விஜயகாந்த் - முதல் போராட்டம்
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தலைமையில் தேனியில் சனிக் கிழமை (டிச.2) உண்ணா விரதப் போராட்டம் நடைபெறுகிறது. மாவட்டத் தலைநகர்களில் தேமுதிக நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவார்கள்.
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:
மத்தியிலும் மாநிலத்திலும் கேரளத்திலும் ஆளுகின்ற கட்சிகள் அனைத்தும் ஒரே முகாமைச் சேர்ந்தவை. அப்படி இருந்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பையே துச்சமென மதித்து நிறைவேற்றாமல் இருப்பது தமிழக மக்களை வஞ்சிக்க அவர்கள் நடத்தும் ஒரு நாடகமோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
இன்னும் சில நாள்களுக்குள் வடகிழக்குப் பருவமழை நின்றுவிடும். அதற்குப் பிறகு நீரே இல்லாத போது நீர்த்தேக்கம் பற்றி யார் பேசப் போகிறார்கள். மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைப்பதாலேயே இன்னும் 15 நாள்களில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்கள் கூடுவார்கள் என்று அறிவித்துள்ளனர்.
எனவே தமிழக மக்கள் தங்கள் ஒன்றுபட்ட சக்தி மூலமே தங்களுக் குரிய நியாயத்தை நிலைநாட்ட முடியும் என்ற உணர்வை வெளிப் படுத்த வேண்டும் என்ற நோக்கத் தோடு தே.மு.தி.க டிச. 2ம் தேதி (சனிக் கிழமை) தமிழ்நாடு எங்கும் தமிழ் மக்கள் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கிறது.
12 Comments:
//மத்தியிலும் மாநிலத்திலும் கேரளத்திலும் ஆளுகின்ற கட்சிகள் அனைத்தும் ஒரே முகாமைச் சேர்ந்தவை. அப்படி இருந்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பையே துச்சமென மதித்து நிறைவேற்றாமல் இருப்பது தமிழக மக்களை வஞ்சிக்க அவர்கள் நடத்தும் ஒரு நாடகமோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது//
ஆக அரசியல் நல்ல பேசுகிறாரே கேப்டன் !
:)
GK,
அதே அதே..
கேப்டனிடம் முன்னேற்றம் தெரிகிறது :) ..
எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்...
கேப்டன் வெற்றி பெரும் வரை உண்ணாவிரதமிருந்தால் அடுத்த சி.எம் நீங்க தான் :-)
:))
:))
பாலாஜி
நமக்குள் ஏதாவது பிரச்சனை என்றால் பேசி தீர்த்துக் கொள்வோம்..!!?? இப்படி மாட்டிவிடலாமா!!
பாருங்க இப்பவே நம்ம SK அய்யா வந்து சிரிக்கிறாரு..Ha Ha Ha ..
SK அய்யா
கேப்டன் உண்ணாவிரதம் உங்களுக்கு சிரிப்பா இருக்கிறதா?!!
இப்ப எல்லாரும் கேப்டைனை பாராட்டறது மகிழ்ச்சியா இருக்குன்னு சிரிச்சேன்!
நான் முதலில் இருந்தே அவர் ஆதரவாளனுங்கோ!
மறந்துட்டீங்களா!
ஏதோ இவரு வந்தா நாடே சொர்கபுரியா மாறிவிடும் என பில்டப் கொடுத்தாங்க. இப்ப இந்த போராட்டம் மூலம் என்னத்த சாதிக்க போகிறார். இதுவும் அதே குட்டையில் உள்ள மட்டைதான்.
அருண்மொழி,
ஊடகங்கள் ஆதரித்து எழுதுவதை இப்பொழுது வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளன. காரனம் தெரிந்ததே..
புதியவர்... கொஞ்சம் டைம் கொடுப்போம்..
வருகைக்கு மிக்க நன்றி.
வன்முறையில்லாமல் நல்லது நடந்தால் மக்களுக்கு நல்லது தான்.
எனக்கென்னவோ விஜயகாந்த் சொல்வதில் கொஞ்சம் உண்மை இருப்பது போல் தோனுகிறது.
நம் சக பதிவாளர் ஊசி பதிவை பார்க்கவும்.
வடுவூர் குமார்,
அரசியலில் எல்லாம் சாத்தியமே!!??
வருகைக்கு மிக்க நன்றி
அன்புள்ள சிவபாலன்,
என் வலைப்பூவுக்கு வருகை தந்து குறிப்பு விட்டுச் சென்றமைக்கு நன்றி. என்னுடயை வலைப்பூவிற்கு எப்போதும் வருகை தரும் முகம் தெரியாத நண்பர்களில் நீங்களும் ஒருவர். மிக்க மகிழ்ச்சி. நேரம் கிடைத்தால் தூதூவனில் கதைக்கலாமே.
மோகன்
http://forum.etheni.com
http://tamilradio.etheni.com
http://wiki.etheni.com
http://tamilsoftware.etheni.com
http://theni.etheni.com
http://thenipookkal.etheni.com
Post a Comment
<< Home