திருந்த வேண்டாம்...திருந்த வேண்டாம்...
இவர் இந்து மதத்தை சார்ந்தவர்
இவர் கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர்
இவர் முஸ்லிம் மதத்தை சார்ந்தவர்
இவர் உயர் சாதியை சார்ந்தவர். இவர் தான் இந்த சாதியில் பிறத்ததை மிகவும் பெருமையாக நினைப்பவர். அது கடவுளின் அருளால்தான் அவர் இந்த உயர் சாதியில் பிறந்தாராம்..
இவர் தாழ்ந்த சாதியில் பிறந்தவர். இதுவும் கடவுள் சித்தமாம்...ம்ம்ம்ம்ம்...
அட இப்புட்டுத்தான நம்ம ஆட்டம்..
67 Comments:
//அட இப்புட்டுத்தான நம்ம ஆட்டம்..//
இது புரியாததால் தானே சிவபாலன் மனிதன் இந்த ஆட்டம் போடுகிறான்?:-((
நல்ல அருமையான பதிவு
நன்றி
செல்வன்
செல்வன் சார்
நல்லா சொன்னீங்க..
உணமைதான் சார்...
வருகைக்கு மிக்க நன்றி.
மனிதனை தோல் உரித்து உள்ளே இருப்பதை கட்டுமான பாணியில் காமித்து விட்டீர்கள்.
நிறைய பேருக்கு தன் தோலுக்கு கீழே எலும்பு கூடு இருப்பதே ஞாபகம் இருக்கிறதா இல்லையா என்று மறந்து விடும் என்று எண்ணுகிறேன்.
எத்தனை முகமூடிகள் ஒரு மனிதனுக்கு தேவைப்படுகிறது, சிவா? எத்தனை, எத்தனை... எப்படி எப்படியெல்லாம் கவிழ்பதற்கென... வித விதமான கலர்களில் முகமூடிகள் உங்களுக்கு ஒன்று, எனக்கு ஒன்று, அவருக்கென்று ஒன்று... எல்லாமே கால்சிய கட்டுமான எலும்புக் கூடை வைத்துக் கொண்டு நாம் ஆடும் ஆட்டம்தான் எத்துனையடா...
சக வலைப்பதிர்களே,
நான் இங்கே எந்த ஒரு குறிப்பிட்ட சாதியினரையும் சாடவில்லை. அனைத்து சாதியிலும் உள்ள சாதி பேய் பிடித்த ஜடங்களை மட்டுமே சாடுகிறேன்.
ஒரு உ.ம், இங்கே கூறுகிறேன்...
என்னுடையா கிராமம் கோவையில் உள்ளது. அந்த கிராமத்தில் "க----" சாதியை சார்ந்த பல பேர் என்னிடம் பேசும் போது இங்கே குறிப்பிட்டதுபோல் தான் கூறுவார்கள். அதைத்தான் சாடினேன்..
இதே போல் திருநெல்வேலி, மதுரை, கருர், வேலூர், சென்னையை சுற்றிய உள்ள பகுதி.. இதில் உள்ளர்வர்கள் அவர்கள் சாதியை பெருமையாக நினைத்துக் கொள்வதை நானே பார்த்திருக்கிறேன்.
என் சாதியிலும் சில பேய்கள் உள்ளது..
என்னமோ போங்க..
இதை சாடவே இப்பதிவு.
அப்பறம் சொல்ல மறந்துட்டேன்..
இங்கே வலைப்பதிவுகளிலும் சில ஜாதி வெறி பிடுத்த ஜடங்கள் உள்ளது..
அதுகளை சாடவும் இப்பதிவு.
சிபா...!
கவிதை கட்டுரை இன்னும் இத்தியாதிகளை எழுதி புரியவைக்க முயல்வதை - ஒரு எலும்பு கூடு படத்தைப் போட்டு தாக்கி புரியவச்சிட்டிங்களே !
பாராட்டுக்கள் !
பாராட்டுக்கள் !!
பாராட்டுக்கள் !!!
ஐயா, திருந்த வேண்டாம் உணர்ந்தால் போதும்
சிவபாலன்,
எவ்வுளவோ முறை எவ்வுளவோ பேர் சொல்லி ஆச்சி இன்னும் திருந்துகிற மாதிரி தெரியவில்லை. அது போன்ற பதிவுகளையும் பதிவர்களையும் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் (அட்லீஸ்டு பின்னூட்டம் இடாமல் இருக்க வேண்டும்)அப்பொழுது தான் திருந்துவார்கள்.
பரவாயில்லை, படத்தோட விளக்கம் அளித்தாலும் இந்த ஜன்ங்களுக்கு புரியவா போகுது??
அப்டி போடுங்க அரிவாள...
"ஆடிய ஆட்டமென்ன" மாதிரி இருக்குது பதிவு
அந்த எலும்புக்குள்ள இருக்கிற marrow வரை சாதி, மத வெறி நிறஞ்சு போய் இருக்கு.
ம்..ம் ஏதோ ஒரு முயற்சி. எங்காவது, யாருக்காவது இது கொஞ்சம் மனச தொடாதா..? முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
சிபா...!
என்ன சாதாரணமாக சொல்லிடிடிங்க...?
எழும்புக் கூடாக இருந்தால் என்ன ?
அவை உறங்குவதற்கும் தனி சுடுகாடுகள் கூட உண்டு !
பாராட்டுக்கள் !
பாராட்டுக்கள் !!
பாராட்டுக்கள் !!!
Very good post !!!
நல்ல ஒரு கருத்தைச் சொல்ல வரும்போது, அத்தனை பேரில் உயர்ந்த சாதி என்று தங்களைச் சொல்பவர்களை மட்டும் தனித்து தாக்குவது போன்ற ஒரு தோற்றத்தை, "கடைசி இரு படங்களின் அடியில் மட்டும்" எழுதியுள்ள உங்கள் குறிப்புகள் காட்டுவது போன்று அமைந்திருப்பதைத் தவிர்த்து, மற்றபடி உங்கள் கருத்துடன் நான் முழுதும் ஒத்துப் போகிறேன்.
இவர் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர், இவர் தாழ்ந்த சாதி என்று சொல்லும் இனத்தைச் சேர்ந்தவர் என்று மட்டும் போட்டிருந்தால், நேர்மையானதாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.
புரிபவர்களுக்கு புரிந்துதான் இருக்கிறது.
புரியாதவர்களுக்கு இது போன்று 100 பதிவுகள் போட்டாலும் புரியப் போவதில்லை.....
நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்டிருக்கிற அத்தனை பேர்க்கும் சேர்த்து!
அதற்காக சொல்வதை நிறுத்தாமல் சொல்லுங்கள்.
பதிவின் தலைப்பும் தன்னம்பிக்கையின்மையாய் இருக்கிறது.
உங்கள் மேல் உள்ள அன்பினால் சொன்னேன்.
தவறாக எண்ண வேண்டாம்.
:))
கடமையில் கண்ணாக இருப்பவர் நம் எஸ்.கே அய்யா(?) தான் என்ற என் கருத்து உறுதியாகி உள்ளது.
கடமை என்னவா?
ஆளை விடுங்கப்பா:))
சிவா,
கொஞ்சம் நகைச்சுவையாக பரிணாம ரீதியாக, ஒவ்வொரு மதத்தினருக்கும் ஏதாவது ஒரே ஒரு இடத்தில் மட்டும் தன் தன் கடவுளர்களின் அம்மார்க்-ஆக எலும்பு கட்டுமானத்தில் ஒரு சின்ன திருத்தமோ அல்லது ஒரு இத்தியாதி எலும்போ துருத்திக் கொண்டு இருப்பதைப் போன்று பரிணமிக்க வைத்திருந்தால், எவ்வளவு ஈசியாக இருந்திருக்கும், இந்த பிரட்சினைகளையெல்லாம் அணுகுவதற்கு :-))
உங்களால் யூகிக்க முடிகிறதா? Star Trek Episodeகள் பார்த்ததுண்டா, இல்லையெனில் முயற்சியுங்கள் பிடித்திருக்கும்... அதில் Star Trek Enterprises will travel from planet to planet and galaxy to galaxy and interact with other inhabitants of the respective celestial bodies.
ரொம்ப அற்புதமா இருக்கும், பாருங்க. :-)
சிவபாலன்,
நேற்று முழுக்க கணனிப்பக்கம் வராததால் இப்பபதிவை இப்போதுதான் பார்த்தேன். ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த பதிவு. வள்ளுவன், புத்தன்,பாரதி,அம்பேத்கர், பெரியார் என வழிவழியாக வந்தவர்கள் இதனை எடுத்துரைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கொலி போலத்தான் இக்கருத்துக்கள் நம்மவரிடையே இருக்கிறது.
"சமரசம் உலாவும் இடமே,
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே" எனும் பாட்டையும் இப்பதிவில் இணைக்க முடியுமாயின் இணைத்து விடுங்கள். பதிவுக்கு இன்னும் மெருகூட்டும்.
சிவபாலன், தோலுரித்துக் காட்டுதல் என்பது இது தானோ? :-)))
சாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடினாள் தமிழ்க்கிழவி. நீங்கள் படமாக இட்டாலும், வித்தியாசம் காணக் கூடிய சாதிகள் அவை இரண்டு தான்.
பேசாமல் இது போன்ற படங்களை ஊர்த் திருவிழாக்களில் வைத்தாலாவது இன்னும் இரண்டு மண்டைகளிலாவது ஏறுமோ?
தெகா
மிக அருமையாக முகமூடி கான்சப்ட் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்..
உங்களுடன் விவாதிக்க இன்னும் நிறைய விசயங்கள் இருக்கிறது. அனைவருக்கும் பதில் சொல்லிவிட்டு மீன்டும் வருகிறேன்.
வருகைக்கு மிக்க நன்றி
GK,
இந்த எழும்பு கூடுகள் பல பாடங்களை அமைதியாக கற்றுக்கொடுப்பதை எனக்கு மிகவும் பிடிக்த்திருந்தது.. அதனால்தான் இந்தப் பதிவு.
வருகைக்கு மிக்க நன்றி
உசா அவர்களே,
நீங்க சொன்னமாதிரி உணர்ந்தாலே பெரிய விசயம்தான்.
வருகைக்கு மிக்க நன்றி
சந்தோஷ்,
நீங்கள் சொல்வதும் சரிதான்.. அவர்கள் திருந்துவார்கள் என நம்புவோமாக..
வருகைக்கு மிக்க நன்றி
வெளிகண்ட நாதர் சார்,
நீங்க சொன்னமாதிரி இந்தப் படங்களைப் பார்த்து திருந்துவார்கள் என நம்பிக்கொண்டே இருப்போம்..
வருகைக்கு மிக்க நன்றி
சிவபாலன்,
நீங்கள் சொன்னதைத்தான் நானும் சொன்னேன். ஆனால் என்னை கெட்டவன் என்கிறார்கள்!!!!!!!
இங்கேயும் வந்து அந்த ஜாதி வெறியனின் ஆதரவாளர்கள் உங்களுக்கு எதிர்ப்பு கூறியதை நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
சிறில்
ஆமாங்க..கடைசியில் இதுதான் .." ஆடிய ஆட்டமென்ன"...
வருகைக்கு மிக்க நன்றி
தருமி சார்
அருமையாக சொன்னீங்க..
எழும்புக்கூடிலும் சாதி/மத வெறி நிறைந்திருக்கு..
திருந்துவார்கள் என நம்புவோம்..
வருகைக்கு மிக்க நன்றி
GK,
நானும் இந்தப பதிவிடும்போது யோசித்தேன்.. தனி சுடிகாட்டைப் பற்றியும்..
ம்ம்ம்ம்.. உண்மையிலே மிகவும் வருந்தக்கூடிய விசயம்தான் இந்த தனி சுடுகாடு..ம்ம்ம்ம்ம்
வருகைக்கு மிக்க நன்றி
எ.எ.அ.பாலா,
பாராட்டுக்கு நன்றி.
வருகைக்கு மிக்க நன்றி.
SK அய்யா,
நீங்கள் சொல்வதுபோல் நானும் வெறும் உயர்சாதி தாழ்ந்தசாதி என்று குறிப்பிடலாம் என நினைத்தேன்..
ஆனால் அது போய் சேர வேண்டியவர்களுக்கு போய் சேராது என நான் நினைத்ததால் இங்கே கொடுத்தேன்.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
வருகைக்கு மிக்க நன்றி
முத்து,
:)
வருகைக்கு மிக்க நன்ற
தெகா,
மிக அருமையான கருத்தை சொல்லியிருக்கீங்க..
ஆமா இல்ல... ஒவ்வொரு மத்ததினருக்கும் எழும்புக்கூட்டில் வித்தியாசம் இருந்திருக்கலாம்.. ம்ம்ம்ம்ம்
வருகைக்கு மிக்க நன்றி
வாய்மை ஒரு ஜாதி,பொய்மை ஒரு ஜாதி. இது போதும்.
யாருக்குக் கவலை சிவபாலன்?
நல்ல சிந்தனை.
நன்றி.
வெற்றி,
நீங்க சொல்வதுபோல் செவிடன் காதில் சங்குமாதிரிதான்..பார்ப்போம் ஏதாவது மாற்றம் வருமா என..
நீங்க சொல்லும் பாடலின் சுட்டி இருந்தால் கொடுங்களேன்.. இங்கே இனைத்துக் கொள்கிறேன்.
வருகைக்கு மிக்க நன்றி
வைசா,
நச்சுன்னு சொன்னீங்க.. சூப்பர்...
வருகைக்கு மிக்க நன்றி
சிபா...!
எந்த எழும்பு கூடாக இருந்தாலும் தொட்டால் கண்டிப்பாக குளிக்க வேண்டும் !
கண்ணபிரான் இரவி சங்கர்,
நல்ல கமென்ட்ங்க.. இரசித்தேன்
உண்மைதான் சாதி இரண்டொழிய வேறில்லை..
நீன்கள் சொல்லும் யோசனையும் நல்ல யோசனைதான்.. மக்கள் கூடுமிடமெல்லாம் வைக்கலாம்..
வருகைக்கு மிக்க நன்றி
Doondu,
வருகைக்கு மிக்க நன்றி
வல்லிசிம்ஹன்,
வருகைக்கு மிக்க நன்றி
சிவபாலன்,
/* நீங்க சொல்லும் பாடலின் சுட்டி இருந்தால் கொடுங்களேன்.. இங்கே இனைத்துக் கொள்கிறேன். */
இருக்கவே இருக்கிறதே Musicindiaonline.com. இதோ இப்பாடலுக்கான சுட்டி.
சுடுகாடுதானாம் உண்மையிலேயே சமத்துவம் உள்ள இடம் என்கிறார் இப் பாடலாசிரியர் மருதகாசி.
http://www.musicindiaonline.com/p/x/BAfgBy.y8t.As1NMvHdW/
சக வலைப்பதிவர்களே
இங்கே உள்ள பின்னூடங்களை யாரையேனும் வருத்தப் படவைத்தால் தனி மடல் அனுப்பவும். நிச்சயம் ஆவன செய்யப்படும்.
நன்றி!! நன்றி!! நன்றி!!
வெற்றி,
பாடலின் சுட்டிக்கு மிக்க நன்றி.
இப்பதிவுடன் இனைத்துவிடுகிறேன்.
நன்றி!!
சந்தோஷ் சொன்ன அந்த பின்னூட்டம் -- எனக்கு சரி என்றுபடுகிறது.
நல்ல மற்றும் தேவையான பதிவு சிவபாலன்.
நல்ல பதிவு. சபாஷ்!
பாராட்டுக்கள்
சிவபாலன்,
சந்தோஷ் குறிப்பிட்ட அந்த ஆச்சி?
நான் கொஞ்ச காலம் பதிவுகள படிக்காம விட்டுட்டதால கேக்கேன்..
சரி அது இருக்கட்டும்..
மூனே மூனு படங்கள போட்டு மூனு பக்கத்துல சொல்றத நச்சுன்னு சொல்லிட்டீங்க..
ஆனா ஒன்னுங்க.. இதுலயும் சில பேர் என்னெத்தான் சொல்றேன்னு கச்சைக் கட்டி வந்து நிக்கறத பார்த்தா..
சரி விடுங்க..
இந்த பதிவில் கருத்து கூறிய விதம் பிடித்திருக்கிறது.
பதிவுக்கு நன்றி.
GK,
// எந்த எழும்பு கூடாக இருந்தாலும் தொட்டால் கண்டிப்பாக குளிக்க வேண்டும் //
Ha ha ha...
போட்டு தாக்குங்க..
வடுவூர் குமார்,
வருகைக்கு மிக்க நன்றி
குமரன் எண்ணம்,
வருகைக்கு மிக்க நன்றி
சிபி,
வருகைக்கு மிக்க நன்றி
சந்திரவதனா,
வருகைக்கு மிக்க நன்றி.
ஜோசப் அய்யா,
உண்மையில் அந்த ஆச்சி யாரென்று எனக்கும் தெரியவில்லை.
ஆமாம் அய்யா, நாம் சொல்லிக் கொண்டே இருப்போம், கேட்பவர்கள் கேட்கட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
பூங்குழலி,
வருகைக்கு மிக்க நன்றி.
புத்தி உள்ளவர்களுக்கு உரைக்கும்,
இல்லாதவர்களுக்கு கசக்கும்.
அருமையான பதிவு.
எளிமையான விளக்கத்தின் மூலம் உயர்ந்த உண்மைகளை விளக்கி விட்டீர்கள்....
சிவபாலன்,
வித்யாசமாக சொல்லியுள்ளீர்கள்..
//என்னுடையா கிராமம் கோவையில் உள்ளது//
அட.. நீங்க நம்ம ஊருங்களா??
Franco
Thanks for your visit.
வெங்கட்ராமன்,
பாராட்டுக்கு நன்றி!
வருகைக்கு மிக்க நன்றி!
ஆழியூரான்,
பாராட்டுக்கு மிக்க நன்றி!
வருகைக்கு நன்றி!
ராஜ்வனஜ்,
ஆமாங்க. நம்ம ஊரு வடவள்ளி. மருதமலை பக்கம்.
வருகைக்கு மிக்க நன்றி
ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஒரு பாலிதீன் கவரே சொந்தமடா!(எரிச்சா அவ்ளோதான் வருமாம்)
இளா,
// ஒரு பாலிதீன் கவரே சொந்தமடா! //
அருமையாக சொன்னீங்க..
வருகைக்கு மிக்க நன்றி
சிவபாலன்,
அசத்தல் பதிவு. நச்ன்னு இருக்கு.
//நீங்கள் சொல்வதுபோல் நானும் வெறும் உயர்சாதி தாழ்ந்தசாதி என்று குறிப்பிடலாம் என நினைத்தேன்..
ஆனால் அது போய் சேர வேண்டியவர்களுக்கு போய் சேராது என நான் நினைத்ததால் இங்கே கொடுத்தேன்.//
//இவர் உயர் சாதியை சார்ந்தவர். இவர் தான் இந்த சாதியில் பிறத்ததை மிகவும் பெருமையாக நினைப்பவர். அது கடவுளின் அருளால்தான் அவர் இந்த உயர் சாதியில் பிறந்தாராம்..
//
ஒருவரை*(எலும்புகூட்டை) தானே சொன்னார் பொதுபடையா சொன்னா மாதிரி இல்லையே SK. அதுக்குள்ள ஏன் டென்ஷன் ஆகறீங்க. அப்படி நினைப்பவன் தானே டென்ஷன் ஆகனும்.
அட ஏதோ உள்குத்து பதிவுன்னு எட்டி பாக்காமலே இருந்துட்டேன். இப்பதான் தெரிஞ்சது இது வெளிக்குத்து பதிவுன்னு
நல்ல பதிவு.
நன்றி
ஜெய்சங்கர் (We the people),
உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வருகைக்கு மிக்க நன்றி
தம்பி
உங்கள் கருத்து என்னை சிந்திக்க வைக்கிறது.
ம்ம்ம்ம்.
உங்கள் கருத்துக்கும் பாராட்டும் மிக்க நன்றி.
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment
<< Home