Friday, August 18, 2006

ஐ.ஏ,ஸ், ஐ.பி.எஸ். தேர்வுகளில் மாபெரும் அநீதி...

SC - 15%, ST - 7.5%, OBC - 27%

மொத்தம் 49.5% இடம் ஒதுக்கப்படுவதை அரசியல் சட்டம் கட்டாயமாக்குகிறது.

மீதமுள்ள 50.5% இடங்கள் பொதுப் பட்டியலில் இருக்கவேண்டும். ஆனால் இங்குதான் மிகப் பெரிய சமூக அநீதி நடக்கிறது.

50.50% முழுமையாக உயர் சாதியினருக்கு ஒதுக்கப்படுகிறது. எவ்வாறு என்று கேட்ட்கிறீர்களா..

அதாவது OBC/SC/ST பிரிவில் மிக அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் நீங்கள் பிரிவை குறிப்பிட்டிருந்தால் உங்களை அந்த (OBC/SC/ST) பிரிவில் மட்டும் சேர்த்துக் கொண்டு Open Competition பிற வகுப்புகளுக்கு விட்டுவிடுவார்கள்..

ஒருவன் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் அவன் (Open Competition) பொதுப் பட்டியலில்தான் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் உயர்நீதி மன்றமும் பல முறை அறிவுறுத்தியும் தன்னிச்சையாக செயல்படுகிறது U.P.S.C தேர்வாணையம்..

ஆக இப்பொழுது நடைமுறையில் இருக்கும் இடப்பங்கீட்ட்டில் 50.5% உயர் சாதியினருக்கு...

இது எப்படி இருக்கிறது... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


மேலும் முழுக் கட்டுரையும் படித்து பாருங்க...நன்றி: தினகரன்.

இந்த விசயம் பற்றி "தருமி அய்யாவின் பதிவு..."

"திரு.குழலி அவர்கள் " ஒரு அருமையான பதிவிட்டிருக்கிறார்.. அதையும் படிங்க..

இதைப் பற்றி " Doctor Bruno --1," " --2," பதிவிட்டிருக்கிறார்... அதையும் படிங்க..

25 Comments:

Blogger குழலி / Kuzhali said...

50.5% இதரவகுப்புகளுக்கு அல்ல, சட்டப்படி அதுஎல்லோருக்கும் தான், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அனைவருக்கும் தான், ஆனால் அதில் உள்ள ஓட்டையால், அல்லது சரியாக வரையறுக்கப்படாததால் அது கடைசியில் இதர சாதியினருக்கு என்று மறைமுகமாக மாறிவிடும் இது தமிழகத்திலும் பொறியியல் படிப்பில் நடந்து காலம் காலமாக நடந்து வருகின்றது, கொஞ்சம் சிக்கலான கணக்கு இது, சட்டென்று எளிதில் விளங்காது, இரண்டுமாதங்களுக்கு முன்பே விளக்கப்படம் எல்லாம் தயார்செய்து முயற்சி செய்தேன், இன்னமும் எனக்கே திருப்தி வரவில்லை, இந்த ஆண்டு, மற்றும் முந்தைய ஆண்டுகளில் பொறியியல், மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்தவர்களின் பட்டியல் கிடைத்தால் (கட்-ஆஃப் விபரம் அல்ல, முழு விபரம்) என்னால் மிக எளிதாக விளக்க முடியும். இது தொடர்பான சுட்டிகள் ஏதேனும் இருந்தால் தந்துதவுங்கள்

August 18, 2006 7:43 AM  
Blogger Sivabalan said...

குழலி,

நான் பொதுப் பட்டியல் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்.

நீங்கள் சொல்வதுபோல் இவர்கள் அதைப் பயன்படுத்தி உயர்சாதியினருக்கு அதிக இடங்களை ஒதுக்கிவிடுகிறார்கள்...

முழு கட்டுரையும் படித்தீர்களா.. நல்லா கொடுத்திருக்கிறார் R.உமாசங்கர்.

நீங்கள் கேட்கும் சுட்டியை தேடித்தருகிறேன்..அண்ணா பலகலைகலகத்தில் சில நன்பர்கள் உள்ளனர்.. முயற்சிக்கிறேன்..

வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி.

August 18, 2006 8:08 AM  
Blogger dondu(#4800161) said...

"அதாவது OBC/SC/ST பிரிவில் மிக அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் நீங்கள் பிரிவை குறிப்பிட்டிருந்தால் உங்களை அந்த (OBC/SC/ST) பிரிவில் மட்டும் சேர்த்துக் கொண்டு Open Competition பிற வகுப்புகளுக்கு விட்டுவிடுவார்கள்.."
அதில்தான் பிரச்சினையே. ரிசர்வ் காடெகரியில் இருக்கும் நல்ல மார்க் வாங்குகிறவர்கள் செய்வது என்னவென்றால், தாங்கள் செலக்ட் ஆகும் சாத்தியக் கூற்றை அதிகமாக்குகிறார்கள். உதாரணத்துக்கு 100 சீட்டுகள் ரிசர்வேஷனில் இருந்தால், அந்த கேடகரியினரில் 95 பேர் நல்ல மார்க் பெற்றிருந்தால் ஆட்டமேடிக்காகக் அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள், ரிசர்வேஷன் வேக்கன்ஸியில். பாக்கி இருப்பது ஐந்து சீட்டுகள் மட்டுமே. அது ஃபில்லப் ஆனவுடன் மீதி 100 பேர் ரிசர்வேஷன் கேட்டகரியில் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அவர்களில் 95 பேருக்கு அவர்கள் மார்க் தகுதிப்படி பொது கோட்டாவில்தான் தேட வேண்டியிருக்கும். அதிலும் பத்து பேர் நல்ல மார்க் பெற்றிருந்தால் அவர்கள் இந்தப் பொது கோட்டாவில் கூட வர முடியும்.

ஆகவே பிரச்சினை நல்ல மார்க் வாங்குகிறவர்கள் தைரியமாக பொது கோட்டாவுக்கு ஆப்ட் செய்யாததாலேயே வருகிறது. அவர்களிடம் "அவ்வாறு செய்யாதீர்கள், உங்கள் சக ஜாதியினருக்கும் இடம் கிடைக்குமாறு பார்த்துக் கோள்ளுங்கள்" என்று கேட்க முடிந்தால் கேளுங்கள்.

குழலி அவர்கள் கூறுகிறார்: "50.5% இதரவகுப்புகளுக்கு அல்ல, சட்டப்படி அது எல்லோருக்கும் தான், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அனைவருக்கும் தான், ஆனால் அதில் உள்ள ஓட்டையால், அல்லது சரியாக வரையறுக்கப்படாததால் அது கடைசியில் இதர சாதியினருக்கு என்று மறைமுகமாக மாறிவிடும்"

மறைமுகமாக எல்லாம் மாறவில்லை, எல்லாம் வெளிப்படையாகவே நடக்கிறது. இதற்கு நேரடிக் காரணம் சிலரின் சுயநலமே, அந்தச் சிலரில் முற்பட்ட சாதியினர் யாரும் இல்லை.

க்ரீமி லேயர் தத்துவமும் கிட்டத்தட்ட இது போன்றுதான். நல்ல நிலையில் இருந்து கொண்டு தன் பிள்ளைகளை உசத்தியான கல்வி நிலையங்களில் படிக்க வைத்தும் கூட, இட ஒதுக்கீட்டை தாங்களே மோனோபலைஸ் செய்பவர்களைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி இது.

இப்பதிவாளர் விரும்புவதைப் போல செய்தால் ரிசர்வேஷனுக்கு மேல் முறையற்ற அளவில் அதிகம் அட்மிஷனை தங்களுக்கே ஓரம் கட்டிக் கொள்ளும் எண்ணம்தான் தென்படுகிறது.

சில விவரமான பெண்கள் பஸ் டெர்மினஸில் கும்பலாக ஏறும்போது வேண்டுமென்றே பொது சீட்டுகளாகப் பார்த்து உட்காருவார்கள். பிறகு அடுத்து வரும் ஸ்டாப்களில் ஏறும் லேடீஸுக்கு லேடீஸ் சீட் கிடைக்கச் செய்யும் உத்தி இது. அதே போல இங்கும் கேட்கிறீர்கள் போலிருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

August 18, 2006 8:19 AM  
Blogger Sivabalan said...

இராகவன் அவர்களே,

ஒருவன ஒரு விசயத்திற்கு முயற்சிக்கும் போது அவனுக்கு இருக்கும் அனைத்து Options பயன்படுத்தத் தான் செய்வான். இதில் தவறில்லை..

அரசாங்கத்தால் கொடுக்கப்படும் ஒதுக்கீட்டில் அவன் வராமல் அதிக மதிப் பென் பெற்றிருந்தால் அவனை பொதுப் பட்டியலில்தான் கருதவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுவதா கட்டுரையில் உள்ளது.

அவ்வாறு கருதாமல் ஏன் தன்னிச்சையாக U.P.S.C நடக்கிறது என்பதுதான் என் கேள்வி?

August 18, 2006 8:36 AM  
Blogger dondu(#4800161) said...

"அரசாங்கத்தால் கொடுக்கப்படும் ஒதுக்கீட்டில் அவன் வராமல் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் அவனை பொதுப் பட்டியலில்தான் கருதவேண்டும்"
வேலை கிடைப்பதுடன் கதை முடிவதில்லை. ரிசர்வேஷனில் இருப்பவர்களுக்கு (முக்கியமாக எஸ்சி, எஸ்டிகளுக்கு) பிரமோஷனில் வேறு தனி லிஸ்ட் உண்டு. அவர்களை பொதுவிலும் எடுத்துக் கொள்ள வேண்டும், பிறகு ரிசர்வ் பிரமோஷன் லிஸ்டிலும் வைக்க வேண்டும் எனக் கேட்பது எந்த விதத்தில் நியாயம்? மேலும் 50.05 % என்பது ஓப்பன் கோட்டாதான். முற்போக்கு ஜாதியினர்தான் அதில் வருவார்கள் என்று ஏன் நீங்கள் நினைக்க வேண்டும்?

இப்போது யூ பிஎஸ் சி செய்வதுதான் நியாயம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

August 18, 2006 9:34 AM  
Blogger Sivabalan said...

இராகவன் அவர்களே,

இல்லை. தாழ்ந்த சாதியில் உள்ள ஒருவன் எவ்வாறு தனது சாதி பெயரைக் குறிப்பிடாமல் விண்ணப்பம செய்வான். அவனுக்கு வாய்ப்புகளை அதிகப் படுத்தவே முயற்சிப்பான்.

அதனால் நல்ல மதிப்பெண் பெற்றவர்களை (OBC/SC/ST) பொதுப் பிரிவில்தான் கருத வேண்டும்..

இதில் நன்றாக படிக்க வாய்ப்பில்லா மாணவர்களுக்கு (OBC/SC/ST) உதவும் வண்ணம் இருக்கவே இந்த ஏற்பாடு.

நீங்கள் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லையே ஏன்?

August 18, 2006 9:44 AM  
Blogger dondu(#4800161) said...

பதில்தான் கூறி விட்டேனே? "இப்போது யூ பிஎஸ் சி செய்வதுதான் நியாயம்."

இன்னொன்று இப்போது செய்யும் முறையில் திறமைக்கு ஒரு பங்கமும் இல்லை என்பதே என் கட்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

August 18, 2006 9:48 AM  
Blogger Sivabalan said...

இராகவன் அவர்களே,

ஆக உச்ச நீதி மன்றத்திற்கு இவ்விசயத்தைப் பொருத்தவரையில் மரியாதை இல்லை... ம்ம்ம்ம்ம்...


வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

August 18, 2006 9:52 AM  
Blogger குழலி / Kuzhali said...

டோண்டு அய்யா எப்பவுமே இப்படித்தான், அவர்களுக்கு தெரியாதது அல்ல, ஒரு விளக்க பதிவு எழுதியுள்ளேன் அதனால் நிச்சயம் இந்த விளக்கம் அவருக்கானது அல்ல, ஆனால் அவர் ஒரு குழப்பி குழப்பி விட்டு சென்றிருக்கும் போது அதை பார்த்து மற்றவர்களும் குழம்பக்கூடாது அல்லவா அதனால் தான்....

O.C - Open Competition OR Other Castes

August 18, 2006 10:20 AM  
Blogger Dharumi said...

டோண்டு புரிந்து கொள்ள மறுக்கிறார்;விட்டு விடுங்கள்.

August 18, 2006 10:31 AM  
Blogger Sivabalan said...

குழலி,

உங்கள் பதிவைப் படித்தேன்.. மிக அருமை.. நன்றாக தொகுத்துள்ளீர்கள்.. மிக்க நன்றி..

உங்கள் பதிவின் சுட்டிக்கும் மிக்க நன்றி.

August 18, 2006 10:36 AM  
Blogger Sivabalan said...

தருமி அய்யா,

உங்கள் பதிவின் சுட்டிகளையும் இதில இனைக்கலாம் என எண்ணியுள்ளேன்.. அனுமத்திக்கவும்...

வருகைக்கு நன்றி

August 18, 2006 10:39 AM  
Blogger Dharumi said...

சிவபாலன்,
ஏற்கெனவே இதுபற்றி நானும் எழுதியுள்ளேன். புரிந்துகொள்ள மறுப்பவர்களை விட்டுவிட்டு, புரியாதவர்கள் புரிந்துகொள்ள இன்னும் சில சுட்டிகள்:
1. இதைப் பற்றி ஷரத் யாதவ் இந்துவில் எழுதிய கட்டுரையின் முழு /முக்கிய பகுதிகளை இங்கு ......

2. என் கட்டுரை ஒன்றில் UPSC தேர்வில் வெற்றி பெற்றவர் ஒருவரின் விரிவான கடிதமும்....

3. இதே விஷய்த்தைப் பற்றிய என் கட்டுரை ஒன்று...

August 18, 2006 10:43 AM  
Blogger Dharumi said...

சிவபாலன்,
இதைப்பற்றிக் கவலையும் அக்கறையும் இல்லாததாகவே பலரையும் பார்க்கிறேன். UPSC-யின் இந்த இமாலய தவறு - இது திட்டமிட்டு நடத்தப்படுவதால் இதன் பெயர் தவறல்ல - UPSC-யின் இந்த இமாலயத் திருட்டுத்தனத்தை வெளிச்சத்துக்கொண்டு வந்தாலே நம் மக்கள் படையெனப் புறப்பட்டுவிடுவார்கள் என்றெண்ணியிருந்தேன். தூசிமாதிரி தட்டிவிட்டுப் போய்க்கொண்டிருப்பதைத்தான் பார்க்க முடிகிறது.

ஏதாவது செய்தே ஆகவேண்டும்.

August 18, 2006 10:54 AM  
Blogger Sivabalan said...

தருமி அய்யா

சுட்டிக்களுக்கு மிக்க நன்றி..

August 18, 2006 11:08 AM  
Blogger Sivabalan said...

தருமி அய்யா

புரியாத மாதிரி நடிப்பதுதான் இன்றைய நிலை.. இதைப் பற்றி பேச பயப்படுகிறார்கள்.. எதோ தீண்டதகாத விசயம் போல்..

U.P.S.C. செய்யும் இமாலய தவறை ஏற்றுக்கொள்வதுதான் இன்றைய நடுநிலைமை.. என்ன செய்வது..

நம் மக்களும் இதைப் பற்றி எல்லாம் கவலை படுவதாகவே தெரியவில்லை...

மீன்டும் பெரியார் போன்ற ஒருவர் முன் செல்ல மற்றவர்கள் பின்பற்றி ஏதாவது செய்யவேண்டும் ....

ம்ம்ம்ம்ம்ம்...

பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று...

August 18, 2006 11:15 AM  
Blogger Sivabalan said...

Update - தருமி அய்யாவின் பதிவு

August 18, 2006 7:33 PM  
Blogger Sivabalan said...

Update - திரு. குழலி அவர்களின் பதிவு

August 19, 2006 10:46 AM  
Blogger Sivabalan said...

நல்ல விசயத்திற்காக..1

August 20, 2006 10:41 PM  
Blogger மனதின் ஓசை said...

ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் எற்படுத்திய பதிவு..

August 20, 2006 10:50 PM  
Blogger Sivabalan said...

மனதின் ஓசை,

உணமைதான் நான் இக்கட்டுரையை படிக்கும் போது அதிர்ச்சியடைந்தேன்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

August 21, 2006 6:28 AM  
Blogger Doctor Bruno said...

i began typing a reply here, but it became quiet large and hence has posted it in my blog at

http://www.nellaimedicos.com/blog/bruno/2006/08/open-competition-or-other-castes.html
and
http://doctorbruno.blogspot.com/2006/08/open-competition-or-other-castes.html

August 29, 2006 12:11 PM  
Blogger Sivabalan said...

Doctor Bruno,

Thanks alot for your post..

I have read it.. It is excellent..

I will give link to this post..

Thanks for your visit and link..

August 29, 2006 5:07 PM  
Blogger Sivabalan said...

Update - Doctor Bruno web page link --1, link--2

August 29, 2006 8:39 PM  
Blogger Sivabalan said...

நீதித்துறை தனது வேலையை ஆரம்பித்துவிட்டதாக அறிகிறேன்.
(http://ravisrinivas.blogspot.com/2006/08/69.html )

இந்த நூற்றண்டுகளாக கட்டுண்டு இருந்து மீன்டும் நீதித்துறை வடிவில் தொடர்ந்து நடப்பது வருத்தமளிக்கிறது.

நீதித்துறையில் இருக்கும் நீதி அரசர்கள் தங்கள் பதவிக்கு துரோகம் செய்ய மாட்டார்கள் என நம்பிக்கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை.

August 31, 2006 10:04 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv