Monday, September 04, 2006

முதலைகள் "ஸ்டீவ் இர்வின்" மரனம்



இவரை பல சேனல்களில் முதலைகளுடன் கண்டு களித்திருப்பீர்கள். அவர் இன்று(04-09-06) கடலில் விச மீன் தாக்கி உயிரிழந்தார்..

பிறந்த நாள்: 22-Feb-1962
பிறந்த இடம்: விக்டொரியா, ஆஸ்திரேலியா

இவர் பல ஊடகங்களிக் வந்துள்ளார். நான் இரசிக்கும் சில நிகழ்ச்சிகளில் இவரதும் ஒன்று..

இவரைப் பற்றி அறிய " இங்கே " செல்லுங்கள்..




26 Comments:

Blogger Sivabalan said...

வருத்தமாக இருக்கிறது..

அவரை மரியாதை செய்யவே இப்பதிவு.

September 04, 2006 2:48 PM  
Blogger Kanags said...

பதிவுக்கு நன்றிகள். அவரது நிகழ்ச்சிகளை வாராவாரம் தொலைக்காட்சியில் பார்த்து வியந்திருக்கிறேன். அவரது இழப்பு தொலைக்காட்சி இரசிகர்களுக்கு பெரும் இழப்பு. அவரை பற்றிய கட்டுரை தமிழ் விக்கிபீடியாவில் எழுதியுள்ளேன். பார்க்க:
ஸ்டீவ் இர்வின்.

September 04, 2006 3:37 PM  
Blogger Kanags said...

பதிவுக்கு நன்றிகள். அவரது நிகழ்ச்சிகளை வாராவாரம் தொலைக்காட்சியில் பார்த்து வியந்திருக்கிறேன். அவரது இழப்பு தொலைக்காட்சி இரசிகர்களுக்கு பெரும் இழப்பு. அவரை பற்றிய கட்டுரை தமிழ் விக்கிபீடியாவில் எழுதியுள்ளேன். பார்க்க:
ஸ்டீவ் இர்வின்.

September 04, 2006 3:37 PM  
Blogger துளசி கோபால் said...

பதிவுக்கு நன்றி சிவபாலன். நான் போடலாமுன்னு இருந்தேன்.
வயசும் 44தான். ரொம்ப நல்ல மனிதர். ஆஸ்தராலியாவில் அரசாங்க மரியாதையுடன்
சவ அடக்கமுன்னு சொல்லி இருக்காங்க.

8 வயசும் 5 வயசுமாப் புள்ளைங்க. இங்கே நியூஸிக்கும் பலதடவை வந்துருக்கார்.
தங்கமானவர். 'டவுன் டு எர்த்'ன்னு சொல்ற தன்னடக்கம். விதின்னு சொல்றது இதைத்தான்.
பெரிய முதலைகளோடு இருந்தவர், சின்ன 'ஸ்டிங்ரே' யினால் செத்தார் பாருங்க.(-:

அவர் குடும்பத்தினருக்கு மனமார்ந்த அனுதாபங்கள்.

September 04, 2006 3:42 PM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிவபாலன்!
சிறந்த ஒரு விலங்கியல் ஆய்வாளர்; இவர் நிகழ்சிகளை நானும் மிக விரும்பிப் பார்ப்பேன். இச் சொற்ப்ப வயதில் இவர் மரணம். விலங்கியல் உலகுக்குப் பேரிழப்பே! இவர் 04-09- 2006 அன்றே! இறந்திருப்பார். 04- 10- 2006 என்பது தவறு.
யோகன் பாரிஸ்

September 04, 2006 3:48 PM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிவபாலன்!
சிறந்த ஒரு விலங்கியல் ஆய்வாளர்; இவர் நிகழ்சிகளை நானும் மிக விரும்பிப் பார்ப்பேன். இச் சொற்ப்ப வயதில் இவர் மரணம். விலங்கியல் உலகுக்குப் பேரிழப்பே! இவர் 04-09- 2006 அன்றே! இறந்திருப்பார். 04- 10- 2006 என்பது தவறு.
யோகன் பாரிஸ்

September 04, 2006 3:48 PM  
Blogger Unknown said...

வருத்தமாக இருக்கிறது சிவபாலன்
அவரது ஆத்மா சாந்தி அடைவதாக

September 04, 2006 4:22 PM  
Blogger கறுப்பி said...

நான் ஸ்ரீவின் பல நிகழ்;ச்சிகளை எனது பிள்ளைகளுடன் சேர்ந்து பார்த்திருக்கின்றேன். அவர் ஆங்கிலம் பேசுவது கேட்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். எனது கடைசி மகனுக்கு மிருகங்கள் பூச்சி புழுக்கள் என்றால் நல்ல விருப்பம். நான் அவனை ஸ்ரீவ் போல அந்தத் துறையில் படித்து வா என்று கூறுவது வழக்கம். எத்தனையோ பயங்கரமான விலங்குகளுடன் நெருங்கி பல நிகழ்வுகளைத் தந்தவர் இப்படி ஒரு மீன் இனத்தால் இறக்க நேர்ந்தது மிகவும் வேதனையான விடையமே. இன்று காலை செய்தியைப் பார்த்து விட்டு மகனை அழைத்துக் கூறினேன். மிகவும் கவலையாக இருக்கிறது என்று கூறினான். எனக்கும் மிகவும் வேதனையாகவே இருந்தது. இரு சிறு குழந்தைகள் வேறு.

September 04, 2006 4:40 PM  
Blogger Sivabalan said...

Kanags,

நிச்சயம் அவரது இழப்பு பெரிய இழப்பே..

தமிழ் விக்கிபீடியாவில் தாங்கள் எழுதியுள்ளதைப் பார்த்தேன்..நல்ல விசயம்..

September 04, 2006 6:27 PM  
Blogger Sivabalan said...

துளசி மேடம்,

அவரது மரனத்தை செய்தியாக படித்தவுடன் வருந்தினேன்..

நீங்களும் பதிவிட்டால் நிச்சயம் அவருக்கு மரியாதை செய்ததாகும்.

September 04, 2006 6:30 PM  
Blogger Sivabalan said...

Johan-Paris,

// இவர் மரணம். விலங்கியல் உலகுக்குப் பேரிழப்பே //

உணமைதான்..

பிழைதிருத்தம் செய்துவிட்டேன். சுட்டிக்காடியமைக்கு நன்றி.

September 04, 2006 6:32 PM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
பதிவுக்கு மிக்க நன்றி. உண்மையிலேயே மிகவும் வருத்தமான செய்திதான். அடிக்கடி இவரை தொலைக்காட்சியில் பார்த்து பரீட்சயமானதாலோ என்னவோ, ஏதோ குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற உணர்வு. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

September 04, 2006 6:35 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

சிபா...!
ஸ்டீவ் வை ரசிப்பவர்களில் நானும் ஒருவன். அவருடைய இழப்பு அதிர்ச்சியாக இருக்கிறது. திருக்கை மீன் (Stingray) கடித்து இறந்ததாக டிவியில் சொன்னார்கள்.

September 04, 2006 6:39 PM  
Blogger Sivabalan said...

செல்வன் சார்,

நானும் வருத்தப்பட்டேன்.

September 04, 2006 8:20 PM  
Blogger Sivabalan said...

கறுப்பி அவர்களே,

இவரது நிகழ்ச்சியை எனது மகளும் இரசித்துப்பார்பாள்..

பெரிய இழப்பே..

September 04, 2006 8:23 PM  
Blogger Sivabalan said...

வெற்றி

அதிர்ச்சியும் வருத்தமும் தரக்கூடிய செய்திதான்..

September 04, 2006 8:28 PM  
Blogger RS said...

மிகவும் வருத்தமான செய்தி. அவரது ஆன்மா சாந்தியடைவதாக.

September 04, 2006 8:29 PM  
Blogger Sivabalan said...

GK,

கடலுக்கு அடியில் சென்று ஒரு டாக்குமென்ட்ரி படமாக்கிக்கொண்டிருந்தபோது விஷம் உள்ள ஸ்டிங்ரே வகை மீன் அவரது மார்பில் தாக்கி இருக்கிறது. தகவல் அறிந்த மருத்துவ குழு உடனடியாக ஹெலிகாப்டரில் அந்த இடத்திற்கு வருவதற்குள் அவர் இறந்து விட்டார்.

September 04, 2006 9:34 PM  
Blogger Sivabalan said...

சுந்தர் ராம்ஸ்,

உண்மைதான். மிகவும் வருத்தமான செய்தி.

September 04, 2006 9:37 PM  
Blogger Sivabalan said...

Update:-

புகைப்படம் - ஸ்டிங்ரே மீன்

நன்றி: தினமலர்

September 05, 2006 7:25 AM  
Blogger Thekkikattan|தெகா said...

நான் சரியா நியூஸ் பார்க்கலை, விசயம் தெரியாம பேச்சே. அடடே, ஓடி ஓடி உழைச்சாவர ஆச்சே...

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பி.கு: வன உயிரினங்களை மிகவும் நண்பர்களாக பாகிக்க நினைத்து அவைகளின் பவுண்டரிகளை உடைப்பது மிகவும் ஆபத்தானது என்பதனை இந்த சம்பவம் மீண்டும் எனக்கு உணர்த்துகிறது.

இது போலவே அலாஸ்காவில் கரடிகளின் மத்தியில் வாழ்ந்து மரணமெய்தினார் ஒருவர். பிறகு, சுறா மீன்களுக்கு டூரிஸ்டுகளை கடலுக்குள் இட்டுச் சென்று சுறாக்களுக்கு உணவு வழங்க விடுவது போன்றவைகள் மிகவும் வருத்தத்துக்குரியது (ஆபத்தானதும் கூட).

September 05, 2006 2:18 PM  
Blogger Sivabalan said...

Blogger Probs- Just Test Comment..

September 05, 2006 2:25 PM  
Blogger Sivabalan said...

தெகா,

நீங்கள் சொல்லும் விசயம் சற்று சிந்திக வேண்டிய விசயம் தான்..

எனினும் இவருடைய இழப்பு சோகமான விசயமே..

September 06, 2006 8:45 PM  
Blogger Sivabalan said...

Anger,

தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

இந்த தகவல் அவருடைய குடும்ப பாங்கை எடுத்து காட்டுகிறது.

September 06, 2006 8:48 PM  
Blogger Jay said...

பாவம் அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்....

September 14, 2006 9:03 PM  
Blogger Sivabalan said...

மயூரேசன்,

ஆமாம் பாவம்தான்.. வருத்தமான விசயமே..

September 15, 2006 8:16 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv