என்ன செய்கிறார் அன்புமணி இராமதாசு??
டெல்லியில் தலைகாட்டிய டெங்கு நோய் இன்று 18 மாநிலங்களில் பரவி 56 உயிர்களை பலிவாங்கியுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 3500 பேர் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். கொள்ளை நோய் என அறிவிக்காவிட்டாலும் நிலைமை மோசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார செயலர் பி.கே.ஹோட்டா - எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்படி 3500க்கும் அதிகமானோர் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். நிலைமை சீரியசாக இருந்தாலும், கையை விட்டு போகவில்லை.
இதற்கிடையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மட்டும் புதிதாக 28 பேர் டெங்கு நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இம் மருத்துவமனையில் 6 ஆயிரம் பேருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நிலைமை மோசமானவர்கள் மட்டுமே மருத்துவமனையில் வைத்து கவனிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் மருந்து மாத்திரை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நோயை கொள்ளை நோயாக அறிவிக்க வேண்டும் என எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிருப்பு டாக்டர்கள் சங்க தலைவர் அனில் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
Delhi has reported 886 cases, followed by Kerala (713), Gujarat (424), Rajasthan (326), West Bengal (314), Tamil Nadu (306) and Maharashtra (226), Uttar Pradesh (79), Haryana (65), Karnataka (59) and Andhra Pradesh (9).
நன்றி: தமிழ் முரசு, The Hindu
20 Comments:
தமிழ்நாட்டில் சிக்குன்குனியாவே இல்லை என தமிழக அரசு மறுத்து வருகிறது. கேரளத்தில் பலர் இதனால் இறந்து விட்டார்களாம்.
என்ன சொல்லி அரசியல்வாதிகளுக்கு புரியவைக்க? உள்லாட்சி தேர்தலை கவனிப்பார்களா அல்லது இதை கவனிப்பார்களா?
என்னவோ போங்க
செல்வன் சார்
எனக்கும் ஒன்னும் புரியமாட்டீங்குது..
என்ன பண்ணிட்டு இருக்காங்க இந்த அமைச்சகத்தை சார்ந்தவங்க மற்றும் இந்த அமைச்சர்கள்..
சரியான திட்டமிடல் இல்லாததையே இது காட்டுகிறது.
நோயை கட்டுப்படுத்த தவறிவிட்டார்கள்.
சிக்கன்குனியாவும் பயமுறுத்துகிறது.
மிகவும் வருத்தமளிக்கிறது.
சுதந்திரம் அடைந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆகியும், கழிவு நீர் மேம்பாட்டைக் கவனிக்கத் தவறிய அரசுகளின் [எவன் ஆண்டா என்ன?] மெத்தனப் போக்கே இந்த அவலங்களின் காரணம்.
இப்போதைய அரசும் அமைச்சரும் மௌனம் சாதிப்பதும், மறுப்பதும் மகா கேவலம்!
இத்தனைக்கும் அவர் ஒரு மருத்துவர் வேறு!
வெட்கக்கேடு!
உயிர் போனா என்ன உள்ளாட்சித் தேர்தல்தான் முக்கியமுன்னு இருக்காங்க. அந்த எழவு நடந்த பின்னாலாவது எதாவது நடவடிக்கை எடுக்கறாங்களான்னு பார்க்கலாம்.
SK அய்யா,
உண்மைதான். கழிவு நீர் உள் கட்டமைப்பு விசயங்களைப் பற்றி யாருமே கவலைப் படவில்லை.
இந்தியாவின் வளர்ச்சியை இது போன்ற விசயங்கள் நிச்சயம் பாதிக்கும்.
நீங்கள் சொல்வதுபோல் இவர் ஒரு மருத்துவராக இருந்தும் இதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தவறவிட்டுவிட்டார்...
என்க்கு கோவம் கோவமாய் வருகிறது.
//அந்த எழவு நடந்த பின்னாலாவது எதாவது நடவடிக்கை எடுக்கறாங்களான்னு பார்க்கலாம்.//
:-)))
//சுதந்திரம் அடைந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆகியும், கழிவு நீர் மேம்பாட்டைக் கவனிக்கத் தவறிய அரசுகளின் [எவன் ஆண்டா என்ன?] மெத்தனப் போக்கே இந்த அவலங்களின் காரணம்.//
எஸ்.கே தலையில நச்சுன்னு ஒரு குட்டு வைச்சு சொல்லுங்க அப்பவாவது கேட்குதான்னு பார்ப்போம்...
அப்புறம் சிக்குன்குனியா தமிழகத்தில இல்லையா... எனக்குத் தெரிந்த இரண்டு பேருக்கே வந்து அவதியில இருக்காங்க (சென்னையில்), சிக்குன் ஃபீவரில்... இல்லையா, கெட்டது போங்க...
இகொ,
தமிழ் நாட்டிலும் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது.
சாத்துர் இராமசத்திரன் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை..
நீங்க சொன்னமாதிரி தேர்தலுக்கு அப்பறமாவது ஏதாவது செய்வார்கள் என் நம்புவோம்..
ஆனால் அதுக்குள்ள நிறைய பேர் பாதிக்கப்பட்டுவிடுவார்கள் போல் இருக்கிறது.
தெகா
உண்மைதான். முதலில் அரசாங்கம் நோயின் இருப்பை ஒத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அரசாங்க இயந்திரங்களைப் பயன்படுத்தி நோயை ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும்.
கலைஞர் அரசு தேர்தலுக்காக இதை ஒப்புக்கொள்ளவே மறுக்கிறது. அப்பறம் எப்படி கட்டுப்படுத்த முடியும்.
நீங்கள் சொல்வதுபோல் எனக்கு தெரிந்து
நான்கு பேருக்கு சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்..
//எஸ்.கே தலையில நச்சுன்னு ஒரு குட்டு வைச்சு சொல்லுங்க//
என்னங்க தெ.கா.?
இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு என் தலையில குட்டு வைக்கணும்ங்கறீங்க?!!
:))
கமா[,] போட மறந்துட்டீங்களா?
இல்லை நெசமாவே என்னைத்தானா?
:)
//என்னங்க தெ.கா.?
இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு என் தலையில குட்டு வைக்கணும்ங்கறீங்க?!!//
அட ஆமா, நீங்க சொன்ன பிறகுதான் கவனிச்சேன் ;-)) கமா, இல்லாம படிக்கும் பொழுது உங்க தலையில கொட்டு வைக்கச் சொல்ற மாதிரித்தான் இருக்கு :-))
சின்னச் சின்ன ஆசை~~~
எஸ்.கே தலையில் கொட்டு வைக்க ஆசை~~~
:-)))
அப்படிங்கிற கணக்காப் போச்சே...
இன்னும் தெளிவா சொல்லாம மழுப்பறீங்களே!
என்னை குட்டணும்னு சொல்றீங்களா இன்னமும்? :))
அப்படியே "மருத்துவரைக்" குட்டிட்டேன்னு சொல்லலாம்னு பாக்கறீங்க!
சரிதானே?
:)
நீங்க வேற. இதுக்கு அன்புமணி என்ன பண்ணுவாரு? அவரு ஏதாவது ஒரு இளம் (?!) சாதனையாளர் விருது வாங்க எதாவது ஒரு நாட்டுக்கு போக ரெடியாகிட்டிருக்காரோ என்னவோ? அவருக்கு எவ்வளவு வேளை இருக்கு? இதை தான் கவனிப்பாரா என்ன?
எனக்கென்னவோ, சிக்குன் குனியாவை இப்படி பரப்பினதுக்கு பின்னால் (எய்ம்ஸ்) வேணுகோபால் இருப்பாரோன்னு தோணுது.
ஸ்பெல்லிங் மிஸ்டேக்..
வேளை --> வேலை
(இந்த எழுத்துப் பிழையாரை எங்கே ரொம்ப நாளா காணோம்?!)
சிவபாலன்,
என்ன சொல்வது என்றே புரியவில்லை!
இப்படியான நோய்கள் பரவும் போது, இந் நோய் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறி, மேலும் பரவாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் சுகாதாரத்துறையோடு சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவோ பேர் இருக்க அன்புமணியை மட்டும் இப்படி கேள்வி கேட்பதற்கு பெயர்தான் வன்முறை.. இதை சும்மா கேட்காமல் இப்படி வலைப்பதிவில் எழுதிக்கேட்பதால் இதற்கு பெயர் ஊடக வன்முறை... உங்கள் பதிவை குறைந்தது நீங்கள் தவிர்த்து ஒருவராவது படித்தார் என்றால் இது வெகுசன ஊடக வன்முறை... அன்புமணி பாட்டாளி என்பதால் இது பாட்டாளி மக்கள் மீதான வெகுசன ஊடக வன்முறைகள்... மேலும் விபரங்களுக்கு இது குறித்து நான் எழுதிய பதிவுகளை படித்துப்பாருங்கள்.. ** விளம்பரம் :: வன்முறை என்பது மருத்துவக்குறிப்பா அல்லது மல்லாட்ட பருப்பா? **
மாயவரத்தான்,
இந்த விசயத்தில் அன்புமணி தனி மனி விமர்சனம் எனக்கு உடன்பாடில்லை. வேணுகோபலை இங்கே விமர்சிக்க வேண்டியதில்லை.
என்னை பொருத்தவரையில் இந்தியாவில் சுகாதர பிரச்சனைகளுக்கு அமைச்சர் என்றளவில் அன்புமணிதான் பொருப்பேற்கவேண்டும். அதனால் தான் அவரை சாடி இப்பதிவு. அவர் போர்கால அடிப்படையில் செயல்படவேண்டும் என்பதே என் கருத்து.
வருகைக்கு நன்றி
வெற்றி
மத்திய அரசு உடனடியாக இந்த நோய்களை கட்டுப்படுத்தவேண்டும். அதற்கு ஏற்ப சுகாதார அமைச்சகம் செயல்படவேண்டும்.
உடல் நலம் மிக மிக அவசியம்.
முகமூடி
வருகைக்கு நன்றி
படித்து விட்டீர்களா? படித்து விட்டீர்களா?
ஆப்பு இந்த வாரம்.. விறுவிறுப்பான பதிவுகளோடு... வலைப்பதிவுகளில் முதன்முறையாக... பல வித்தியாசமான புதிய தகவல்களுடன்...
டோண்டு மகள், மாயவரத்தான் புது ஐடி, ம்யூஸ் அனுப்பிய இஸ்லாமிய ஈபுக் போன்ற புதிய தகவல்களுடன்!
அரசியல், சமூக, பகுத்தறிவு வலைப்பூவிதழ்!
ஆப்பு,
வருகைக்கு நன்றி
Post a Comment
<< Home