இது தான் கடவுள்
இதுவும் கடவுள்
இதுவும் கடவுள்
இதுவும் கடவுள்
அட இது கூட கடவுள்தான்..
விசயம் என்னவென்றால்..
இது முன்னாடி அமர்ந்து திருப்புகழ் பாடினாலும், குரான் படித்தாலும், பைபிள் படித்தாலும் இதுக்கு ஒன்னும் கேட்டகப் போறதில்லை..
ம்ம்ம்ம்ம்..
இளைஞர்களே நல்ல படிங்க, சுயமாக சம்பாரித்து மேலும் படிங்க.. முன்னேறுங்க..
அப்ப கடவுள், அது எல்லாம் வயதான பிறகு பார்த்துக்கொள்ளலாம்..
50 Comments:
"காசேதான் கடவுளடா " என்று கண்ணதாசன் (?) அன்று பாடினார்
"காரே தான் கடவுளடா" என்று சிவபாலன் படம் காட்டுகிறார் !
காலத்திற்கேற்ற செய்தி !
பாராட்டுக்கள் !
சிவபாலன் சார், நீங்க சொல்றதும் சரிதான். கடவுள் கார்லயும், ஷூலயும், ப்ரஷலயும் கண்டிப்பா இருக்காரு.
கேக்க வேண்டியத கேளுங்க, கொடுக்க வேண்டியத அவரு கொடுப்பாரு.
கேக்கறது எல்லாத்தையும் எல்லாருக்கும் கொடுத்துட்டா அப்பறம் ஊரு என்னாத்துக்காவரது. ;)
பி.கு
இந்தப் பதிவை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பதியவில்லை.
வேறு உள் நோக்கம் இல்லை.
ஆமா சிவா, சில பேருக்கு சில விசயங்கள் கடவுளாக காட்சி தருகிறார்கள்.
எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்க முடியுமா? இதிலிருந்து என்ன சொல்ல வருகிறீர்கள் என்று??
GK,
பாராட்டியதற்கு மிக்க நன்றி.
வருகைக்கு மிக்க நன்றி
சிவாபாலன்,
குழப்பமாக இருக்கிறதே! நான் ஒரு ரியூப் லைற். எனக்கு நீங்கள் இப் பதிவின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை. கொஞ்சம் விளக்கம் தாருங்களேன்.
செய்யும் தொழிலே தெய்வம்.
சரியா சிவபாலன்?
Bad News India,
உங்கள் கருத்துக்கு நன்றி.
நான் சொல்லவந்த கருத்து புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
வருகைக்கு மிக்க நன்றி
அனைத்திலும் கடவுளைப் பார்க்கும் உங்கள் கருத்தையும், அதை விளக்கும் பதிவையும் பார்த்தென்.
மனம் மகிழ்ந்தேன்.
இவைகளும் திருப்புகழைக் கேட்கவில்லை என்று எப்படி சொல்லுகிறீர்கல், சிபா.
அவர்களுடன் பேசுவீர்களோ?
:)
இல்லை என் பதிவைப் படிக்காமல் போகும் மற்ற பதிவர்களுக்கு வைத்த உள்குத்தா இது?
:))
உங்கள் பதிவில் அன்றைய பிரஹலாதன், தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று சொன்ன கருத்து தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
நீங்கள் எதை நினைத்து இதைப் போட்டீர்களொ, இதுவும் ஆத்திகமே!
சிபா !
பொழப்பை பாருங்கப்பா... சம்பாதிங்கப்பா ...மற்றதெல்லாம் காலம் ஆகும் முன் செய்யலாம் என்கிறீர்கள் சரியா ?
:)
எனக்குப் புரிஞ்சிருச்சு, சிவபாலன்.
ஆனால், //அது எல்லாம் வயதான பிறகு பார்த்துக்கொள்ளலாம்..// இதுதான் புரியலை. அப்பவும் எதுக்கு?
//அப்ப கடவுள், அது எல்லாம் வயதான பிறகு பார்த்துக்கொள்ளலாம்//
சிவபாலன் நம்ம குமரன் என்ன சொல்கிறார் என்பதை அப்ப கடவுள், இங்கே பார்க்கவும்
எனது அலுவலகத்திற்கு அதிகாலை 5.30 கடும் குளிரில் செல்லவேண்டியுள்ளதால் நான் இப்ப தூங்க செல்கிறேன்.
மன்னிக்கவும், நாளை பதில் கூறிகிறேன்.
நன்றி
//இது முன்னாடி அமர்ந்து திருப்புகழ் பாடினாலும், குரான் படித்தாலும், பைபிள் படித்தாலும் இதுக்கு ஒன்னும் கேட்டகப் போறதில்லை..
//
உண்மை தான் சிவபாலன். தெய்வம் என்றால் அது தெய்வம்; வெறும் சிலை என்றால் வெறும் சிலை தான். உண்டென்றால் அது உண்டு. இல்லையென்றால் அது இல்லை.
முப்பெரும் மத நூல்களைப் பற்றியும் சொன்னதால் இது மத நல்லிணக்கத்திற்காகச் சொன்னது என்றும் எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். மீண்டும் ஒரு நல்ல முயற்சி.
//இளைஞர்களே நல்ல படிங்க, சுயமாக சம்பாரித்து மேலும் படிங்க.. முன்னேறுங்க..
அப்ப கடவுள், அது எல்லாம் வயதான பிறகு பார்த்துக்கொள்ளலாம்..//
முதல் வரிக்கு மறுப்பேதும் இல்லை. அதுவும் மிக முக்கியம்.
ரெண்டாவது வரிக்கு? சாரி. நோ கமெண்ட்ஸ். :-)
//எனது அலுவலகத்திற்கு அதிகாலை 5.30 கடும் குளிரில் //
5:30 மணிக்கே அலுவலகம் செல்ல வேண்டுமா? ஏன் அவ்வளவு அதிகாலையில்?
///
இளைஞர்களே நல்ல படிங்க, சுயமாக சம்பாரித்து மேலும் படிங்க.. முன்னேறுங்க..
அப்ப கடவுள், அது எல்லாம் வயதான பிறகு பார்த்துக்கொள்ளலாம்..
///
கலக்கறீங்க சி.பா
தெகா
இப்பதிவின் அடிப்படை.
1. கடவுள் இல்லை.. கடவுள் இல்லவே இல்லை.
2. அதைவிட முக்கியம் இது இருக்கிறதா இல்லை என்ற வீணான ஆராய்ச்சி.
3. மற்றவர்களுக்கு துன்பம் தறாமல் வாழுங்கள்.
சொல்லவருவது.
கடவுள் பற்றிய சிந்தனையற்ற சமுதாயத்தில் வாழ்ந்தால்தான் உழைப்பின் உண்மை புரியும். நமது பொண்ணான் நேரங்கள் நிச்சயம் வீணடிக்கப் படுகின்றன.
இங்கே நான் குறிப்பிட்டது போல் ஒரு வாசிங்மிசன் மீது பால் அபிசேகம், பகவத்கீதை, குரான், பைப்பிள் படிப்பது.. இது போன்று செய்தால் உங்களுக்கு எவ்வள்வு அபத்தமாக தோன்றுகிறதோ அது போலத்தான் இங்கே கடவுள் கான்சப்ட்.
நம் இளைஞர்கள் தன்னை நம்புவதைவிட வாசிங்மிசன் ( நம்ம ஊரில் கடவுள் சிலைகள்) நம்பிக்கொன்டிறிக்கிறார்கள். அது ஏன் என்பதுதான் என் ஆதாங்கம்.
நான் கடவுளை நம்ப மறுத்தபிறகுதான் என்னை நான் அடையாள்ம் கண்டுகொண்டேன்.
அவ்வளவே.
வருகைக்கு மிக்க நன்றி
வெற்றி
தெகாவிற்கு பதில் கூறியுள்ளேன்.
படித்துப்பாருங்கள்.
உங்க வருகைக்கு மிக்க நன்றி
செல்வன் சார்
நச்சுன்னு சொல்லிட்டீங்க..மிகச் சரி.
வருகைக்கு மிக்க நன்றி
SK அய்யா,
உங்க அனுபவம் எதிர் கருத்து உள்ளவர்கள் எதிர் கொள்ளும் திறமை ஆகியவற்றின் முன் நான் சிறு குழந்தை.
பதிவின் சில கருத்துக்களை வாதம் செய்து Hijack பன்னுவார்கள். ஆனால் ஒரு முழு பதிவையும் Hijack பன்னும் திறமை உங்களை தவிற வேறு யாருக்கும் இல்லை என்றே நினைக்கிறேன்.
// பிரஹலாதன், தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று சொன்ன கருத்து தெளிவாக வெளிப்பட்டுள்ளது. //
உண்மையாகவே, உஙகளை எப்படி எதிர்கொள்வதென்றே தெரியவில்லை. யாராவது உதவிக்கு வாங்கப்பா. முடியலை..
SK அய்யா நான் திருப்புகழ் என்று குறிப்பிட்டது உங்களை காயப்பத்த இல்லை. அவ்வாறு இருந்தால் மன்னிக்கவும்.
வருகைக்கு மிக்க நன்றி
GK,
அருமையாக சொன்னீங்க.. பொழுப்புதான் முக்கியம் அவ்வளவே..
"காலம்" ஆகும் போது தானகவே கடவுள் இருப்பை நம்ப மாட்டான்.
தருமி அய்யா
உங்களுக்கு நிச்சயம் புரியும் என்றே நம்பினேன்.
அய்யா, இவர்களிடம் கடவுள் இல்லை, வேலையை போய் பார், என்றால் இவர்கள் போகமாட்டார்கள். அது இருக்கிறதா இல்லையா என ஆராய உட்கார்ந்துவிடுவார்கள்.
அதனால் தான் முதுமையில் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னேன்.
கடவுள் சிந்தனையில்லாமல் வாழ் கற்றுக் கொண்டால் நிச்சயம் முதுமையில் அதை நம்ப்மாட்டான். அதனாலேயே அவ்வாறு சொன்னேன்.
சிவபாலன். எஸ்.கே. உங்கள் பதிவைப் படித்த போது அவருக்குத் தோன்றியதை இங்கே பின்னூட்டமாக இட்டிருக்கிறார். அதனை எப்படி நீங்கள் ஹைஜாக் என்று சொல்ல முடியும்? உங்கள் பதிவு ஹைஜாக் செய்யப்படும் அளவிற்கு அவ்வளவு வலுவின்றியா இருக்கிறது? :-)
கருத்துகளின் அடிப்படையில் வாதம் செய்யுங்கள் என்றும் சொல்கிறார்கள். அப்படி கருத்துகளை வைத்தால் ஹைஜாக் என்றும் சொல்கிறார்கள். பேசாமல் படித்துவிட்டுப் பின்னூட்டம் இடாமல் சென்றுவிட்டால் நல்லது போலும்.
குமரன் சார்,
நான் சுமைலி போடாமல் பதில் சொன்னதான் கொஞசம் கோபமாக இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடுவது தவிர்க்க முடியவில்லை.
நான் கருத்தை இங்கே கூறக்கூடாது என்று சொல்லவில்லை.
துனிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதெல்லாம் நம்மை குருடர்களாக்கும் வழிமுறைகள். அதற்கு அவர் கூறும் பாத்திரம் ஒரு கற்பனை கதாப்பாத்திரம். அதை எவ்வாறு எதிர் கொள்வது நீங்களே சொல்லுங்கள்.
மற்றபடி SK அய்யா மீது மிகுந்த மரியாதை உள்ளது என்பதை அவரும் அறிவார்.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
ஆகா.. கடவுளரைக் கண்டேன்..
சிவபாலன். நானே நேரில் வந்து உங்களிடம் நான் கடவுளைக் கண்டேன் என்று சொன்னாலும் அதனை நீங்கள் நம்பப்போவதில்லை. என்னையும் கற்பனை என்று எதிர்காலத்தில் சொல்லலாம். சரித்திரக்காலத்திற்கு முற்பட்ட எல்லாமே கற்பனை என்றால் எத்தனையோ கருத்தாங்களையும் கற்பனை எனத் தள்ளிவிட முடியும். நீங்கள் சிரிப்பான் போட்டிருந்தாலும் சொன்ன விதமும் சொன்ன கருத்தும் உண்மை தானே. அவர் மேல் உங்களுக்கும் உங்கள் மேல் அவருக்கும் இருக்கும் மதிப்பும் மரியாதையும் நம் மேல் நம் இருவருக்கும் இருக்கும் நட்பு உணர்வும் நான் அறிவேன். ஆனால் அவர் கருத்தைச் சொன்னதற்கு அதனை ஹைஜாக் என்பது கொஞ்சம் அதிகமாகத் தோன்றியது. அவ்வளவே.
குமரன் சார்
உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி.
அவர் இப்பதிவையே ஆத்திகம் என்கிறார். அதனால் தான் அவ்வாறு சொன்னேன்.
பிழை இருந்தால் மன்னிக்கவும்.
குமரன் சார்,
// ரெண்டாவது வரிக்கு? சாரி. நோ கமெண்ட்ஸ். //
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
கால்கரி சிவா அவர்களே,
சுட்டிக்கு மிக்க நன்றி.
நீங்கள் கொடுத்த சுட்டியின் பதிவை இப்பொழுதுதான் பார்த்தேன். பொதுவாக குமரன் சார் பதிவுகளை உடனுக்குடன் படித்துவிடுவேன்.. இது எப்படியோ மிஸ் ஆகிவிட்டது.
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
இன்னொரு விசயம் உங்கள் நடசத்திர வார பதிவுகள் அனைத்தும் மிக அருமை.
மிக்க நன்றி
குமரன் எண்ணம்,
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
குமரன் சார்,
என் அலுவலக நேரம் காலை 7.00A.M. to 3.30 P.M. என் வீடு சுமார் 35 மைல் தள்ளி உள்ளது. அதனால்தான் அதிகாலை பயனம்.
சதயம் அய்யா,
//வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்....//
கலகிடீங்க..
வருகைக்கு மிக்க நன்றி
சிபா ...!
திருப்புகழ் பாடினாலும்... என்பதற்கு பதில் திருமந்திரம் என்றிருந்தால் ஆத்திகம் என்று சொல்லியிருக்கமாட்டார் எஸ்கே ஐயா !
திருப்புகழ் என்று சொன்னதால் அவரை பற்றிச் சொல்வதாக நினைத்து இதுவும் ஆத்திகமே என்று உங்களுக்கு புகழ்மாலை சூட்டியுள்ளார்!
:))
பூங்குழலி,
வெளியே யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.
கார், வாசிங்மிசன், டூத்பிரஸ், செருப்பு இவைகளுக்கு கோவில் கட்டி கும்பாபிசேகம் பன்னிவிடுவார்கள்.
என்னமோ போங்க.. ம்ம்ம்ம்ம்ம்
வருகைக்கு மிக்க நன்றி.
அன்புடையீர்,
என்ன்னென்னவோ விவாதங்கள் நடக்கின்றன. எனக்கு ஒன்றும் புரியவில்லை. இறுதியில் வெட்டு ஒன்று; துண்டு இரண்டாகச் சொல்லிவிடுங்கள். கேட்டுக்கொள்கிறேன்.
GK,
ஆகா, இந்த திருமந்திரம் யோசனை என்க்கு வராமல் போய்விட்டதே..
என்னும் SK அய்யா அதற்கும் ஏதாவது வைத்திருப்பார். :))
ஞானவெட்டியான் அய்யா,
உங்களுக்கு தெரியாமல் ஒன்றும் இல்லை.
மற்றபடி உங்கள் மனம் புண்படும் படி இங்கே ஏதேனும் இருந்தால் வருந்துகிறேன்.
சில விசயங்களை சில மாதிரி சொன்னால்தான் புரியும் என்பதால் தான் இப்பதிவு. மற்றபடி யார் மனதையும் புண்படுத்த இல்லை.
வருகைக்கு மிக்க நன்றி.
சிபா,
குமரன் சொன்னது போல, இப்பதிவைப் படித்ததும் எனக்குள் தோன்றிய ஒரு கருத்தைப் பதிந்தேன்.
அதை ஹைஜாக் என்று சொல்ல உங்களுக்கு முழு உரிமையும் உண்டு, புரிதல் இல்லாததாலும், உங்கள் கருத்தினின்று மாறுபட்டிருப்பதாலும்.
இவற்றிற்குக் கேட்காது என்று எப்படி உங்களால் உறுதியாகச் சொல்ல முடியும் என்றும் வினா எழுப்பியிருந்தேன்.
அதற்கும் பதிலின்றி மழுப்பி இருக்கிறீர்கள்.
உங்கள் நம்பிக்கையை [!!] அல்லது நம்பிக்கையின்மையையை [இதுவும் ஒரு நம்பிக்கைதானே!] நான் குறை கூற வில்லை.
எனக்கு அதுவும் ஆத்திகமாகப் பட்டது என்றே சொன்னேன்.
பிரகலாதன் கற்பனைப் பாத்திரமோ, நிஜமோ அது அவரவர் நம்பிக்கை.
ஆனால் எனக்கு ** கவனிக்கவும் என்க்குத் தான்*** இவை இரண்டும் ஒன்றாகப் பட்டது.
கூடவே, உங்களை இகழ்ந்தோ அல்லது உங்கள் நம்பிக்கையை பழித்தோ நான் ஒரு சொல்லும் சொல்லவில்லை.
இது உங்களுக்குப் புரியாததும், சில அதிகப்படியான சொற்களை வீசியதும் துரதிர்ஷ்டமே.[இதற்கு என்னப்பா தமிழ்ச்சொல்?]
பின்னர் கொடுத்த உங்கள் கருத்தை பதிவிலும் போட்டிருந்தால் நான் வெறும் சிரிப்பானோடு போயிருப்பேன்.
கருத்து சுதந்திரம் உண்டென நினைத்தேன்.
நன்றி நண்பரே!
இத்துடன் இதை முடிக்கிறேன். [இப்பதிவில் மட்டும்!]
[குறிப்பு: திருப்புகழ் என்று சொன்னது என்னைப் பழித்து அல்ல என்று எனக்குத் தெரியும்.]
SK அய்யா,
நம்மால் உருவாக்கப்பட்ட மிசினுக்கு கேட்குமா இல்லையா என்பதை புரிவேண்டியவர்களுக்கு நிச்சயம் புரியும் என நம்புகிறேன்.
நான் அதிகப்படியான வார்த்தைகளைப் பயன் படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.
// பின்னர் கொடுத்த உங்கள் கருத்தை பதிவிலும் போட்டிருந்தால் நான் வெறும் சிரிப்பானோடு போயிருப்பேன் //
நீங்கள் சொல்லும் இந்த கருத்து என்னை மிகவும் வருத்தப் படவைக்கிறது. நீங்கள் பெரியவர் உங்களுக்கு தெரியும். எது சரி எது தவறென்று.
கருத்து சுதந்திரம் என்னை பொருத்தவரையில் நிச்சயம் உண்டு.
அதற்கு இப்பதிவில் ஏதேனும் பங்கம் இருந்தால் விளக்கவும்.
மீன்டும் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
மீன்டும் உங்கள் (என்) பதிவில் சந்திப்போம்.
கடவுள் இல்லை என்பதற்கு -1 of 8 votes.
இத இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்..
Keep up your good work pals.
Ha Ha Ha..
சிபா...!
பொதுவாக மதநம்பிக்கைபடி தூனிலும் இருப்பான் தும்மலிலும் இருப்பான் கடவுள் என்பவர்கள் (எஸ்கே ஐயாவை குறிப்பிடவில்லை) தலித்துக்களிடம் மட்டும் இல்லை என்று நினைத்திருக்கிறார்கள் என்பது தான் கொடுமை !
GK,
உண்மைதான். தலித் என்பவன் பாவப் பட்டவனாம். அதனால் அவனிடம் கடவுள் இல்லையாம்.
என்னமோ போங்க.
அவங்க கடவுளுக்கே வெளிச்சம்..
சிவபாலன்,
/*வெற்றி
தெகாவிற்கு பதில் கூறியுள்ளேன்.
படித்துப்பாருங்கள். */
ம்ம்ம்.. படித்தேன். நம்ம பட்டுக்கோட்டையார் அன்று பாட்டாகச் சொன்னதை படம் போட்டுச் சொல்லியுள்ளீர்கள் போலும்.
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
சபைக்கு உதவாத வெறும் பேச்சு
கஞ்சிக்கில்லாத கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு
பழங் கதைகளைப் பேசி காலம் வீணாக்கி
கையாலே முன்னேற்றம் கண்டாகணும்
சி.பா,
..அவனின்றி அணுவும் அசையாது.
...துரும்பிலும் இருப்பான்.
இப்பழமொழி சொற்கள் பொய் இல்லேயே!!!!!
வெற்றி
ஒரு சூப்பர் பாடலை கொடுத்திடீங்க.. பதிவின் கருத்துடன் ஒத்துப் போகிறது.
மிக்க நன்றி
ராம்
நேரம் கிடைக்கும் போது பெரியார் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், கடவுள் மறுப்பு புத்தங்களும் படிங்க..
வருகைக்கு மிக்க நன்றி
Anonymous said...
எழில், நல்ல கேள்வி உங்களுடையது!
இப்படியெல்லாம் தர்க்கித்துக் கொள்ளும்படி உங்களுக்கும் எனக்கும் ஏன் இறைவன் அறிவைக் கொடுக்கவேண்டும். ஆடு மாடு போல் ஆக்கியிருந்தால் வெந்ததை தின்று விதிவந்தால் போயிருக்கலாம் இல்லையா?
'இறைவனே இல்லை' என்பது உங்கள் நிலைப்பாடானால், உங்களிடம் விவாதிக்க ஒன்றும் இல்லை.
கோள்களும், சூரியனும், மற்ற நட்சத்திரங்களும் 'யாருக்கோ கட்டுப்பட்டாற்போல் செயல்பட்டு வருகின்றன' என்று ரிக்வேதமும்/பைபிளும்/குரானும் சொல்வதை,
'கோள்களின் இயக்கத்தைப் பார்க்கும்போது ஒரு மகா சக்தி இருக்கத்தான் வேண்டும்' என்று ஐன்ஸ்டீன் சொன்னதை நீங்கள் நம்பாவிட்டால் தர்க்கிப்பதில் அர்த்தமிருக்கப்போவதில்லை.
1:14 PM
/./
எழில் பதிவில் அனானி பின்னுட்டம் இதற்க்கு எழில் இதுவரை பதில் அளிக்க வில்லை அதனால் இங்கு மீள்பின்னுட்டம்
நன்றி அனானி
சின்னபுள்ள & அனானி ,
அறிவியலுக்கு புலப்படவில்லை என்றால் அது கடவுளா?
அப்படித்தான் இந்த கடவுள் கான்செப்ட் வந்தது என நினைக்கிறேன்.
வருகைக்கு நன்றி
/./
அறிவியலுக்கு புலப்படவில்லை என்றால் அது கடவுளா?
/./
'கோள்களின் இயக்கத்தைப் பார்க்கும்போது ஒரு மகா சக்தி இருக்கத்தான் வேண்டும்' என்று ஐன்ஸ்டீன.
அந்த மகா சத்தியை பலர் கடவுள்னு சொல்லுறாங்க
சிலர் வெங்காயம்னு சொல்லுறாங்க.
நீங்க எப்படி வெங்காயத்தை நம்பி படிக்க அவர் புக்கை படிக்க சொல்லுரீங்களோ அதுபோலவே அவரவர் நம்பிக்கை.
ஐன்ஸ்டீன சொன்னாரு எதோ ஒன்னு இருக்குனு
பெரியார் சொன்னாரு ஒன்னுமே இல்லைனு
ரெண்டு பேரு கருத்தையும் நிருபிக்கமுடியாது.
நான் கடவுளை நம்புகிறேன்
ஏனெனில் பிரபஞ்சம் தோண்றியது தானாக எனில் தானாக எல்லாம் வந்தது என்ற வார்த்தைக்கு முன்னால் மிக பெரிய கேள்வி குறி இருக்கு விடைதெறியும் போது பாக்கலாம்..
here 50 :)
சின்னபுள்ள,
வெங்காயமா??? Ha.. Ha.. Ha....
அது சரி...
//விடைதெறியும் போது பாக்கலாம்..//
இதை நான் வரவேற்கிறேன். உங்கள் திறந்த மனதிற்கு எனது பாராட்டுகள்.
ஐம்பதாவது பின்னூடத்திற்கு மிக்க நன்றி
Post a Comment
<< Home