ஏலோ ஏலோ காதல் வந்தால்...
ஏலோ ஏலோ காதல் வந்தால் ஏலோ ஏலோ
காலை மாலை கனவுகள் வருமே ஏலோ ஏலோ
கண்ணும் கண்ணும் ஏலோ ஏலோ
கையும் கையும் ஏலோ
உரச உரச ஏலோ ஏலோ
மனசுக்கள்ள ஏலோ ஏலோ
உசுரக்குள்ள ஏக்கம் ஏலோ
மயக்கம் என்ன ஏலோ ஏலோ
காரணம்தான் காதல்னாளோ
ஏலோ ஏலோ காதல் வந்தால் ஏலோ ஏலோ
காலை மாலை கனவுகள் வருமே ஏலோ ஏலோ
காதல் தென்றல் வருடும் போது கண்கள் சிவந்தேனே
பச்சைநீரில் குளிக்கும் போது பற்றி எரிந்தேனே
காதல் தொல்லையாலே கடன்காரியானேன்
பதில் ஒன்று சொன்னால் பணக்காரியாவேன்
தொண்டை குளிக்குள்ளே சிக்கிக் கொண்ட முள்ளாய்
சொல்லத்தவித்தேன்
ஏலோ ஏலோ காதல் வந்தால் ஏலோ ஏலோ
காலை மாலை கனவுகள் வருமே ஏலோ ஏலோ
காற்றை மிதித்து வானத்திலேறி மேகம் உடைப்பேனே
நிலவை மெல்ல உருட்டி வந்து நிலத்தில் பதிப்பேனே
அதிகாலை பூவாய் அழகாக ஆனேன்
அலைபோல நான் தான் அடங்காமல் போனேன்
அச்சம் மடம் நானம் அத்தனையும் காணம்
உன்னை கண்டதால்
ஏலோ ஏலோ காதல் வந்தால் ஏலோ ஏலோ
காலை மாலை கனவுகள் வருமே ஏலோ ஏலோ
படம் : கொக்கி
இசை: தினா
பாடல்: கபிலன்
குரல்: Madhu Sree
இயக்கம்: பிரபு சாலமன்
வருடம்: 2006
"பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்..."
தினா தொலைக்காட்சி தொடர்களில் இசை அமைக்க ஆரம்பித்து பிறகு திரைப் படங்களில் இசை அமைக்ககிறார்.
நல்ல நல்ல பாடல்களை தந்துள்ளார் இந்த வளர்ந்துவரும் இசை அமைப்பாளர்.
16 Comments:
தினா - வளர்ந்துவரும் இசை அமைப்பாளர். அவரின் இசையை மரியாதை செய்யவே இப்பதிவு.
//Sivabalan said...
தினா - வளர்ந்துவரும் இசை அமைப்பாளர்.
//
சிபா...!
படத்தைப் பார்ர்கும் போது தோனி மாதிரி அவருக்கு முடிகூட நன்றாக வளர்ந்து வருவதாக தெரிகிறது !
:)
GK,
தினாவின் இசை கூட தோனியின் ஆட்டம் போல் அருமையாக இருக்கும்.
வருகைக்கு நன்றி.
கண்டிப்பாக வாழ்த்தலாம்!
ஆனால், மரியாதை செய்யும் அளவிற்கு அவர் ஒன்றும் இன்னும் அவ்வளவு தரமான பாடல்களைக் கொடுக்கவில்லையே!
அன்புத் தோழி தயா,
வருகைக்கு நன்றி
SK அய்யா
கண்டிப்பாகா நெகடிவ் கமண்ட்தான் போட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு கமண்ட் போட்ட மாதிரி இருக்கிறது. Ha Ha Ha..
வருகைக்கு நன்றி
சிவா,
இன்னும் நான் பாட்ட கேட்கலை. இருந்தாலும் அந்த பொண்ணுங்க ஃபோட்டோ நல்லா இருக்கு.
பார்த்து யோகா செய்யச் சொல்லுங்க, இடுப்பு கழண்டு விழுந்திடப் போகுது ;-)
தெகா,
SK அய்யா என்னடான்னா அப்படி சொல்லறாரு, நீங்க யோகா பண்ண சொல்லறீங்க.. நம்ம பதிவு போட்ட நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்.. Ha Ha Ha...
தெகா, பாட்டை கேட்டுப் பாருங்க.. நல்லாயிருக்கும்..
வருகைக்கு மிக்க நன்றி.
சிவபாலன்,
பாடல் அறிமுகத்திற்கு நன்றி. இதுவரை நான் இப்பாடலைக் கேட்கவில்லை. நான் புதிய பாடல்கள் கேட்பது மிகக் குறைவு. இருப்பினும் musicindiaonline.com ல் இப்பாடலைக் கேட்டுவிட்டு என் கருத்தைச் சொல்கிறேன்.
அன்பின் சிவபாலன்,
இப் பாடலில் வரும் "காதல் தொல்லையாலே கடன்காரியானேன் " எனும் வரிக்கு என்ன பொருள்?
"முதல் கோணல் முற்றும் கோணல்"னு சொல்வாங்களே அதுமாதிரி இவரோட "மன்மதராசா" கேட்ட நொடியிலருந்து எனக்கு பிடிக்கலை இவரை:-(
வெற்றி
பாலைக் கேட்டீர்களா!! நல்லா இருந்துதா!!
புது பாடல்களையும் கேட்க வேண்டும் என்பதற்காகவே இப்பதிவு.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் புது பாடல் கேளுங்க..
புது பாடல் HIT LIST வேண்டுமெறாலும் தருகிறேன்..உங்களுக்காக..
வெற்றி
உங்களுக்கு தெரியாத விளக்கமா?? :)
இருப்பினும் எனக்கு தெரிந்ததை சொல்லிவிடுகிறேன்.
கடன் பட்டார் நெஞ்சம் போல் இருக்கிறது மனது,
காதலிக்கிறேன் என சொல்லி பணக்காரியாக்கிவிடு
என காதலி காதலனைப் பார்த்து பாடுவது போல் உள்ளது...
வருகைக்கும் பாடலை இரசித்தமைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
தம்பி,
உங்கள் கருத்துக்கு நன்றி.
பல இசை அமைப்பாளர்கள் இது போன்ற பாடலை இசை அமைத்துள்ளனர்..
நீங்கள் சொல்வது போல் சில பேருக்கு சில விசயத்தில் சில பேரை பிடிக்காமல் போய்விடும். தவறில்லை...
வருகைக்கு மிக்க நன்றி.
//தொண்டை குளிக்குள்ளே சிக்கிக் கொண்ட முள்ளாய்//
இந்த பாடல் வரியை மதுஸ்ரீ பாடும் போது உன்னிப்பாக கேளுங்கள். இவர்
'தொண்டாய் குளிக்குள்ளே' என்று பாடுவார். இப்படி அங்கும் இங்கும் சில உச்சரிப்பு பிழைகள்... ஆனால் இருந்தாலும் பாடல் ரசிக்கும் வகையில் உள்ளது.
Tamilmagani,
நீங்கள் சொல்வது சரிதான்.
// காற்றை மிதித்து வானத்திலேறி //
இங்கே கூட கொஞ்சம் அப்படித்தான் இருக்கும்..
பாடலை இரசித்தீர்களா!!
வருகைக்கு நன்றி.
Post a Comment
<< Home