கு என்ன செய்யலாம்? இடஒதுக்கீடு என்பது சமூநீதிப் பிரச்சனை. இடஒதுக்கீடு எங்கே அமல் படுத்தப் படுகிறதோ அங்கே பொதுமான அளவு OCக்கும் இடம் இருக்க வேண்டும். அதிலேயும் பொருளாதார அடிப்படை வேண்டும் (இதற்கு நீங்க தயாரா?)
4. எனக்கு பிராமண நண்பர்கள் நிறைய பேர் உண்டு. அவர்களில் சில பேர் நாத்திகர்.
5. உங்களுக்கு வேண்டியே ஒரு பதிவு, ஊடகங்களில் பிராமண ஆதிக்கம் என்பதைப் பற்றி ஆதாரத்துடன் விரைவில் பதிவிடுகிறேன். இவ்வாறு ஆதிக்கம் செலுத்துவதால் கடவுள் மறுப்பு, இடஒதுக்கீடு போன்ற விசயங்களுக்கு எதிராகத்தான் ஊடங்கள் உள்ளன. இதற்கு உதாரணங்கள் ஏராளம்.
இந்த கேள்வியை கேட்க நீங்க முகமூடி இல்லாமலே வந்திருக்கலாம். நான் தவறாக எண்ண மாட்டேன்.
நன்றி!
அனானி தெய்வங்களா
தயவு செய்து நல்ல வார்த்தைகளை பயன்படுத்துங்க.Please..Please..
நிறைய பேர் படிக்கறாங்க.. கொஞ்சம் நல்ல மொழி பயன்படுத்துவோம்.
நன்றி!
என் நண்பர்களும் சக பதிவர்களின் அறிவுறுத்தலை ஏற்று இங்கே வந்த மோசமான அனானி பின்னூடங்கள் நீக்கப் படுகின்றன.
நன்றி
அநாம்தேயங்களின் அசிங்கங்கள் கட்டாயம் கட்டுப் படுத்தப் பட வேண்டும்.
அனைத்துப் பதிவர்களும் இதில் ஒத்துழைத்தல் அவ்சியம்.
கருத்து சொல்ல உரிமை உண்டு.
ஆனால் இது கழிவறையல்ல.
கழிவறையென நினைக்கும் கழிசடைகளை ஒதுக்குங்கள்.
தமிழன்
மிகச் சரியாக சொன்னீர்கள்!
கழிசடைகளை ஒழிக்கத்தான் வேண்டும்!
கருத்துக்கு மிக்க நன்றி!
ஸ்ரீசரண் ,
கருத்துக்கு மிக்க நன்றி!
poonool potta rajaji udan sernthuthan porkala tamilan kamarajai 1967il thorkadithaddu.innoru poonool indhra gandhi(vadavar veru}udan sernthu1971il marupadium kamarajraithorkadithadu.ivarukku vendumandra podhu MOODHARINGAR illavittal KULLUGAPATTAR.Sabash karunanidhi.
Post a Comment
<< Home