பழம்பெரும் நடிகை பத்மினி மரணம்
சென்னை : நாட்டியப் பேரொளி என திரையுலக ரசிகர்களால் அழைக்கப்பட்ட பழம் பெரும் நடிகை பத்மினி மாரடைப்பால் நேற்று இரவு சென்னையில் காலமானார். இவரது மகன் ஆனந்த் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
அமெரிக்காவில் இருந்த நடிகை பத்மினி, கடந்த மாதம் அங்கிருந்து சென்னைக்கு வந்தார். பின்னர் எம்.ஜி.ஆர்., நடித்த நாடோடி மன்னன் படம் மீண்டும் திரையிடப்பட்டதற்கான விழா சென்னையில் நடந்தது. இதில், பத்மினி கலந்து கொண்டார். நேற்று முன்தினம் சென்னையில் தமிழ் திரையுலம் சார்பில் முதல்வருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் வசித்து வந்த பத்மினி நேற்று காலையில் மாரடைப்பு காரணமாக கல்யாணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மாலையில் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சைப் பலனின்றி இரவு 10.10 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது.
செய்தி: தினமலர்
22 Comments:
வருத்தமளிக்கும் செய்தி. ஒரு பெரிய சகாப்தமே முடிவுக்கு வந்துள்ளது. அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஓ. பத்மினி அம்மா ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.ஆழ்ந்த இரங்கல்கள்.
என்னங்க அதிர்ச்சியான செய்தி சொல்றீங்க.
அடடா...... எப்பேர்ப்பட்ட நாட்டியத்தாரகை.
மனசே ஆறலைங்க.
ஆழ்ந்த அனுதாபங்கள் அவரோட குடும்பத்தினருக்கும் நம்மைப்போன்ற அவரின் ரசிகர்களுக்கும்.ஹூம்.....
ஐயகோ! சிறிதளவும் எதிர்பார்த்திராத அதிர்ச்சியான செய்தி. நடிகர் திலகத்துடன் அவர் நடித்த தில்லானா மோகனாம்பாள் படமும் அதில் வரும் அவரது நடனங்களும் அழியாப் புகழ் பெற்றவையன்றோ!
அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
சிபா...!
துயர செய்தி...!
பத்மினி அவர்களின் நாட்டியத்திற்கு இணை அவரே ஆவர்.
அவருடைய நாட்டியத்தில் மிகவும் பிடித்து, அடிக்கடி பார்பது,
தில்லான மோகானாம்பால் - மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன ?
மன்னவன் வந்தானடி தோழி...!
இந்த இருபாடல்களுக்கு சுட்டி கிடைத்தால் சேர்த்துப் போடுங்கள்,
அவரது மரணத்தில் வருந்தூவோர்க்கு
ஆறுதலாக இருக்கும் !
நாம் கண்ட நல்ல நடிகர் நடிகை எல்லாம் ஒவ்வொருவராக போய்சேர்கிறார்கள் அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும்
நாட்டிய பேரொளிக்கு இதய அஞ்சலி!
நாட்டிய தாரகையின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
ஓ! சிவா, அப்படியா. ரொம்ப வருத்தமான செய்தி. :( அந்த அம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
பத்மினி அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும்
பத்மினி அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரின் தில்லானா மோகானாம்பாள் மறக்கமுடியாத படம்.
நல்ல ஒரு கலைஞரைத் தமிழகம் இழந்துவிட்டது.
அன்னாரின் ஆன்மா அமைதியடையட்டும்.
அவர்தம் பிரிவால் வாடுவோருக்கு ஆழ்ந்த இரங்கல்.
வருத்தமான செய்தி.. பத்மினி அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்..
பழம்பெரும் நடிகை பத்மினி அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" சி.டி. வாங்கினேன். பத்மினியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. இது வரை, அந்தத் திரைப்படத்தை பத்மினிக்காகவே (மற்றும் டி.ஆர்.ராமச்சந்திரன்) இருபது முறையாவது பார்த்திருப்பேன்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
சிவபாலன், முதலில்
தினமணியில் பார்த்ததும்
இன்னுமொரு நடிகையா என்று தோன்றியது.
இவர்கள் எலோரும் நமக்குக் கொடுத்த ஆனந்தத்துக்கு நன்றி சொல்லி முடியாது.
அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.
நாட்டிய தாரகை பத்மினியின் தீவிர இரசிகன் என்ற வகையில் இச்செய்தி மிகுந்த வருத்தத்தை அளித்தது. பகிர்ந்ததிற்கு நன்றி.
அவரின் மறைவால் வருந்தும் அவர்தம் குடும்பத்தாருக்கும் இரசிகர்களுக்கும் என் அனுதாபங்கள்.
Indeed its very sad Sivabalan .. wish you had uploaded some more pictures of Padmini. Nostalgic..
நாட்டியப் பேரொளி!
சிறந்த நடனமணி;நடிகை!!!
தன் நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர். அவர் குரலில் கூட நடிப்பிருக்கும். சொக்கவைக்கும் குரல்.
அன்னார் ஆத்மா சாந்தியடையட்டும்.
யோகன் பாரிஸ்
வருத்தத்தை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி
சிறந்த நடிப்பாலும் நடனத்தாலும்
எமது நெஞ்சில் நீங்காது நிறைந்த கலையரசி பத்மினி.
அவரின் மறைவு வருத்துகிறது. அவரின் இழப்புக்கு ஈடு செய்யும் கலையரசியைக் காண்பது மிக அரிது.
ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
நாட்டியப் பேரொளி பத்மினியின் மறைவு வருந்தத்தக்க செய்தி. அன்னாரது ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.
Post a Comment
<< Home