சுதந்திர தின விழாவில் பிரதமர் மன்மோகன்சிங்
* எல்லை தாண்டிய தீவிர வாதம் அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்குள் தீவிர வாதிகள் ஊடுருவுவதை பாகிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து நாடுகளும் கூட்டு முயற்சியால் தீவிரவாதத்தை ஒழித்து கட்ட வேண்டும்.
* புதிய இந்தியாவை உருவாக்க தேச ஒற்றுமை மற்றும் அரசியல் கருத்தொற்றுமை தேவை.
* பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு வருகிறது.
* பணவீக்கத்தை கட்டுப்படுத்த முன்னுரிமை.
* நம்முடைய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் யாரும் பலவீனப் படுத்திவிட முடியாது. மும்பை சம்பவம் அதற்கு ஒரு உதாரணம்.
* உற்பத்தி துறையில் 11 சதவீத வளர்ச்சி.
* பெண் சிசுக் கொலை அறவே ஒழிக்கப்பட வேண்டும். பாலின வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நன்றி: தினமலர், மாலைச்சுடர்
3 Comments:
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,
வாழ்க பாரதம்!!
வழக்கமாக எல்லா ப்ரதமர்களும் பேசுவதுதான் இது. நடைமுறையில் தும்மல் போடுவதற்குக்கூட உண்மையான தலைமையிடம் அனுமதி கேட்கவேண்டிய நிலையிலுள்ள ஒரு நல்ல மனிதர் நடத்தியுள்ள வருடாந்திர சடங்கு.
இந்த வீராப்பான பேச்சைவிட மாண்புமிகு ஜனாதிபதியின் பேச்சு திட்டவட்டமானதாகவும், நடைமுறைத் திட்டங்களை வகுப்பதற்கானவகையிலும் அமைந்துள்ளது. ஒரு இஸ்லாமியர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எம் ஜனாதிபதியே எடுத்துக்காட்டு. இவர்போன்றவர்களை இறை மேன்மேலும் அனுப்பட்டும், பாதுகாக்கட்டும், இன்ஷா அல்லாஹ்.
Muse,
வருகைக்கு நன்றி..
Post a Comment
<< Home