வேண்டும் வேண்டும் இட ஒதுக்கீடு !
மயானத்தில் பிணம் சுடவும்,
மாநகராட்சி குப்பை அள்ளுவதற்கும்,
பினவறையில் சவம் அறுக்கவும்,
தினை அறுத்து தூற்றுவதற்கும்,
ஊசி பாசி விற்பதற்கும்,
ஊரார் ஆடைகள் வெளுப்பதற்கும்,
ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கும்,
ஆடு மாடு மேய்த்திடவும்,
சேற்றிலிறங்கி நாற்று நடவும்,
மாற்றான் தோட்டம் காத்திடவும்,
நைந்த செருப்பை தைத்திடவும்,
நாவிதம் நயமுடன் செய்திடவும்,
நாமும் கேட்போமே இடஒதுக்கீடு !
இக்கவிதையை எழுதியது திரு.கோவி.கண்ணன். அவர்கள்.
இக்கவிதையை அவரின் சம்மத்ததுடன் இங்கே கொடுத்துள்ளேன்.
இக்கவித்தையை அவருடைய வலைதளத்திலேயே படிக்க
"இங்கே செல்லுங்க.."
11 Comments:
இக்கவிதையை இங்கே பதிவிட சம்மதித்த திரு.கோவி.கண்ணன். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதான் வாயில ஒட்டியிருக்கோமுல.. சும்மா பொத்திகிட்டு போவியா..:)
சின்னபுள்ள,
உங்கள் கமண்டை மிகவும் இரசித்தேன்.. நல்ல டைமிங்..
ஆமா இல்ல .. அப்படி போயிருதா நடுநிலையா இருக்கும்.:)
வருகைக்கு மிக்க நன்றி
சிபா...!
மீள்பதிவு செய்ததற்கு நன்றி !
அனைவரும் சமம் .. எல்லோரும் எல்லா வேலையிலும் இட ஒதுக்கீடு கேட்டு போராட வேண்டும் !
இதைத்தான் எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
GK,
ஒரு அருமையான கவிதையை கொடுத்தமைக்கு நன்றி..
நானும் அதைத்தான் சொல்லறேன்.. எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்..:)
வருகைக்கு மிக்க நன்றி!!
very nice poem. well written. thanks.
சிவபாலன்,
இக் கவிதையை இப்பதான் பார்த்தேன். அருமையான கவிதை. ஆழ்ந்த கருத்துக்கள். சாதி வெறியர்களுக்கு நெத்தியில் அடித்தது போல் சொல்லியுள்ளார் கோ.க அவர்கள். கவி புனைந்த கோ.க அவர்களுக்கும் அதை இங்கே மீள்பதிவு செய்தமைக்கும் மிக்க நன்றிகள்.
phantom363,
Thanks for Visit.
வெற்றி
உங்கள் கருத்து சரியானதுதான்.. நல்லதொரு கவிதையை திரு.கோ.க. கொடுத்துள்ளார்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நல்ல கவிதை.
ஆனால் இட ஒதுக்கீடு என்ற பேச்சை எடுத்தாலே என் புருஷனின் முகம் அஷ்ட கோணலாகிவிடும்.
ராதாராகவன்,
வருகைக்கு நன்றி.
Post a Comment
<< Home