Tuesday, August 14, 2007

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - கொடிகாத்த குமரன்

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.

பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதை எங்கள் உயிரென்று காப்போம் (புதிய)

இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
"இது எனதெ"ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம். (புதிய)

உணர் வெனும் கனலிடை அபர்வினை எரிப்போம்
"ஒரு பொருள் தனி" எனும் மனிதரைச் சிரிப்போம்! (புதிய)

இயல் பொருள் பயன் தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம். (புதிய)

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்





அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்



திருப்பூர் குமரன்





இந்த நன் நாளில் கொடிகாத்த குமரனைப் பற்றி சிறு குறிப்பு:

திருப்பூர் குமரன் : தோற்றம் - 4.10.1904
: மறைவு - 11.1.1932


1932 ஆம் ஆண்டு ‘சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டைபிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன் அவர்கள். இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

குறைந்த வருமானத்தைக் கொண்டு வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த அவர் நாட்டுபற்று மிக்கவர். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் தொடங்கப்பட்ட அறப்போராட்டத்தில் பங்கேற்றுப் பின்னர் போராட்டக் குழுவிற்கே தலைமையேற்றவர்.

விடுதலைப் போரில் தமிழகத்தின் பெருமையை விடுதலைப் போரில் தமிழகத்தின் பெருமையை உயர்த்திட்ட வீர மறவருள் ஒருவரான அவர் கொடிகாத்த குமரன் என்ற பெயருடன் இந்திய வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பவர்

அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் அரசு கோவை மாவட்டம் திருப்பூரில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது.

16 Comments:

Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

சிபா
முதலில் நட்சத்திர வாழ்த்துக்கள்!
இனிய விடுதலை நாள் நல்வாழ்த்துக்கள்!!

//இயல் பொருள் பயன் தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்//

பாவேந்தர், வேந்தர் தான்!!!!
கொடி காத்த குமரனை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!

August 14, 2007 11:10 AM  
Blogger தென்றல் said...

சிவபாலன்,

(அனைவருக்கும்) சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..!

திருப்பூர் குமரனைப் பற்றி வேறுவிதமான செய்திகளும் கேள்விப்பட்டதுண்டு...எது உண்மையென்று தெரியவைல்லை..?!

August 14, 2007 11:19 AM  
Blogger சிவபாலன் said...

தென்றல்

குமரனைப் பற்றிய சிறு குறிப்பு தமிழக அரசின் வலைதளத்தில் இருந்து எடுத்துப் போட்டேன். வேறு விதமான தகவல்களை தவிர்க்கலாம்.

சுதந்திரத்தைப் போற்றுவோம்!

August 14, 2007 11:23 AM  
Blogger Unknown said...

உங்களுக்கும் மற்ற அனைத்து வலைபதிவு அன்பர்களுக்கும் இந்தியமக்களுக்கும் என் மனமார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள், சிவபாலன்.

வாழிய செந்தமிழ்
வாழிய நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு

August 14, 2007 11:28 AM  
Blogger Thekkikattan|தெகா said...

நல்வாழ்த்துக்கள்!!

சிவா! இன்னமும் நிறைய பதிவுகள் போடுங்கப்பா, உட்கார்ந்து காத்துட்டு இருக்கோம். படிப்பதற்கு.

August 14, 2007 11:47 AM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
உங்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். கொடிகாத்த குமரன் பற்றிய தகவல்கள் இப்போதுதான் அறிகிறேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.

August 14, 2007 11:49 AM  
Blogger வவ்வால் said...

சிவபாலன்,

உங்களுக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துகள்( எனக்கு இப்படி வாழ்த்து சொல்வதில் உடன் பாடில்லை என்ற போதிலும் இன்னாள் ஒரு சுப தினம் என எடுத்துகொள்வோம்)

August 14, 2007 1:08 PM  
Blogger காட்டாறு said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சிவபாலன்!

August 14, 2007 8:34 PM  
Blogger கோவி.கண்ணன் said...

சுதந்திர வாழ்த்துக்கள்,

பகத்சிங்கைப் போலவே செயல்பட்டு தமிழ்மண்ணின் சுதந்திரதாகம் தீர்க்கப் பாடுபட்ட திருப்பூர் குமரனை நினைத்தால் நமெக்கல்லாம் பெருமைதான்.

August 14, 2007 8:37 PM  
Blogger Avanthika said...

அண்ணா

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

August 14, 2007 8:37 PM  
Anonymous Anonymous said...

போற்றி போற்றி
-----------------------------
சுதந்திரத்தின் விலை என்ன
அடிமை கொடுமை
சுதந்திரத்தின் மதிப்பு என்ன
அறியாது தெரியாது
அடிமையின் வலி என்ன
அறியாது தெரியாது
பிறகு எப்படி தெரியும்
அருமையும் பெருமையும்.

போராட்டம் கண்டதில்லை நாம்
சுகம் காணுகிறோம்
பெற்றோரை சொல்லும் போல்
அவர்களும் பெற்றோரே
ஈன்ற சுதந்திரத்தை நமக்காக்கி
பெற்றோராய் வாழ்த்தினர்
அவர்களை நினைவு கொள்வோம்
கர்வம் கொள்வோம்.

August 15, 2007 1:03 PM  
Blogger சிவபாலன் said...

கண்ணபிரான் ரவிசங்கர்,

வாழ்த்துக்கு மிக்க நன்றி!

August 16, 2007 7:45 AM  
Blogger சிவபாலன் said...

டாகடர் டெல்பின்,

வாழ்த்துக்கு நன்றி!

முடிந்தவரை எனக்கு தெரிந்த விசய்ங்களை எழுதுகிறேன். உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி!

August 16, 2007 7:46 AM  
Blogger சிவபாலன் said...

தென்றல்

வாழ்த்துக்கு நன்றி!

August 16, 2007 7:47 AM  
Blogger சிவபாலன் said...

செல்வன் சார், தெகா, வெற்றி, வவ்வால், காட்டாறு, ஜிகே, அவந்திகா, அனானி,

அனைவருக்கும் நன்றி!

August 16, 2007 7:49 AM  
Blogger N Suresh said...

அன்பு சகோதரனே

எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்.

திருப்பூர் குமரன் கையில் அன்று ஏந்தினது இந்தியாவின் இன்றைய மூவண்ணக்கொடியா அல்லது காங்கிரஸ்க் கொடியா?

என்னுடைய மின்னஞ்சலுக்கு தயவாக பதிலிடவும்

என் சுரேஷ்
nsureshchennai@gmail.com

February 19, 2008 12:14 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv