இரண்டு இலட்சத்திற்கு 6000

மத்திய அரசு அதிகாரி பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 2லட்சம் பணியிடங்கள் ஒதுக்கப்பட்ட போதிலும் வெறும் 6000 பேர் தான் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோரை புறக்கணிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்று மண்டல் கமிஷன் பரிந்துரை செய்தது. இதை ஏற்று 1993ம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மத்திய அரசில் உள்ள மொத்த பதவிகளில் 30லட்சத்து 58ஆயிரத்து 506 பணியிடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு என நிர்ணயிக்கப்பட்டன.
ஏ பிரிவு அதிகாரி பணியிடங்களில் 80ஆயிரத்து 11 பணியிடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி 13 ஆண்டுகள் ஆன பிறகு கூட அத்தனை பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. ஏ பிரிவு அதிகாரிகளாக 3090 பேர் தான் இப்போது பணிபுரிகின்றனர்.
இதே போல பி பிரிவு அதிகாரிகளாக 1லட்சத்து 39ஆயிரத்து 409 பணியிடங்கள் வழங்கிய போதிலும் 3123 பேர் தான் வேலை பார்க்கின்றனர்.
இதே போல சி பிரிவில் 20லட்சத்து 49ஆயிரத்து 970 பணியிடங்கள் ஒதுக்கியிருந்தாலும் அதில் பணிபுரிவது 1லட்சத்து 6 ஆயிரத்து 309 தான்.
டி பிரிவில் 8லட்சத்து 2 ஆயிரத்து 116 பணியிடங்களில் 26,158 பேர் தான் பணிபுரிகின்றனர்.
4 பிரிவுகளிலும் சேர்ந்து ஒரு லட்சத்து 38ஆயிரத்து 670 பிற்படுத்தப்பட்டோர்கள் தான் உள்ளனர்.
அதாவது பிற்படுத்தப்பட்டோருக்கு என 27 சதவீதம் ஒதுக்கப்பட்டும் வெறும் 3.9 சதவீதம் பேர் தான் பணிஅமர்த்தப்பட்டுள்ளனர்.
நன்றி: தமிழ் முரசு
23 Comments:
இது பற்றி சமூக நீதித்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசின் இடஒதுக்கீடு கொள்கையில் சில ஓட்டைகள் உள்ளன. அதனால் தான் இந்த பாதிப்பு. மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முழு அளவில் அமல்படுத்தப்படவில்லை அல்லது அந்த பதவிகளுக்கு பிற்படுத்தப்பட்ட இனத்தவர்களில் தகுதியான நபர்கள் இல்லை என்றே பொருள் கொள்ள வேண்டும் என்றார்.
சிவபாலன்,
பதவியில் இருப்பவர்கள் புதிய திட்டங்களை அறிவிக்கும் போது விளம்பரங்களுடன் ஆர்ப்பாட்டமாக அறிவித்து விட்டு கடதாசியில் எழுதி வைப்பதோடு சரி. அத் திட்டங்களை ஒழுங்காக அமுல்படுதுவதிலேயே அல்லது அமுல்படுத்துவதில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து அத் திட்டத்தைச் சரியான முறையில் அமுல்படுத்துவதற்காக எடுக்கவேண்டிய முயற்சிகளிலோ பதவியிலுள்ளவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.அதற்கு ஓர் எடுத்துக்காட்டுதான் இது.
வெற்றி,
பதிவின் கருவை அருமையாக சொல்லியுள்ளீர்கள்..
அத்துடன் இதையும் செர்த்துக்கொள்ளுங்க..
சமூக அநீதியை நிலை நாட்டவும் தனது சாதியினர் தொடர்ந்து முன்னிறுத்தும் முயற்சி..
//அதாவது பிற்படுத்தப்பட்டோருக்கு என 27 சதவீதம் ஒதுக்கப்பட்டும் வெறும் 3.9 சதவீதம் பேர் தான் பணிஅமர்த்தப்பட்டுள்ளனர்//
பதிவுக்கு நன்றி.
Thekkikattan has left a new comment on your post "இரண்டு இலட்சத்திற்கு 6000":
புள்ளியியல் திடிக்கிடும் வகையில் அமைந்துள்ளது, siva!!
ஏனுங்க இவ்வளவு அன்னீய முதலீட்டுப் பணத்த surplusஆ வைச்சிக்கிட்டு இலவச ட்டிவி, இலவச சோறுன்னு இன்னமும் பிச்சை எடுக்க வைக்கிறாங்க... காட்டுத்தனமா இருக்குங்க.
அப்போ இதுவரை இருந்துவரும் இடப்பங்கீடுகள் எல்லாமே - கீழ்நிலையிலிருந்து UPSC - IAS , IPS -வரை இதே கண்கட்டு வித்தைதானா? யாரிடம் போய் இதைக் கேட்டு அழ?
தங்கமணி அவர்களே,
உண்மைதான்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
வருகைக்கு நன்றி.
தங்கமணி அவர்களே,
உண்மைதான்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
வருகைக்கு நன்றி.
புள்ளியியல் திடிக்கிடும் வகையில் அமைந்துள்ளது.
ஏனுங்க இவ்வளவு அன்னீய முதலீட்டுப் பணத்த surplusஆ வைச்சிக்கிட்டு இலவச ட்டிவி, இலவச சோறுன்னு இன்னமும் பிச்சை எடுக்க வைக்கிறாங்க... காட்டுத்தனமா இருக்குங்க.
பிற்படுத்தப்பட்டோர் மேலே வராமல் தடுக்க, "மற்ற அனைத்து" சாதியினரும் முனைந்து நின்ரு செயல்படுகின்றனர், "சாதி வித்தியாசம் இல்லாமல் இதில்" என்பதை வெளிக்காட்டியதற்கு மிக்க நன்றி, சிபா!
அப்பா! இனியாவது ஒரு குறிப்பிட்ட சாதியைத் திட்டி, தூற்றி, 'மற்றவர்கள்' மறைந்து கொள்ள முடியாமல் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டீர்கள்1
மிக்க நன்றி!!
This comment has been removed by a blog administrator.
தெகா ,
உண்மையில் இந்த புள்ளியில் தெரியாமல்தான் கிண்று தவளையாக உள்ளோம்..
வீறுண்டு எழுந்தால் தான் இந்தப் பிரச்சனைக்கு ஒரளவு தீர்வு காண முடியும்.
//அதாவது பிற்படுத்தப்பட்டோருக்கு என 27 சதவீதம் ஒதுக்கப்பட்டும் வெறும் 3.9 சதவீதம் பேர் தான் பணிஅமர்த்தப்பட்டுள்ளனர். //
எங்கேயோ தப்பு நடக்குது...!
எனக்கு தெரிந்த தலித்துக்களுக்கு தங்களுக்கு எங்கெல்லாம் இட ஒதுக்கீடு இருக்கிறது, அவற்றை அடைய தாங்கள் என்ன படிக்கவேண்டும் என்று அறியாத நிலையில் தான் இருக்கிறார்கள்.
சிவபாலன்
அரசு வேலைகள் பலவற்றுக்கு ஆளெடுப்பதை பல வருடமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.தமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களாக எந்த அரசு வேலைக்கும் ஆள் எடுக்கவில்லை.மத்தியிலும் அப்படித்தான் என நினைக்கிரேன்.
பிற்படுத்தப்பட்டோருக்கான இடம் மட்டுமின்றி தாழ்த்தப்பட்டோர்,பொதுப்பிரிவினர் ஆகிய அனைத்து பிரிவிலும் பல்லாயிரக்கணக்கான இடங்கள் நிரப்பப்படாமலும்,ஆளெடுக்காமலும் உள்லன என நினைக்கிரேன்.
பொதுப்பிரிவிலும்,தாழ்த்தப்பட்ட பிரிவிலும் மொத்த சதவிகிதம் நிரப்பப்படாத வேலைகள் எவ்வளவு என கனக்கிட்டு அதை பிற்படுத்தப்பட்டோருக்கான் சதவிகிதத்துடன் ஒப்பிட்டால் நடந்தது என்ன என ஒரு தெளிவு கிடைக்கும்.
அந்த புள்ளி விவரங்கள் தமிழ்முரசில் தந்துள்லனரா?
தருமி அய்யா,
இந்த கண்கட்டி வித்தையில் தான் நாம் கட்டுண்டு கிடக்கிறோம். கட்டு அவிழ்த்துவிடத்தான் ஆளில்லை. ம்ம்ம்ம்ம்
Babble,
யாரும் இதைப் பற்றி பேச மாட்டார்கள்.குறிப்பாக ஊடகங்கள். காரணம் என்னவென்று உங்களுக்கே தெரியும்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
SK அய்யா,
இதில் ஒரு குறிப்பிட்ட சாதி என்பதை விட அனைத்து உயர் சாதியினரும் மற்றும் ஆதிக்க சக்திகளும் இதை தடுக்கின்றன..
மேலும் அந்த உயர் அதிகாரியின் கூற்றும் ஓரளவு சரியே
GK,
நீங்கள் சொல்வதில் நிச்சயம் உண்மையுள்ளது. அவர்கள் தங்களுக்கான வழிகளை உணர்ந்து மேலே வர வேண்டும்.
அதே போல் இந்த ஆதிக்க சக்திகளும் திருந்த வேண்டும். திருந்தவில்லை என்றால் அரசாங்கம் திருந்த வேண்டும்.
செல்வன் சார்,
நீங்க சொல்லும் கருத்தில் சில உண்மைகள் நிச்சயம் இருக்கிறது.
அதே போல் ஆதிக்க சக்திகளும் தனது பங்கிற்கு செய்ய வேண்டியதை செய்து கொண்டுதான் இருக்கிறது.
நீங்கள் கேட்கும் புள்ளியியல் தமிழ் முரசில் இல்லை. வேறு இடங்களிலும் தேடினேன். கிடைக்க வில்லை.
யாரேனும் தெரிந்தால் கூறுங்கள்.
பிளாக்கர் சொதப்புகிறது.
//Sivabalan said...
பிளாக்கர் சொதப்புகிறது.
//
இந்த சதியில் பிளாக்கரும் சேர்ந்து கொண்டதுதான் கொடுமை !
:)
Reservation is applicable for jobs advertised after 1993 only.So unless that break up is given
it is difficult to arrive at a
convincing conclusion.The Daily
Pioneer published a report based
on a report by Minsitry of Social
Justice.That gives data on SCs
also.Unless one sees the report by
the ministry it is difficult to
get a clear picture.
Mr. Ravi Srinivas,
நீங்கள் சொல்லும் கருத்து ஏற்புடையதாகினும், ஆரசாங்கம் இந்த விசயத்தில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்பதே...
இந்நிலை தொடர்ந்தால் உண்மையான் சமூக நீதி அடைய முடியாது.
எனினும் நீங்கள் சொல்லும் புள்ளிகள் மூலம் நிச்சயம் தெளிவான ஒரு முடிவுக்கு வரமுடியும்..
Post a Comment
<< Home