Tuesday, September 12, 2006

டாக்டர் அம்பேத்கரின் சிந்தனைத் துளிகள்..






1. நான் தீண்டத்தகாத சமூகத்தில் பிறந்தேன். அந்தச் சமூகத்திற்காகவே சாவேன். என்னுடைய சமூகத்தின் நலனே வேறு எதைக் காட்டிலும் எனக்கு உயர்ந்ததாகும்.


2. ஜனநாயகம் அரசாங்கத்தைவிட மேலானது. அது, ஒன்றிணைந்து வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது. ஒருங்கிணைந்த வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்களே ஒரு சமூகத்தை உருவாக்குகின்றனர். இத்தகைய சமூக உறவு முறைகளில்தான் ஜனநாயகத்தின் வேர்கள் கண்டெடுக்கப்பட வேண்டும்.


3. ஜனநாயகம் என்பது, சமத்துவத்திற்கு மற்றொரு பெயர். நாடாளுமன்ற ஜனநாயகம் சுதந்திர தாகத்தை, விழைவைக் கிளர்த்தி விட்டு விட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சமத்துவத்திற்கு ஆதரவாக அது ஒரு போதும் தலையசைத்ததுகூட இல்லை. சமத்துவத்தின் முக்கியத்துவத்தை அது உணரத் தவறிவிட்டது. அதுமட்டுமல்ல, சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும்கூட, அது எத்தகைய முயற்சியையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதன் விளைவு, சுதந்திரம் சமத்துவத்தை விழுங்கி விட்டது. அதுமட்டுமல்ல, பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் தோன்றவும் வழிவகுத்து விட்டது.


4. சமூகம்' இயற்கையாகவே தோன்றியதாக நாம் நினைக்கிறோம். சமூக ஒற்றுமையை முன்னெடுக்கும் தன்மைகள் பெருமைபடத்தக்கவையாகும். இது, சமூக நோக்குடனும், தொண்டு மனப்பான்மையுடனும், பொது வாழ்வில் நேர்மையுடனும், ஒருவருக்கொருவர் இரக்கத்துடனும், ஒத்துழைப்புடனும் வாழும் தன்மைகளைக் கொண்டதாகும்.


5. வகுப்பு சித்தாந்தம், வகுப்பு நலன்கள், வகுப்புப் பிரச்சினைகள், வகுப்பு மோதல்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் இயக்கம் தனக்கு சாவுமணி அடிக்கும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு உணர்ந்துள்ளது. அடிமை வகுப்புகளை திசைதிருப்புவதற்கும், அவற்றை ஏமாற்றுவதற்கும் மிகச் சிறந்த வழி தேசிய உணர்வையும், தேச ஒற்றுமையையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு அறியும்.


6. இந்து சமுதாயத்தில் அடிமட்டத்திலுள்ளவர்கள் கல்வி கற்பது கடுமையான குற்றமாக கருதப்பட்டது. இதை மீறி கல்வி கற்பவர்கள் காட்டுமிராண்டித்தனமான, மனிதத் தன்மையற்ற, குரூரமான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்: அவர்களது நாக்குகள் துண்டிக்கப்பட்டன; அவர்களது செவிகளில் காய்ச்சிய ஈயம் ஊற்றப்பட்டது


7. கல்வி சாதியை ஒழித்து விடுமா? இதற்குரிய பதில் ‘ஆம்'; அதே நேரத்தில் ‘இல்லை'! இன்று வழங்கப்படும் கல்வியால், சாதியை ஒன்றும் செய்து விட முடியாது. அது எப்போதும் போலவே நிலைப் பெற்றிருக்கும். மேல் சாதியில் இருக்கும் பெரும்பான்மையினர் மெத்தப் படித்திருக்கிறார்கள். இருப்பினும், ஒருவர்கூட, தான் சாதிக்கு எதிராக இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை. உண்மையில்,படித்த நபர், கல்வி கற்காமல் இருப்பதைவிட, அவர் கல்வி கற்ற பிறகு சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே அதிகம் விரும்புகிறார். ஏனெனில், சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ள, கல்வி கூடுதல் நலனை அவருக்கு அளிக்கிறது. இதன் மூலம் அவர் பெரிய பதவிகளைப் பெறும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, கல்வி சாதியை ஒழிக்க உதவிகரமாக இல்லை.



8. தற்பொழுதுள்ள கொள்கையின் குறைபாடு என்னவெனில், கல்வி பரவலாக அளிக்கப்படுகிறது; ஆனால், இந்திய சமூகத்தில் எந்தப் பிரிவினருக்கு கல்வி அளிக்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு கல்வி வழங்கப்படவில்லை. சாதி அமைப்பு முறையை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ள விரும்பும் இந்திய சமூகத்தின் சுயநலவாதிகளுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு பலப்படுத்தப்படும். இதற்கு மாறாக, இந்திய சமூகத்தின் சாதி அமைப்பு முறையை நிர்மூலமாக்க நினைக்கும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு கண்டிப்பாக ஒழிந்துவிடும்.



9. இந்திய மக்கள் கொண்டாட்டங்களை அதிகம் விரும்பினாலும், புத்தர் பிறந்த நாளை அவர்கள் இதே உணர்வோடு ஏன் கொண்டாடுவதில்லை. புத்தருடைய காலத்தில்,1. வேதங்கள் புனிதத் தன்மையுடையதாகவும், என்றென்றும் மாறாததாகவும் கருதப்பட்டது 2. யாகம் 3. சதுர்வர்ண தர்மம் (நான்கு வர்ணங்களை அடிப்படையாகக் கொண்ட வர்ணாசிரம தர்மம்). வேதத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் அது அறிவுக்கு ஏற்புடையதா இல்லையா என்பதெல்லாம் பொருட்டல்ல அது தவறே இல்லாதது. வேதங்கள் புனிதமானவை என்பதை புத்தர் ஏற்க மறுத்து, அதை முதல் விலங்காகக் கருதினார். வேதங்களை ஏற்பதற்குப் பதில், அதை மறுத்து, அறிவை அடிப்படையாகக் கொண்ட உண்மையை ஒப்புக் கொள்வதே புத்தரின் நிலைப்பாடாக இருந்தது.



10. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தற்கால சமூக, அரசாங்க ஒழுங்கமைப்பு குறித்த அடிப்படையான செயல்முறை ஆவணங்களை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.



22 Comments:

Blogger Sivabalan said...

டாக்டர் அம்பேத்கர்

பிறந்தது: 14 ஏப்ரல் 1891

மறைந்தது: 6 டிசம்பர் 1956

September 12, 2006 9:22 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

//சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ள, கல்வி கூடுதல் நலனை அவருக்கு அளிக்கிறது. இதன் மூலம் அவர் பெரிய பதவிகளைப் பெறும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, கல்வி சாதியை ஒழிக்க உதவிகரமாக இல்லை.
//

சிபா...!

இது நிதர்சன உண்மை !

September 12, 2006 9:51 PM  
Blogger விழிப்பு said...

//வகுப்பு சித்தாந்தம், வகுப்பு நலன்கள், வகுப்புப் பிரச்சினைகள், வகுப்பு மோதல்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் இயக்கம் தனக்கு சாவுமணி அடிக்கும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு உணர்ந்துள்ளது. அடிமை வகுப்புகளை திசைதிருப்புவதற்கும், அவற்றை ஏமாற்றுவதற்கும் மிகச் சிறந்த வழி தேசிய உணர்வையும், தேச ஒற்றுமையையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு அறியும்.//

சத்தியமான வரிகள். 50 வருடம் கழித்து இப்பொழுதும் இந்நிலை மாறவில்லையே. :-(

September 12, 2006 11:10 PM  
Blogger Sivabalan said...

GK,

உண்மையிலும் உண்மை..

வருகைக்கு நன்றி

September 13, 2006 6:35 AM  
Blogger Sivabalan said...

விழிப்பு,

நீங்கள் சொல்வது உண்மைதான்.

வருகைக்கு நன்றி.

September 13, 2006 7:40 AM  
Blogger Sivabalan said...

வணக்கத்துடன்,

வருகைக்கு நன்றி.

September 13, 2006 7:41 AM  
Blogger குழலி / Kuzhali said...

பத்திரிக்கைகளை அப்படியே நம்பியும், வெகுசன ஊடகங்களால் மூளைச்சலவையும் செய்யப்பட்டிருந்த காலம் வெகுசன ஊடக மதிப்பீடுகளையும் நம்பிய காலகட்டத்தில் அம்பேத்கார் அவர்களின் சிலையின் கீழ் எழுதப்பட்டிருந்த வாசகம்.

என்னை விட என் நாட்டு நலன் முக்கியம்

என் நாட்டைவிட என் சமூக நலன் முக்கியம்

புரட்சி பாரதம் கட்சியினர் வைத்த சிலை என நினைக்கிறேன், சென்னையின் புறநகர் பகுதியில் பார்த்திருந்தேன், அப்போது நான் அர்ஜீனாக இருந்தவன், அதாங்க தேசபக்தி அப்படியே உடம்பெல்லாம் பீறிடும், பேருந்தில் போற வாக்கில் இதை படித்தப்போது அப்படியே தேசபக்தி பீறிட்டு என்ன தலைவர் இவர் நாட்டை விட என் சமூக நலன் பெரிது என்கிறார் என்று கோபமும் ஆத்திரமும் வந்தது, நாளாக நாளாக திருமா , அம்பேத்கார் , பெரியார் ஆகியோர் புரிய ஆரம்பித்தவுடன் அன்று எனக்கு அம்பேத்கார் மீது வந்த கோபம் எத்தனை தவறானது என்று புரிந்தது.

அம்பேத்காரின் பொன்மொழிகளை இட்டதற்கு நன்றி ஆனால் சூழலில் பெரிய முன்னேற்றமில்லாமல் அப்படியே இருக்கிறது என்ற வருத்தமும் உள்ளது.

நன்றி

September 13, 2006 7:44 AM  
Blogger Sivabalan said...

டாக்டர் அம்பேத்கர் பற்றி மேலும் சில தகவல்கள் - 1

பரோடா மாகாராஜாவின் உதவித் தொகையுடன் அமெரிக்காவில் படிக்க ஜீலை 1913 டாக்டர் அம்பேத்கர் சென்றார். அவர் நியுயார்க நகரில் இறங்கியவுடன் அவர் மனதில் தொன்றிய எண்ணம் " இங்கு சமூக கட்டுப்பாடுகள் இல்லை.. சுதந்திரமாக இருக்கலாம். நான் நினைப்பதை செய்ய முடியும். நான் இங்கே தீண்டதாகதவன் இல்லை"

September 13, 2006 7:58 AM  
Blogger Sivabalan said...

குழலி,

இந்த வெகு சன பத்திரிக்கைகளை நம்பவதில் நானும் உங்களைப் போலத்தான்.. நிறைய ஏமாந்திருக்கிறேன்..

உணமைதான், அந்த வாசகங்கள் அவருடைய போராட்டத்தை குறிக்கும் வாசகங்கள்...

அதுவும் ஆதிக்க சக்திக்கு எதிராக போராடுவது என்பது மிகப் பெரிய சாதனையே..

நீங்கள் சொல்வதுபோல் நிலைமை இன்னும் மாறாமல் இருப்பதுதான் வருந்த கூடிய ஒன்று..

வருகைக்கு நன்றி.

September 13, 2006 9:09 AM  
Blogger Sivabalan said...

இந்தப் பதிவுக்கு கூட ஒரு மிருகம் வந்து NEGATIVE ஓட்டு போட்டுவிட்டு சென்றிருக்கிறது..

இதிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள் நாம் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு என்று..

முதலில் 4 OUT OF 4 என்றிருந்த்து.. இப்பொழுது 3 OUT 5 என்றிருக்கிறது..

ம்ம்ம்ம்ம்

September 13, 2006 9:16 AM  
Blogger Thekkikattan|தெகா said...

சிவா,

# 7 உண்மையோ உண்மை.

# 9. இந்திய மக்கள் கொண்டாட்டங்களை அதிகம் விரும்பினாலும், புத்தர் பிறந்த நாளை அவர்கள் இதே உணர்வோடு ஏன் கொண்டாடுவதில்லை.//

ஆமா, ஏன் சிவா அப்படி???

September 13, 2006 1:54 PM  
Blogger Sivabalan said...

தெகா,

அந்த #9 குறிப்பிட்டுள்ளதுதான் புத்தரின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு யாருக்கு எதிரானது என்பது உங்களுக்கு தெரியும்..ஆம் ஆதிக்க சக்திகளுக்கும் உயர்சாதிக்கும் எதிரானது..

இது போததா புத்த மதத்தை நாட்டை விட்டு துரத்த..

என்னமோ போங்க..

இங்கே போய் பாருங்க நிறைய விசயம் இருக்கு..

http://www.keetru.com/dalithmurasu/sep05/dalith.html

அதைப் படித்து முடித்தவுடன் மனம் கனமாகிவிடும்........ம்ம்ம்ம்ம்ம்...


வருகைக்கு நன்றி

September 13, 2006 7:38 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

//Sivabalan said...
இந்தப் பதிவுக்கு கூட ஒரு மிருகம் வந்து NEGATIVE ஓட்டு போட்டுவிட்டு சென்றிருக்கிறது..

இதிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள் நாம் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு என்று..

முதலில் 4 OUT OF 4 என்றிருந்த்து.. இப்பொழுது 3 OUT 5 என்றிருக்கிறது..

ம்ம்ம்ம்ம் //

சிபா...!
மிருகம் என்று சொல்லி ஏன் மிருகத்தை கேவலப்படுத்துகிறீர்கள் !
மிருகங்கள் கேவலமான செயல்கள் செய்வதில்லை. இது ஏதோ எங்கும் ஒட்டாத வேற்று கிரகவாசியின் செயல் போல் இருக்கிறது.
:)

September 13, 2006 8:23 PM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
நல்லதொரு சிந்தனைத் தொகுப்பைப் பதிவிலிட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி. சிந்தனைகள் 5, 7, 8 ஆகியவற்றை இன்றும் நாம் கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிறோம்.

September 13, 2006 11:50 PM  
Blogger Sivabalan said...

GK,

நல்லா சொன்னீங்க..

என்னமோ போங்க..

இப்பவே இப்படி என்றால் அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் அதும் அவருடைய இளைமைப் பருவம்..ம்ம்ம்ம்ம்

September 14, 2006 6:38 AM  
Blogger Sivabalan said...

டாக்டர் அம்பேத்கர் பற்றி மேலும் சில தகவல்கள் - 2

அம்பேத்கர் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைத்தார். 1915 அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டே முடித்தார். பிறகு சட்டம் பயில இங்கிலாந்து சென்றார். ஆனால் பரோடா திவானால் அவசரமாக இந்தியாவிற்கு அழைக்கப்பட்டார். பரோடாவில் தங்க எந்த விடுதியிலும் தீண்டதகாதவர் என சொல்லி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

திவானை பார்க்க சென்ற போது அலுவலக வாயிலில் உள்ள கார்பெட் நீக்கப் பட்டது..தீண்டதகாதவர் என சொல்லி ..

படம் கொடுத்திருக்கிறேன்.. பார்க்கவும்..

September 14, 2006 6:50 AM  
Blogger Sivabalan said...

Upload - படம் - திவானை பார்க்க சென்ற போது அலுவலக வாயிலில் உள்ள கார்பெட் நீக்கப் பட்டது..தீண்டதகாதவர் என சொல்லி ..

September 14, 2006 6:55 AM  
Blogger Sivabalan said...

வெற்றி

இன்னும் நிலைமை மாறவில்லை என்பது வருத்தமான விசயமே...


வருகைக்கு நன்றி.

September 14, 2006 8:25 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

//Sivabalan said...
வெற்றி
இன்னும் நிலைமை மாறவில்லை என்பது வருத்தமான விசயமே...
வருகைக்கு நன்றி. //

தற்காலத்திலும் நந்தனாரை தீண்டத்தகாதவன், சூத்திரன் என்று பெருமள் பக்கத்தில் நந்தனார் சிலையை வைக்க கூட அனுமதிக்கவில்லை என்று அக்னிஹோத்ரம் ராமானுஜம் தாத்தாச்சாரியார் எழுதியதை படித்தேன்...!

நீங்கள் சொல்வது சரியே... நிலைமை மாறாது ...! :(

September 14, 2006 9:42 AM  
Blogger Sivabalan said...

GK,

தகவலைப் பரிமாரிக் கொண்டமைக்கு நன்றி

மீன்டும் வருகைதந்தமைக்கு நன்றி

September 14, 2006 12:34 PM  
Blogger Sivabalan said...

நன்றி: தலித் முரசு

http://www.keetru.com/dalithmurasu/index.html

September 14, 2006 12:35 PM  
Blogger Sivabalan said...

நன்றி: http://www.ambedkar.org/

September 14, 2006 12:35 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv