ஷெனாய் இசை மேதை "பாரதரத்னா" பிஸ்மில்லாகான் மரணம்
உலக புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை "பாரதரத்னா" உஸ்தாத் பிஸ்மில்லாகான் இன்று (21-08-06) அதிகாலை மாரடைப்பால் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 91.
பிஸ்மில்லாகான் 1916ம் ஆண்டு மார்ச் 21ந் தேதி அரண்மனை இசை கலைஞர்கள் குடும்பத்தில் பிறந்தார். வாரணாசி விஸ்வநாதர் கோயிலில் ஷெனாய் இசை கலைஞராக இருந்த அவருடைய மாமா அலிபக்ஸ் விலை யாட்டுவிடம் பிஸ்மில்லாகான் ஷெனாய் இசைக்கருவி வாசிக்க பயிற்சி பெற்றார்.
அவர் தனது வாழ்நாளில் உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று தனது இசைத்திறமையால் மக்களை மகிழ்வித்தார். இந்தியாவின் உயரிய விருதான "பாரதரத்னா' விருது 2001ல் அவருக்கு வழங்கப் பட்டது. இது தவிர, பத்மவிபூஷண், சங்கீத நாடக அகாடமி விருது, தான்சேன் விருது போன்ற பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
எளிமையாக வாழ்ந்த பிஸ்மில்லா கான் எங்கு சென்றாலும் சைக்கிள் ரிக்ஷாவில்தான் செல்வதை வழக்க மாக கொண்டிருந்தார். மறைந்த பிஸ்மில்லாகானுக்கு 5 மகன்களும், 3 மகள்களும் இருக்கிறார்கள்.
பிஸ்மில்லாகான் மறைவை யொட்டி இன்று ஒருநாள் தேசிய துக்க தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
11 Comments:
பிஸ்மில்லாகான் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஓ! சிவா, அடடா அருமையான ஒரு கலைஞர், சிவா. இது போன்ற மாபெரும் இசை கலைஞர்கள் மரணமுரும் பொழுதுதெல்லாம் திரும்ப பெற முடியாது பேரிழப்பை ஒன்றை சந்தித்து விடுகிறோம்.
இவரின் ஷெனாய் இசையில் நனைந்து எத்துனை இரவுகள் நான் தலையணை நனைத்திருப்பேன்... :-(((
தெகா,
அந்த மாபெரும் இசைக் கலைஞனுக்கு இங்கே சென்று மேலும் மரியாதை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
http://clients.ibnlive.com/features/bismillah/
சிவா!
உன்னத கலைஞர்; நெகிழ்சியானவாசிப்பின் சொந்தக்காரர். மதத்தால் இவர் ஓர் இஸ்லாமியராக இருந்தும் ,காசி விஸ்வநாதருக்கு இசைப்பணி செய்யும் பாக்கியம் கிட்டியவர். எங்கள் மறைந்த நாதஸ்வரவித்துவான் சேக் சின்ன மொலானா சாகிப்பை நினைக்கும் போது ;இவர் நினைவு வரத்தவறுவதில்லை.அவர் ஆத்மா காசி விஸ்வநாதர் பாதம் சேரும்.
யோகன் பாரிஸ்
Johan-Paris,
உண்மைதான் காசி விசுவநாதர் கோவிலில் அவர் ஆற்றிய இசைப் பணி மதநல்லிணக்கத்திற்கு மிகப் பெரிய உதாரணம்..
என்னமா வாசிக்கிறார்ன்னு எத்தனைமுறை அப்படியே மயங்கி நின்னுருக்கேன்.
அடடா............
அன்னாரின் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த ஆழ்ந்த வருத்தத்தினைத்
தெரிவித்துக் கொள்கின்றோம்.
கோபால் & துளசி.
துளசி மேடம்,
உண்மைதான்.ஒரு மாமேதையின் சகாப்தம் முடிந்துவிட்டது.
இனிய சிவபாலன்,
அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
ஆசாத்
ஆசாத் ,
இந்த மாபெரும் இசை மேதை இந்தியவின் இசை சகாப்தம்.
இசை மேதைகளின் மறைவு என்பது வாழ்க்கை சிற்பிகளின் மறைவுக்குச் சமம். இசை மனித வாழ்வை வடிவமைக்கும் மிகச் சிறந்த ஆயுதம்.
அன்னாரின் மறைவு உலகிற்கே பேரிழப்பு. வாழ்க அவர் இசை.
விஜய்
உண்மைதான், இசை உலகிற்கு அவரது இழப்பு மாபெரும் இழப்பே...
Post a Comment
<< Home