Sunday, November 19, 2006

114.உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்.

ஏய் எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு
கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு
சுத்தமாக சொன்ன் தெல்லாம் போறலியா
மொத்தமாக காதுல தான் ஏறலியா


உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆன்டவன் அந்த மதம்.

அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா

கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறன் கேளுடா

அந்த ஆன்டவன் தான் கிருஸ்துவனா முஸ்லிமா இல்லை இந்துவா


உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்.....


மனசுக்குள்ள நாய்களும் நரிகளும
நால்வை பேய்களும் நாட்டியமாடுதடா

மனிதனென்னும் போர்வையிலிருக்குது
பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா

அட யாரும் திருந்தலயே இதுக்காக வருந்தலயே
அட யாரும் திருந்தலயே இதுக்காக வருந்தலயே

நீயும் நானும் ஒன்னு இது நெசந்தான் மனசுல என்னு
பொயையும் புரட்டையும் கொன்னு இந்த பூமிய புதுசா பன்னு



சும்மா சொன்னத சொன்னத சொல்லவா
சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா

அட உன்னதா நம்புறன் நல்லவா
உன்னால மாறுதல் வந்திடுமல்லவா


உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்......


கணக்கிலொரு கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும் இருப்பது உண்மையடா

கூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது
பாவத்தை பெருக்குது இது என்ன ஜென்மமடா

இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்ல பொழுது
இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்ல பொழுது


அடியே ஞானத்தங்கம் இங்கு நானொரு ஞானச்சிங்கம்
இதைப் பார்த்தா பொய்களும் ஓடும் இரண்டு போட்ட உலகமும் மாறும்

அட பத்திரம் பத்திரம் பத்திரம் தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது
இது சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது


உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்......



இந்த பாடலின் "ஆடியோ இங்கே கேளுங்க.."


படம்: ராமன் அப்துல்லா
பாடல்: கவிஞர் வாலி
இசை: இசை ஞானி இளையராஜா
குரல்: நாகூர் E.M.HANIFA
இயக்கம்: பாலுமகேந்திரா
வருடம்:1997

25 Comments:

Blogger மங்கை said...

சூப்பர்...

டைம் பார்த்து போட்டு இருக்கீங்க சிவா

:-))

November 19, 2006 9:11 PM  
Blogger Udhayakumar said...

சிவா, தேங்க்ஸ் கிவிங் டே பிளான் என்ன? நான் சிகாகோ வரலாம்ன்னு இருக்கேன். உங்களுக்கு வசதிப்பட்ட ஏதாவது ஒரு நாள் சொல்லுங்க... சந்திப்போம்...

November 19, 2006 9:13 PM  
Blogger Sivabalan said...

மங்கை,

வருகைக்கு மிக்க நன்றி

November 19, 2006 9:40 PM  
Blogger Sivabalan said...

உதய்

நன்றி.

இப்பொதைக்கு எந்த பிளானும் இல்லையுங்க..

நீங்க சொல்லுங்க.. நம்ம பிளான் பன்னுவோம்.

மொபலைக்கு கூப்பிடுங்க..

November 19, 2006 9:42 PM  
Blogger உங்கள் நண்பன்(சரா) said...

சி.பா!

நல்ல வரிகளை நியாபகப்படுத்தியமைக்கு நன்றி!
வாலியின் வரிகளுக்கு சொல்லவா வேண்டும்?
அருமை!
//கிவிங் டே பிளான் என்ன? //

அப்படீனா என்ன?

அன்புடன்...
சரவணன்.

November 19, 2006 10:01 PM  
Blogger Sivabalan said...

சரவணன்,

வருகைக்கு மிக்க நன்றி.

அது Thanks Giving Day. நம்ம ஊரு பொங்கல்தான் கிட்டதட்ட இங்கே Thanks Giving day..

The fourth Thursday of November, observed as a legal holiday in the United States to commemorate the feast held at Plymouth in 1621 by the Pilgrim colonists and members of the Wampanoag people and marked by the giving of thanks to God for harvest and health.


மேலும் விவரம் அறிய இங்கே போய் பாருங்க..

http://en.wikipedia.org/wiki/Thanksgiving

மிக்க நன்றி

November 19, 2006 10:18 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

சிபா,

ஏற்கனவே இதுபோன்ற பாடல்களுக்கு இசை அமைத்த இளைய ராஜாவுக்கு, இடையில் என்ன வந்ததோ !

November 19, 2006 10:28 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

உதயகுமார் மற்றும் சிவபாலன்.. நானும் நீண்ட வார இறுதிக்கு எங்கேயும் போகல.. மொத்தமா ஒரு ப்ளான் போட்டு மீட் பண்ணுவோம். சிவபாலன் எனக்க்கும் ஒரு அழைப்பு வையுங்க.

என் நம்பர் நாலு ஏழு மூணு இருநூறு ஒன்பதாயிரத்து தொள்ளாயிரம்.

:)

November 19, 2006 10:45 PM  
Blogger Amar said...

//அட பத்திரம் பத்திரம் பத்திரம் தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது//

மதங்களை எதிர்த்து எழுதபட்ட ஒரு பாடலில் மடத்தனமான நம்பிக்கையை குறிக்கும் வரிகள் இவை.

தீர்ப்பு நாள் தீர்ப்பு நாளுன்னு சொல்லி சொல்லியே மனிதர்களை மதங்கள் மிரட்டு வந்துள்ளன....இந்த பாடலிலும் பத்திரமுன்னு சொல்லுறாங்க.

November 19, 2006 10:53 PM  
Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

:-)))

November 19, 2006 11:35 PM  
Blogger உங்கள் நண்பன்(சரா) said...

தகவலுக்கு நன்றி திரு.சி.பா


Udhayakumar said...
//சிவா, தேங்க்ஸ் கிவிங் டே பிளான் என்ன? நான் சிகாகோ வரலாம்ன்னு இருக்கேன். உங்களுக்கு வசதிப்பட்ட ஏதாவது ஒரு நாள் சொல்லுங்க... சந்திப்போம்...//

சிறில் அலெக்ஸ் said...
//உதயகுமார் மற்றும் சிவபாலன்.. நானும் நீண்ட வார இறுதிக்கு எங்கேயும் போகல.. மொத்தமா ஒரு ப்ளான் போட்டு மீட் பண்ணுவோம். சிவபாலன் எனக்க்கும் ஒரு அழைப்பு வையுங்க.//

ஆஹா! குருப்பு சேர்ந்துட்டாய்ங்ப்பூ...

சிகாகோ-வில் பதிவர்கள் சந்திப்புனு ஒரு பதிவு ஆரம்பமா?(ஆமா அங்கே நம்ம ஊரு போண்டா கிடைக்குமா?)


thanks giving day--ஆஹா பெயரே அருமையாக உள்ளது. கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்!!!


அன்புடன்...
சரவணன்.

November 20, 2006 12:35 AM  
Blogger மாசிலா said...

நல்ல பதிவு.
நல்ல பாட்டு.
நன்றிகள்.

November 20, 2006 6:03 AM  
Blogger thiru said...

நல்ல பாடல் சிவா! Thanks giving days வாழ்த்துக்கள்!

November 20, 2006 9:06 AM  
Blogger Sivabalan said...

GK,

:)

வருகைக்கு நன்றி.

November 20, 2006 11:51 AM  
Blogger Sivabalan said...

சிறில்

உங்கள் மொபைலுக்கு அழைக்கிறேன். நிச்சயம் இந்த வாரம் சந்திப்போம்.

வருகைக்கு நன்றி.

November 20, 2006 11:52 AM  
Blogger Sivabalan said...

சமுத்திரா

தீர்ப்பு நாள் என்று இங்கே குறிப்பிட்டது மதங்களுக்கிடையே நடக்கும் கேவலமான சன்டைகளுக்கு தீர்ப்பு நாள் எனக் கருத வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

வருகைக்கு நன்றி

November 20, 2006 11:56 AM  
Blogger Sivabalan said...

செந்தில் குமரன்

இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?

வருகைக்கு நன்றி

November 20, 2006 3:28 PM  
Blogger Sivabalan said...

சரவணன்

வாழ்த்துக்கு நன்றி

November 20, 2006 3:29 PM  
Blogger Sivabalan said...

மாசிலா

வருகைக்கு மிக்க நன்றி

November 20, 2006 3:30 PM  
Blogger Sivabalan said...

திரு

உங்களுக்கும் Thanks Giving Day வாழ்த்துக்கள்!!

வருகைக்கு மிக்க நன்றி

November 20, 2006 3:31 PM  
Blogger குமரன் (Kumaran) said...

//ஏற்கனவே இதுபோன்ற பாடல்களுக்கு இசை அமைத்த இளைய ராஜாவுக்கு, இடையில் என்ன வந்ததோ !
//

கோவி.கண்ணன் ஐயா. நீங்கள் இளையராஜாவின் அண்மைப் பேட்டியைப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படிப் படித்திருந்தால் படித்த பின்னும் உங்களுக்கு இந்த ஐயமா என்று வியப்பாக இருக்கிறது.

November 20, 2006 3:58 PM  
Blogger குமரன் (Kumaran) said...

சிவபாலன். எப்போதிருந்து கிறிஸ்தவ பிரச்சாரகர் ஆனீர்கள்? :-) தீர்ப்பு நாள் வருதுன்னு சொல்ற பாட்டை எடுத்துப் போட்டிருக்கீங்களே? :-)

நீங்க வேற பொருள் எடுத்துக்கிட்டாலும் என்னமோ அந்த சொற்றொடரைப் பார்த்தவுடன் 'ஏசு வருகிறார்' நற்செய்தியை அது குறிப்பது தான் உடனே நினைவிற்கு வருகிறது. :-)

November 20, 2006 4:00 PM  
Blogger Sivabalan said...

குமரன் சார்,

//எப்போதிருந்து கிறிஸ்தவ பிரச்சாரகர் ஆனீர்கள்? //

இப்படி ஒரு விசயம் இருக்கா? சரியா போச்சு போங்க..

ஆகா.. நான் இந்த ஆட்டத்திற்கு வரவில்லை..

வருகைக்கு நன்றி

November 20, 2006 5:40 PM  
Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

பாடலையும் உங்கள் டைமிங்கையும் ரசித்ததாக அர்த்தம். :-))))

November 21, 2006 9:15 AM  
Blogger Sivabalan said...

செந்தில் குமரன்,

மீன்டும் வந்து கருத்தை தெளிவு படுத்தையமைக்கு மிக்க நன்றி

November 21, 2006 9:18 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv