லெப்டினென்ட் பார்த்திபனுக்கு வீர அஞ்சலி
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை லெப்டினென்ட் பார்த்திபன் (23) சரமாரியாக சுட்டுத்தள்ளினார். இதில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். நேருக்கு நேர் நடந்த இந்த சண்டையில் லெப்டினென்ட் பார்த்திபனின் மார்பில் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தார்.
பார்த்திபனின் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் நடராஜன் (60). இவர் சென்னையை அடுத்த பம்மல் அண்ணாநகர் 2வது மெயின் ரோட்டில் வசித்து வருகிறார்.
மேஜர் நடராஜனின் மனைவி தமிழ்ச்செல்வி. பம்மலில் உள்ள நாடார் கமிட்டி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். மூத்த பெண் புஷ்பா, பார்த்திபன் 2வது மகன், கடைசி தங்கை கார்த்திகா.
பார்த்திபன் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பி.எஸ்சி பட்டப்படிப்பு முடித்து விட்டு அதே கல்லூரியில் எம்.எஸ்சி முதுகலை படிப்பில் சேர்ந்து படித்து வந்தார்.
சென்னை ராணுவ அகாடமியில் பயிற்சியை முடித்து விட்டு கடந்த ஏழு மாதத்திற்கு முன்புதான் காஷ்மீர் எல்லையில் பணியில் அமர்த்தப்பட்டார்.
அங்கு நடந்த பல சண்டைகளில் பங்கேற்று, தீவிரவாதிகளை விரட்டியடித்தார். நேற்றுமுன்தினம் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 23 வயதில் தாய்நாட்டிற்காக பார்த்திபன் தனது உயிரை தியாகம் செய்துள்ளார்.
நன்றி: தமிழ்முரசு, THE HINDU.
4 Comments:
சிவபாலன்
இதயம் கனக்க வைத்த பதிவு. அவர் இறக்கவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார்.
எனது வீர லெப்டினென்ட் பார்த்திபனுக்கு அஞ்சலியை சமர்பிக்கிறேன்..
அவரது குடும்பத்தாரு ஆழ்ந்த அனுதாபங்கள்..
யாரேனும் ஒரு கவிதாஞ்சலி செய்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
நன்றி
செல்வன் சார்
அருமையாக சொன்னீர்கள்.. அந்த விதை மிகப் பெரிய ஆல மரமாக வள்ரவேண்டும்..
பாலாமணி
உண்மைதான், நமது நாட்டுக்காக இன்னுயிர் துறந்த வீரன்..அதுவும் 23 வயதுகாரர்...ம்ம்ம்
Post a Comment
<< Home