பாலுணர்வு - Readers Discretion Recommended..
பொதுவாக பாலுணர்வு என்பது ஒரு குற்றமான காரியமாகவே பெரும்பாலான மனிதர்களால் எண்ணப்படுகிறது. உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரையிலும் பாலுணர்வு மனித இனத்தின் அத்தனை பிரிவினரையும் கவர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் கலை, இலக்கியம், ஆகியவையும் அமைந்துள்ளன.
அதே சமயம் மதம், தத்துவம், சட்டம் போன்ற மனித நடத்தைகளை வடிவமைக்கும் கூறுகள் பாலுணர்வு பற்றிய மதிப்பீடுகளையும் நம்பிக்கைகளையும் நிறுவ முயன்றுள்ளன.
எனவே வரலாற்றின் அடிப்படையில் பார்க்கப் போனால் கலாச்சாரங்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் கூட மரபு சார்ந்த அல்லது மரபை மீறிய பாலுணர்வுப் பழக்கங்களாலும் சிந்தனைகளாலும் ஏற்பட்டுள்ளன என ஆணித்தரமாகக் கூற முடியும்.
ஒரு வகையில் இத்தகைய பாலியல் பற்றிய கல்வியின் மூலம் நாம் மனிதர்கள் மற்றும் மனித இயல்பின் சிக்கல்களையும் பற்றித் தரிந்து கொள்ள முடியும்.
உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டின் கருத்துப்படி பாலுணர்வு என்பது ஓர் ஆற்றல் வாய்ந்த உளவியல் மற்றும் உடலியல் சக்தி என்பதே.
ஹென்றிமில்லர் என்ற இலக்கியமேதை தனது நாவல்களில் பாலுணர்வு பற்றிய வெளிப்படையான உரையாடல்களைக் கையாண்டு மனித வாழ்வில் பாலுணர்வுன் முக்கியத்துவத்தைத் தௌளத் தௌவாக எடுத்துக் காட்டுகிறர்.
சுவேதகேது என்பார் நந்திதேவரின் காமசாஸ்திர நூலை ஆய்ந்து அதைச் சுருங்கச் சொல்ல விரும்பி 500 அத்தியாயங்களுக்குள் அடக்கி ஒரு நூலாக இயற்றினார். ஆனால் இந்த நூலும் பெரியதாக இருப்பதாக எண்ணிய பாஞ்சால நாட்டைச் சேர்ந்த பப்ரவ்யன் என்பார் அதையே 150 அத்தியாயங்களுக்குள் சுருக்கிச் சொன்னார்.
பாலுணர்வு ஆழமான ஒரு பொருள் உள்ளது. அது மனித ஆளுமையின் ஒட்டுமொத்த பரிமாணத்தையும் கொண்டது என்பதே ஆகும். எனவே வெறும் பாலுணர்வுக் கிளர்ச்சியை மட்டுமே செக்ஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகக் கருதுவது அறியாமையிலும் அறியாமை தான்.
பாலுணர்வு மிகவும் நுண்ணியமான விஷயமாகக் கருதப்படுவதால் இதைப் பற்றிய கருத்துக்கள் சமூகத்தில் பல தட்டுக்களில் இருப்பவர்களிடையே வேறுபடுகின்றன.
பாலுணர்வுகளைச் சுற்றியுள்ள கலாசார, ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்ள இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் கருச்சிதைவு, திருமணத்திற்குமுன் உடலுறவு, கருத்தடை சாதனங்கள், ஓரினச் சேர்க்கை போன்ற விஷயங்கள் பற்றி விவாதிக்கவும் பேசுவதற்கும் ஒரு களம் இவர்களுக்கு அமைந்தாலொழிய சமுதாயத்தில் உண்மையான நல்ல மாற்றங்களை ஏற்றபடுத்த வாய்பில்லை.
" பாலியல் கல்வியின் அவசியம் பற்றி இங்கே" நன்றாக அலசியுள்ளார்கள். அதையும் படிங்க...
37 Comments:
எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கட்டுரையிலிருந்து தொகுகப்பட்டது.
பாலியல் கல்வி அவசியமா என்ற கோணத்திலும் இக் கட்டுரை தொகுகப்பட்டது..இதன் சுட்டியையும் இங்கே கொடுத்துவிடுகிறேன்.
Update - வலைதளம் - பாலியல் கல்வியின் அவசியம்
சிபா... மிகவும் பயனுள்ள தகவல்.
பாலுணர்வு பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாததால் தான் ஆபாச விசயங்களை அதிகமாகத் தேடுகின்றனர்.
அன்புடன்
ஜி.கே
GK,
பாலியல் கல்வியின் அவசியம் நிச்சயம் நல்ல சமுதாயத்தை உருவாக்க தேவை..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
பாலுணர்வு பற்றிய அடிப்படை புரிதல்கள் இல்லாத இடத்தில்தான் அத்தனை ஆக்கப்பூர்வ சக்தியும் வீணடிக்கப் படுகிறது.
அவ்வியலைப் பற்றிய ஒரு புரிதல் இருக்கும் பட்சத்தில் சுனக்கமான, மனக்கட்டுப்பாடும், அந்த vital energy எப்படி ஆக்கப்பூர்வமான வழிகளில் செலவு செய்ய வல்லது என்பதும் ஒருங்கே அமைந்து விடுகிறது.
நம் இளமைகாலங்களில் முறையற்ற புரியாமையின் காரணத்தால்தான் தேவையற்ற தேடல்களும் அதனையொட்டிய தடுமாற்றங்கள், வாழ்வின் தோல்விகள் அனைத்தும் அமைய அடிகோலிடுகிறதோ?
தெகா,
//பாலுணர்வு பற்றிய அடிப்படை புரிதல்கள் இல்லாத இடத்தில்தான் அத்தனை ஆக்கப்பூர்வ சக்தியும் வீணடிக்கப் படுகிறது //
மொத்தப் பதிவின் கருத்தை இரண்டே வரிகளில் அருமையாக சொல்லிவிட்டீர்கள்..
Super Commentங்க.. Excellent..
இருப்பினும் சிவா, மேலை நாடுகளைப் போன்று பாலியல் கல்வி என்ற பெயரில் "condom" வினியோகப்பது கொஞ்சம் அதிகப் படியாக தெரிகிறது.
சரி இதற்கு என்னதான் தீர்வு என்று வரும் பட்சத்தில் மீண்டும் பெற்றோர்களின் பங்களிப்பு இதற்கு அதீதமாக இருக்க வேண்டுமென எனக்குப் படுகிறது. முதலில் தனது குழந்தைகளை ஒரு நண்ப/பி யாக பாகிக்க ஆரம்பிப்பதிலிருந்து இது தொடங்கலாமோ? போசுவது, வாழ்வியலின் அனைத்துப் பகுதிகளையும்...
இருப்பினும் சிவா, மேலை நாடுகளைப் போன்று பாலியல் கல்வி என்ற பெயரில் "condom" பள்ளிகளில் விநியோகப்பது கொஞ்சம் அதிகப் படியாக தெரிகிறது.
சரி இதற்கு என்னதான் தீர்வு என்று வரும் பட்சத்தில் மீண்டும் பெற்றோர்களின் பங்களிப்பு இதற்கு அதீதமாக இருக்க வேண்டுமென எனக்குப் படுகிறது. முதலில் தனது குழந்தைகளை ஒரு நண்ப/பி யாக பாகிக்க ஆரம்பிப்பதிலிருந்து இது தொடங்கலாமோ? போசுவது, வாழ்வியலின் அனைத்துப் பகுதிகளையும்...
தெகா
// பெற்றோர்களின் பங்களிப்பு //
நல்லதொரு கருத்தை முன் வைத்துள்ளீர்கள் .. அருமை.. மிக்க நன்றி.
ஆனால் பெற்றோர்களை சம்பந்தப் படுத்தும்போது ஏற்படும் விளைவுகளை எவ்வாறு சமாளிப்பது.. அந்த முறை சரியா? நல்ல தீர்வை தருமா?
இது நல்ல விஷயம் தானெ....தலைப்பில் எதற்கு அய்யா எச்சரிக்கை?
இந்தவார தமிழ்மண நட்சத்திரமே வருக..
உங்க நட்சத்திரவார பதிவுகளை இப்பொழுதுதான் படிக்க ஆரபித்தேன்.. அதற்குள் நீங்க இங்கே வந்துட்டீங்க..
மணிகன்டன்,
உண்மைதான், நல்ல விசயம் தான்.. ஆனால் சில பார்வைக்கு தவறாக படலாம்.. அதனால் தான் டிஸ்கி..உள்நோக்கமில்லை..
வருகைக்கு நன்றி.
//ஆனால் பெற்றோர்களை சம்பந்தப் படுத்தும்போது ஏற்படும் விளைவுகளை எவ்வாறு சமாளிப்பது.. அந்த முறை சரியா? நல்ல தீர்வை தருமா?//
சிவா, உங்களுடைய கேள்வியைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பாட்டி 82 வயதாம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவரிடம் நீங்கள் கேட்ட கேள்வியையும், என்னுடைய condom விநியோகம் பற்றிய புரிதலையும் முன்வைத்தேன்.
அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு அந்த பாட்டி ஒரு அமெரிக்க- வெள்ளையர், இங்கு உள்ள ஃபெடரல் ரிசர்வ் பேங்கில் வேலைப் பார்த்தவராம், 20 வருடங்களுக்கு முன்பு குழந்தைகள் வளர்பிற்கென தனது வேலையை உதறிவிட்டு, இரண்டு பசங்களை வளர்த்து இந்த சமுதாயத்திற்கு பங்களித்தாக கூறினார்.
அவர் கூறினார், பள்ளிகளில் 'கான்டம்' வழங்குவது கொஞ்சம் அதீதமே... குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோர்களின் பொருப்பு. அதிலும் இது போன்ற புரிதல்கள் வீட்டில் இருப்பவர்களால் வழங்கப்படுதல் அவசியம் என்று ஆணித்தரமாக அடித்துக் கூறிவிட்டார்.
//ஆனால் பெற்றோர்களை சம்பந்தப் படுத்தும்போது ஏற்படும் விளைவுகளை எவ்வாறு சமாளிப்பது.. //
சிவா, இங்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது எனக்கு விளங்கவில்லை, அது என்ன என்று விளக்க முடியுமா?
இந்தியாவில் பாலியல் கல்வி என்பது, சற்று நெருடலாகத்தான் இருக்கிறது. பாலியல் கல்வியானது, ஏறக்குறைய பதின்மர் பருவமாணவர்களிடம் சொல்லிக்கொடுக்ககூடியதாகத் தெரிகின்றது. இந்தப் பதின்மர் பருவமானது, முக்கியமான உடலியல் மாற்றங்களைக்கொண்டது. அந்தப்பருவத்தில் இந்தக் கல்வி நல்ல மாற்றங்களை உருவாக்கும் என்றுத் தோன்றவில்லை. ஏனெனில் சாதக பாதகங்களைத் தெரிந்துகொண்ட அவர்கள், பாதகங்கள் விளையாமல், சில காரியங்களை நடைமுறைப் படுத்திப்பார்க்க முனையலாம். அதற்கு தற்போதைய விஞ்ஞானமுன்னேற்றம் பெரும் துணைபுரியும். உதாரணமாக. சமீபத்தில் தமிழகத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட மிஸ்டேக் என்ற கருத்தடை மாத்திரை.
பாலியல் கல்வி பள்ளிக்கூடங்களில் போதிப்பதை விடுத்து, பெற்றோர்கள், பிள்ளைகள் வளர்ப்பில் போதிய கவனிப்பும் அக்கறையும் செலுத்தினாலே போதுமானது
நாகு அவர்களே,
வருகைக்கு நன்றி. உங்கள் பதிவுகளை இப்பொழுது பார்க்க முடிவதில்லையே..??
நீங்கள் சொல்லும் கருத்தில்தான் இதுவரை நாம் பயனித்துக் கொண்டிருக்கிறோம்.. ஆனால் அதன் விளைவுகள் சரியாக இல்லை என தோண்றுகிறது.
நீங்கள் சொல்வதுபோல் நவின தொழில் நுட்பத்தால் அவர்கள் எளிதாக எதையும் அடைய முடியும் என்ற நிலையில் தான் இந்த பாலியல் கல்வியின் அவசியம் அதிகமாகிறது
தெகா
பாட்டியின் விசயத்தை இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
பாலியல் கல்வி பள்ளிக்கூடங்களில் போதிப்பதை விடுத்து, பெற்றோர்கள், பிள்ளைகள் வளர்ப்பில் போதிய கவனிப்பும் அக்கறையும் செலுத்தினாலே போதுமானது//
பாலியல் ஏதோ மறைக்க வைக்க வேண்டிய விஷயம் என போதித்து தான் இந்தியா உருப்படாமல் போனது.பாலியல் கல்வியை சிறுவயதிலேயே கற்றுத்தந்தால் குழந்தைகளை பலாத்காரம் செய்வது பெருமளவில் குறையும்.சிறுமிகளுக்கு அது என்னவென்றே தெரியாததை பயன்படுத்தி வளர்ந்த ஆண்கள் அவர்களை பலாத்காரப்படுத்துவது உலகெங்கும் நடக்கிறது.
இந்தியாவில் அனைத்து பள்ளிகளிலும் இதை அறிமுகப்படுத்த வேண்டும்.மறைத்து வைக்க இதில் எதுவுமில்லை.
தெகா
நான் விளைவு என்பது. பெற்றோர்களுக்கு ஏற்படும் சங்கடமான நிலை.. குழந்தைகள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல முற்படும் போது ஏற்படும் நிலை.. இதைப் பற்றி குறிப்பிட்டேன்.
செல்வன் சார்
சரியாக சொண்னீர்கள்.. அதுவும் சிறுமிகள் மீது நடத்தப்படும் பலாத்காரம் மிக கொடுமையானது.. இதை ஓரளவு குறைக்க பாலியல் கல்வி நிச்சயம் உதவும்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//குழந்தைகள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல முற்படும் போது ஏற்படும் நிலை.. இதைப் பற்றி குறிப்பிட்டேன்.//
அது போன்ற கேள்விகளை நம் முன்னால் கொண்டு வந்தார்களே என்று நன்றி அல்லாவா சொல்ல வேண்டும், அப்படி விளக்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தற்கு.
முதலில் நாம் அந்த விசயத்தில் தெளிவு பெற்று விட்டால், விளக்குவதற்கு ஆயிராமாயிரம் நல்ல விசயங்கள் கிடைக்கும். Forget, approaching sex related discussion is a taboo to discuss, first ...
Orani,
நன்றாக சொன்னீர்கள்.. ஆனால் இந்த நிலையை ஒவ்வொரு பெற்றொரும் அடைய முடியும் என்பதில தான் பிரச்சனையே..சமுதாய நிலையை வைத்து சொல்கிறேன்.
அப்படியென்றால், பெற்றொர் எப்படியாவது என்று தெரியாமலேயே தெரியாமல் ஒரு விபத்தில் நாம் பெற்றொர் (in possession of some'thing' in our hand) ஆகிவிட்டோமென்று கூற வருகிறீர்களா? :-)))
Orani,
இரசித்தேன்..
ஆனால் அந்த பெற்றோர்களுக்கு பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கும் பக்குவம் பற்றி நான் குறிப்பிட்டது..
அருமையான கருத்து - பதியத் துணிந்த வீரனுக்கு ஒரு "வாழ்க, வாழ்க"! பெண்கள் எல்லா உண்மையையும் சொன்னா இந்த உலகம் என்ன ஆகும்னு நிறைய நாள் நினைச்சுருக்கேன். பொண்ணுங்களுக்கு சமுதாயத்துக்கு முன்னால் பாலியல் பற்றிய கருத்துக்கள் சொல்றதுல தயக்கம் குறைஞ்சிருக்கு. ஆனா உண்மையச் சொல்ரதில, குழப்பமிருக்கு. நாலு பேர் உண்மையச் சொல்லி, நாற்பத்தஞ்சு பேர் பொய் சொல்லி, ஐம்பத்தி ஓரு பேர் ஒண்ணும் சொல்லாம இருக்கிறாங்க இன்னைக்கு! கதை மாறிச்சின்னா நாடு ஆடிப் போயிடும். ஆண்கள் என்னைக்கோ உண்மை பேச துணிஞ்சிட்டாங்க நம்ம நாட்டில. உங்களோட துணிவைப் பாராட்டுரேன்.
மதுரா அவர்களே,
உங்கள் வாழ்த்து மிக மகிழ்ச்சியளிக்கிறது.. நான் கொஞ்சம் யோசித்துதான் பதிவிட்டேன்.. ஆனால் உங்களுடைய பின்னூடம் மிக நல்ல ஆறுதல்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நம்மூரில் 'sex and city' போன்ற அமெரிக்க 'சோப் ஒபெரா"க்களை பார்த்து மேலும் விரசத்தை வளர்த்துக் கொள்வதற்கு முன்பு, இது போன்ற அடிப்படை விசயங்களை புரிந்து கொண்டு அங்கு சென்றால் (அப்படியே போனாலும், போனாலும் என்னாத்த தெரிஞ்சுக்கிறோமின்னு தெரியலை..) நல்லது...
நீங்க பார்த்திருக்கிறீர்களா, சிவா, அந்த சிரிப்பா சிரிச்ச 'ஷோ"க்களை...?? உலக முழுக்க வறவேற்கப்பட்டு பார்க்கப்படுகிறதாம்...
Orani,
உண்மைதான். வேகமாக வளர்ந்துவரும் சமுதாயத்தில் பாலியில் கல்வி அத்தியவிசயமாகிறது.. இதை அனைவரும் உணரவேண்டும்.
சிவபாலன் அவர்களே,
இளைஞர்கள் பாலியல் பற்றி தெரிந்து கொள்வதில் தவறில்லை. நல்ல தொடல், கெட்ட தொடல் என்பது குறித்து சின்ன குழந்தைகளுக்கே சொல்லித்தர வேண்டும். அதேபோல 13 வயதுக்கு மேல் பள்ளியில் பாலியல் கல்வியை கட்டாயமாக்குவதும் சரி என்றே நான் நினைக்கிறேன். அதன்மூலம் அவர்கள் நல்லது கெட்டதை உணர முடியும். ஆனால் திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்வேன் என்று அவர்கள் சொன்னால் அதனை கட்டாயம் நாம் கண்டிக்க வேண்டும்.
விடாதுகருப்பு அவர்களே,
// நல்ல தொடல், கெட்ட தொடல் //
அடிப்படையான விசய்த்தை மிக அழகாக கூறியுள்ளீர்கள்..நன்றி..
உணமைதான், இது போன்ற அடிப்படையான விசயங்களைப் பற்றி சொல்லிக் கொடுப்பதின் மூலம் சிறுமி/சிறுவர்களின் மீதான பல பாலியியல் பல்த்காரங்கள் தடுக்கப்படலாம்.
சமுதாயத்திற்கு எதிரான பாலுணர்வு விசயங்கள் நிச்ச்யம் ஏற்றுக் கொள்ள முடியாது.. ஆனால் பாலுணர்வு பற்றிய நல்ல விழிப்புணர்வு குற்றங்களை குறைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் தான் பாலியல் கல்வி அவசியமாகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
சிவா, இன்னும் கொஞ்சம் பேரை உள்ள கொண்டு வருவோம்... இதுவும் நல்ல விசயத்திற்காகத்தான் ;-)
தெகா
உண்மையாகவே இது நல்ல ஐடியாதான்.. சூப்பர்..
//உண்மையாகவே இது நல்ல ஐடியாதான்.. சூப்பர்.. //
;-)))
என்னப் பண்றது, சிவா, மருந்து சாப்பிடும் பொழுது கஷ்டமாத்தான் இருக்கு முழுங்கிட்டோமின்ன, குணமாகிடும் அதுதான் நீங்க பண்ணிக்கிட்டு இருக்கிறதும் இங்கே... :-)
தெகா
இந்த முயற்சியில் உதவும் உங்களுக்கு எனது நன்றிகள்..
//சிவா, இன்னும் கொஞ்சம் பேரை உள்ள கொண்டு வருவோம்... இதுவும் நல்ல விசயத்திற்காகத்தான் ;-)//
வந்தாச்சு!
என்ன பண்ணணும் சொல்லுங்க!
SK அய்யா,
வந்திடிங்கலா... நீங்க வரணும்தான் அப்படி சொல்லி வைத்தோம்...
நாங்கள் செய்வது ஒன்றுமில்லை.. நீங்கள் ஆரபித்திருக்கும் சேவைக்கு முன்...
வருகைக்கு மிக்க நன்றி.
பள்ளிக்கூடங்களில் செக்ஸ் உள்ளிட்ட சுகாதார கல்வியை கற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
ஏற்கனவே எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த கல்வி பள்ளியில் கற்பிக்கப்பட்டு வருகிறது. பாலியல் பலாத்கார நிகழ்ச்சிகள் நடைபெறுவதை தடுக்க வேண்டும். அதற்கு பாலியல் கல்வி என்றுஅழைக்கப்படும் செக்ஸ் கல்வி பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கப்பட இருக்கிறது. அப்படி கற்றுக்கொடுத்தால் யாரும் மாணவ-மாணவிகளை ஏமாற்ற முடியாது.
Post a Comment
<< Home