பெரியார் பற்றி அண்ணா
பெரியாரின் பணி, தற்குறிகள் நிரம்பிய தமிழகத்திலே, கல்வீச்சு மண்வீச்சுக்கிடையே என்பதை அறிய வேண்டும். அதிலும் சகலமும் உணர்ந்த சகலகலா வல்லுநர்களும், வெறும் சாமியாடிகளைக் கூடக் கண்டித்துப் பேசச் சக்தியற்றுக் கிடந்த நிலையில், பெரியாரின் பெருங்காற்றுத் தமிழகத்திலே வீசி, நச்சுமரங்களை வேரொடு கீழே பெயர்த்தெறிந்தது என்பதையும் உணர வேண்டும்..
சாக்ரடீஸ், லெனின், பிராட்லா, பர்னாட்ஷா, ரூசோ முதலிய பேரறிஞர்களும் புரட்சிகாரர்களும் எதற்காக உலகிலே போற்றப்படுகிறார்களோ, அவ்வளவையும் ஒருங்கே திரட்டி ஓருருவில் பார்க்க வேண்டுமானல், அது பெரியார்தான். --- அறிஞர் அண்ணா.
14 Comments:
நன்றி: http://tamil.sify.com
படம்: www.aiadmkindia.org
நன்றி
Small is beutiful....
சின்ன சின்ன பதிவா போட்டு அழகா விஷயத்த நச்சுன்னு சொல்றீங்க
ஹம்ம்ம் நானும் தான் இருக்கேனே
நல்ல பதிவு சிவா! வாழ்த்துக்கள்
நல்ல பதிவு.
மதம், சம்பிரதாயம், சாங்கியம், மூட நம்பிக்கை ஆகியவைகளில் மூளையை அடகுவைத்துவிட்டு வாழ்க்கை பறிகொடுத்து தவிக்கும் மனிதர்களுக்கு பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள்தான் விஷம் முறிக்கும் மாற்று மருந்து. பூச்சிகள், அடிமைகள், இயந்திரம் ஆக்கப்பட்ட மனிதர்கள் தங்கள் உண்மை மனித நேயத்தை மீண்டும் பெற்று இன்ப வாழ்க்கை வாழ பெரியாரின் சிந்தனைகளில் ஊறி வளர வேண்டும். வெளிவேஷம், பகட்டு, ஆடம்பர, வெற்று வாழ்க்கையை ஒழித்து மனிதன் மனிதனாக வாழ அறிவு கொடுத்தவர் பெரியார் அவர்களே.
புயலாக வாழ்ந்து தம் வாழ்க்கை முழுவதையும் பொதுப்பணிக்கும், அடக்கப்பட்டவ்ர்களுக்கும் அர்ப்பணித்த பெரியாரின் புகழ் என்றென்றும் நீடித்து வாழ தொடர்ந்து அவர் வழியில் நடப்போம். இதுதான் நாம் அவர் உழைப்பிற்கு செய்யும் நன்றிக்கடன்.
நன்றி.
மாசிலா.
சிவபாலன்
நல்ல பதிவுங்க!
நன்றி அறியத் தந்தமைக்கு!
மங்கை,
நாம் எடுத்து செல்லும் விசயம் சென்றடைந்தால் சரி. உங்கள் பதிவுகளின் தரம் நிச்சயம் மேலானது. நான் விரும்பி படிக்கும் பதிவுகளில் உங்களுடைய பதிவும் ஒன்று.
வருகை தந்து பின்னூடமிட்டு பாராட்டி சென்றமைக்கு மிக்க நன்றி.
திரு
மிக்க நன்றி!
மாசிலா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ரவிசங்கர்
மிக்க நன்றி
சிவபாலன்,
சிறந்த பதிவு.
//அதிலும் சகலமும் உணர்ந்த சகலகலா வல்லுநர்களும், வெறும் சாமியாடிகளைக் கூடக் கண்டித்துப் பேசச் சக்தியற்றுக் கிடந்த நிலையில், பெரியாரின் பெருங்காற்றுத் தமிழகத்திலே வீசி, நச்சுமரங்களை வேரொடு கீழே பெயர்த்தெறிந்தது //
சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழகத்தின் பெரும்பாலான தலைவர்கள் பெரியாரை மிகவும் மதித்தனர் என்பதே உண்மை.
நன்றி
வசந்த்
//சாக்ரடீஸ், லெனின், பிராட்லா, பர்னாட்ஷா, ரூசோ முதலிய பேரறிஞர்களும் புரட்சிகாரர்களும் எதற்காக உலகிலே போற்றப்படுகிறார்களோ, அவ்வளவையும் ஒருங்கே திரட்டி ஓருருவில் பார்க்க வேண்டுமானல், அது பெரியார்தான்//
சிபா..!
பெரியவர் (அண்ணா), பெரியாரைப் பற்றிச் சொன்னால் அது பெருமாள் சொன்னது போலத்தான் !
:)
வசந்த்
நீங்கள் சொல்லும் கருத்து சரியே.
வருகைக்கு மிக்க நன்றி
GK,
நல்லா சொன்னீங்க..
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment
<< Home