HIP HOP இசை இரசிகர்களுக்கு..

Hip Hop - இந்த இசைப் பற்றி பல பேர் அறிந்திருக்கலாம். இருந்தாலும் ஒரு சிறிய அறிமுகம்..
Hip hop music (also referred to as rap or rap music) is a style of popular music.
Typically, hip hop music consists of one or more rappers who tell semi-autobiographic tales, often relating to a fictionalized counterpart, in an intensely rhythmic lyrical
"மேலும் அறிய இங்கே செல்லுங்க.."
உண்மையாகவே இந்த இசை கேட்பதற்கு ஜாலியாக உள்ளது. நீங்களும் இரசித்து கேட்டுப்பாருங்க..
தற்பொழுது மிகவும் பிரபலமாக உள்ள மற்றும் எனக்கு பிடித்த பாடல்களை இங்கே கொடுத்துள்ளேன்.. கேட்டு மகிழுங்கள். இங்கே விடியோவாகவும் உள்ளது. அதனால் பார்த்தும் மகிழுங்கள்.
1. "UNFAITHFUL BY RIHANNA." இந்த பாடல் ஒரு பெண் தனது ஆண் துனைக்கு துரோகம் செய்துவிட்டு வருந்துவது போல் காட்சி அமைத்திருக்கிறார்கள். கீழே பாடலின் சில வரிகளை கொடுத்துள்ளேன்.
Story of my life
Searching for the right
But it keeps avoiding me
Sorrow in my soul
Cause it seems that wrong
Really loves my company
2. "Ridin' Dirty Ft Krayzie Bone BY Chamillionaire.." இந்த பாடல் உங்களை ஆட்டம் போட்டு பாடம் வைக்கும். கண்டிப்பாக பாருங்க / கேளுங்கள்..
பாடலின் சில வரிகள்..
They see me rollin
They hatin
Patrolling they tryin to catch me ridin dirty
Tryin to catch me ridin dirty
Tryin to catch me ridin dirty
3."It's Goin' Down BY Yung Joc." இந்த பாடலும் துள்ளல் மிகுந்த பாடலே..
பாடலின் சில வரிகள்.
meet me in the Trap
it's goin down
meet me in the mall
it's goin down
meet me in the club
it's goin down
anywhere you meet me guaranteed to go down
4. "Buttons Ft Snoop Dogg BY Pussycat Dolls.." இந்த பாடலில் கொஞ்சம் விரசம் அதிகம்.. அதனால் Viewers Discretion Recommended.
பாடலின் சில வரிகள்..
I'm telling you to loosen up my buttons babe (uh huh)
But you keep frontin' (uh)
Sayin' what you gon' do to me (uh huh)
32 Comments:
பாடலை பாருங்க.. கேளுங்க.. இரசியுங்க..
உங்க கருத்தை இங்கே சொல்லுங்கே..
சிபா !
நான் ஆங்கிலப் பாடல்கள் கேட்டதே இல்லை.
GK,
பரவாயில்லை.. விடுங்க..
நம்மளும் இப்பதான் கொஞ்ச நாளா .. அவ்வளவுதான்..
சரி.. நேரம் கிடைக்கும் போது கேட்டுப் பாருங்க..
வருகைக்கு மிக்க நன்றி.
சிவா,
ஒரு எதிர்ப் பதமான கருத்து, எங்கே எது அதீதமான முறையில் நடைபெறுகிறதோ அதுவே ஒரு சமுதாயத்தின் தாக்கமாக கதைகளாகவும், பாடல்களாகவும் வெளி வரும்.
இங்கே infidellity என்பது தவிர்க்க முடியாத ஒரு விசயமாக கருதி Victimize பண்ணிக் கொள்கிறார்கள் தன்னைத்தானே. அதுவே பொதுப்படையான கருத்தாகவும் வெளிக் கொணர்கிறார்கள். இது போன்ற பாடல்கள்தான் அதிகமாக நாம் இந்த ராப் பாடல்களில் கேக்கலாம்.
இங்கு ஒருவரிடம் நான் கேட்டேன், அவர் பதிலில் கிடைத்ததைத்தான் உங்களிடம் பகிர்ந்துகொண்டேன். அவர் எனக்கு கொடுத்த அறிவுரை, இந்த கலாச்சார மாற்றத்தினை trackல் வைத்துக் கொள்ளவாவது இது போன்ற பாடல்களை கேள் (பார்) என்று கேட்டுக் கொண்டார்.
ஏன் போர் நடக்கும் இலங்கை போன்ற நாடுகளிலிந்து இது போன்ற பாடல்கள் வருவது கிடையாது? அங்கேயிருந்து மனித வாழ்வியல் சார்ந்த ஆழமான கருத்து படைப்புகள் மட்டுமே வருவதைக் காண்கிறோம்?
Good introduction, thanks.
நல்லதொரு அறிமுகம் சிவபாலன். நன்றி!
//ஏன் போர் நடக்கும் இலங்கை போன்ற நாடுகளிலிந்து இது போன்ற பாடல்கள் வருவது கிடையாது? அங்கேயிருந்து மனித வாழ்வியல் சார்ந்த ஆழமான கருத்து படைப்புகள் மட்டுமே வருவதைக் காண்கிறோம்?
//
இப்போது கொஞ்சங்கொஞ்சமாக வருகின்றன என்று நினைக்கிறேன். இளையதலைமுறை தலையெடுத்துச் செய்கிறார்கள். பிரபலமானவர் என்றால் MIA என்னும் மாயா அருள்பிரகாசம். அப்புறம் சுஜித்ஜி என்பவரும் சில சோதனைமுயற்சிகளின் ஈடுபட்டுள்ளார்.
ஹிப்ஹாப், ராப் இசைகளைப்பற்றி டிசே தமிழன் சில இடுகைகளை இட்டிருக்கிறார். அங்கே பெயரிலி போன்றவர்கள் எழுதிய பின்னூட்டங்கள் கவனத்தில் கொள்ளத்தக்கன.
சுட்டி தேட நேரமில்லை. :(
http://elanko.net/pathivu
http://djthamilan.blogspot.com
இந்த வலைப்பதிவுகளில் தேடினால் கிடைக்கும்.
-மதி
Orani,
உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டாலும் இந்த குறிப்பிட்ட இசையில் நல்ல விசயங்களும் இருக்கின்றன்.
இது பெரும்பாலும் கருப்பினத்தை சேர்தவர்களே கேட்பதால் மற்றவர்களுக்கு பிடிக்காமலும் போகலாம்..
இலங்கை நிலவரம் குறித்து மதி கந்தசாமி கூறியுள்ளார்..
வருகைக்கு நன்றி.
Orani,
ஆதரவுக்கு நன்றி.
மதி கந்தசாமி அவர்களே,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
இலங்கையைப் பற்றிய விசயத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
சுட்டிக்களுக்கு நன்றி.
இது ஜாலியான விசயத்திற்காக--1
இது ஜாலியான விசயத்திற்காக--2
இது எல்லோரும் அனுபவிக்கணுங்கிறதுக்காக - அ ;-)
இப்படித் தேவையில்லாத பின்னூட்டங்கள் இடுவது நன்றாக இல்லை சிவபாலன். பதிவர்களைக்குறித்த எதிர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்கும் இம்மாதிரியான செயற்பாடுகள் உங்களுக்கு வேண்டாமே!!!
this sort of cheap stunts do reveal a lot about bloggers who resort to such behavior, i feel.
கடுமையான பின்னூட்டந்தான். தொனிக்கு மன்னிக்கவும். உங்களின் பல இடுகைகள் எனக்குப் பிடித்துப்போனமையால், இம்மாதிரியான பழக்கம் உங்களுக்கும் வேண்டாமே என்ற எண்ணந்தாம் இப்பின்னூட்டத்தை எழுதுமாறு உந்தித்தள்ளியது.
நான் செய்யவில்லை என்றாலும், மறுமொழி மட்டுறுத்தல் செய்யாமல், அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பட்டியலில் வராமல் இருக்கிறார்களே, அவர்கள்மீது தனிமரியாதை உண்டு. அவர்கள் அளவு தேவையில்லை, குறைந்த அளவு தன்னம்பிக்கை, சுயமரியாதையுடன் நடந்துகொள்வோமே.
உங்களின் இடுகையைச் சாட்டாக வைத்து, இம்மாதிரிச் செய்யும் வலைப்பதிவு அன்பர்களைக் கொஞ்சம் யோசிக்க வைப்பதற்காக எழுதியிருக்கிறேன்.
once again, do forgive the tone.
-மதி
pi.ku:
நேசி, et tu? :(

தங்கள் கருத்து மிக்க நன்றி.
உரிமையோ இடித்துரைத்தற்கு மிக்க நன்றி..
சும்மா ஜாலியாக எல்லாரும் படிக்கட்டுமே என போட்டதுதான்..
மன்னிகவும்.. இனி இவ்வாறு நடவா வண்ணம் பார்த்துக்கொள்கிறேன்..
அடடா மதி அவர்களே, உங்களை அப்செட் செய்து விட்டேனே. அந்த உங்களின் :( கொஞ்சம் படுத்தியது.
எழுதும் பொழுதே கொஞ்சம் யோசிச்சேன் நான், போடுவமா வேண்டாமா என்று. அந்த பிளவு எண்ணமே உங்களின் கருத்தின் படி தவறாக அமைந்து விட்டது என்று இடித்துரைத்து விட்டது.
போய் சேருமிடத்தில் சேர்ந்தால் சரியே...
மதி, et tu? - அப்படின்னா என்ன???
//மதி, et tu? - அப்படின்னா என்ன??? //
நான் இப்படித்தான் எடுத்துக்கொண்டேன்... Nesi, its you! Shame on you!!! Is that so, Mathy???
நான் சொல்ல நினைத்திருந்ததை சொன்னதற்கு நன்றி, மதி அவர்களே!
சிபா 'கோவி'த்துக் கொள்ள மாட்டார்!
மற்றபடி, இந்தப் பாடல்கள் பற்றி பதிவு போட்டிருப்பது 'வீட்டுல' தெரியும்தானே, சிபா!
:))
//மதி, et tu? - அப்படின்னா என்ன???//
ஜூலியஸ் சீஸர் படித்திருக்கிறீர்களா, இ.நேசி அவர்களே! அதில் வரும் இது!
'நீயுமா?' என்று பொருள்!
ஆன்டனியும் கடைசியில் கத்தியை எடுத்து சீஸரைக் குத்தும் போது, வியப்பும், நம்பிக்கையின்மையும் கலந்து வீறிடிவான், சீஸர்!
அப்படியெனில், "சீஸர் செத்து மடியட்டும்!" எனச் சொல்லி உயிரை விடுவான்!
அதுபோல, 'நீயுமா நேசி?'ன்னு உங்களை மதி கேக்கறாங்க!!:)):))
நேசி
ரொம்ப வருத்தப் படுகிறீர்கள் போல.. சரி விடுங்க..
ஆனால், இந்த பின்னூடங்கள் நல்ல விசயத்திற்காக பயன்பட வேண்டும் முயற்சியே..
ஆனால் இதை எல்லாரும் பயன் படுத்த ஆரபிச்சா தமிழ்மணத்தில் ஒரு நிமிடத்திற்கு ஒரு பதிவு மாறும் நிலை வரும்..
உண்மையில் பல் பதிவர்கள் அனானி கமென்ட் போடுக் கொண்டும் இருக்கும் நிலையும் இருக்கத்தான் செய்கிறது..
மதி அவர்கள் நம் நன்மைக்காகத்தான் இதை நம்மிடத்தில் சொல்கிறார் என நம்புகிறேன்.
இருப்பினும் அவர் சொன்ன தொனிதான் கொஞ்சம் ஓவர் ..
அதனால் தான் நீங்கல் ரொம்ப வருத்தப் படுகிறீர்கள்..?????
மதி, மீன்டும் ஒரு பின்னூடமிட்டு நேசியை கூல் பண்ணிருங்க..
சிவபாலன்: புரிந்துகொண்டமைக்கு நன்றி!
ஜாலியான இடுகைகள் போடுங்க. அது ரொம்ப சுவாரசியமா இருக்கு. [எனக்கு வீட்டில பூசை விழுந்தா, உங்களுக்கு சுவாரசியமாத்தான் இருக்கும்னு முனகுறீங்களா? கேக்கல! ;)]. ஆனா, அனாவசியமான பின்னூட்டங்கள் வேணாம்னு நினைக்கிறேன்.
இப்போல்லாம் மறுமொழிப்பட்டியல் வாயிலாக இடுகைகளுக்குப் போவதைக் கொறச்சிட்டேன். போய் ஏமாந்து வாறதுதான் காரணம். அந்தமாதிரிப் பின்னூட்டக்கயமைத்தனம் செய்யும் பதிவுகளைப்பார்க்கும்போது எரிச்சல்தான் வருது.
எஸ்கே: நன்றிங்க. என் வேலையைக் குறைச்சிட்டீங்க. :)
நேசி: உங்களுடைய அருமையான இடுகைகளைப் படிச்சிருக்கேன். படிச்சு அசந்துபோயிருக்கேன். [மவளே, அப்ப ஏன் பின்னூட்டம் இடுவதில்லை-னு கேக்காதீங்க. சோம்பேறித்தனத்தை ஒரு artformஆகவே மாத்திக் கடைப்பிடிச்சுட்டிருக்கேன். ;) ]. நீங்களும் இந்தப் பின்னூட்டக் கயமைத்தனம் செய்யவேணாமேங்கிற உரிமைல அந்த :( ஸ்மைலி/சிரிப்பி.
அப்புறம் et tu பத்தி எஸ்கே சொல்லிட்டார். என்னுடைய இடுகையொன்றைப்படித்தால் ஏன் இப்படி ஷேக்ஸ்பியரையெல்லாம் படுத்தியெடுக்கிறேன் என்று உங்களுக்குப் புரியும். அவர்மேல அனுதாபமும் பிறக்கும். ;) [எல்லாம் விளம்பரந்தான். ;) ]
http://mathy.kandasamy.net/movietalk/archives/2006/06/26/82

மதி
ஆனாலும் வாத்தியார் மாணவனை மெரட்டர மாதிரி மெரட்டீங்க..:)):))
நான் வேற கடைசி பெஞ்சு மாணவன்.. கொஞ்சம் கோபம் வந்த்தது.. :)
இருந்தாலும் நீங்க என் நலம் விரும்பி என்பதால் கூலாக விட்டுவிட்டேன்.. B-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி..
வாத்தியாரம்மா மேல கோவம் வந்தா நஷ்டம் அவங்களுக்கு இல்லை!
மாணவனுக்குத்தான்!
SK அய்யா,
வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி..
SK அய்யா
மதி சொன்ன விசயத்தை ஏதோ திசை திருப்பி பதிவின் நோக்கத்தை நைசாக மாத்தர மாதிரி இருக்குது...
இதனால் அனைவருக்கும் தெரியபடுத்தும் விசயம் என்னவென்றால், இப்பதிவின் நோக்கம் ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் அதிகம் நேசிக்கப் படும் இந்த் இசையை மரியாதைப் படுத்தும் நோக்கமே..
இடுகையின் நோக்கம் சிதறிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் பின்னூட்டம் எழுதிக் கடைசியில் நானும் கவனம் சிதறுவதற்குக் காரணமாகி விட்டேன்.
ஆகையினால், பிராயச்சித்தமாக நான் சொன்ன இடுகைகளில் சிலவற்றைத் தேடியெடுத்துவிட்டேன். :)
http://elanko.net/?p=86
http://elanko.net/?p=76
http://elanko.net/?p=7
there were some more, but since DJ is fiddling with his blog, coudlnt find them. will add them when i can.
-Mathy
மதி அவர்களே,
சுட்டிக்களுக்கு மிக மிக நன்றி..
இது ஒரு ஜாலியான பதிவு.. எல்லாரும் ஜாலியாக இருப்போம்..
மீன்டும் வந்து கருத்து கூறிய உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
சிவா, ஷகிராவின் Hips Don't Lie பார்த்தீங்களா? அது என்ன இடுப்பா????
// இப்பதிவின் நோக்கம் ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் அதிகம் நேசிக்கப் படும் இந்த் இசையை மரியாதைப் படுத்தும் நோக்கமே..
//
ரொம்ப கஷ்டங்க... மூச்சுக்கு முன்னூறு தடவை பாலுத் தேவர் பாலுத் தேவர் ன்னு சொல்லற மாதிரி அந்த வார்த்தையயே அவங்கதான் கண்டுபிடிச்ச மாதிரி M** F** ன்னு சொல்லுவாங்க... அதை வெளிய பாடிட்டு திரிய முடியாது... ஆட்டமும் முக்கியம், பாட்டும் முக்கியம்...
சிவபாலன்,
உங்கள் இடுகையின் அடிநாதத்தோடு ஒன்றுபடும் இடுகைகள் என்று நான் நினைப்பவற்றை இங்கே இடுகிறேன்.
http://peddai.net/?p=44
http://peddai.net/?p=33 - very much relevent to your post.
http://peddai.net/?p=75
http://peddai.net/?p=18 - another very good and relevant post.
I have to admit that i confused between DJ Tamilan's blogposts and peddai's. I had peddai's posts in mind, but talked about DJ's instead..
http://peddai.net/?p=15 - do read this while u r at it. :)
இன்னும் சில இடுகைகள் இருக்கின்றன. சில நாட்கள் கழித்து இடுகிறேன். ஓவர் டோஸ் ஆகி விடக்கூடாதில்லையா. :)
-மதி
உதய்,
நீங்க சொல்லும் வார்தைகள் நான் கொடுத்த பாடல்களில் இல்லை..:)
தமிழை கொச்சைப் படுத்தி பல விசயங்களை கொச்சைப் படுத்தி வரும் பாடல்களை நாம் இன்னும் பாடிக்கொண்டுதான் இருக்கிறோம்..:)):))
வேட்டையாடு விளையாடு படத்தைப் பற்றி ஒன்னும் சொல்லவில்லையே..
Long Weekend என்ன Plan வைத்துள்ளீர்கள்??
மதி அவர்களே,
மிக அருமையான சுட்டிகள்.
நீங்கள் சொன்ன http://peddai.net/?p=33 - very much relevent to your post.
இந்தப் பதிவு மிக அருமை..
அனைத்து சுட்டிகளையும் இப்பதிவில் இனைத்துவிடுகிறேன்.
சுட்டிகளை இங்கே கொடுத்தமைக்கு உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்..
வருகைக்கும் சுட்டிக்கும் மிக மிக நன்றி.
Post a Comment
<< Home