Friday, September 22, 2006

வைரமுத்துவின் கவிதைகள் - ஒலி நாடாஇது ஒரு மீள் பதிவு...

அமெரிக்க தேசிய நூலக காங்கிரஸ்க்காக திரு.வைரமுத்து அவர்கள் தனது கவிதைகளை தானே வாசித்து ஒலி நாடாவாக பதிவு செய்துள்ளார். அவற்றில் சில வற்றை இங்கே கொடுத்துள்ளேன்..

கேட்டு மகிழுங்கள்..


"காதல்"


"மரங்கள்"


"மதுரை மாநகர்"


"நயாகரா நீர்வீழ்ச்சி"


"நாட்டுப் புற பாட்டு"


"சொல் அதிகாரம்"


"இலை"


"விலங்குகள்"


"சிறுமியும் தேவதையும்"


"உயில்"


"நிலையாமை"


"மானுடம்"


கவிஞர் வைரமுத்துவின் "தண்ணீர் தேசம்"

சில வரிகள்

// உன் உடம்பு என்பதே
முன்றில் இரண்டுபங்கு தண்ணீர்.
உன் அழகுதேகம் என்பது 65
சதம் தண்ணீர்.

மெய்யாகவா?

தமிழிடம்
பொய்சொல்வேனா?
விஞ்ஞானம் விளம்பக்கேள்...
வாழும் உயிர்களை
வடிவமைத்தது தண்ணீர்.
70 சதம் தண்ணீர் - யானை.
65 சதம் தண்ணீர் - மனிதன்.
என் அமுதமே. உன் உடம்பில்
ஓடுவது 7.2 லிட்டர் உப்புத்
தண்ணீர்.

நம்ப முடியவில்லை.

உண்மைக்கு உலகம்வைத்த
புனைபெயர் அதுதான். //


// வாழ்நாளில் 66,000 லிட்டர்
தண்ணீர் குடித்தான்.
ஆயுளில் முன்றில் ஒருபங்கு
தூங்கினான்.
நான்குகோடி முறை
இமைத்தான்.
நாலரை லட்சம் டன்
ரத்தத்தை இதயத்தால்
இறைக்கவைத்தான்.
35 ஆயிரம் கிலோ உணவு -
அதாவது எடையில் இந்திய
யானைகள் ஏழு தின்றான்.
மரித்துப் போனான்.

இதற்குத்தானா மனிதப்பிறவி //

20 Comments:

Blogger Sivabalan said...

yo4rker,

I appreciate you if you could give the appropriate links to the post.

Anyway Thanks for your visit

August 09, 2006 7:13 AM  
Blogger கோவி.கண்ணன் said...

சிபா,
வைரமுத்துவின் பட்டொளிகள் ...!
நல்ல ஆக்கங்களை எடுத்துப் போட்டு இருகிறீர்கள் ... நன்றி சிபா...

August 09, 2006 7:19 AM  
Blogger Sivabalan said...

GK,

சொல் அதிகாரம் கேட்டீர்களா..

வருகைக்கு நன்றி.

August 09, 2006 7:45 AM  
Blogger Sivabalan said...

Update - கவிஞர் வைரமுத்துவின் "தண்ணீர் தேசம்"

சில வரிகள்

August 09, 2006 10:20 AM  
Blogger Udhayakumar said...

இதை உங்க பிளாக்லதான் படிச்சனா? நான் அமெரிக்க தேசிய நூலக காங்கிரஸ்க்காக திரு.வைரமுத்து அவர்கள் தனது கவிதைகளை தானே வாசித்து ஒலி நாடாவாக பதிவு செய்துள்ளார் என சொன்னபோது நண்பர்கள் நம்பவில்லை.

I got the link now....

September 22, 2006 7:59 PM  
Blogger Sivabalan said...

உதய்

ஏற்கனவே இந்த பதிவுக்கு வந்திட்டு போயிருக்கீங்களா.. சொல்லவே இல்லை..

இப்ப லிங்க் கிடைத்துவிட்டதா!!

மீள் பதிவு எப்படி என்று சொல்லி சுட்டி கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

மீன்டும் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி

September 22, 2006 9:33 PM  
Blogger அருண்மொழி said...

எனது பாடசாலை நாட்களில் நான் படித்து சில்லகித்த புத்தகங்களில் ஒன்று இது.... எம்மை கவிப்பித்தாக்கிய புத்தகங்அள் தண்ணீர்தேசம், பெய்யென் பெய்யும் மழை, இந்த பூக்கள் விற்பனைக்கல்ல போன்ற வைரமுத்ஹ்டுவின் புத்தகங்களே

September 22, 2006 10:57 PM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
ம்ம்ம், என்ன coincidence பாருங்களேன்! "வைரமுத்துவின் கவிதைகள்" எனும் வைரமுத்துவின் கவிதைப் புத்தகத்தை இன்றுதான் நூல்நிலையத்திலிருந்து எடுத்து வந்தேன். அதிலிருந்து சில கவிதைகளைப் பதிவிலிடலாம் என நினைத்தேன். நீங்கள் ஒலி வடிவிலேயே தந்து விட்டீர்கள். மிக்க நன்றி.

September 22, 2006 11:36 PM  
Blogger Sivabalan said...

அருண்மொழி ,

தங்களின் அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

வருகைக்கு நன்றி.

September 23, 2006 8:19 AM  
Blogger Sivabalan said...

வெற்றி

நம் எண்ண ஒற்றுமை எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

நீங்களும் பதிவிட்டால் மிகவும் மகிழ்வேன்.

வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி.

September 23, 2006 8:21 AM  
Blogger ENNAR said...

நன்றாக உள்ளது சில வற்றைக்கேட்டேன் மற்றவற்றை பிறகு கேட்பேன் இதை வழங்கியதற்கு நன்றி

September 23, 2006 8:36 AM  
Blogger தம்பி said...

மிகச்சிறந்த கவிதைகள். முன்பே படித்து இருந்தாலும் வைரமுத்துவின் குரலில் கேட்டது புதிய அனுபவம். இதை தரவிறக்கம் செய்ய முடியுமா?

September 23, 2006 10:33 AM  
Blogger Sivabalan said...

என்னார் அய்யா

கவிதைகளை கேட்டு இரசித்தமைக்கு மிக்க நன்றி.

வருகைக்கு நன்றி

September 23, 2006 12:38 PM  
Blogger Sivabalan said...

தம்பி,

வைரமுத்துவின் குரலை கேட்டு இரசித்தமைக்கு மிக்க நன்றி.

இங்கே சென்றால் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://www.loc.gov/acq/ovop/delhi/salrp/vairamuthu.html

வருகைக்கு நன்றி.

September 23, 2006 12:45 PM  
Blogger தம்பி said...

//இங்கே சென்றால் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://www.loc.gov/acq/ovop/delhi/salrp/vairamuthu.html//


மிக்க நன்றி சிவபாலன்!

September 23, 2006 1:32 PM  
Blogger Sivabalan said...

தம்பி,

மீன்டும் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி

September 25, 2006 6:49 PM  
Blogger தமிழ்ப்பிரியன் said...

கவிதைகள் கேட்டு ர‌சித்தேன்..
மிக்க ந‌ன்றி.

அருமையான‌ தண்ணீர் தேசம் வரிகள் !

September 29, 2006 9:19 AM  
Blogger Sivabalan said...

தமிழ்ப்பிரியன்

கவிதையை கேட்டு இரசித்தமைக்கு நன்றி.

வருகைக்கு மிக்க நன்றி

September 29, 2006 9:23 AM  
Anonymous Anonymous said...

Indraya porulaathaaram pola veezhchiyiley kidakkirathu nam thamizh. Thamizh kaakum thanayaney! vaazhi nee!
Unarvu konda koottam serthu!
ulagin uchiyil thamizhai nirutthu!
vaalai eduthu padai ethir vanthaal
veezhthi mudippom vaalai nimirthu!

July 11, 2009 6:10 AM  
Anonymous Anonymous said...

Indraya porulaathaaram pola veezhchiyiley kidakkirathu nam thamizh. Thamizh kaakum thanayaney! vaazhi nee!
Unarvu konda koottam serthu!
ulagin uchiyil thamizhai nirutthu!
vaalai eduthu padai ethir vanthaal
veezhthi mudippom nenjai nimirthu!
-C.M.LOKESH

July 11, 2009 6:15 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv