Monday, August 21, 2006

பதிவு எண்:50. இப்படியும் ஜெயிக்கிறது இங்கிலாந்து...

Darrell Hair removes the bails after Pakistan refused to take the field


இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையேயான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி லண்டனின் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் இங்கிலாந்து முதன் இன்னிங்சில் 173 ரன்னில் சுருண்டது. இதையடுத்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 504 ரன்கள் குவித்தது.

2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 78 ரன் எடுத்தது. 56-வது ஓவரை உமர்குல் வீசினார். இந்த ஓவர் முடிந்தவுடன் நடுவர்கள் டாரல் ஹேர் மற்றும் பில்லிடாக்ரோவ் ஆகியோர் பந்தை ஆய்வு செய்தனர்.அதன்பிறகு பந்தை பாகிஸ்தான் வீரர்கள் சேதப்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டினர்.

இதனால் இங்கிலாந்து மேலும் பந்தும் மாற்றப்பட்டது. அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் வழங்கப்பட்டது. பாகிஸ்தான் கேப்டன் இன்ஜமாம் உள்பட வீரர்கள் அனைவருக்கும் கடும் அதிர்ச்சியாக இருந்தது.

தேனீர் இடைவேளைக்கு சென்ற பாகிஸ்தான் வீரர்கள் அதன்பிறகு விளையாட வர மறுத்துவிட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு பாகிஸ்தான் வீரர்கள் விளையாட சம்மதித்து மைதானத்தில் களம் இறங்கினார்.

ஆனால் நடுவர்கள் அப்போது மைதானத்தை விட்டு வெளியே வந்துவிட்டனர். மேலும் போட்டியை தொடர்ந்து நடத்த அவர்கள் மறுத்து விட்டனர். ஐ.சி.சி.யின் விதி 2.10-ன் படி பாகிஸ்தான் அணி விளையாட மறுத்ததன் காரணமாக இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வரலாற்றில் முதன்முறையாக அதுவும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து 129 ஆண்டுகளில் ஒரு அணி விளையாட மறுத்து மற் றொரு அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவது இதுதான் முதன்முறையாகும்.

இது தொடர்பாக ஆலோசகர்கள் கூறுகையில் 26 கேமிராக்கள் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதில் ஒன்றில் கூட பந்து சேதம் அடைந்ததாக படம் எடுக்கப்படவில்லை.

நன்றி: மாலை மலர்.

Darrell Hair no-balls Muttiah Muralitharan in 1995

26 Comments:

Blogger Sivabalan said...

ஒரு ஆசிய அணிக்கு ஏற்பட்ட இந்த நிலையைக் கண்டு மனம் வருந்துகிறது..

August 21, 2006 8:32 AM  
Blogger நாகை சிவா said...

சிவபாலன், நீங்கள் கூறுவதை கேட்ட்கும் போது வருத்தமாக இருந்தாலும். பாக். பழைய வரலாறுகளை காணும் போது அவர்கள் இதை செய்து இருப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கும் இல்லை. அது மட்டும் இன்றி ஒரு ஐந்து ரன்களுக்காக விளையாட மறுத்ததும் தவறு தான். அதை ஸ்போட்டிவாக எடுத்துக் கொண்டு ஆட்டம் முடிந்தததும் ஐ.சி.சி. யிடம் முறையிட்டு இருக்க வேண்டும்

August 21, 2006 8:47 AM  
Blogger வஜ்ரா said...

இதில் யாரை நம்புவது...?

பாக்கின் முன்னாள் ரிக்கார்டுகள் ஒன்றும் சூப்பர் இல்லை...!!செய்தாலும் செய்யக் கூடியவர்களே..

அந்த ஆஸ்திரேலியர் Racist என்றால் பாக்குகள் மட்டும் ஒன்றும் நல்லவர்கள் அல்லவே...!!

August 21, 2006 8:54 AM  
Blogger Sivabalan said...

நாகை சிவா,

இருக்கலாம்... ஆனால் தகுந்த ஆதாரம் இல்லாமல் டாரல் ஹேர் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது..ஐ.சி.சி.யில் ஆசியர்களுக்கு எதிராக சமீப காலமாகவே பல அநீதிகள் நடைக்கின்றன..

Mcgrath கோபமாக நடந்தால் Aggression என்கிறார்கள்.. Ifran Pathan கோபமாக செயல் பட்டால் தண்டனை என்கிறார்கள்.. அதைத் தான் ஏன் என்று கேட்கிறேன்?

August 21, 2006 8:58 AM  
Blogger -L-L-D-a-s-u said...

பாக் ஆட்டக்காரர்கள் செய்தாலும் செய்யக் கூடியவர்களே என்றால் இந்திய ஆட்டக்காரர்களும் செய்யக்கூடியவர்களே..இந்திய ஆட்டக்காரர்கள் ஒன்றும் புனிதமானவர்கள் அல்லரே.. டெண்டுல்கரும் டிராவிட்களும் குற்றச்சாட்டப்பட்டபோது பொங்கிய நாம் , அண்டை நாட்டான் என்பதால் கேலி பண்ணுவது ஏன் ? விளையாட்டில் எதிரி காயப்படும்போது சந்தோஷப்படுவதுதான் தேசப்பற்றுக்குச் சான்றோ ?

August 21, 2006 9:06 AM  
Blogger Sivabalan said...

வஜ்ரா ஷங்கர்,

பாகிஸ்தான் வரலாறு சரியில்லைதான். ஆனால் இந்த நடுவர் டாரல் ஹேர் ஒரு மோசமான ஆளே..

ஐ.சி.சி.க்கு பெருமளவு வருமானம் கொடுக்கும் ஆசிய அணிகளை கேவலப்படுத்துவதில் இங்கிலாந்திற்கும் ஆஸ்தேரிலியாவிற்கும் சற்று மகிழ்ச்சிதான் என தோண்றுகிறது.

August 21, 2006 9:12 AM  
Blogger Sivabalan said...

--L-L-D-a-s-u--- ,

இது போன்ற விசயங்களில் ஏதேனும் ஒரு வீரர் மற்றும் தண்டனை பெறுவார்.. ஆனால் ஒட்டு மொத்த அணியையும் தண்டனைக்குள்ளாக்கியது கேள்விக்குறியதே..

இதில் பாகிஸ்தான் அணியின் மீது தவறில்லை என நிருபிக்கப்பட்டால் டாரல் ஹேர் என்ன செய்வார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி..

இதில் நீங்கள் சொல்வதுபோல் நாட்டுப் பற்று என்று பார்பதைவிட கிரிகெட் எனப் பார்பதுதான் சரி.

August 21, 2006 9:20 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

சிபா ... !
அரைச் சதம் போட்டதற்கு வாழ்த்துக்கள் !!!

அன்புடன் G.K
:)))

August 21, 2006 9:22 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

சிபா ... !
அரைச் சதம் போட்டதற்கு வாழ்த்துக்கள் !!!

அன்புடன் G.K
:)))

August 21, 2006 9:22 AM  
Blogger Sivabalan said...

GK,

உங்கள் வாழ்த்து மிக்க மகிழ்ச்சியளிக்கிறது..

மிக்க நன்றி.

August 21, 2006 9:24 AM  
Blogger Sivabalan said...

Update - படம் முத்தையா முரளிதரனுக்கு எதிராக டாரல் ஹேர்

August 21, 2006 9:37 AM  
Blogger பாலசந்தர் கணேசன். said...

ஆசிய வீரர்கள் மிக கடுமையாக தண்டிக்க படுவதும் , ஆனால் ஆசிய அம்பயர்களை மற்ற நாட்டு வீரர்கள் மரியாதையின்றி நடப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆசிய அம்பயர்களும் , மேட்ச் ரெப்ரிக்களும் கடுமையாக நடந்து கொண்டு மற்ற நாட்டு வீரர்களுக்கு புத்தி புகட்ட வேண்டும்.

August 21, 2006 9:52 AM  
Blogger Sivabalan said...

இன்ஜமாம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீருபிக்கப்பட்டால் 8 ஒரு நாள் ஆட்டங்கள் or 4 டெஸ்ட் விளையாடமுடியாது.

August 21, 2006 9:52 AM  
Blogger Sivabalan said...

பாலசந்தர் கணேசன்,

நீங்கள் சொல்வது மிகச்சரி..

உண்மை என்ன வென்றால் ICC chief match referee Ranjan Madugalle.

என்னத்த சொல்ல.. ம்ம்ம்ம்ம்

August 21, 2006 10:04 AM  
Blogger Sivabalan said...

மேலும் தகவலுக்கு இந்த வலைதளத்திற்கு செல்லவும்.

http://content-usa.cricinfo.com/engvpak/content/current/story/257324.html

August 21, 2006 1:37 PM  
Blogger VSK said...

ஒன்றிரண்டு பதிவதற்கே

உன்பாடு என்பாடு

என ஆகும் வேளையிலே

ஓசையின்றி இங்கொருவர்

ஐம்பதினைத் தொட்டு

அலுக்காமல் பதிகின்றார்!

ஒவ்வொன்றும் கருத்துள்ள

ருசியான பதிவுகளே!

ஐம்பதோடு நின்றிடாமல்

அதே வேகம் தனைக் காட்டி

சீக்கிரமே நூறு பதிய

ஆசையுடன் வாழ்த்துகிறேன்!

"முப்பது நாட்களில்

முனைப்பாய் பதிவதெப்படி?"

எனும் நூலொன்றை எழுதிடவே

முத்தான நிகழ்வுகள்

மனம் முழுதும் நிறைந்திருக்கும்!

அத்தோடு சலிப்பின்றி

தொடர் பதிவு போட்டிடவே

உளமார வாழ்த்துகிறேன்

முருகனருள் முன்னிற்கும்!!

:)

August 21, 2006 8:26 PM  
Blogger Sivabalan said...

SK அய்யா

நீங்கள் சொல்லித்தான் பதிவிட ஆரபித்தேன்.. இப்பொழுது, ஐம்பது.. இந்த பாராட்டுகள் உங்களையும் சாரும்..

பதிவுகளால் எனக்கு கிடைத்து ஏராளம்.. நல்ல உள்ளங்கள் உங்களைப் போல..

ஆனால், உண்மையில் என் குடும்பத்தினருடன் நான் செலவளிக்கும் நேரம் குறைந்துவிட்டது..

இன்னும் ஓரிரு பதிவுகளுடன் கொஞ்சம் விடு(நெடு)முறை எடுத்துக்கொள்ளலாம் என எண்ணியுள்ளேன்..

ஆனால் உங்கள் பதிவுகளில் நிச்சயம் நான் இருப்பேன்..

உங்கள் பாராட்டுகளும் ஆதரவும் எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது..

வருகைக்கு மிக்க நன்றி அய்யா

August 21, 2006 8:34 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

//ஆனால், உண்மையில் என் குடும்பத்தினருடன் நான் செலவளிக்கும் நேரம் குறைந்துவிட்டது..//

வீட்டில் எல்லோரும் தூங்கியதும் பூனை நடை போட்டு வாருங்கள் !

எஸ்கே நன்றாக எழுதியிர்க்கிறார்... அதுக்காவது நீங்கள் தொடர்ந்து வருவீர்கள் !

August 21, 2006 9:48 PM  
Blogger Sivabalan said...

என் அருமை நன்பர் GK,

உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி..

உங்களுக்கு என் நிலைப் பற்றி தெரியும் என நம்புகிறேன்..

முயற்சிக்கிறேன்.

August 21, 2006 10:00 PM  
Blogger மனதின் ஓசை said...

சிவபாலன்.. நீங்கள் சொல்வது மிகச்சரி..
இதில் நாட்டுப்பற்று ஏன் வந்தது என தெரியவில்லை.. கட்ட வேண்டிய இடத்தில் நாட்டுப்பற்றை காட்டவேண்டும்... இங்கு அல்ல...

உண்மை.. பாகிஸ்தான் அணியின் கடந்த கால வரலாறு அவர்கள் மேல் சந்தேகத்தை எழுப்பினாலும் அதுவே அவர்களுக்கு எதிரான தீர்ப்பு வழங்க போதுமானது அல்ல... எதனையும் நேரில் பார்க்காமலும் ஆதாரம் இல்லாமலும், இந்த அனி செய்யக்கூடியது.. அதனல் செய்து இருக்கிறது என்பது கேவலமான வாதம்... அதனை ஆதரிப்பது காழ்ப்புணர்ச்சியையே காடுகிறது... அது வேண்டாமே...

அதே போல் ஐந்து ரன்களுக்கு விலையாட மருப்பது ஸ்போர்ட்டிவ் இல்லை எனபதும் தவறானதே... அது தவறு செய்து போலவும் அதனை ஒப்புக்கொண்டது போலவும் ஆகிவிடும்.... அப்படி பாக் ஸ்போர்டிவ் ஆக எடுத்துக்கொண்டு இருந்தால் இங்கு எப்படி வாதங்கள் எழுப்பப்பட்டிறுக்கும் என சிறிது யொசித்து பார்த்தால் புரியும்.. இங்கு கேள்வி 5 ரன்களா 50 ரன்களா என்பது அல்ல... அம்பயர் செய்தது சரியா இல்லயா என்பதுதான்.. என் பார்வையில் அவர் செய்தது தவறு.. இன்ஜமாம் செய்தது சரியே..

August 21, 2006 11:19 PM  
Blogger உங்கள் நண்பன்(சரா) said...

//ஒவ்வொன்றும் கருத்துள்ள
ருசியான பதிவுகளே!
ஐம்பதோடு நின்றிடாமல்
அதே வேகம் தனைக் காட்டி
சீக்கிரமே நூறு பதிய
ஆசையுடன் வாழ்த்துகிறேன்!//

அன்பு சிவபாலன் நானும் உங்களை ஆசையுடன் வாழ்த்துகிறேன்!

//ஆனால், உண்மையில் என் குடும்பத்தினருடன் நான் செலவளிக்கும் நேரம் குறைந்துவிட்டது..
இன்னும் ஓரிரு பதிவுகளுடன் கொஞ்சம் விடு(நெடு)முறை எடுத்துக்கொள்ளலாம் என எண்ணியுள்ளேன்..//

உண்மை தான்! சில பதிவுகளுடன் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள் அது சிறு விடுமுறையாக அமைந்து புத்துணர்வுடன் மீண்டும் வர வாழ்த்துகிறேன்!


அன்புடன்...
சரவணன்.

August 21, 2006 11:22 PM  
Blogger Sivabalan said...

மனதின் ஓசை,

நீங்கள் சொல்வது போல் இவ்விசயத்தை கிரிகெட் என்று அனுகினால் பல் விசயங்கள் வெளியே வரும்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

August 22, 2006 9:17 AM  
Blogger Sivabalan said...

சரவணன்,

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

வருகைக்கு நன்றி.

August 22, 2006 9:18 AM  
Blogger Sivabalan said...

நாகை சிவா, வஜ்ரா ஷங்கர், --L-L-D-a-s-u--- , GK, பாலசந்தர் கணேசன் - வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

August 22, 2006 9:20 AM  
Blogger Sivabalan said...

இந்த சர்ச்சை பற்றி ரணதுங்கா (இலங்கை) கருத்து :- எந்த வித ஆதாரங்களும் இல்லாமல் சர்ச்சையை கிளப்புவதில் ஹேர் மிகவும் சிறந்தவர். அவர் ஆசிய நாட்டு விரர்களை மட்டும் ஏன்? இப்படி குறிவைத்து செயல்படுகிறார் என்பது புதிராக உள்ளது.

August 22, 2006 1:24 PM  
Blogger Sivabalan said...

இந்த சர்ச்சை பற்றி நாசர்ஹூசைன் (இங்கி லாந்து) கருத்து : பாகிஸ்தான் வீரர்கள் யாராவது ஒருவராவது பந்தை சேதப்படுத்தியதாக ஹேர் கூறுவில்லை. எந்த ஆதாரத்தை வைத்து பாகிஸ் தான் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக அவர் புகார் கூறியுள்ளார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. நான் அந்த நிலைமையில் இருந்தால் என்ன முடிவு எடுப்பேனோப அந்த முடிவைத்தான் இன்ஜமாமும் மேற்கொண்டுள்ளார். இது வரவேற்கத்தக்கது.

August 22, 2006 1:26 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv