Wednesday, September 27, 2006

ஓரினச்சேர்க்கை...ஓரினச் சேர்க்கைக்கு எதிரான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் செய்து வருகிறது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துடன் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஒரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 ஐ நீக்க வேண்டும் என பிரபல ஆங்கில எழுத்தாளர் விக்ரம் சேத், அருந்ததி ராய், பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் மற்றும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் ஆகியோர் குரல் கொடுத்திருந்தனர்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் கூடுதல் செயலர் சுஜாதா ராவ், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் இரண்டு முறை ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்தியாவில் 24 லட்சம் ஓரினப் பிரியர்கள் இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 8 சதவீதத்தினரை மட்டுமே அரசால் அடையாளம் காண முடிந்துள்ளது. தண்டனைச் சட்டத்திலிருந்து ஓரினச்சேர்க்கையை நீக்கி விட்டால் ஓரினப் பிரியர்களை அடையாளம் காண்பது எளிது. இதனால் எய்ட்ஸ் நோய் பரவலை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்கிறார் சுஜாதா ராவ்.

நன்றி: தமிழ் முரசு

56 Comments:

Blogger Sivabalan said...

புதுவையில் புது மாப்பிள்ளைகளை தவிக்கவிட்டு மாயமான காதல் தோழிகள் நீதிபதியின் அறிவுரையை ஏற்று தங்கள் கணவருடன் சேர்ந்து வாழ முடிவெடுத்தனர்.

September 27, 2006 7:20 PM  
Blogger மங்கை said...

நல்ல பதிவு

migrated population உள்ள இடங்களில் இது இப்பொழுது சாதாரணம். ஹோட்டலில்,, மில்களில் வேலை செய்பவர்கள், பத்துக்கு பத்து அறையில், 10 அல்லது 15 பேர், வெளி உலகம் தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். எந்த வித பொழுது போக்கும் இல்லை. 10 அல்லது 15 மணி நேரம் வேலை செய்து சோர்ந்து போய் வரும் இவர்கள், ஓரினச்சேர்கையை ஒரு வடிகாலாக நினைக்கதொடங்கி, பின் அதற்கு அடிமை ஆகிறார்கள்.... சில சட்ட மாற்றங்கள், பாதுகாப்பற்ற ஓரினச்சேர்கையால் விளையும் தீமைகளை களைய உதவும்..

மங்கை

September 27, 2006 8:43 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

சிவபாலன்,
முதல் பின்னூட்டத்தில் சொல்லி இருப்பது புரியவில்லையே..

September 27, 2006 8:49 PM  
Blogger Sivabalan said...

மங்கை அவர்களே

மிகச் சரியாக சொன்னீர்கள்.

இன்றை இளைய சமுதாயம் எதிர் நோக்கி இருக்கும் இன்னொரு சவால்.

இச்சட்டம் எய்ட்ஸ் போன்ற விசயங்களுக்கு உபயோகமாக இருக்குமெனின் நிச்சயம் வரவேற்கப்படவேண்டியதுதான்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

September 27, 2006 9:08 PM  
Blogger Sivabalan said...

பொன்ஸ்

கீழே செய்தியை கொடுத்திருக்கிறேன்... படிச்சுக்குங்க..

அதாவது கடந்த வாரம் முழுவதும் இந்த பிரச்சனைதான் High Light. அதுக்கும் இந்த பதிவுக்கும் நிறைய சம்பந்தம் இருப்பதால் இங்கே கொடுத்துள்ளேன்

-----------
புதுச்சேரி, செப். 23-

திருமணமான 2 மாதத்திற்குள் புதுமாப்பிள்ளைகளை தவிக்க விட்டு புதுவையை சேர்ந்த காதல் தோழிகள் அமுதா-கலாமேரி கடந்த 15-ம் தேதி மாயமானார்கள். கோவை துடியலூர் இடையர்பாளையம் திருவள்ளுவர் நகரில் அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த தோழிகளை உள்ளூர் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களை அரியாங்குப்பம் போலீசார் மற்றும் அமுதாவின் கணவர் குமரகுரு ஆகியோர் புதுவைக்கு அழைத்து வந்தனர்.
அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட தோழிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அமுதாவும், கலாமேரியும் கணவனுடன் சேர்ந்துவாழ மறுத்தனர். பின்னர் அமுதாவின் உறவினர்களும், கலாமேரியின் உறவினர்களும் இவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை.
இதன் பின்னர் நேற்று பிற்பகலில் இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் தோழிகளுக்கு அறிவுரை கூறினார். முடிவில் அமுதா, கணவர் குமரகுருவுடன் சேர்ந்து குடும்பம் நடத்த சம்மதம் தெரிவித்தார். கலாமேரி அவரது தாயுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால் ஆனந்தராஜ் உறவினர்கள் கலாமேரியை ஏற்க மறுத்துவருவதாக தெரிகிறது. வெளியூரில் இருக்கும் ஆனந்தராஜ் இன்று ஊர் திரும்புகிறார். இருவீட்டார் உறவினர்கள் கலந்துபேசி இன்று இறுதி முடிவு எடுக்கின்றனர்.

September 27, 2006 9:25 PM  
Blogger Sivabalan said...

பொன்ஸ்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

September 27, 2006 9:28 PM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,

//இந்தியாவில் 24 லட்சம் ஓரினப் பிரியர்கள் இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.//

ம்ம்ம்ம்...ஆச்சரியமாக உள்ளது.

September 27, 2006 11:14 PM  
Blogger முத்து(தமிழினி) said...

சிவா, தகவலுக்கு நன்றி...


//சிவபாலன்,
முதல் பின்னூட்டத்தில் சொல்லி இருப்பது புரியவில்லையே..//

பொன்ஸ்,பயங்கர குறும்புங்க உங்களுக்கு..சிவபாலனும் பொறுமையா விளக்கம் கொடுக்கறாரு...:))

September 28, 2006 12:49 AM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

//பொன்ஸ்,பயங்கர குறும்புங்க உங்களுக்கு//
ஆகா.. முத்து, நிஜமாவே இந்தச் செய்தி தெரியாது :)...

ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டம் திரும்பப் பெறப் போவதான செய்தியை மட்டும் தான் படித்தேன். அதன் பின்னணியில் இருக்கும் இந்தக் கதை தெரியாது.

சிவபாலன், செய்தியை விளக்கியதற்கு நன்றி..

September 28, 2006 5:41 AM  
Blogger வைசா said...

ஓரின சேர்க்கையாளர்களிடையே மட்டும் தான் எய்ட்ஸ் பரவுவது என்று இல்லை. ஆனால் இந்த சட்ட மாற்றத்தினால் வெளிப்படையாக அவர்களுக்குப் பாதுகாப்பான உறவுக்கு அறிவுரைகள் வழங்கலாம்.

இதை விடுங்கள். இந்த சட்ட மாற்றம் அவர்களது அடிப்படை மனித உரிமைக்காக அல்லவா?

வைசா

September 28, 2006 5:47 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

இந்தியாவில் நண்பர்கள் கைக்கோர்த்துச் சென்றால் இதுநாள் வரையாரும் தவறாக பார்பதில்லை. இனி அப்படி செல்ல முடியுமா என்று தெரியவில்லை !

September 28, 2006 6:36 AM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

//இந்தியாவில் நண்பர்கள் கைக்கோர்த்துச் சென்றால் இதுநாள் வரையாரும் தவறாக பார்பதில்லை. இனி அப்படி செல்ல முடியுமா என்று தெரியவில்லை ! //
கோவி, அந்த அளவுக்குப் போகாது என்றே நம்புவோம்.

நம் கலாச்சாரத்துக்கு இப்படியான விசயங்கள் புதிது. வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப் போகும் ஓரினச் சேர்க்கையாளர்களே குறைவாகத் தான் இருப்பார்கள். இந்தச் சட்டத்துக்குப் பின் அப்படி ஒப்புக் கொள்ள விரும்புபவர்கள் கூட வேட்டையாடு விளையாடு போன்ற படங்களைப் பார்த்துவிட்டு யோசிக்கத் தொடங்கி விடுவார்கள்.

எனவே மக்கள் மத்தியில் பரவி அவர்கள் தோளில் கைப்போட்டு செல்லும் ஆண்களை/பெண்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று சந்தேகிக்க இன்னும் பல காலம் ஆகும்.

September 28, 2006 6:41 AM  
Blogger மதுரையம்பதி said...

//வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப் போகும் ஓரினச் சேர்க்கையாளர்களே குறைவாகத் தான் இருப்பார்கள்//

இல்லை என்று தோன்றுகிறது பொன்ஸ்....இன்றைய இந்தியா, எல்லாவற்றிலும் மேற்கத்திய கலாசார தாக்கம் அதிகமாக உள்ளதால், இதுவும் வெளிப்படும் போது அதிகமாகத்தான் இருக்கும்....அது நமது மக்கள் தொகைக்கு ரொம்ப அதிகமான சதவிதமாக வேண்டுமானால் இல்லாது போகலாம்.

September 28, 2006 6:54 AM  
Blogger சின்னபுள்ள said...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=286871&disdate=9/27/2006

1.நம்ம கலாச்சாரத்துக்கு இது ஒத்து வராது.

2.ஏராளமான கிராமங்களை கொண்டது இந்தியா

3.நல்ல மனிதன் நல்ல சந்ததியை விட்டு செல்வான் உலகம் செழிக்க...

4.புலி பசிச்சா புல்லதிங்குமா..??திங்குதே இங்க..!!!

September 28, 2006 7:04 AM  
Blogger செந்தில் குமரன் said...

திரு நங்கைகளைப் போலவே நமது சமூகத்தால் ஏனென்ற தெரியாமல் ஒரு அருவெறுப்பு கலந்த பயத்தை ஏற்படுத்தும் வார்த்தைதான் ஓரினச் சேர்க்கையாளர்கள்.

யார் இந்த அருவெறுப்பையும் பயத்தையும் ஏற்படுத்தினார்கள் என்று கூட எனக்கு நினைவில்லை.

வீட்டில் உள்ளவர்கள் சொல்லி இது ஏற்பட்டது என்று தோன்றவில்லை. வீடுகளில் செக்ஸ் பற்றி பேசுவதே எதோ குற்றம் என்று எண்ணும் பொழுது ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றியெல்லாம் எப்படி பேச்செடுப்பார்கள்.

அதனால் சமூகம் தான் இதெல்லாம் கற்றுக் தந்தது என்று நினைக்கிறேன்.

இன்று எனது பார்வை சிறிது மாறியுள்ளது.

எய்ட்ஸ் என்பது எந்த வகை உடலுறவு கொண்டாலும் பரவக் கூடிய ஒரு நோய் ஓரினச் சேர்க்கையால் மட்டும் அல்ல.

இந்த சமூகத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்த பார்வை மாற வேண்டியுள்ளது.

அவர்களை வேற்றுமை படுத்திப் பார்க்கும் பார்வைகள் மாற வேண்டும்.

உங்களின் இந்தப் பதிவில் நீங்கள் இந்தச் சட்டத்தை வரவேற்கிறீர்களா இல்லை எதிர்க்கிறீர்களா என்று எனக்குப் புரியவில்லை.

பதிவு எழுதி இருக்கும் தோனியை வைத்துப் பார்க்கும் பொழுது நீங்கள் safer groundல் நின்று கொண்டு எழுதியது போலத் தோன்றுகிறது.

என்னைப் பொறுத்த வரை இந்த சட்டம் வரவேற்கப் பட வேண்டிய ஒன்று.

இந்திய சட்டம் எனக்கென்னவோ தேவை இல்லாத பல ஓட்டைகளை குற்றவாளிகளுக்காக விட்டு விட்டு சக மனிதர்களை தண்டிப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

இந்த சட்டம் பற்றிய உங்களில் வெளிப்படையான சிந்தனைகளை எதிர்பார்க்கிறேன்.

கடைசியாக இதனை அடித்துக் கொண்டிருக்கும் சமயம் கோவி. கண்ணனின் பின்னூட்டம் பார்க்க நேர்ந்தது. அதனால் மேலும் சில விஷயங்களை அடிக்க வேண்டியதாகிறது.

கோவி. நண்பர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் யார் கை கோர்த்துக் கொண்டு போனாலும் அதனை வித்தியாசமாக பார்க்காமல் அதனை இயல்பாக பார்க்கும் நிலை வர வேண்டும்.

ஓரினச் சேர்க்கையாளர்களை 200 வருடங்களுக்கு முன் மேல் ஜாதியினர் தலித்தைப் பார்த்த பார்வையுடன் நாம் இன்று பார்க்க கூடாது. இன்று நாம் பார்க்கும் அதே விதத்தில் தான் 200 வருடங்களுக்கு முன் தலித்துகள் பார்க்கப் பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இரு தரப்பினருமே காரணம் புரியாமல் அருவெறுப்பாக பார்க்கப் பட்டனர்.

September 28, 2006 7:19 AM  
Blogger Sivabalan said...

வெற்றி,

ஆம். கிட்டத்தட்ட ஒரு வட்டத்தின் மக்கள் தொகை..

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

September 28, 2006 7:46 AM  
Blogger Sivabalan said...

முத்து,

:)

பொன்ஸ் மீன்டும் வந்து தன்னிலையை சொல்லிட்டாரு....

September 28, 2006 7:47 AM  
Blogger Sivabalan said...

முத்து,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

September 28, 2006 7:54 AM  
Blogger Sivabalan said...

வைசா,

நீங்கள் சொல்வது மிகச்சரி. அவர்களுக்கு இச்சட்டதின் மூலம் மருத்துவ அலோசனைகள் எளிதில் கிடைக்க வைகை செய்கிறது.

இது அவர்களின் தனி மனித உரிமை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

September 28, 2006 7:55 AM  
Blogger Sivabalan said...

GK,

திரு.குமரன் எண்ணம் உங்களுக்கு பதில் சொல்லியுள்ளார். அதுதான் என் பதிலும்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

September 28, 2006 7:57 AM  
Blogger Sivabalan said...

பொன்ஸ்,

இது இந்தியாவிற்கு புதியதான விசயம் போல் பிரம்மை ஏற்படுத்துவது தவறு. பண்டைய கோவில் சிலைகளில் இது போன்று கானப்படுகிறது.

மீன்டும் வருகை தந்தமைக்கு நன்றி

September 28, 2006 8:01 AM  
Blogger செந்தில் குமரன் said...

///
எனவே மக்கள் மத்தியில் பரவி அவர்கள் தோளில் கைப்போட்டு செல்லும் ஆண்களை/பெண்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று சந்தேகிக்க இன்னும் பல காலம் ஆகும்.
///

பொன்ஸ் அப்படி ஒரு நிலைமை வந்தால் நான் முன்னேறிச் செல்லவில்லை காரணம் தெரியாமல் கண்மூடித் தனமாக மூட நம்பிக்கைகளை பின்பற்றும் ஆதி காலத்திற்கு தான் சென்று கொண்டிருப்போம்.

September 28, 2006 8:02 AM  
Blogger Sivabalan said...

மெளல்ஸ், பெங்களூர்,


இது இப்பொது அதிகம் கானப்படுவதற்கு கலாச்சார மாற்றம் என சொல்லலாம். ஆனால் மேற்கத்திய கலாச்சாரம் தான் என என்னால் உறுதியாக நம்பமுடியவில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

September 28, 2006 8:06 AM  
Blogger Sivabalan said...

சின்னபுள்ள,

நீங்கள் கொடுத்த சுட்டிக்கு சென்று படித்தேன். வருத்தமளித்தது. என்னை பொருத்த வரையில் இச்சட்டம் இது போன்ற இறப்புகளை கொஞ்சம் கட்டுப்படுத்தும் என நம்புகிறேன்.

நீங்கள் சொல்வதுபோல் ஒரு வளமான சமுதாயத்தை சந்ததிகளுக்கு தரவேண்டும் என்றால் நிச்சயம் அது ஆண் பெண் உறவே. அந்த உறவைப் போற்றுவோம்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

September 28, 2006 8:12 AM  
Blogger சின்னபுள்ள said...

மகர்ந்த சேர்க்கை நடைபெற்றால் தான் கனி இது இயற்கை

இயற்கையை மீறி நாம் ஒன்றும் செய்ய இயலாது என்பதை இயற்கை மீண்டும் நிருபிக்கும்.

ஒருவேளை மக்கள் தொகையை கட்டுபடுத்த இயற்கைகூட இதை செய்ய தூண்டியிருக்கலாம்..!!!!!

September 28, 2006 8:17 AM  
Blogger delphine said...

I feel this as a very delicate subject to discuss. This sort of relationship should not be encouraged at all.

September 28, 2006 8:20 AM  
Blogger Sivabalan said...

குமரன் எண்ணம்,

உண்மையில் உங்கள் பின்னூடம் மிக மிக அருமை. உங்கள் கருத்துடன் முழுமையாக ஒத்துப் பொகிறேன்.

நான் கொஞ்சம் SAFE GROUNDல் தான் இப்பதிவை அனுகினேன் என்பது உண்மை. அத்ற்கு காரணம் உங்களுக்கே தெரியும். :)

மற்றபடி ஒரினச்சேர்க்கையாளர்களை கேலி செய்வதும் ஏளனம் மாக பார்ப்பதும் தவறு.

ஆனால் ஆண் பெண் உறவைப் போற்றுவோம்..

September 28, 2006 8:24 AM  
Blogger Sivabalan said...

குமரன் எண்ணம்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி

September 28, 2006 8:25 AM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

செந்தில் குமரன்,
அது முன்னேற்றம் என்று நானும் சொல்லவில்லை.. ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றிய என்னுடைய கருத்தும், உங்களுடையது போல் தான். ஆரம்பத்தில் திரு நங்கைகள் போன்றே ஓரினச் சேர்க்கையாளர்களையும் தவறானவர்களாகத் தான் நினைத்திருந்தேன்.

ஆனால், பல்வேறு வகையான கருத்துக்களையும், நிலைப்பாடுகளையும் படித்த பின் இது ஒன்றும் தவறில்லை என்ற கருத்து எனக்கும் உருவாகி இருக்கிறது. குப்புசாமியின் இந்தக் கதையைப் படித்த காலத்தில் கூட அவர் சொல்ல வந்த ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றிய விஷயம் கலாச்சார அதிர்ச்சி எதையும் உருவாக்கவில்லை. ஆனால், நம் ஊடகங்கள் இன்றிருக்கும் நிலையில் இது போன்ற விஷயங்களை ஆரோக்கியமாக முன்னிறுத்தப் போகின்றனவா என்பதையும் யோசிக்க வேண்டும்.

எனக்கென்னவோ இன்னும் பல ஆண்டு கால போராட்டங்களுக்கும், புரியவைக்கும் முயற்சிகளுக்கும் பின் தான் இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வாக நம் சமூகத்தில் கொள்ளப் படும்.

நம் சமூகம் பற்றிச் சொல்வதற்கு முன், கோவியார் சொல்வது போல், வெளிப்படையான சமூகம் என்று நாம் சொல்லிக் கொள்ளும் பல்வேறு வெளிநாடுகளில் கூட தோள் மேல் தோள் போட்டுச் செல்லும் ஆண்களை ஓரினச் சேர்க்கையாளர்களாக (கொஞ்சம் மட்டமாக) பார்ப்பது வழக்கமாக இருக்கிறதே! [கோவி, சிவபாலன், இந்தக் கருத்து கேள்விப்பட்டதை வைத்து எழுதுவது, சரியா தவறா என்று வெளிநாடுகளில் வாழும் நீங்கள் தான் சொல்லவேண்டும்]

September 28, 2006 8:28 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

குமரன் எண்ணம்,

அமெரிக்காவில் இருக்கும் என் நண்பர் ஒருவர் சென்னை வந்தபோது, நண்பர்கள் சிலர் கைக்கோர்த்துச் சென்றதைப் பார்த்து, வெளிநாட்டில் இருவர் கைகோர்த்துச் சென்றால் அவர்கள் இருவரையும் வெளிநாட்டில் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள் என்றார். அதைத்தான் நான் வேறுவிதமாக சொன்னேன்.

September 28, 2006 8:30 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

குமரன் எண்ணம்/ சிபா...!,

அமெரிக்காவில் இருக்கும் என் நண்பர் ஒருவர் சென்னை வந்தபோது, நண்பர்கள் சிலர் கைக்கோர்த்துச் சென்றதைப் பார்த்து, வெளிநாட்டில் இருவர் கைகோர்த்துச் சென்றால் அவர்கள் இருவரையும் வெளிநாட்டில் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள் என்றார். அதைத்தான் நான் வேறுவிதமாக சொன்னேன்.

September 28, 2006 8:31 AM  
Blogger Sivabalan said...

சின்னபுள்ள,

// மகர்ந்த சேர்க்கை நடைபெற்றால் தான் கனி இது இயற்கை

இயற்கையை மீறி நாம் ஒன்றும் செய்ய இயலாது என்பதை இயற்கை மீண்டும் நிருபிக்கும்.

ஒருவேளை மக்கள் தொகையை கட்டுபடுத்த இயற்கைகூட இதை செய்ய தூண்டியிருக்கலாம்..!!!!! //


உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

மீன்டும் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.

September 28, 2006 8:42 AM  
Blogger Sivabalan said...

டாக்டர் டெல்பின் (Dr.Delphine),

நீங்கள் சொல்வது போல் இந்த உறவை ஊக்கிவிக்க முடியாதுதான்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

September 28, 2006 8:44 AM  
Blogger Sivabalan said...

பொன்ஸ்,

நீங்கள் சொல்வது ஓரளவு சரியே..
இங்கே கை கோர்த்து செல்பவர்களை ஒரு மாதிரித்தான் பார்கின்றனர்.

ஏற்கனவே நீங்களும் அறிந்திருப்பீர்கள்
..

September 28, 2006 8:49 AM  
Blogger வைசா said...

எது இயற்கை என்று கூறப் போகிறீர்கள்? ஓரினச் சேர்க்கை சில மிருகங்களிடையேயும் இருக்கின்றன. உதாரணமாக சில வகைக் குரங்குகள் ஓரினச் சேர்க்கையிலும் ஈடுபடுகின்றன.

எமது பண்பாட்டோடு ஒத்து வருகிறதா என்பது வேறு விடயம்.

வைசா

September 28, 2006 8:50 AM  
Blogger Sivabalan said...

GK,

நீங்கள் சொல்வது இப்பொழுது புரிந்தது.. நானும் அது தான் யோசித்து கொண்டிருந்தேன்..

மீன்டும் வருகை தந்தமைக்கு நன்றி.

September 28, 2006 9:04 AM  
Blogger Sivabalan said...

வைசா,

ஆண் பெண் உறவு என்பது இயற்கை சார்ந்த விசயமே!! என்பது என் கருத்து.

மீன்டும் வருகை தந்தமைக்கு நன்றி.

September 28, 2006 9:08 AM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

என்னைவிட என் நண்பனுக்கு இந்த சேதியில் சந்தோஷம் :)

சிரியசா சொல்லணும்னா..
உடல் ரீதியாக ஒருவர் தன் பாலை மட்டும் விரும்பவும் எதிர் பாலை விரும்பத்தக்கதாகக் காணாமலுமிருந்தால் இதை அனுமதிக்கலாம். வெறுமனே சில 'வசதிகளுக்காக' இதை செய்பவர்களை ஊக்கப் படுத்தக் கூடாது என நினைக்கிறேன்.

ஓரினச் சேர்க்கை இயற்கையின் கோளாறால் வருவதாக இருக்கவேண்டுமே தவிர இயற்கையாகவே இருக்கக்கூடாது.

இப்படி உடல் ரீதி ஓரினச் சேர்க்கையாளர்களை அங்கீகரிக்கவேண்டியது அவசியம். ஆனால் சமூக சம அந்தஸ்து இவர்களுக்கு கிடைக்க இன்னும் பல காலம் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.

நல்ல தகவல் சிவபாலன் நன்றி.

September 28, 2006 9:09 AM  
Blogger Sivabalan said...

சிறில்,

உங்கள் நன்பருக்கு சந்தோசம் தரும் செய்தியா??? சரி சரி நல்லது தான்.. :)


நீங்கள் சொல்வதுபோல் இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

September 28, 2006 9:28 AM  
Blogger MSV Muthu said...

விக்ரம் சேத்தும், ஷியாம் பெனேகலும், அருந்ததிராயும் பெரிய இவர்களா? அவர்கள் பரிந்துரைத்தால் என்ன இப்போது? கண்டிப்பாக சட்டத்தை வாபஸ் வாங்கித்தான் ஆகவேண்டுமா? இப்பொழுது இதற்கென்ன அப்படியொரு அவசரம் வந்தது? திருவள்ளுவர் காமத்துப்பால் பற்றி எவ்வளவு சொல்லியிருக்கிறார். அவர் ஓரினச்சேர்க்கையை பற்றி எங்காவது சொல்லியிருக்கிறாரா? திருவள்ளுவரை விட விக்ரம் சேத்தும், ஷியாம் பெனேகலும் பெரிய அறிவாளிகளா என்ன? வேறு எல்லாவற்றிலும் தன்னிறைவு அடந்துவிட்டோம் இது ஒன்று தான் பாக்கி என்பது போல இருக்கிறது. நம் அரசுக்கு எங்கே போனது புத்தி? ஒருவேலை பாப்புலேஷன் கன்ட்ரோல் பண்ண இப்படியிரு ஏற்பாடா? ராஜதந்திரமோ என்ன கன்றாவியோ! ம்..ம்.. வேறு என்ன என்ன அமெரிக்காவிலிருந்து காப்பியடிக்கலாம்? இல்லை நாமே அமெரிக்கர்களுக்கும் மற்ற மேற்கத்தியனருக்கும் வழிக்காட்டியாய், முன்னோடியாய், கலங்கரைவிளக்கமாக இருந்து யாரும் எங்கும் நிர்வாணமாய் திரியாலாம் என்ற சட்டம் கொண்டுவரலாமே? எகானமியில் மட்டும் தான் அமெரிக்காவைக் காப்பியடித்துக்கொண்டிருந்தனர், இப்போது எல்லாத்தையும் ஈ அடிச்சான் காப்பிதான். எங்கே கொண்டுபோய் விடப்போகிறதோ தெரியவில்லை. எல்லோருக்கும் ஒவ்வொரு ஐடன்டிட்டி இருக்கிறது. அது தான் அவர்களை தனித்துவமாய் ஆக்கிக்காட்டுகிறது. எல்லோரும் எல்லாம் செய்தால் நமக்கும் பிறநாட்டவருக்கும் என்ன வித்தியாசம்? நாம் சிறிது சிறிதாக நமது ஐடன்டிட்டியை இழந்து கொண்டிருக்கிறோம்.

குமரன்: ஓரினச்சேர்க்கை அருவருப்புதான். இயற்கைக்கு எதிராக ஏன் செய்யவேண்டும்? அதற்காகத்தானே ஆண். பெண் என்று இரு வேறு ஜந்துக்களை இறைவன் படைத்தார். ஏனைய்யா இயற்கையை மாற்றப்பார்க்கிறீர்கள்? என்ன பார்வை மாறவேண்டும் என்றும் எனக்கு தெரியவில்லை. இந்த பார்வை சம்பந்தமாக கவர்மெண்டே கண்ணாடி ஒன்று கொடுத்தால் பார்வையை மாற்றிக்கொள்ளலாம். அதிலும் எனக்கு கண்ணாடி வேண்டாம். நான் கான்டாக்ட் லென்ஸ் யூஸ் பண்ணுகிறேன். சும்மா கொழுத்திப் போடாதீர்கள். திருநங்கைகளின் நிலை வேறு. அவர்களை சமூகம் வெறுக்காமல் ஆதரிக்கவேண்டும். மற்ற எல்லாரையும் போலவே நடத்த வேண்டும். அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கலாம். ஆனால் ஓரினச்சேர்க்கையாளர்களின் நிலை வேறு. அது கணக்கிலே வராது. தயவு செய்து திருநங்கைகளையும், ஓரினச்சேர்க்கையாளர்களையும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

September 28, 2006 9:46 AM  
Blogger Sivabalan said...

MSV முத்து,

இல்லை, அவர்கள் பெரிய ஆட்களா என்பதைவிட இந்த பிரச்சனையின் முக்கியதுவத்தை அனுவகவதே சரியான வழி என நான் நினைக்கிறேன்.

நிச்சயமாக ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்க கூடாது. ஆனால் இந்தப் பிரச்சனையில் விழுந்தவர்களை அரசாங்கம் சரியான முறையில் அனுக வேண்டும். அவர்கள் ஆட்கொல்லி நோய் எய்ட்ஸ் போன்றவற்றில் இருந்து காப்பற்ற படவேண்டுமெனில் இச்சட்டம் நிச்சயம் உதவும்.

தனி மனித உரிமையும் காப்பாற்ற பட வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

September 28, 2006 10:24 AM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

சிவபாலன்,
சும்மா ஜோக்காகத்தான் சொன்னேன்
:)

டிப்பிக்கல் அமெரிக ஸ்டாண் அப் காமெடியனின் பதில் அப்படித்தான் இருந்திருக்கும்.

"my boy friend is happier than I am"

:)

September 28, 2006 10:26 AM  
Blogger Sivabalan said...

சிறில்,

Now I got it.

:)

September 28, 2006 10:29 AM  
Blogger MSV Muthu said...

>>இச்சட்டம் நிச்சயம் உதவும்

இந்த சட்டம் உதவுமா? எவ்வாறு? அவர்களை அடையாளம் கண்டுபிடித்து திருத்தபோகிறீர்களா? தம் அடிப்பதை சட்டபூர்வமாக்கி எத்தனை பேரை தம் அடிக்கவிடாமல் கொன்சிலிங் செய்து தடுத்திருக்கிறீர்கள்? தண்ணியடிப்பதை சட்டபூர்வமாக்கி எத்தனி பேரம்மா நீ தட்த்துக்குனுக்கீற? சட்டபூர்வமாக ஆக்கப்பட்டால் எத்தனை பேர் தைரியமாகச் செய்வார்கள்? இந்தியாவிலிருக்கும் பாப்புலேஷனில் இந்த எக்ஸ்ப்லோஷன் எப்படி இருக்கும்? சட்டமாக்கிவிட்டால் வாபஸ் பெருவது இயல்பான காரியமா? ஊக்குவிக்ககூடாது என்கிறீர்கள் ஆனால் சட்டமாக்க வேண்டும் என்கிறீர்கள். முன் பின் முரணாக இருக்கிறதே? சட்டம்போட்டால் அது ஊக்குவிப்பதாகாதா? என்ன மிஞ்சிப்போனால் ரோட்டின் ஓரத்தில் சென்னைசில்க்ஸ் விளம்பர போர்டால் மறைக்கப்பட்டு "ஓரினச்சேர்க்கை தவறு" என்று பச்சைசதுரமோ, மஞ்சள் வட்டமோ கொண்ட போர்ட் ஒன்று மழையில் நனைந்து மங்கிபோய் நிற்கும். வேற என்ன செய்வீர்கள்?


>>தனி மனித உரிமையும் காப்பாற்ற பட வேண்டும்

என்னது மனித உரிமையா? உண்மையாகவா? நீங்கள் என்னை இன்னைக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைய செய்கிறீர்கள். வேறு என்னவெல்லாம் மனித உரிமை ?

September 28, 2006 10:53 AM  
Blogger Sivabalan said...

ஒவ்வொரு மனிதனும் மற்றவர்களுக்கு துன்பமில்லாமல் வாழ உரிமையுள்ளது.

நான் ஊக்குவிக்கவோ அதரிக்கவோ இல்லை.

September 28, 2006 11:07 AM  
Blogger செந்தில் குமரன் said...

MVS Muthu கடவுள் மனிதனைப் படைத்தார் ஆட்டுக் குட்டியைப் படைத்தார். அவர் சொன்னபடி தான் மனிதன் நடந்து கொண்டிருக்கிறான் என்பதை எல்லாம் நான் நம்பவில்லை. மனிதன் இந்த பூமியில் உருவானது ஒரு cosmic accident. இதில் இறைவன் எதையும் எதற்காகவும் படைத்தார் அவர் சொன்னதால் மனிதன் இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்பதை எல்லாம் நான் நம்பவில்லை.

ஓரினச் சேர்க்கை உங்களுக்கு அருவெறுப்பாக இருந்தால் நீங்கள் ஒதுங்கி போய் விடுங்கள். ஆனால் அவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் அப்படித் தான் இருக்க வேண்டும் என்று யாரும் யாரையும் சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.

இது தம் அடிப்பது தண்ணி அடிப்பது போல ஒரு நோய் இல்லை இது அவர்களுடைய பாலியல் உணர்வு அவ்வளவே.

ஆண் பெண் உறவில் கூட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான உறவுகள் பிடிக்கும். சிலருக்கு ஓரல் செக்ஸ், சிலருக்கு வேறு வகை. இவை எல்லாம் கூட உங்களுக்கு அருவெறுப்பாக தெரியலாம் அதற்காக அதை எல்லாம் தடை செய்ய வேண்டும் என்று கேட்பீர்களா?

இந்த உலகில் மற்றவருக்கு மனதாலும் உடலாலும் துன்பம் விளைவிக்காமல் யார் வேண்டுமானலும் எப்படி வேண்டுமானலும் இருக்கலாம் அப்படி இருந்தால் போதும்.

மலம் பற்றிய அருவெறுப்புதான் மலம் அள்ளுபவர்களை தாழ்மை படுத்திப் பார்க்க வைத்து ஜாதிய வெறிகளை உண்டு பண்ணியது. நாம் மலத்தை அருவெறுப்பாகத் தான் இன்றும் பார்க்கிறோம். அந்த மலம் நம் உடலில் இருந்து தான் வெளியாகுகிறது என்பதைப் பற்றி கூட உணராமல்.

இப்படி உங்களின் irrational பீலிங்க்ஸ்காக இப்படித் தான் வாழ வேண்டும் என்று யாரோ சொல்லிக் கொடுத்தார்கள் என்பதற்காக எல்லாம் அது எல்லாமே சரி என்று நம்பி வாழ வேண்டிய அவசியம் இல்லை. மைனாரிட்டியாக இருப்பதால் நாம் அவர்களை நம் இஷ்டப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது எல்லாம் சரியில்லை.

உங்களின் இந்த பார்வை மேல் ஜாதியினர் தலித்துகள் மேல் கொண்டிருந்த பார்வை என்பதை மறக்காதீர்கள்.

இது ஒன்றும் நோய் அல்ல குணப்படுத்துவதற்கு. இது ஒருவருடையா பாலியல் உணர்வுகள் அவ்வளவே மற்றபடி அவர்கள் உங்களையும் என்னையும் போல சாதாரண மனிதர்களே.

இயற்கைக்கு எல்லாம் இது ஒன்றும் புரம்பான விஷயம் இல்லை. மனிதன் தனக்குத் தானே ஏன் என்று தெரியாமல் கொண்டிருக்கும் irrational feelings தான் இவை எல்லாம்.

இதனை ஆதரிக்கவும் கூடாது எதிர்க்கவும் கூடாது ஆண் பெண் உறவு போலவே இதுவும் என்பதை உணர வேண்டும்.

September 28, 2006 11:45 PM  
Blogger புதுமை விரும்பி said...

ஓரினச்சேர்க்கை, என்பதை ஒரு வித மன நோய் என்று வகைப்படுத்தி, அதில் ஈடுபடுபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதே சரியான முடிவாகும். இதை சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் போது, மனிதனுக்கு தன் அடுத்த கட்ட விகார நடவடிக்கைகளான குழந்தைகளுடன் உடலுறவு, பலருடன் உடலுறவு போன்ற நிலைகளுக்கு நகர்வது மிக எளிதாகிவிடும். அதையும், தனிமனித சுதந்திரத்திற்கு உட்பட்டது என்று சட்ட ரீதியாக அங்கீகாரம் பெற்று விடவும் கூடும். காலடியில் இருக்கிற உலகத்துக்கு திருப்தியடையாத மனிதனுக்கு, ஒட்டு மொத்த பிரபஞ்சத்தைக் கொடுத்தாலும் திருப்தி வராது.

September 29, 2006 7:47 AM  
Blogger phantom363 said...

it is estimated that 10% of any population mix, has same sex tendencies. this could vary from very strong to mild. :)

it has also been established, that homosexuality is a genetic feature. it is not a sickness that can be cured by medicine or prayers :(

while we may have strong views one way or the other, all of that will be challenged, when our own children declare themselves to be gay. would be discard all those years of love and affection for this one behaviour that we may disprove?

September 29, 2006 4:57 PM  
Blogger Sivabalan said...

phantom363,

//all those years of love and affection for this one behaviour that we may disprove? //

Good question.

Thanks for visit.

September 29, 2006 5:17 PM  
Blogger Sivabalan said...

குமரன் எண்ணம்,

மீன்டும் வந்து விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி.

September 29, 2006 5:20 PM  
Blogger Sivabalan said...

புதுமை விரும்பி,

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

வருகைக்கு நன்றி

September 29, 2006 5:22 PM  
Blogger GiNa said...

//இந்தியாவில் நண்பர்கள் கைக்கோர்த்துச் சென்றால் இதுநாள் வரையாரும் தவறாக பார்பதில்லை. இனி அப்படி செல்ல முடியுமா என்று தெரியவில்லை ! //

அமெரிக்காவில் வேலை செய்ய போயிருந்தபோது கிடைத்த முதல் அறிவுரை இது தான் - சும்மா நம்ம ஊர் மாதிரி தோள்ல்ல கை போட்டு ரோட்டுல போனீங்கன்னா உங்களை கேய் ன்னு நினச்சுப்பாங்க, ஜாக்கிரதை.

இது கண்டிப்பாக இயற்கைக்கு விரோதம்தான். அமெரிக்காவில் கலிபோர்னியா, மாசசூஸட்ஸ் போன்ற இடங்களில் ஓரின திருமணத்தை அங்கீகரிக்க பாடுபடுகிறார்கள். இது தவறில்லை என்று குழந்தைகளுக்கு மூளைச்சலவையும் ஆரம்பித்தாகிவிட்டது. ஒரு ஊரில் ஒரு ராஜா, அவர் இன்னொரு ராஜாவை கல்யாணம் செய்துகொண்டார் என்ற மாதிரி!

இப்படியே போனால் அடுத்து மனிதன் மிருகங்களை திருமணம் செய்துகொள்ளலாம் தானே?

September 29, 2006 8:50 PM  
Blogger லொடுக்கு said...

ஆமாம்! அப்படியே, விலங்குகளுடன் உறவு கொள்ளலாம், கல்யானத்துக்கு முன் உறவு கொள்ளலாம், சிறு குழந்தைகளுடன் உறவு கொள்ளலாம், இப்படி எத்தனையோ கொள்ளலாம்கள் உள்ளன. அத்தனையையும் ஆதரித்து சட்டம் கொண்டு வர வேண்டியது தானே. இதுவும் பாலிய உணர்ச்சி தொடர்புள்ளவைகள் தாமே. சட்டம் உதவுமாம், மனித உரிமை காக்கனுமாம். நல்ல இருக்கய்யா கூத்து. மனித தோன்றியவற்றை எல்லாம் ஆதரித்து அனுமதித்தால்.... நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

September 30, 2006 12:39 AM  
Blogger Sivabalan said...

இங்கே வந்து கருத்து சொல்பவர்கள் ஏற்கனவே பதில் சொல்லிய கேள்விகளை மீன்டும் கேட்க வேண்டாம். அவ்வாறு வரும் பின்னூடன்ங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

September 30, 2006 7:47 AM  
Blogger Sivabalan said...

flemingo,

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

வருகைக்கு நன்றி

September 30, 2006 7:48 AM  
Blogger Sivabalan said...

லொடுக்கு பாண்டி,

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

வருகைக்கு நன்றி

September 30, 2006 7:49 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv