சிகாகோ - நேரில் வந்து சந்தித்த பதிவர்கள்.
நாள்: 25 - 11 -06.
இடம்: சிகாகோ
சுமார் 3.30 PM மணியளவில் உதய்குமார் எங்கள் வீட்டுக்கு வந்தார். படத்தில் பார்ப்பதை விட இளைமையாக இருந்தார். நாங்கள் இருவரும் சிகாகோ தாவரவியல் பூங்காவிற்கு செல்ல இருந்தபோது சிறிலிடம் இருந்து தொலைபேசி. பூங்கா இன்று 4.00 மணியுடன் மூடிவிடுவார்கள் என்று.
சரி, நீங்கள் எங்க வீட்டுக்கே வந்து விடுங்கள் என்றேன். அழைப்பை ஏற்று எங்கள் வீட்டுக்கு தன் மனைவி குழந்தையுடன் வந்தார். இவரும் போட்டோவை விட இளமை. கண்ணாடி அணியவில்லை.
வலைப் பதிவுகளில் அரசியல், சார்ப்பு நிலை, கருத்து சுதந்த்திரம் , தமிழ் மொழி - இதைச் சுற்றி விவாதங்கள் நடந்தன.
இனிப்பு, வடை, டீ இடையிடையே..
மொத்தத்தில் மிக அருமையான சந்திப்பு.
இடம்: சிகாகோ
சுமார் 3.30 PM மணியளவில் உதய்குமார் எங்கள் வீட்டுக்கு வந்தார். படத்தில் பார்ப்பதை விட இளைமையாக இருந்தார். நாங்கள் இருவரும் சிகாகோ தாவரவியல் பூங்காவிற்கு செல்ல இருந்தபோது சிறிலிடம் இருந்து தொலைபேசி. பூங்கா இன்று 4.00 மணியுடன் மூடிவிடுவார்கள் என்று.
சரி, நீங்கள் எங்க வீட்டுக்கே வந்து விடுங்கள் என்றேன். அழைப்பை ஏற்று எங்கள் வீட்டுக்கு தன் மனைவி குழந்தையுடன் வந்தார். இவரும் போட்டோவை விட இளமை. கண்ணாடி அணியவில்லை.
வலைப் பதிவுகளில் அரசியல், சார்ப்பு நிலை, கருத்து சுதந்த்திரம் , தமிழ் மொழி - இதைச் சுற்றி விவாதங்கள் நடந்தன.
இனிப்பு, வடை, டீ இடையிடையே..
மொத்தத்தில் மிக அருமையான சந்திப்பு.
39 Comments:
GK,
உங்களை கேட்காமலே உங்க தலைப்பை சுட்டுவிட்டேன்..Ha Ha Ha...
மேல்விவரம் தேவை!!
:))
SK அய்யா,
இதற்கு மேல் விவரம் சொன்னால் ஆட்டோ வந்துவிடுப் போகிறது...Ha Ha Ha..
உங்களுக்கு பிறந்த தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
SK அய்யா,
மிக மிக நன்றி
//உங்களை கேட்காமலே உங்க தலைப்பை சுட்டுவிட்டேன்..Ha Ha Ha... //
ஹி ஹி தமிழ் சொற்களுக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.
தலைப்பை சுட்டால் என்ன ? சுட்டாலும் தலைப்பு மேன்மைதரும் !
எல்லாம் எனக்கு (தற்) பெருமைதான் :)
நன்றி !!!
சிபா,
2 புகைப்படத்தில் முகம் தெளிவாக தெரிகிறது. 3 வது படத்தில் மாடர்ன் ஆர்டாக தெரிகிறது.
பரவாயில்லை நான் அறிவேன் !
:)
வாவ் சிவா,
சொல்லவே இல்லை. அசத்துங்க, சாமீகளா... எத்தனை வடை சாப்பிட்டீங்க... இந்த பக்கம் ரெண்ட அனுப்புறது :-))
GK,
//3 வது படத்தில் மாடர்ன் ஆர்டாக தெரிகிறது. பரவாயில்லை நான் அறிவேன்//
உங்களுக்கு தெரியாததா?!! Ha Ha Ha ..
வருகைக்கு நன்றி
நேசி
உண்மையில் இந்த டிக்கட் சமாசாரத்தில் இந்த விசயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள மறந்துட்டேன்...Hi Hi Hi..
மன்னிச்சுக்குங்க..!
நீங்க வரவேண்டிவருடன் வந்தால்தான் வடை.. இல்லை என்றால் கிடையாது.
வரவேண்டியவருடன் நேசி வருவார். அப்போ வடை மட்டும் தான் கிடைக்குமா? வேறெதுவும் இல்லையா? :-)
குமரன் சார்
நேசி வடை மட்டும்தான் கேட்டார், வரவேண்டியவர்கள் என்ன கேட்கிறார்களோ அது பரிமாறப்படும்..Ha Ha Ha...
நீங்க அப்படியே நேரம் கிடைக்கும் போது இந்தப் பக்கமும் வரலாமே??!!
நீங்க வந்தா வடை பாயசத்துடன் பெரிய விருந்து உண்டு.
//நீங்க வந்தா வடை பாயசத்துடன் பெரிய விருந்து உண்டு.//
அநியாயம் அக்கிரமம் ! வராதவங்க வந்தால் வடைபாயசம், எப்போவும் வருகிறவர்களுக்கு வடைமட்டும் தானா ?
ஓர வஞ்சனை !
:)
GK,
இப்படி பத்தவச்சுடீங்களே!! Ha Ha Ha..
நீங்க வருவதென்றால் வான் வேடிக்கையுடன் வர்வேற்பு கொடுக்கப்படும். Ha Ha Ha..
என்ன பேசினீங்கனு சொன்னா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும் ;)
//நீங்க வருவதென்றால் வான் வேடிக்கையுடன் வர்வேற்பு கொடுக்கப்படும். Ha Ha Ha..//
அப்ப நாங்க வந்தா???
அதைச் சொன்னாத்தான் ஆட்டோ வரும்னு பயப்படறாரே சிபா!
நீங்க வேற அதையே திரும்பவும் கேக்குறீங்களே, வெட்டிப்பயல்!
நம்ம இப்ப இந்த வடை சமாச்சாரத்துக்கே வருவோம்.
ஆளாளுக்கு எத்தனை வடை சாப்பிட்டீங்க?
என்ன இனிப்பு அது?
இதைச் சொன்னாலும் ஆட்டோ வருமா?
அதென்ன வான் வேடிக்கை வர்வேர்ப்பு!
புதுசா இருக்கே!
சிகாகோ தமிழா அது?
:))
:))
பாலாஜி
GK வந்து பத்தவெச்சுட்டாருன்னா நீங்க வந்து இப்படி மேலும் எண்ணெய் ஊற்றலாமா?? Ha Ha Ha ..இது நியாமா?
நேரம் கிடைக்கும் போது வாங்க..
அடுத்தமுறை நிறைய நேரம் கொடுத்து ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்துடுவோம்..
சரி...அமெரிக்கா மக்களா பேசிக்கிட்டு இருக்காங்க...நம்ம எதுக்கு நடுவில.. வர்ட்டா..?
Sk அய்யா,
ஏன் இந்த கலாய்க்கும் வெறி? Ha Ha Ha..
தருமி அய்யா
நீங்க இல்லாமலா? வாங்க.. உங்க வரவு நல்வரவாகட்டும்..
SK அய்யா
தப்பா நினைச்சுக்காதீங்க.. ஜாலியா போட்ட கமென்ட்..
அது எப்படி போட்ட கமென்டானாலும் சரி, என் கேள்விக்கு பதில் வராதவரைக்கும் நான் காலவரையற்ற "வடை உண்ணாவிரதம்" இருக்கப் போறேன்.
இதன் 'பின்' விளைவுகளுக்கு நீங்க தான் பொறுப்பு!
இந்த டபாய்க்கற வேலையெல்லாம் வேணாம்!
எத்தினி வடை? இன்னா இனிப்பு?
:))
//நீங்க வரவேண்டிவருடன் வந்தால்தான் வடை.. இல்லை என்றால் கிடையாது.//
சிவா, இதனை இப்படிப் படிச்சுப் பாருங்க...
நீங்க வரவேண்டிவருடன் வந்தால்தான் வடை...
இல்லை என்றால் நீ கிட... :-))
"வடை" பேக் அப்-க்கு நெறைய மக்கள் இருக்கீங்க... அது சரி, நானும் தெரியாமத்தான் கேக்றேன், அது என்ன எனக்கு மட்டும் வடை, குமரனுக்கு வடை + பாயாசம், ஜிகே-க்கு வான் வேடிக்கை... இதெல்லாம் சரியில்லை சொல்லிப் புட்டேன், ஆமா... ;-)) எனக்கும் அதே அளவுக்கு செய்யணும்... க்ஹூம்...
என்னவோ 'வடை வடை'ன்னு சத்தம் கேக்குதேன்னு வந்து பார்த்தேன்.
வடைக்கு நாந்தான் 'coffee ரைட்ஸ்' வாங்கி இருக்கேன்றதை உங்களுக்கெல்லாம்
ஞாபகப்படுத்தும் நிலை வந்துருச்சு (-: ஹூம்.....
குறைஞ்ச பட்சம் வடையை விழுங்கும் போதாவது நம்மளை நினைச்சுக்குங்க.
சொல்லிப்புட்டேன், ஆமா?
பி.கு: என்ன வடை?
//என்னவோ 'வடை வடை'ன்னு சத்தம் கேக்குதேன்னு வந்து பார்த்தேன்.
பி.கு: என்ன வடை?//
டீச்சர்; அதான் வடை சத்தம் நியுயார்க் வரை கேக்குதே! நல்ல காரமான மிளகு வடை போல! டீ யுடன் சாப்பிட !!
என்ன பேசினீர்கள் என்று தான் சொல்லவில்லை! எவ்வளவு நேரம் பேசினீர்கள்ன்னு சொல்லுங்க சிபா!
மற்றதை நாங்களே யூகிச்சிக்குறோம்! :-))
SK அய்யா
நீங்க வடை உண்ணாவிரதம் இருக்கிறது இருக்கட்டும்.. நேத்து உங்க பிறந்த நாளுக்கு என்ன டீரிட் கொடுத்தீங்க.?! எஙகளை ஏன் அழைக்கவில்லை..?! இதற்கு முதலில் பதில் சொல்லுங்க..Ha Ha Ha..
You too நேசி!!!???
Ha Ha Ha..
துளிசி மேடம்
உங்களை நினைத்துக் கொள்கிறோம்.. நியுசிலாந்துக்கு பார்சல் அனுப்பினேன் .. கிடைத்ததா?
கொஞ்சம் பார்த்து சொல்லுங்க..
ரவிசங்கர்,
சுமார் ஒரு மணி நேரம் பேசினோம்.. :)
ஆமா நியுயார்கில் "Frozen வடை" இந்தியன் ஸ்டோர்ஸில் கிடைக்கிறதா? Ha Ha Ha..
சிவபாலன்,
நாம டிஸ்கஸ் பண்னினதுக்கே ஆட்டோ வரும்னா... நினச்சுப் பாக்க முடியலியே.
நானும் பதிவு போடணும் நேரம் கிடைத்ததும்.
வடை இனிப்பு டீ உபசரிப்புக்கு மிக்க நன்றி. அடிக்கடி சந்திப்போம்.
வலைப்பதிவர் சந்திப்பு என்பதை விட நண்பர்கள் சந்திப்பு என்பதுதான் பொருத்தமாயிருக்கும். (குழந்தை மனைவின்னு கூட்டிட்டுப் போனா என்னத்த விவாதிக்க முடியுது?)
:)
ஆஹா! மர்மம் மேலும் மேலும் அதிகரிச்சுகிட்டே போகுதே!
சிறில் கூட ஸஸ்பென்ஸை மெயின்டைன் பண்ணி 'வடை, இனிப்பு, டீ'ன்னு சொல்றாரே தவிர என்ன வடை, என்ன இனிப்பு, மசால் டீயா, சிங்கிள் டீயான்னு ஒருத்தரும் சொல்ல மாட்டேங்கறாங்களேப்பா!
ஒரே அக்கிரமமா இருக்கே!
:))
"போண்டா" மசால் வடைன்னு சிறில் அவர் பதிவுல சொல்லியாச்சு.
இன்னும் பாக்கி இருக்கிறது என்ன இனிப்பு, என்ன டீ என்பது தான்!
:))
என்ன மிஸ்டர் சிவபாலன்,
போண்டா, வடை சமாச்சாரம் கிடக்கட்டும்
சந்திப்பு என்றால் ஒரு புகைப்படம் கூட எடுத்துப் பதிவில் போடாமல் விட்டு விட்டீர்களே?
மிஸ்டர் சிறில் அலெக்ஸ் முகத்தையும், மிஸ்டர் உதயகுமார் முகத்தையும் பதிவில் பார்த்திருக்கிறேன்
உங்களைப் பார்க்கும் ஆவலோடுதான் பதிவிற்குள் நுழைந்தேன்.
ஏமாற்றமாகிவிட்டது!!!!!!!
நியாயம்தானா?
சிறில்,
//நண்பர்கள் சந்திப்பு என்பதுதான் பொருத்தமாயிருக்கும்.//
மிகச் சரியா சொன்னீங்க..
அடிக்கடி சந்திப்போம்..
(வீட்டிற்கு) வருகைக்கு மிக்க நன்றி
Sk அய்யா
இப்படி அநியாத்திற்கு கலாய்கிறீங்களே?! இது நியாமா?
ஆமா, டீரிட் பற்றி வாயே திறக்க மாட்டீங்கிறீங்களே?!
சிவபாலன்,
என்ன நடக்குது இங்கை? நான் கொஞ்ச நாட்களாக நாட்டில் இல்லை. அதற்கிடையில் பல நிகழ்வுகள் நடந்தேறியிருக்கு. ம்ம்ம்... அடுத்த சந்திப்பு ஒழுங்கு செய்யும் போது சொல்லுங்கள். நானும் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
நன்றி.
SP.VR.SUBBIAH அய்யா,
உங்களுக்கு தெரியாமலா? மின் அஞ்சலில் படங்கள் அனுப்புகிறேன்.
வெளிநாட்டில் இருப்பதால், கொஞ்சம் அச்சம்??!!.. அதனால் தான் போட்டோ போடவில்லை..
வருகைக்கு மிக்க நன்றி
வெற்றி
வாங்க வாங்க..
எங்க ரொம்ப நாளா உங்களை காணோம்..??!!
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
அடுத்த முறை நிச்சயம் முன் கூட்டியே சொல்கிறேன். கட்டாயம் கலந்துகொள்ளுங்கள்..
வருகைக்கு மிக்க நன்றி.
(புதிதா எதாவது ஒரு பதிவை தட்டி விடுங்க.. படிப்போம்)
சிவபாலன்,
/* எங்க ரொம்ப நாளா உங்களை காணோம்..??!! */
தாயகம்[ஈழம்] சென்றிருந்தேன். சில தினங்களுக்கு முன்னர் தான் திரும்பினேன்.
/*(புதிதா எதாவது ஒரு பதிவை தட்டி விடுங்க.. படிப்போம்) */
இதுவரை நானாக [சுயமாக] ஒரு பதிவும் எழுதியது கிடையாது. படித்துச் சுவைத்த பல சங்கதிகளைப் பதிவேற்றியிருக்கிறேன். தாயகப் பயணம் நீண்ட பயணம் என்பதால் பல நூல்களைப் படிக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. நிச்சயம் பயணக் களைப்பு நீங்கியதும் பதிவிலிடுகிறேன்.
வெற்றி
நல்லது.
பதிவிடுங்கள்.. படிக்க ஆவல்...
நன்றி
Post a Comment
<< Home