ஒரே ஆண்டில் 27% இடப் பங்கீடு
கலை, சமூகவியல் மற்றும் இலக்கியப் பாடங்களில் ஒரே ஆண்டில் 27 சதவீத இடப் பங்கீட்டை அமல்படுத்தலாம் என்று மொய்லி கமிட்டி அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
27 சதவீத இடப் பங்கீட்டை 3 ஆண்டுகளில் படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று பொதுவாக பரிந்துரைத்து இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. இப்போது இதுபற்றி மேலும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
கலை, சமூகவியல், மற்றும் இலக்கியப் பாடங்களில் முதல் ஆண்டிலேயே 27 சதவீத இடப் பங்கீட்டை அமல்படுத்தி விடலாம். மற்ற பாடங்களில் குறைந்தது 2 ஆண்டுகளில் முடியாவிட்டால் 3 ஆண்டுகளில் அமல்படுத்திக் கொள்ளலாம்.
இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐ.ஐ.டி.) முதன்மை மருத்துவக் கல்லூரிகளான எய்ம்ஸ், ஜிப்மர் போன்றவற்றில் 2007 முதல் ஆண்டுக்கு 9 சதவீதம் வீதம் 3 ஆண்டுகளில் அமல்படுத்தலாம்.
6 ஐ.ஐ.எம். கல்வி நிலையங்களில் இதை அமல்படுத்துவதற்கு ஒரே மாதிரியான திட்டங்கள் வகுக்கப்படவில்லை.
நன்றி: தமிழ்முரசு, THE HINDU.
7 Comments:
அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் முதல் ஆண்டில் 6 சதவீதம், அடுத்து வரும் ஆண்டுகளில் 7 மற்றும் 14 சதவீதம் வீதம் அமல்படுத்த வேண்டும். பெங்களூர் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் முதல் ஆண்டில் 7 சதவீதம், இரண்டு, மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் 10 சதவீதம் வீதம் அமல்படுத்த வேண்டும். இதுபோல் ஒவ்வொரு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களுக்கும் தனித்தனி “பார்மூலா“ வகுக்கப்பட்டு உள்ளது.
ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் குறைந்தது 62 வயது வரை பணியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும். தகுதி வாய்ந்தவர்களுக்கு ஓய்வு வயதை 65 வரை கூட நீடிக்கலாம். திறமை மிக்க எல்லா பிரிவு மாணவர்களுக்கும் மாதம் ரூ.12,000 கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்க வேண்டும்.
9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் தேர்வு நடத்த வேண்டும். இதில் தேறிய மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்.
அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்க பி.எஸ்சி, மற்றும் எம்.எஸ்சி படிப்புகளில் மாணவர்களை தெரிவு செய்து “பெல்லோஷிப்“ திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
இட ஒதுக்கீடு என்பதற்குப் பதில் 'இடப் பங்கீடு' என்று பயன்படுத்துவோமா?
தருமி அய்யா
நீங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள்..
நிச்சயம் நல்ல வார்த்தை. இடப்பங்கீடு என்பது உரிமைக்கான குரல்..
இப்பதிவில் மாற்றிவிடுகிறேன்.
வருகைக்கு மிக்க நன்றி
தருமி அய்யா
மாற்றம் செய்துவிட்டேன்.
நன்றி
Post a Comment
<< Home