புவியியற் தகவல் முறைமைகள் - Geographic Information Systems (GIS)
புவியியற் தகவல் முறைமைகள் என்பது புவியியல் வரைபடங்களை ஏற்படுத்தி சேகரித்து ஆராய்ந்து ஒரு அறிக்கை/கோப்பாக வெளிக்கொணரும் அமைப்பு/முறைமை. இதைப் பயன் படுத்தி திட்டமிடுதல், நில பயன்பாட்டு மேலாண்மை, இயற்கை வளங்கள் அறிதல், சுற்றுச்சூழல் மேலாண்மை, போக்குவரத்து, நகர கட்டமைப்புகள் மற்றும் மற்ற மேலாண்மை தகவல்கள் ஆகியவை மேற்கொள்ளலாம்..
உண்மை என்னவெனில், இதன் பயன் பாடு வரையறுக்க முடியாதது..
சில எளிதான உதாரணங்கள்..
1. தபால்காரர் தொலைவில் காடுகளின் ஊடே உள்ள கிராமத்திற்கு செல்ல எளிய வழி கண்டறிதல்.
2.வெள்ளம் ஏற்படும் போது தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ள பகுதிகளை கண்டறிதல்.
3. தேயிலை தோட்ட சாகுபடி முறைகளை எளிமைப் படுத்துதல்.
4.தண்ணீர் மேலாண்மை..
5. போக்குவரத்து இடைஞ்சலை சரி செய்ய..
இன்னும் ஏராளம்...
புவியியற் தகவல் முறைமைகள் வரைபடம் பல அடுக்குகளை கொண்டது. ஒவ்வொரு அடுக்குகளிலும் பல தகவல்கள் உள்ளடக்கியிருக்கும். இந்த தகவல்கள் இருவகையாக பிரிக்கலாம்.
1. நில மேற் புள்ளி தகவல் - Spatial Data
2. அதன் உடன் சேர் தகவல் - Attribute Data
இந்த தகவலின் மூலம் பூமியில் அதன் இருப்பிடம், அதன் பெயர் மற்றும் பிற விசயங்களை அறியமுடியும்.
"இந்த" வலைதளத்தில் சில "Thesis" உள்ளன. நிச்சயம் உபயோகமாக இருக்கும். மேலும் அதிக தகவலை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
கீழே சில வரைபடங்களை கொடுத்துள்ளேன்... ஒரு புரிதலுக்காக..
எனக்கு நேரம் கிடைக்கும் போது இதைப் பற்றி நிறைய சொல்லுகிறேன்.
Existing Water Supply Newtwork From Source to City
.
Locations of resevoirs and Water Supply network
.
Zones Locations
.
Division Map
.
Showing Densities in MCH Area (Divisions-Wise)
.
Showing LPCD – Division Wise
.
Showing Water Demand and Supply-Division Wise
.
and Non Coverage Area by The Resevoirs

9 Comments:
சிவா,
GIS நிறைய நாங்க பயன்படுத்தியிருக்கிறோம், ஆனைமலை காடுகளில்.
நல்ல விசயம தொடங்கியிருக்கீங்க, ரொம்ப அவசியம் நமக்கு தினமும் சேவைக்குப் படுற ஒரு விசயத்தை எடுத்து சொல்லியிருக்கீங்க...
பார்க்கலாம், மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு...
//GIS நிறைய நாங்க பயன்படுத்தியிருக்கிறோம், ஆனைமலை காடுகளில். //
அப்பாடி நம்ம ஊரிலும் தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
அப்புறம் இரண்டொரு பெரிய போக்குவரத்து நிறுவனங்களும் GIS பயன்படுத்துவதாக கேள்விபட்டேன்.
(Fleet Controlக்கு.)
தெகா
காடுகளில் உபயோகப படித்தியுள்ளீர்களா.. நல்ல விசயம்..
நான் இந்தப் பதிவுகளில் சொல்ல முயல்வது இதை எவ்வாறு உறுவாக்குகிறார்கள் என்பதைப் பற்றி..
பிறகு அதன் பயன்பாடுகளை பேசலாம் என எண்ணியுள்ளேன்.
மற்றவர்களின் கருத்தை அறிந்த பின் இதை தொடரலாம் என எண்ணியுள்ளென்..
பார்க்கலாம்.
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.
சமுத்ரா,
நம்ம ஊரில் இது போன்ற நுட்பங்கள் பயன்படுத்துவது மிக மிக அவசியம்.
உங்களுக்கு தெரிந்த விசயங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.
Website - Update
சிவபாலன்,
முதற்கண் நன்றி. GISக்கு தமிழில் என்ன என்று பல நாட்களாக தேடிக் கொண்டிருந்தேன். தெரியத் தந்தமைக்கு நன்றி. நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
எனக்குத் தெரிந்த வரை GISஐ வெறும் தொழில்நுட்பமாகக் காணாமல் ஒரு நிர்வாக கருவியாகக் காண்போம் ஆயின் அதன் பயன்பாடு அதிகரிக்கும். உங்கள் பதிவைப் பார்த்தவுடன் பழைய நினைவுகள் மனதிற்கு வந்தன. நானும் 3 ஆண்டு காலம் GIS துறையில் வேலை செய்தவன் தான். தற்போது வேறு துறை(ERP) மாறி விட்டேன். தாங்கள் GIS துறையில் தான் இருக்கிறீர்களா?
தாங்கள் கொடுத்துள்ள வரைபடங்களைக் கண்டதும் Arcview Layoutகளும் shapefileகளும் நினைவுக்கு வந்தன. இந்தியாவில் GIS துறை பெருமளவு முன்னேறி விட்டது. ஆயினும் மற்ற மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களைப் போலவே GIS துறையிலும் அயல்நாட்டு பிராஜெக்டுகளையே நம்பி உள்ளனர். தாங்கள் குறுப்பிட்டுள்ள Facilities Mapping, சமுத்ரா குறிப்பிட்டுள்ள Fleet Control & Vehicle Tracking(பெங்களூரில் KSRTC பேருந்துகளில் GIS-GPS தொழில்நுட்பத்தைக் கொண்டு Vehicle tracking நடைபெறுகிறது), Routing solutions(பெரும்பாலும் call centre cabகளுக்காக), Car navigation systems அனைத்தையும் தயாரிக்கும் வல்லமை இந்தியாவில் பல மென்பொருள் நிறுவனங்களிடத்து உள்ளது.
மேலும் gisindia@yahoogroups.com என்ற யாஹூ குழுமம் GIS,GPS தொழிற்நுட்பங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் விவாதிக்கவும் ஒரு நல்ல குழுமம். GIS பற்றி பதிவெழுதும் தங்களுக்கு இது பற்றி எல்லாம் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். இருப்பினும் எனக்குத் தெரிந்த சில தகவல்களை இங்கே தந்துள்ளேன்.
சி.பா,
கைப்பு சொன்னதை போல எனக்கு தெரிஞ்சு கோயம்புத்தூர் கம்பெனி ஒன்னு (பன்னாரி குழும மென்பொருள் நிறுவனம்?) எதோ ஒரு பொருட்காட்சியில் தங்களின் Fleet Control & Vehicle Tracking மென்பொருளை exhibit செய்து கொண்டு இருந்தார்கள்.
ISROவும் GISபத்தி சீரியஸா நிறைய செஞ்சுகிட்டு இருக்கு.கரெக்டா தெரியல.படிச்சு ரொம்ப நாள் ஆகிபோச்சு.(GAGAN?)
கைப்புள்ள,
நீங்கள் சொல்வது மிகசரி. GIS ஒரு நல்ல நிர்வாக/மேலாண்மை கருவி.
3 வருடம் இதில் பணியாற்றியுள்ளீர்களா.. மிக்க மகிழ்ச்சி.
இல்லை நான் இந்துறையில் பணியாற்றியதில்லை. எனது முதுகலை பொறியில் பட்டத்தில் இது பற்றி படித்து கொஞ்சம் அதில் ஆராய்ச்சிப் பணிக்காக உதவிய அனுபவம். அவ்வளவே...
மற்றபடி எனது பணியிடத்தில் இதை உபயோகப்படுத்திய அனுபவம். அவ்வளவே..
நிச்சயம் நீங்கள் என்னை விட அதிகம் தெரிந்திருப்பீர்கள்.. நீங்களும் பதிவிட்டால் மிகவும் மகிழ்வேன்..
என்னால் முடிந்தவரை தொடர்ந்து எழுதுகிறேன்.
இந்த Yahoo குழுமத்தைப் பற்றி என்க்கு தெரியாது. இங்கே கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி.
சமுத்ரா,
தகவலுக்கு மிக்க நன்றி.
நேரம் கிடைக்கும் போது விசயங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
Post a Comment
<< Home