Monday, November 27, 2006

இது தான் மதமா?...





















இது தான் மதமா? ... இது தான் மதமா?....இது தான் மதமா?.....


.............................இது எனக்கு வேண்டாம்..............

45 Comments:

Blogger குமரன் (Kumaran) said...

இது மதமில்லை. இது மதமில்லை. இது மதமில்லை.

மதமில்லாத இது எனக்கு வேண்டாம்.

November 27, 2006 8:58 AM  
Blogger Sivabalan said...

குமரன் சார்,

நீங்கள் சொல்வதுபோல் தான் மதம் இருக்கவேண்டும். ஆனால் இன்று மதங்களுக்காக மனிதன் என்ற நிலைதான். இதை மறுக்க முடியாது. இரத்தம் சிந்தி மத்தத்தை காப்பாற்றும் நிலையில் மனிதன்...ம்ம்ம்ம்..

தேவையா?? நிச்சயம தேவை இல்லை...

மீன்டும் மனிதனாவோம்..

வருகைக்கு மிக்க நன்றி

November 27, 2006 9:08 AM  
Blogger மங்கை said...

//நீங்கள் சொல்வதுபோல் தான் மதம் இருக்கவேண்டும். ஆனால் இன்று மதங்களுக்காக மனிதன் என்ற நிலைதான். இதை மறுக்க முடியாது. இரத்தம் சிந்தி மத்தத்தை காப்பாற்றும் நிலையில் மனிதன்...ம்ம்ம்ம்..

தேவையா?? நிச்சயம தேவை இல்லை...

மீன்டும் மனிதனாவோம்..//

உண்மை சிவா.. நல்ல பதிவு

November 27, 2006 9:11 AM  
Blogger We The People said...

சிவ சார்,

இது மதம் இல்லை. மதம் பிடித்த பைத்தியங்கள் செய்யும் வேலை. எந்த மதமும் மற்றவரை கொல் என்று சொல்லவில்லை. அந்த மதத்தை பார்ப்பவனின் கோளாறு அதற்க்கு மதத்தை சொல்லிக்குற்றமில்லை. மதத்தை பார்ப்பவனுக்கு மஞ்சக்காமாலை இருந்து பார்ப்பது எல்லாம் மஞ்சல் என்றால் எனக்கு மஞ்சலில் தெரிவதெல்லாம் தேவை இல்லை என்று சொல்லுவது தவறு. மதம் ஒரு நெறி. அதை முறையாக பார்த்து, பின்பற்றினால் நன்மை அடையலாம்.:)

November 27, 2006 9:20 AM  
Blogger VSK said...

உறையவைக்கும் படங்கள்!

ஆனால், கேள்விக்கு பதில் வேண்டுமென்றால், இது மதமில்லை!

மதங்கள் இதைச் சொல்வதில்லை.

இது ஒரு சிலர் காட்டும் மதவெறி!

மதவெறி எனக்கு வேண்டாம்!

November 27, 2006 9:21 AM  
Blogger Sivabalan said...

மங்கை

வருகைக்கு மிக்க நன்றி

November 27, 2006 9:28 AM  
Blogger கலை said...

மதங்கள் இருப்பதால்தான் மதம் பிடித்த பைத்தியங்களும் இருக்கின்றன.

நல்ல விடயங்களை மதத்தின் போர்வை இல்லாமலும் சொல்லிக் கொள்ளலாம்.

அதனால் மதம் வேண்டாம் என்பதே எனது முடிவும்.

November 27, 2006 9:33 AM  
Blogger Sivabalan said...

ஜெய் சங்கர் சார்,

நீங்கள் சொல்லும் பைத்தியங்கள் நிறைந்தவிட்ட நிலையில் இது போன்று இரத்த போராட்டங்களுடன் இந்த மதம் இன்னும் தேவையா?

அறநெறிகள் வெறும் ஏட்டுச் சுரக்காயாக இருக்கும் போது மதங்கள் மனிதனை நெறி படுத்துவதற்கு பதில் நெருப்பில்தள்ளி அழித்துக் கொண்டுதான் இருக்கிறது..

அதனால்தான் இது வேண்டாம் என்கிறேன்..

வருகைக்கு மிக்க நன்றி

November 27, 2006 9:35 AM  
Blogger கதிர் said...

மதத்தை உணர்ந்த மனிதர்கள் செய்யும் காரியமில்லை இது. மதத்தை உணராத மதம் பிடித்தவர்களின் காரியம்.

November 27, 2006 9:37 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

கடவுள் மனிதனை தன் சாயலில் படைத்தார் என்று ஒருபிரிவினரும்,
பராமாத்மாவின் சிறு வடிவம் ஜீவ ஆத்மா என்று வேதாந்தம் பேசிக் கொண்டே மனித வாழ்வை அழிக்கும் இவர்களுக்கு இருப்பது கடவுள் நம்பிக்கை அல்ல. வெறும் மதம் சார்ந்த நம்பிக்கைகளே. மதவெறிக்கு கண்டனம் !

November 27, 2006 9:40 AM  
Blogger G.Ragavan said...

கடவுள் நம்பிக்கையும் மத நம்பிக்கையும் குழம்பிய நிலையில் உள்ளவர் செயலே நீங்கள் சொல்லியிருப்பது. மதம் மட்டுமல்ல சிவபாலன், இனம், மொழியும் கூட இதைச் செய்ய முடியும். பெருமளவில் செய்வது மதமே!

November 27, 2006 9:49 AM  
Blogger Sivabalan said...

SK அய்யா

ஒரு சிலர் அல்ல.. பல பேர்... ம்ம்ம்ம்ம்...

வேண்டாங்க இந்த இரத்தப் போராட்டம்..

இது வேண்டாம்.. இந்த மதம் வேண்டாம்..

வருகைக்கு மிக்க நன்றி

November 27, 2006 9:52 AM  
Blogger Sivabalan said...

கலை ,

//மதங்கள் இருப்பதால்தான் மதம் பிடித்த பைத்தியங்களும் இருக்கின்றன.//

அருமை..அருமை..


//நல்ல விடயங்களை மதத்தின் போர்வை இல்லாமலும் சொல்லிக் கொள்ளலாம்.//

சரியா சொன்னீங்க..



வருகைக்கு மிக்க நன்றி.

November 27, 2006 10:03 AM  
Blogger We The People said...

//மதங்கள் இருப்பதால்தான் மதம் பிடித்த பைத்தியங்களும் இருக்கின்றன.//

அதனால் மதம் வேண்டாம் என்றால் இந்த மதம் பிடித்தவர்கள் ஏற்கவா போகிறார்கள்? மதப்பிரச்சாரம் நிறுத்தப்படுமா? இதை செய்பவர்கள் ஏற்கப்போவது இல்லை. இது வீண் பேச்சு என்று தோண்றுகிறது சிவா சார் :(

November 27, 2006 10:21 AM  
Blogger ஓகை said...

இதற்கு எதிரான படங்கள் நம் எல்லோருடைய இல்லங்களினுடையவை.

என் அறிவுக்கு ஒவ்வாத பதிவு.

நாம் புயலை உணர்வதுபோல் காற்றை உணர்வதில்லை.

*******************
மதங்களைக் கண்டு பயப்படாதீர்கள்
===============================

கத்திகள் கொலைகளைச் செய்கின்றன
ஆனாலும் எனக்கு
கத்திகளைக் கண்டு பயமில்லை.
அவையில்லாமல் சமையலே இல்லை
ஒவ்வொரு வீட்டிலும்.
சில கத்திகள் தெருக்களில்
கொலைகள் செய்யும் நேரத்தில்
நம் எல்லோருடைய வீட்டிலும்
அவை சமையல் செய்துகொண்டிருக்கின்றன
அமைதியாக
மிக அமைதியாக
உலகெங்கிலும்.

November 27, 2006 10:30 AM  
Blogger Sivabalan said...

தம்பி,

உணரும் நிலையில் பல பேர் இல்லை.. அப்படியிருக்க மதங்கள் அற்ற நிலை இன்றய தேவை..

வருகைக்கு மிக்க நன்றி

November 27, 2006 10:36 AM  
Blogger Sivabalan said...

GK,

//வெறும் மதம் சார்ந்த நம்பிக்கைகளே//

வாவ்.. கலக்கல்..

வருகைக்கு மிக்க நன்றி

November 27, 2006 10:38 AM  
Blogger Sivabalan said...

ஜீரா,

// பெருமளவில் செய்வது மதமே! //

உண்மை.

இன்னொரு விசயமும், கடவுளுக்காக மதமா? மதத்திற்காக கடவுளா? இப்படியும் ...

இவை இரண்டிக்காகவும் மனிதன் என்ற இன்றைய நிலை..

வருகைக்கு மிக்க நன்றி

November 27, 2006 10:43 AM  
Blogger ramachandranusha(உஷா) said...

மதத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களே!
மதங்கள் தோன்றிய நாள் முதல் மதத்தின் பெயரால் ஏற்பட்ட வன்முறைகளில் இறந்தவர்களே அதிகம். மதத்தால் ஏற்பட்ட நன்மைகளை யாரேனும் சொல்லுங்களேன். ஓகை, மதம் என்பது கத்தி என்கிறீர்கள். ஆம் கத்தியாய் இருக்கும்வரை அது உபயோகமாய் இருக்கிறது. பட்டா கத்தியாய் மாறும்பொழுது நன்மை விட தீமையே அதிகம்.

November 27, 2006 10:49 AM  
Blogger ஓகை said...

என் பின்னூட்டத்தை நான் ஒரு பதிவாகவே வெளியிட்டிருக்கிறேன்.

November 27, 2006 10:54 AM  
Blogger ஓகை said...

உஷா,

நாம் புயலை உணர்வதுபோல் காற்றை உணர்வதில்லை.

November 27, 2006 10:57 AM  
Blogger We The People said...

உஷா மேடம்,

எதாவது பேசனுமேன்னு பேசாதிங்க... கத்தியை வைத்து கொலை செய்பவர்கள் இல்லையா? அப்ப அது கத்தியின் குற்றமா? நான் இங்க மதத்துக்கு வக்காலத்து வாங்க வரவில்லை. மதமும் மக்களும் சமூகத்திலும் பின்னிப்பினைந்துள்ள இன்று வந்து அதை அறுத்து எறி என்றி சொன்னால் யாரும் செய்யப்போவது இல்லை. இதற்க்கு நம்ம தருமி சார் சொன்னா மாதிரி அடுத்த மதத்தை மதிக்கவும் அரவணைக்கவும், நேர்ந்து கலந்து போவதும்(Religious Attached Detachment) வளர்ந்தால் போதும் என்கிறேன் அவ்வளவே. எந்த மதத்திலும் குறை இல்லை. அதை பார்ப்பவனது குறையை மததின் மேல் போட வேண்டாம் என்று கூறுகிறேன். :)

November 27, 2006 11:02 AM  
Blogger Sivabalan said...

ஓகை

நல்லா எழுதியிருக்கீங்க.. ஆனால் வெறும் சமையல் கத்தியாக இன்றைய நிலையில் மதங்கள் இல்லை.. AK47 ஆக உள்ளது..

வருகைக்கு மிக்க நன்றி

November 27, 2006 11:12 AM  
Blogger VSK said...

இதில் கண்ட படங்களுக்கு காரணமானவர்கள் மனிதர்கள்!
மதம் இல்லை.
மதம் இல்லவிட்டால், மொழி, இனம், வறுமை என்று எதையாவது காரணம் காட்டி செய்து கொண்டுதான் இருப்பார்கள்.
மதத்தின் மீது பழி போடுவது ஒரு தப்பித்தலே.
மனித நேயம் வளர பாடுபடுதலே இதற்கு தீர்வு.

November 27, 2006 11:14 AM  
Blogger Sivabalan said...

உஷா மேடம்,

சரியா சொன்னீங்க..

"மனிதன் மாறிவிட்டான்..மதத்தில் ஏறிவிட்டான்.."

வருகைக்கு மிக்க நன்றி

November 27, 2006 11:19 AM  
Blogger We The People said...

SK சார், நல்ல கேள்வி.

//மதம் இல்லவிட்டால், மொழி, இனம், வறுமை என்று எதையாவது காரணம் காட்டி செய்து கொண்டுதான் இருப்பார்கள்.//

இன்று இனத்தின் பெயராலும்/மொழியாலும் இன்று கொலைகள் நடக்குது, அதையும் எடுத்து வீசிவிட முடியுமா?? இதற்கு(திவிரவாதத்திற்க்கு) எல்லை இருக்கா?

November 27, 2006 11:22 AM  
Blogger Sivabalan said...

ஜெய் சங்கர் சார்

நம்மால் உருவாக்கப்பட்ட மதம் நம்மையே விழுங்கும் போது நம்மால் எவ்வாறு அமைதியாக இருக்க முடியும். இந்நிலையில் மனித நேயம் வளர்க்க வேண்டுமானல் மதம் எனும் அடையாளம் அழிக்கப்படவேண்டும்.

November 27, 2006 11:23 AM  
Blogger Sivabalan said...

SK அய்யா

//இதில் கண்ட படங்களுக்கு காரணமானவர்கள் மனிதர்கள்! //

மதம் பிடித்த மனிதர்கள்.


மதத்தை பற்றி பேசினால் உடனே மற்ற விசயங்களை சொல்லி மதம் காரணமில்லை என்று சொல்வது என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

மனிதன் நேயம் எப்படி வளர்ப்பீர்கள்? அடையாளங்கள் நிறைந்த மனிதனை.. (வேண்டாத) அடையாளத்தை அழியுங்கள்..

அதை தான் நானும் சொல்கிறேன்.

November 27, 2006 11:28 AM  
Blogger நாமக்கல் சிபி said...

சிபா,
மனிதன் தன்னுடைய சுய நலத்திற்காக ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி பல உயிர்களை கொன்று கொண்டிருப்பான்...
மதம் இல்லையென்றால் இனம், மொழி, கொள்கை(?)... இன்னும் பல...

மதத்தை சொல்லி குறையில்லை... இதை செய்பவர்கள் அவர்கள் மதத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை அறியாதவர்களே அல்லது அறைகுறையாக அறிந்தவர்கள்!!!

November 27, 2006 11:31 AM  
Blogger Sivabalan said...

ஜெய் சங்கர் சார்,

இனம் மொழி இவைகளால் இது போன்று நடந்தால் அவைகளையும் எடுத்துதான் எறிய வேண்டும். முள் படுக்கையில் உறங்குவது போலதான். தூக்கி எறியதான் வேண்டும்..

மதங்களால் உலகமே பிளவுட்டு இருக்கிறது. இந்நிலையில் மதங்களால் எற்படும் நன்மையை விட தீமையே அதிகம்.

November 27, 2006 11:35 AM  
Blogger Sivabalan said...

பாலாஜி

மனிதனின் அன்றாட அலுவல்களில் நீங்கள் சொல்வதுபோல் மதத்தின் நெறிகளை அறிய நேரமில்லாமல் தான் இருகிறான். அப்படி இருக்க மதம் எனும் அடையாளம் மட்டுமே அவனை ஒட்டியிருக்கிறது. இது ஒரு வகையில் உணர்வாக கூட அவனுக்கு உள்ளது.

ஆக உணர்வுகள் தூண்டுதலே இன்றைய மதங்களின் வேலையாக உள்ளது. சில சமயம் மதங்களின் நெறிகள் அல்லது வழிகாட்டல் மதங்களிடைய பெரிய பிரச்சனைகளைதான் உருவாக்குகிறது

அது நமக்கு தேவையா?

November 27, 2006 11:41 AM  
Blogger We The People said...

சிவா சார்,

//இனம் மொழி இவைகளால் இது போன்று நடந்தால் அவைகளையும் எடுத்துதான் எறிய வேண்டும்.//

எறிந்து விட்டு மீண்டும் காட்டுக்கு தான் போகவேண்டும், அங்கும் வரும் வேறுபாடுகள்.. அதனால் தான் சொன்னேன் களைய வேண்டியது இவைகளை அல்ல அதில் உள்ள உறசல்களை. உங்களால் தமிழை விட்டொழிக்க முடியுமா? தமிழன் என்ற முத்திரையை விட முடியுமா? என்னால் முடியாது :) தமிழனை மதிப்பது போல் ஹிந்தி பேசு பவனையும் மதிப்பு கொடு என்று சொன்னால் ஏற்றுக்கொள்வேனே ஒழிய ... ஹிந்திகாரனுக்கு உனக்கு உள்ள பிரச்சனைக்கு காரணம் மொழி அதனால் அதை விடு என்றால் என்னால் முடியாது... ஏன் நம் யாராலும் முடியாது தலைவா.....

November 27, 2006 12:00 PM  
Blogger Sivabalan said...

இல்லை ஜெய் சங்கர் சார்,

மொழியினால் ஏற்படும் பாதிப்புகளையும் மதங்களினால் ஏற்படும் பாதிப்புகளையும் ஒன்றுபடுத்தி பார்ப்பது சரியல்ல. அதாவது மதம் என்பது உலக அளவில் வேறுன்றி இருக்கிறது. அது கிட்டதட்ட ஒவ்வொரு மனிதனுக்கும் மிகப் பெரிய அடையாளமாகவே உள்ளது. அதனால்தான் எதோ ஒரு கார்ட்டுனுக்கு மிகப் பெரிய ஆர்பாட்ட்ம், சர்ச்சைக்கு உரிய இடத்தில் கோவில கட்டுவேன் என்று கூறி நாடே பற்றி எறிதல்.. எல்லாம்..

என்னுடைய கேள்வி எல்லாம்.. இந்த அடையாளங்கள் எல்லாம் மனிதனை மனிதனாக்கவா அல்லது நீங்கள் சொல்வதுபோல் காட்டு விலங்காக்கவா?

என்னை கேட்டால் இந்த அடையாளங்கள் மனிதனை மிருகமாக்கி கொண்டுதான் இருக்கிறது.

November 27, 2006 12:14 PM  
Blogger We The People said...

//என்னுடைய கேள்வி எல்லாம்.. இந்த அடையாளங்கள் எல்லாம் மனிதனை மனிதனாக்கவா அல்லது நீங்கள் சொல்வதுபோல் காட்டு விலங்காக்கவா?

என்னை கேட்டால் இந்த அடையாளங்கள் மனிதனை மிருகமாக்கி கொண்டுதான் இருக்கிறது.//

என்னை கேட்டால் மதத்தை சரியாக தெரியாதவனே /சுத்தமாக அறியாதவர்களே காட்டுமிராண்டிகளாய் மக்கள் உயிர்களை சூரையாடிவருகிறார்கள். இது இல்லை என்றால் அவர்கள் வேறு காரணம் கண்டெப்பார்கள் மக்கள் உயிர்களை சூரையாட... என்பதே உண்மை.

நன்றி

ஜெய்

November 27, 2006 11:24 PM  
Blogger ramachandranusha(உஷா) said...

வீ தீ பீபிள்,
ஓகை கத்தியை உதாரணம் காட்டினார். நான் அல்ல :-) சிவா, உங்களுக்கு பதில் சொல்லிவிட்டாலும் என் பங்கிற்க்கு!
நான் கேட்ட கேள்வி மதம் எங்காவது நன்மையை விளைவித்ததா? என் மதம் அதன் அடுத்த பரிணாமமாய் என் கடவுள் என்னும்பொழுதே சுயநலம் வந்துவிடுகிறது. எத்தனை பேர்கள் அடுத்த மதத்தையும் மற்ற கடவுளையும் தன் மத, கடவுளுக்கு
இணையாய் போற்றுகிறார்கள்?
மொழி இங்கு ஒப்புமை இல்லை, பல மொழி கற்கும் திறமை வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் வழிக் காட்டுகிறது. மதத்தைப் அறுத்து எறியத் தொடங்கியுள்ளார்களோ தெரியவில்லை ஆனால் ஒதுங்கி செல்லத் தொடங்கியுள்ளனர். உண்மையான ஆன்மீகவாதிக்க்கு இந்த மதம்
என்ற முத்திரை தேவையில்லை.

November 28, 2006 6:36 AM  
Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
உண்மையான ஆன்மீகவாதிக்க்கு இந்த மதம் என்ற முத்திரை தேவையில்லை.
///

well said ramachandranusha.

மதம் என்பது அரசியலுக்காகவும் மன விகாரங்களை வெளிக் காட்டவும் மட்டுமே உதவுகிறது.

November 29, 2006 5:49 AM  
Blogger We The People said...

உஷா மேடம்,

உங்களிடம் ஒரே கேள்வி, நீங்க சொல்லறாமாதிரி மதத்தை ஒழித்துவிட்டால் இது போன்ற தீவிரவாதமும், கொலைகளும் இருக்காதுன்னு சொல்லறீங்களா?

என்வாதம் இல்லை என்பது. அதற்க்கு காரணம் மேலே சொல்லியுள்ளேன்.

சிவா சார் சாரி உங்க பதிவுல என்வாதம் கரெக்டான்னு தெரியலை... தப்பாக இருந்தால், அல்லது திசை திருப்பிற மாதிரி தோணுச்சுன்னா இதை பப்லிஷ் பண்ணவேண்டாம் :)

November 29, 2006 7:38 AM  
Blogger Sivabalan said...

செந்தில் குமரன்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

November 29, 2006 10:28 AM  
Blogger Sivabalan said...

ஜெய் சங்கர் சார்

எப்படி பார்த்தாலும் தீவிரவாதம் ஒழியாது அதனால் மதம் இருந்துட்டு போகட்டும் என்கிறீர்களா?!! Ha Ha Ha..

இது நல்லா இருக்கு..

November 29, 2006 10:30 AM  
Anonymous Anonymous said...

நான் சிவனேன்னு சும்மா இருந்தேன். இவர் படத்தைக் காட்டி எழுத வைத்து விட்டார்.
நான் ஒரு பேச்சுக்கு சொல்கிறேன், உங்கள் பெயரை இனி பாலன் என்று அழகிய தமிழில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அதில் "சிவ" என்ற மதத்தை அல்லது கடவுளைக் குறிப்பிடும் சொல் உள்ளது. அப்படி நீங்கள் செய்தால், உங்கள் வீட்டில் உள்ளவர்களே முதலில் உங்களுக்கு மறை கழன்று விட்டதாகச் சொல்வார்கள்.

“களைகள் முளைவதால், விவசாயமே செய்ய வேண்டாம்” என்று சொல்வது போல் உள்ளது, உங்கள் கோரிக்கை.

களைகளையும், விசச்செடிகளையும் அழிக்க முயலுவோம்.

புதிய பாரதம் படைத்திடுவோம்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
ஒற்றுமையில் உண்டு உயர்வு.
சாரே ஜஹான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா
அனைத்து தேசங்களிலும் சிறந்தது, நமது இந்தியா

December 12, 2006 3:27 AM  
Blogger Sivabalan said...

அய்யா

முதலில் நீர் பெயர் போட்டு எழுதும். அப்பறம் பார்க்கலாம் என் பெயரை என்ன செய்யலாம் என்று..

நிலமே கெட்டுவிட்டால் அங்கே விவாசயமே செய்யவே முடியாது.. இது அவ்வகைதான்..

தனிமனித தாக்குதல்கள் இல்லாமல் கருத்துக்களை வையுங்கள் பேசலாம்..

இல்லை என்றால் இங்கே நிறைய கடைகள் உள்ளது அங்கே போய் உங்கள் வியாபரத்தை வைத்துக் கொள்ளுங்கள்..

December 12, 2006 7:26 AM  
Blogger மணியன் said...

சிபா, முதலில் இந்த மதவெறியர்களைக் கண்டு கொதிப்படைவதில் நானும் உங்களுடன் கலந்து கொள்கிறேன்.
மதம் என்பது மக்களை நல்வழிப்படுத்துவது, மனிதரை துன்புறுத்தவோ கொல்லவோ அல்ல. இருந்தாலும் நீங்கள் சொல்வதுபோல் மதத்தின்பேரால் நடக்கும் வன்முறைகளைக் கண்டால் மதமே இல்லாமல் இருந்தால் நலமாயிருக்குமே என்ற எண்ணம் வருதல் இயல்பே.ஆயினும் இன்று மதத்தை எதிர்ப்பவர்கள் மற்றும் மதமில்லாதவர்கள் நிகழ்த்தும் வன்முறையைக் காணும்போது நீயா,நானா தான் காரணமாக அமைகிறதே தவிர மதமோ இனமோ மொழியோ காரனமாவதில்லை.

December 12, 2006 8:59 AM  
Blogger Sivabalan said...

மணியன் சார்

உண்மைதான்.. மதங்கள் ஏற்படுத்தப் பட்ட நோக்கிலிருந்து விலகி வெகு தூரம் சென்று விட்டதாகவே நான் உணர்கிறேன். மூட நம்பிகைகள் தேவையில்லா சடங்குகள் மனிதனை மத்ததிற்காக செயல்படும் அளவிற்கு மாற்றிவிட்டது.. அதனால்தான் இங்கே அரங்கேறும் கூத்துகள் எல்லாம்..

அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இப்பதிவு!

மதங்கள் மனிதனை ஆட்டிப் படைக்க துவங்கி விட்ட இன்றைய நிலையில் அந்த மதங்கள் இன்னும் தேவைதானா? இது தான் மன ஓட்டத்தில் உள்ள கேள்வி!

இதற்கு சரியானதொரு விளக்கம் தரும் எந்த ஒரு அமைப்பில் என்னை சேர்த்துக் கொள்ள தயராக உள்ளேன் அவை மனிதனில் நல்ல மாற்றங்களை விளைவிக்கும் என்றால்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

December 12, 2006 9:08 AM  
Anonymous Anonymous said...

அருமையான பதிவு,வாழ்த்துக்கள்.
ம்தத்தால்் நடந்த ,நடக்கிற சண்டைகள்தான் நிறைய.மதத்தின் ஆணிவேர் எது?கடவுள்.கடவுள் எப்படி வந்தார்?மனிதனின் பயத்தால் நெருப்பும் காற்றும் கடவுளானது,பின் மதமானது.பிழைப்பானது,ஏமாற்றானது.கொலையாக வாழ்கிறது.
ஆகவேதான் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்{பயந்தவன்},வணங்குகிறவன்{இதைக்கொடு அதைக்கொடு,நான் இது தருகிறேன்} காட்டுமிராண்டி,பரப்புகிறவன்{பணம்,புகழ் பதவி வேண்டி}அயோக்கியன்!
கடவுளை மற!மனிதனை நினை!
சொன்னால்் ஏன் கோபம்?

December 12, 2006 5:06 PM  
Blogger Sivabalan said...

தமிழன்

புரிதலக்கு மிக்க நன்றி!!

நீங்கள் சொல்லும் கருத்து எனக்கு ஏற்புடையதே!!

வருகைக்கு மிக்க நன்றி!

December 12, 2006 8:46 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv