Friday, October 06, 2006

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா




சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப்போகும் வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா

நீ எண்ணிப்பாரடா


(சின்னப்பயலே)


ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான்டா வளர்ச்சி- உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி- உன்
நரம்போடுதான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி

(சின்னப்பயலே)


மனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வையடா தம்பி
வளர்ந்துவரும் உலகத்திற்கே நீ வலது கையடா

தனி உடைமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா நீ
தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா


(சின்னப்பயலே)
வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லிவைப்பாங்க - உன்

வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளிவைப்பாங்க - இந்த
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்தைகளை

வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே - நீ
வீட்டிற்குள்ளேயே பயந்துகிடந்து வெம்பிவிடாதே

நீ வெம்பி விடாதே


(சின்னப்பயலே)



"பாடலை இங்கே கேட்டு மகிழுங்க..."



படம்: அரசிளங் குமாரி
பாடல்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்திரம்.
இசை: ஜி.இராமநாதன்
குரல்: டி.எம்.சௌந்தர் ராஜன்
வருடம்: 1961
நடிப்பு: புரட்சித்தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன்.

19 Comments:

Blogger Sivabalan said...

எழுத்துப்பிழை, சொற்குற்றம் இருந்தால் சுட்டிக்காட்டவும்.

நன்றி

October 06, 2006 9:56 PM  
Blogger Muthu said...

சிவபாலன்,

மிக அருமையான பதிவு. என் தந்தையார் என் சிறுவயதில் இருந்தே இந்த பாட்டை அடிக்கடி பாடுவார்.என் மனதில் பதிந்த பாட்டு. நன்றி.

October 06, 2006 10:52 PM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
மக்கள் கவி பட்டுக்கோட்டையாரின் அருமையான பாடல்.

/*
நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி ...
மனிதனாக வாழ வேண்டும் மனதில் வையடா தம்பி...
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா...
வேலையற்ற வீணர்களின் மூலையற்ற வார்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே */

அருமையான , ஆழமான கருத்துக்கள் நிறைந்த வரிகள்.

இப்பாடலைப் பல தடவைகள் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். சிவா, சில திருத்தங்கள்[என் நினைவுக்கும் தமிழறிவுக்கும் எட்டிய வரை]

1. 2வது வரி : வார்தையை = வார்த்தையை

2.வரிகள் 2 & 3: எண்னிப்பாரடா = எண்ணிப்பாரடா

3. வரி 10 : தழில் உடமை = தனி உடமை

4. வரி 13 : பொகும்போது = போகும்போது

5. வரி 14 : கில்லிவெப்பாங்க = கிள்ளி

6. வரி 15 : மூலையற்ற வார்தைகளை = மூளையற்ற வார்த்தைகளை

October 07, 2006 12:10 AM  
Blogger Sivabalan said...

முத்து

இந்தப் பாட்டை எங்க தாத்தா மிகவும் இரசிப்பார். உங்க அப்பாவும் இரசிப்பார் என்பதை அறிந்து மகிழ்ச்சி.

வருகைக்கு மிக்க நன்றி

October 07, 2006 7:08 AM  
Blogger Sivabalan said...

வெற்றி

எழுத்துப்பிழையை சுட்டிக் காட்டியைமைக்கு மிக்க நன்றி.

பிழை திருத்தம் செய்துவிட்டேன்.

நன்றி

October 07, 2006 7:10 AM  
Blogger Sivabalan said...

வெற்றி,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

October 07, 2006 7:12 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

சிபா...!
சின்னப் பயலே பயலேன்னு தலைப்பை பார்த்து சுப்பையா வாத்தியார் ஐயா போட்டது போல அறிவுரை பதிவு சின்னவங்களுக்குன்னு நெனச்சேன் !

:))

வாத்தியார் (MGR) பாட்டை போட்டு அசத்துகிறீர்கள். சிறியவர், பெரியோர் எல்லோரும் கேட்டு நடக்கவேண்டிய நல்ல அறிவுறை பாட்டு !

பாராட்டுக்கள் !

October 07, 2006 11:47 AM  
Blogger Sivabalan said...

GK,

புரசித்தலைவரின் பாடல்களே புரட்சிதான்.. அதுவும் இந்த பாடல் மிக நல்ல பாடல்.

வருகைக்கு மிக்க நன்றி

October 07, 2006 7:58 PM  
Blogger குமரன் (Kumaran) said...

நல்ல பதிவு.

:-) ஒன்னுமில்லை சிவபாலன். உங்க பாணியில் பின்னூட்டம் போடலாம்ன்னு பாத்தேன். வேற ஒன்னுமில்லை. :-)

October 07, 2006 8:36 PM  
Blogger குமரன் (Kumaran) said...

ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தான்டா வளர்ச்சி...

இப்படி நிறைய அருமையான வரிகள் உள்ள பாடல் இது. என் தந்தையாரோ பாட்டனாரோ இல்லை நானே சிறுவயதில் பலமுறை பாடி மகிழ்ந்த வரிகள். டி.எம்.எஸ். சொந்தக் காரர் வேறா?! அவரைப் போலவே பாடுகிறேன் என்று எண்ணிக் கொண்டுப் பாடிய வரிகள். :-)

October 07, 2006 8:38 PM  
Blogger Sivabalan said...

குமரன் சார்,

நம்ம பானியை Copy Right @2007 வாங்கியுள்ளேன்..உங்களுக்கு தெரியாதா?

Ha ha ha..

October 07, 2006 8:48 PM  
Blogger Sivabalan said...

குமரன் சார்,

அடடா நான் உங்க குரலை கேட்க முடியமால் இருக்கிறது..

நல்ல பாடல்..வரிகளும் அருமை..

டிஎம்ஸ் உங்க உறவினறா!! மிகவும் சந்தோசம்..

வருகைக்கு மிக்க நன்றி.

October 07, 2006 8:50 PM  
Blogger Chandravathanaa said...

கேட்டேன். ரசித்தேன்.
நன.றி

October 09, 2006 3:10 AM  
Blogger Sivabalan said...

சந்திரவதனா

வருகைக்கு மிக்க நன்றி.

October 09, 2006 8:32 AM  
Blogger VSK said...

நான் விரும்பும் பாடல்களுள் இதுவும் ஒன்று. சிபா.
முழுப்பாடலும் எனக்கு மனப்பாடம்.

இன்னும் இரண்டு, மூன்று இடங்களில் 'வளரனும்' என்றே இருக்கிறது, திருத்திய பின்னும்.
"வளரணும்" என்று மாற்றவும்.

பிறகு,
"மனிதனாக வாழ்ந்திட வேண்டும்" என்பதுதான் பாடல்.
'வாழ' என்று இல்லை.

அதே போல, "தானாய்" எல்லாம் என்று டீ.எம்.எஸ் பாடுவார். 'தானா' அல்ல.
அடுத்தது 'பேயொண்ணு' 'பேயொன்னு' என்று இருக்கிறது.

தொடர்ந்து செய்யுங்கள் இது போல நல்ல செயல்களை.

மிக்க நன்றி.

October 09, 2006 8:49 AM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

பிழை திருத்தம் செய்துவிட்டேன்.

சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

வருகைக்கு மிக்க நன்றி.

October 09, 2006 9:11 AM  
Blogger VSK said...

மிக்க நன்றி சிபா உடனே திருத்தியதற்கு!

இப்போதுதான் பார்த்தேன்.
அப்படியே உடமை என்பதையும் உடைமை என மாற்றி விடுங்கள்!

முடிந்தால் இரு 'வெப்பாங்க' கூட வைப்பாங்க என மாற்றலாம்.

Am I pushing too much!??

October 09, 2006 9:15 AM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

நீங்கள் சொல்லியவற்றையும் திருத்தம் செய்துவிட்டேன்.

மீன்டும் வந்து சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

October 09, 2006 9:32 AM  
Blogger Information said...

Enna arumaiyana paadal!

August 05, 2009 9:02 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv