Friday, August 18, 2006

பாடல்: மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி


வெளையற பூமியடா வெவசாயத்தை பொறுபா கவனுச்சு செய்யுறோமடா

உண்மையா உழைக்கிற நமக்கு எல்லா நன்மையும்களும் நாடி வந்துகூடுதடா..

மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு

ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு செல்லக்கண்ணு

கருதை நல்ல வெளையச்சு மருத ஜில்லா ஆளை வச்சி
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி கூட்டி அளந்து போடு செல்லக்கண்ணு

( என்றா.. பல்லக்காட்ட்ற... அட தண்ணிய சேந்து...)

பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு
நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு செல்லக்கண்ணு


சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு

மணப்பாறை மாடுகட்டி...


படம் : மக்களைப் பெற்ற மகராசி

வருடம் : 1957

பாடலை இயற்றியவர் : மருதகாசி

பாடலைப் பாடியவர் : T.M.சவுந்தர்ராஜன்

பாடலுக்கு இசை அமைத்தவர் : கே.வி.மகாதேவன்

ராகம் : சிந்து பைரவி

இயக்கியவர் : ஏ.பி.நாகராஜன்

நடித்தவர் : நடிகர் திலகம் சிவாஜி கனேசன்

தயாரிப்பு : நடிகர் வி.கே.ராமசாமி

.

"பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்....."

16 Comments:

Blogger Sivabalan said...

Blogger error: Test Comment..

August 18, 2006 1:10 PM  
Blogger Thekkikattan said...

ஒரு கிராமத்து (காவேரி நகர்) தியோட்டர்ல மணல் மேடு கட்டிகிட்டே இந்த படத்த பார்த்த ஞாபகம் வந்துடுச்சு, இந்த பாட்டை இப்ப கேட்கும்பொழுது சிவா... :-)), நன்றிப்பா!

August 18, 2006 1:31 PM  
Blogger Sivabalan said...

தெகா,

// ஒரு கிராமத்து தியோட்டர்ல மணல் மேடு கட்டிகிட்டே //

ரொமப ஜாலியான நாட்கள்..

எனக்கும் மிகவும் பிடித்த விசயம்..

ஞாபகம் வருதே ...ஞாபகம் வருதே ...

வருகைக்கு நன்றி தெகா...

August 18, 2006 1:37 PM  
Blogger செல்வன் said...

அருமையான பாடல்.அளித்தமைக்கு நன்றி சிவபாலன்

August 18, 2006 1:39 PM  
Blogger Sivabalan said...

செல்வன் சார்,

வருகைக்கு நன்றி...

August 18, 2006 1:42 PM  
Blogger Johan-Paris said...

மிக அருமையான பாடல். பொருள்;இசை; குரல் என எல்லாமே ஒருங்கே நன்கமைந்த பாடல். என்றும் கேட்டின்புறக் கூடியபாடல்.தமிழகத்தின் ஊர்களின் விசேசங்களைக் கூறும் பாடல் "சேத்த பணத்தைச்;சிக்கனமாச் செலவு செய்யப் பக்குவமா;அம்மா கையில கொடுத்துப் போடு. " அருமையான புத்திமதி. அன்றைய தாய்மாருக்குள்ள அருங்குணம் அது. கவிஞர் அனுபவித்து எழுதியுள்ளார்.ஒரு சந்தேகம் கிச்சலி சம்பாவா? கிச்சடியா???; விருதுநகர்- எனவும் வரவேண்டும்.
யோகன் பாரிஸ்

August 18, 2006 2:58 PM  
Blogger Sivabalan said...

யோகன் பாரிஸ்,

சில பிழைத்திருத்தம் செய்துள்ளேன்.

சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.

ஆம். அருமையான பாடல்..

வருகைக்கு மிக்க நன்றி.

August 18, 2006 5:14 PM  
Blogger SP.VR.சுப்பையா said...

It is really good and popular song
T.M.S by his commanding voice had sung it well
Thanks Mr.Sivabalan

August 18, 2006 6:46 PM  
Blogger Sivabalan said...

SP.VR.SUBBIAH,

Yes, It is good song indeed!!!

Thanks for your Visit.

August 18, 2006 7:16 PM  
Blogger dondu(#4800161) said...

இப்பாடலை வைத்து சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பத்திரிகை (விகடன் என்று ஞாபகம்) ஓர் ஆராய்ச்சி செய்தது. அதாவது, நிஜமாகவே மணப்பாறை மாடுகள் உசத்தியா, மாயவரத்தில் செய்த ஏர் சிறப்பானதா, மதுர ஆட்கள் நன்றாக வேல செய்பவர்களா என்றெல்லாம் தேடிப் பார்த்தார்கள். என்ன முடிவுக்கு வந்தார்கள் என்பது நினைவில் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

August 18, 2006 8:09 PM  
Blogger Sivabalan said...

இராகவன் அவர்களே,

நல்ல சுவராசியமான தகவலைத்தான் தந்துள்ளீர்கள்....

முடிவை சொல்லாமல் சஸ்பென்ஸ்ல வைச்சுட்டீங்களே...

வருகைக்கும் தகவல் பகிர்ந்தமைக்கும் நன்றி.

August 18, 2006 8:15 PM  
Blogger வல்லிசிம்ஹன் said...

அப்படியே ;
போறவளே போறவளே பொன்னு ரங்கமும்//

சொன்ன பேச்சைகேக்கணும்,
முன்னும் பின்னும் பாக்கணும்//

பாடலும் போடுங்க பாலன்.
எத்தனை கேட்டாலும் அலுக்காத பாட்டுகள்.
நன்றி.

August 18, 2006 10:44 PM  
Blogger Sivabalan said...

வள்ளி அவர்களே,

மற்ற பாடல்களை முயற்சிக்கிறேன்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

August 19, 2006 10:10 AM  
Blogger Sivabalan said...

Update - "மக்களைப் பெற்ற மகராசி"
புகைப்படம்

August 19, 2006 11:53 AM  
Blogger வல்லிசிம்ஹன் said...

சிவபாலன், புகைப்படம் ஜோர்.

பழைய சினிமா போஸ்டர்ஸுக்காக ஒரு பதிவு போடலாம் போல இருக்கே.
அதிலே உள்ள இமோஷன்ஸ் சொல்லும் கதைகளே தனி.
நன்றி பாலன்.

August 20, 2006 9:17 PM  
Blogger Sivabalan said...

வள்ளி அவர்களே,

உண்மைதாங்க.. நானும் இந்தப் புகைப் படத்தை பார்த்தவுடனே மகிழ்ச்சியுற்றேன்..

வருகைக்கு நன்றி.

August 20, 2006 9:32 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv