தமிழ்மணத்தின் அழைப்பு - இராவணன் - கடவுள்
அனைவருக்கும் வணக்கும். "தமிழமண நட்சத்திரம்" என்ற புதிய மற்றும் முதல் தகுதி. உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. வரும் வாரம் முழுவதும் எனக்கு தெரிந்த/பார்த்த/இரசித்த விடயங்களை பகிர்துகொள்ளப்போகிறேன்.
சுமார் மூன்று வாரத்திற்கு முன், தமிழ் மணத்திடமிருந்து மின்னஞ்சல் வந்தது. அது என்னுடைய வேறு ஒரு மின்னஞ்சலில் இருந்ததால் கவனிக்காமல் விட்டுவிட்டேன். நான்கு
நாட்களுக்குப் பிறகுதான் மின்னஞ்சலைப் பார்த்தேன். ஆகா, யாராவது நம்ம கிட்ட விளையாடறாங்களா? இல்லை உண்மையான மின்னஞ்சல்தானா? என்று. தமிழ்மணத்தின் தொடர் மின்னஞ்சலை வைத்து உண்மை என அறிந்தேன்.
உண்மையில், இதற்கு முன் நட்சத்திரமாக ஜொலித்த, ஒவ்வொரு பதிவரும், ஏதோ ஒருவகையில் சிறந்தவர்கள். அந்த இடத்தில் இப்ப நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சிதான்.
அதற்கு தமிழ் மணத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சரி இனி என்னைப் பற்றி சுருக்கமாக..
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோவையில் வடவள்ளி என்ற கிராமத்தில் தான். என்னுடைய பள்ளிப் பருவம் முழுவதும் வடவள்ளிதான். பிறகு இளங்கலை பொறியியல் பட்டம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், முதுகலை பொறியியல் பட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும், பயின்றேன்.
சென்னை, கோவை, மீன்டும் சென்னை, பெங்களூர், இப்போ சிகாகோ, என்று பணியிடங்கள் மாறி மாறி,வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
நான் பதிவுலகிற்கு வந்தது "தமிழகத் தேர்தல்" எனும் வலைப் பக்கத்தை படிக்க வந்தபோதுதான்.(அரசியலில் அவ்வளவு ஈடுபாடு.)
சரி, என் வாசிப்பு என்றால், சின்ன வயதில் தேவாரம் திருவாசகம் எல்லாம். (வீட்டில் கட்டாயம்.. அதனால்). அப்பறம் நாளிதழ்கள், வார இதழ். இவைகள்தான். வைர முத்துவின் கவிதைகள் விரும்பி படிப்பேன்.
ஆனால், நான் முக்கியமாக சொல்ல வேண்டிய வாசிப்பு. அண்ணாவின் நாடகங்கள். எங்கள் வீட்டில் திராவிட இயக்க நூல்கள் சில இருக்கும். ஆனால் நான் எல்லாவற்றையும் படிக்கவில்லை.
அதில் மிக ஈர்த்தது அண்ணாவின் நாடகங்கள்.
அதில் மிக சுவாரசியமானது "நீதிதேவன் .... மயக்கம்".(நாடகத்தைப் படிக்க இங்கே சொடுக்கி உள்ளே செல்லவும்) கட்டாயம் படித்துப் பாருங்க. (ஏற்கனவே நிறைய பேர் படித்திருப்பீர்கள்). எவ்வளவு அழகாக எழுதியிருப்பார்!. இன்றைக்கும், அது மிக நல்ல நாடகம்தான். இந்த நாடகத்தை படிக்கும் முன், நீங்கள் வைத்திருக்கும் எந்த ஒரு நம்பிக்கையையும் சற்று தள்ளி வைத்துவிட்டு, ஒரு பாமரனாக இதைப் படியுங்கள். படித்த பிறகு உங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்.
நாடகத்தைப் பற்றி சுருக்கமாக.. பூவுலகில் நடந்த வரலாறு மற்றும் கற்பனை விடயங்கள் அனைத்தும் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டதால் எல்லா விடயங்களும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப் படுகிறது. அதில் முதலில் எடுத்துக்கொள்ளப்படுவது இராவணன் குற்றவாளியா? அதனால் இலங்கை அழிந்தது முறையா? சரியா? என்ற வழக்கு.
அந்த வழக்கில், கம்பன், நீதி தேவன் என எல்லோரும் மன்றத்தில் கூடி இருக்க, இராவணன், தனது பக்க நியாத்தை எடுத்துரைப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
படித்துப்பாருங்கள்.. நீங்கள் மயங்கி விழுந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.. பேரறிஞர் அண்ணாதான் பொறுப்பு!
சரி என்னுடைய இன்னுமொரு முக்கியமான வாசிப்பு/ விடயம்.
கடவுள் மறுப்பும் பெரியாரும். பெரியார் பல முக்கியமான மாற்றங்களை சமுதாயத்தில் ஏற்படுத்தியவர். அவருடைய பல கொள்கைகளில் என்னை மிக கவர்ந்தது கடவுள் மறுப்புதான். ஆனால், இந்த கொள்கை, இந்த சமுதாயத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமால் போனது, "மனிதன் என்ற இனத்திற்கே பேரிழப்பு" என்று நான் கருதுகிறேன். இல்லாத ஒன்றுக்காக மனிதன் தன்னை எவ்வளவு வருத்துக்கொள்கிறான் எனும் போது, பெருத்த ஏமாற்றமும் வருத்தமும் தான்.
கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் எல்லாம் கெட்டவர்கள், மற்றவர்கள் நல்லவர்கள், என நான் சொல்லவில்லை. ஆனால், "நாம் மனிதன்" என்று கடைசி வரை அறியாமால் செல்வதற்கு, இந்த கடவுள் எனும் கற்பனை விடயமும் ஒரு காரணம், என நான் கருதுகிறேன்.
நிறைவாக ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கடவுள் என்ற கற்பனை விடயத்தை மறுத்த பிறகுதான், நான் ஏதோ சுதந்திர உலகில் இருப்பது போன்று உணர்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதனால், "எனக்கு எந்த துன்பமும் வருவதில்லை" என்று நான் சொல்லவில்லை. எல்லா மனிதருக்கும் இருக்கும் பிரச்சனைதான் எனக்கும் இருக்கிறது. இதில் கடவுள் என்ற கற்பனையை தூக்கி எறிந்தவுடன், ஒரு சுமை குறைந்துள்ளது போல் உணர்கிறேன்!
பொய்யையும் புரட்டையும் அழித்து இந்த பூமியை புதிதாக உருவாக்குவோம்!
நன்றி!
அன்புடன்
சிவபாலன்.
69 Comments:
வாழ்த்துக்கள் சிவா!!!!
நட்சத்திர வாழ்த்துக்கள்!!!
பகுத்தறிவு நட்சத்திரம் சிவபாலனக்கு வணக்கம் !
உங்கள் ஆக்கங்களை ஆவலுடன் படிக்க காத்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள் !
இந்த வாரம் கலக்கல் தான் :-)
வாழ்த்துக்கள் ...
உணர்ச்சிகளை அடக்கி உண்மைகளை அடுக்கிப் பதிவிடும் திறமை பேரறிஞர் அண்ணாவிடம் கற்றுக்கொண்டீர்கள் போலுள்ளது.வாழ்த்துக்கள்.
உண்மையை உணர்ந்து, நல்லவற்றிற்கு மதிப்பளித்து வாழும் மூடநம்பிக்கைய்ற்ற வாழ்வே மகிழ்வான வாழ்வு என்பதை உங்கள் வார்த்தைகள் எளிமையாகப் புரிய வைக்கின்றன.
வளர்க உங்கள் சமுதாயத் தொண்டு.
வாழ்துகள் சிவபாலன் ,
சும்மா கலக்குங்க ,ஆரம்பமே அமர்க்களமா டாப் கியரில் போகுது!
நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்
சிவபாலன்,
நட்சத்திர வார வாழ்த்துக்கள்.
நீங்கள் குறிப்பிட்ட அண்ணாவின் நாடகத்தைப் படிக்க மிகவும் ஆவலாக உள்ளது.
நட்சத்திர வாழ்த்துக்கள் சிவபாலன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றுதான் தங்கள் வலைக்கு வந்தேன்.
வாரம் முழுதும் நல்ல பகுத்தறிவு சுடர் கொண்டு கலக்க வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சிவபாலன்.
//கடவுள் என்ற கற்பனை//
நல்ல கற்பனை போங்க...
சி.பா,
நட்சத்திர வாழ்த்துக்கள்.... :))
அந்த Puzzle'ஐ Solve பண்ணியாச்சா??? :)
எங்கள் தங்கம் சிவபாலனை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்துக்கு நன்றி. அவர் ஏற்கனவே எங்களுக்கெல்லாம் நட்சத்திரம் தான்.
இவ்வாரம் பகுத்தறிவு வாரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்...
அன்புடன்
லக்கிலுக்
வாழ்த்துக்கள்... கலக்குங்கள்...
வாழ்த்துகள் சிவபாலன்,
நிறைய நல்ல விஷயங்களைத் தெரிஞ்சிப்போம்னு நம்புறேன்.
Wishes to You
//எங்கள் தங்கம் சிவபாலனை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்துக்கு நன்றி. அவர் ஏற்கனவே எங்களுக்கெல்லாம் நட்சத்திரம் தான்.//
இதை நான் வழிமொழிவதில் பெருமை அடைகிறேன்
:)
எங்க ஊர் பதிவரின் நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்!!கண்ணியமான உங்கள் பதிவுகள் அண்ணாவை வழிகாட்டியாகக் கொண்டவர் என்பதை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன.
கத்தியைத் தீட்டாமல் புத்தியைத் தீட்டும் பதிவுகள் இந்த வாரத்தில் வலம் வரும் என எதிர்பார்க்கிறேன்.
Best wishes, Keep writing.
சிவபாலன்,
வாழ்த்துக்கள்! அண்ணாவின் நாடகங்களில் சிறந்தவைகளில் ஒன்று 'நீதிதேவன் மயக்கம்'. அருவி போல கொட்டும் அழகு தமிழில் வசனங்களில் அண்ணாவின் வாதங்கள் தீட்டிய ஈட்டியின் கூர்முனை போல இருக்கும். பல வருடங்களுக்கு முன்னர் படித்தது, மீண்டும் படிக்க ஆவலை தூண்டினீர்கள்.
வாழ்த்துக்கள்....
வணக்கம் சிவபாலன்.. நட்சத்திர வாழ்த்துக்களை இந்த சின்னக்குட்டி மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறான்... கலக்குங்க இந்த வாரத்தை
எனக்கு சேதி சொல்லாமல் வந்த நந்தா, நீ நல்லா இரு.....
இடம் மாறி போட்டப்பட்ட கமெண்ட்.
வாழத்துக்கள்
வாழ்த்துக்கள்...
இவ்வாரம் போல் எவ்வாரமும் இருக்கவும் வாழ்த்துக்கள்..........
இதுக்கெல்லாம் நான் பின்னூட்டம் போட்டாத்தான் வாழ்த்து சொன்னதா ஆகுமா? சொல்லுங்க சிபா?
ம்ம்ம் ... கலக்குங்க சிவா ...
நட்சத்திர வாழ்த்துக்கள் சிவபாலன்!!!
/நிறைவாக ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கடவுள் என்ற கற்பனை விடயத்தை மறுத்த பிறகுதான், நான் ஏதோ சுதந்திர உலகில் இருப்பது போன்று உணர்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதனால், "எனக்கு எந்த துன்பமும் வருவதில்லை" என்று நான் சொல்லவில்லை. எல்லா மனிதருக்கும் இருக்கும் பிரச்சனைதான் எனக்கும் இருக்கிறது. இதில் கடவுள் என்ற கற்பனையை தூக்கி எறிந்தவுடன், ஒரு சுமை குறைந்துள்ளது போல் உணர்கிறேன்!/
well said!!!
நட்சத்திர வாழ்த்துகள்.
நட்சத்திரப் படமே ஒரு மார்க்கமாயிருக்கு ;-)
கலக்குங்கப்பா
வாழ்த்துகள் சிவபாலன். நான்கே நாட்களுக்கு முன்னால் தான் தமிழ்மண அழைப்பைப் பார்த்ததாகச் சொல்கிறீர்கள். உடனே ஒத்துக் கொண்டு நாண்மீனாய் ஆனது வியப்பே. நானெல்லாம் மூன்று வாரங்கள் நேரம் ஒதுக்கி இடுகைகள் எழுதினேன். :-) மீண்டும் வாழ்த்துகள் சிவபாலன்.
வடவள்ளி தந்த விண்மீன் தமிழ்மணத்தில் ஜொலிக்க வாழ்த்துக்கள்.
உங்கள் அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன்.மிக அருமையாகவும் யார்மனதும் புண்படாமலும் எழுதும் உங்கள் நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
மனமார்ந்த வாழ்த்துக்கள்
நட்சத்திர வாழ்த்துகள், சிவபாலன்.
வைசா
சிறில் அலெக்ஸ் has left a new comment ....
எங்க ஊரு நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.
ஜொலி ஜொலின்னு ஜொலிக்கட்டும் தமிழ்மணம் இப்போதான் கவனிச்சாலும் நீங்க முன்னமேயிருந்தே நட்சத்திரம்தானே.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள், சிவபாலன்!
சிவா,
சொல்லவே இல்லை, இந்த வாரந்தான் நீங்கள் இங்கு சூப்பர் நோவாவிலிருந்து பிறந்த புது நட்ச்சத்திரமாக ஜொலிக்கப் போகிறீர்களென்று. :-))
இந்த ஒரு வாரமும் நீங்கள் கலக்குகின்ற கலக்களில் யாரும் தமிழ் மணத்தை விட்டு குமுதம், கல்கண்டு, பெருங்காயமின்னு படிக்கப் போகவிடப்படாது சொல்லிப்புட்டேன். அடிச்சு நகத்துங்க.
வாழ்த்துக்கள், சிவா!!
Hi Siva,
I do read your blog regularly.
When i started a blog, you are the one to put first comment. And you kept encouraging me visiting my posts and commenting in constructive way. But, As some of the bloggers started writing badly about personal/family members of other fellow bloggers, i decided not to write. I deleted my blog and exited quietly from blogging. But, i still read blogs. your is one among them. Keep writing. Please do write about Periyar and his idealogy and spread his ideas in this star week.
Best wishes!
Regards,
Fellow blogger
சிவபாலன்!
பல விடயங்களை எதிர் பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்.
*************----->>>>>>sivabalan
உளம் நிறை வழ்த்துகள் சிபா!
திறமையை மறைக்க முடியாது என்பதற்கு நீங்களே சாட்சி!
நட்சத்திர அந்தஸ்து பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். நன்றாக இருக்கின்றன.
இப்போது கூட கடவுள் கோட்பாடு பற்றி நீங்கள் எழுதி இருப்பது அழகுதான்.
"கடவுள் என்ற கற்பனை விடயத்தை மறுத்த பிறகுதான், நான் ஏதோ சுதந்திர உலகில் இருப்பது போன்று உணர்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது."
அருமை!
நாங்கள் பிறந்த மதமோ இது போன்ற கருத்தை வெளியில் சொன்னால் எங்களை தண்டித்து விடும் !
வாழ்த்துக்கள் சிவா!!!!
வாழ்த்துக்கள் சிவபாலன்!
வாழ்த்துக்கள் சிவபாலன்.
நிச்சயம் இந்த சிறப்புக்கு நீங்கள் தகுதியுடையவர்தான்.
கலக்குங்க
வாழ்த்துக்கள் சிவபாலன்.
ஆஹா..வாங்க வாங்க..
வாழ்த்துக்கள்
எப்பவும் போல கலக்குங்க
வாழ்த்துக்கள் சிவபாலன்! கலக்குங்க.
வாழ்த்துக்கள், சிவபாலன்!
பதிவுகளில் சிந்திப்போம்; சந்திப்போம்.
ஜீவி
உதய், பாலாஜி, ஜீ.கே, த்துலெட்சுமி,தமிழன்,
வாழ்த்துக்கு நன்றி! முடிந்த வரை நல்ல பதிவுகளை தர முயல்வேன்!
நன்றி!
வவ்வால், வினையூக்கி, வெற்றி, விடாதுகருப்பு, அனானி(திகிலன்) ,
அனைவரின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
இராம், டாக்டர் டெல்பின், லக்கிலுக், நந்தா, அயன்,
வாழ்த்துக்கு நன்றி! மகிழ்ச்சி!
மாயா, ஜி.கே, மணியன் சார், அனானி, திரு,
வாழ்த்துக்கு நன்றி!
சுதர்சன்.கோபால், சின்னக்குட்டி, ஜெ.கே, அனானி, தருமி அய்யா,
வாழ்த்துக்கு நன்றி! மகிழ்ச்சி!
மகி, சுந்தர், அருட்பெருங்கோ, ஜெஸியா, கானா பிரபா,
வாழ்த்துக்கு நன்றி!
குமரன், செல்வன் சார், வைசா, சிறில் அலெக்ஸ்,
மகிழ்ச்சி!! நன்றி!
வாழ்த்துக்கு நன்றி!
தென்றல், தெகா, அனானி(உங்களை ஓரளவு கண்டுபிடித்துவிட்டேன்), யோகன் அண்ணா, சீனியர் (பெருசு),
அனைவரின் வாழ்த்துக்கும் நன்றி!
VSK அய்யா, அனானி, இளா, கப்பி பய, கண்மணி,
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!\
வாழ்த்துக்கு நன்றி!
சதங்கா, மங்கை, காட்டாறு, ஜீவி,
வாழ்த்துக்கு மிக்க நன்றி!
அனைவரின் அன்பிற்கும் மிக்க நன்றி!
வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்.
தொடர்ந்து ஆவலுடன் படிக்க காத்திருக்கிறேன்.
வாழ்த்து(க்)கள் சிவபாலன்
எனக்கு தெரிந்து பெரியார் அதிகமாக வண்டி கட்டிகிட்டு வந்த நாட்களும்,ஊரும் கோவையாகத் தான் இருக்குமென நினைக்கிறேன்.ஜி.டி ஹாலின் கலக்கல்,பூங்கா கூட்டங்களின் சிரிக்க,சிந்திக்க வைக்கும் நாட்கள் நினைவுக்கு வருகின்றது.
pakutharivu pagalavan siva,from your writings i found mr.annadorai is the torch bearer of periyars'teachings.but onething i am not able to understand.periyar declared there is no god,but annadorai preached ondre kulam orvane devan.kindly explain me.thank you.vizzy
தமிழன், ஆனந்த லோகநாதன், துளசி மேடம், நட்டு, அனானி
வாழ்த்துக்கு மிக்க நன்றி
அனானி
பெரியார், தன் ஒவ்வொரு உரை முடிந்ததும் "நான் சொல்வதை வைத்து எதையும் நம்பிவிடாதே", "சுயமாக சிந்தித்து முடிவு செய்" என்பார். அதையே நானும் சொல்கிறென்.
நன்றி
வடவள்ளியின் விடிவெள்ளியே... :)
(தமிழக அரசியல் எனக்கும் ரொம்ப புடிக்கும்!!)
நட்சத்திர வாரம் சிறக்க வாழ்த்துக்கள்.
பகுத்து அறிய எண்ணும் சிவபாலனுக்கு வாழ்த்துக்கள்!
I still believe in God but it is not the same God taught by religions. It is not a God that needs my prayers. It does not listen or answer to prayers. God is not aware of you and me. It is awareness itself.
நான் இன்னும் கடவுளை நம்புகிறேன்.
அந்த கடவுள் மதங்கள் கற்பிக்கின்ற கடவுளோ அல்லது கடவுளைகளோ அன்று.
நான் நம்பும் கடவுள் வழிபாடுகளை கவனிப்பதுமில்லை;
செவிசாய்த்து அருள் பாலிப்பதுமில்லை.
அந்த கடவுளூக்கு நான் இருப்பதும் தெரியாது, நீங்கள் இருப்பதும் தெரியாது என்று அறிகிற விழிப்புணர்வே என் கடவுள் ஆகும்.
அன்புடன்,
அறிவு.
Post a Comment
<< Home