Saturday, December 02, 2006

பெரியார் பற்றி கல்கி
தமிழ்நாட்டில், இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான், என்னால் மூன்றுமணி நேரம் உட்கார்ந்து கேட்க முடியுமென்று தயங்காமல் கூறுவேன்.

அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்குத் தமிழ்நாட்டுப் பிரசங்கிகளுக்குள்ளே முதன்மை ஸ்தானம் தயங்காமல் அளித்து விடுவேன்...

அவர் உலகாநுபவம் என்னும் கலாசாலையில், முற்றுமுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ நானறியேன்.

இராமசாமியாரின் பிரசங்கம், பாமர ஜனங்களுக்கே உரியது என்று ஒரு சிலர் கூறக்கேட்டிருக்கிறேன். பாமர ஜனங்களை வசப்படுத்தும் ஆற்றல், தமிழ்நாட்டில் வேறெவரையும் விட, அவருக்கு அதிகம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதிலிருந்து அவருடைய பிரசங்கம், படித்தவர்களுக்கு ரசிக்காது என்று முடிவு செய்தல் பெருந்தவறாகும்.

36 Comments:

Blogger Sivabalan said...

நன்றி: http://tamil.sify.com

December 02, 2006 9:41 PM  
Blogger ஓகை said...

இன்றைக்கும் நீங்களெல்லாம் பதிவுகள் போகிறீர்கள் அல்லவா இதெல்லாம் அவரது பிரச்சார உத்தியின் மாபெரும் வெற்றியைப் பறை சாற்றுகின்றன.

அவருடைய பேசும் மற்றும் எழுதும் முறைகள் மாபெரும் வெற்றி பெற்று இன்று இணையம் வரை பின்பற்றப்படுகிறதே!

December 02, 2006 10:16 PM  
Blogger bala said...

//அவருடைய பேசும் மற்றும் எழுதும் முறைகள் மாபெரும் வெற்றி பெற்று இன்று இணையம் வரை பின்பற்றப்படுகிறதே!//

ஓகை அய்யா,

கேவலமான திராவிட அரசியலுக்கு வித்திட்டு,
தமிழ் நாட்டின் அழிவுக்கு அடிகோலிய உத்தமர் அல்லவா தாடியார். கேவலமான இந்த மூஞ்சியை தங்கள் தந்தை என்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் காட்டுமிராண்டி கும்பலை என்ன சொல்வது?கருணாநிதி சொல்வது போல் சோத்தால் அடித்த பிண்டங்கள்.

பாலா

December 02, 2006 10:32 PM  
Blogger Sivabalan said...

ஓகை

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

December 02, 2006 10:40 PM  
Blogger Sivabalan said...

பாலா

பெரியார் அதிகமாக உண்மையை பேசிதியதால்தான் உங்களுக்கு இவ்வளவு கோபமா?! Ha Ha Ha..

வருகைக்கு நன்றி

December 02, 2006 10:43 PM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
பதிவுக்கு நன்றி. பெரியாரின் உரைகள் ஒலிப்பதிவு/ஒளிப்பதிவு வடிவில் இருக்கின்றனவா? ஏதாவது இணையத்தளங்களிலேனும். இருந்தால் சொல்லுங்கள். இதுவரை பெரியாரின் படைப்புக்கள் எதையும் படிக்கவில்லை. பலரும் அவர் பற்றி வியந்து போற்றுவதால் அவரின் குரலைக் கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறது.

December 02, 2006 10:46 PM  
Blogger bala said...

//பெரியார் அதிகமாக உண்மையை பேசிதியதால்தான் உங்களுக்கு இவ்வளவு கோபமா?! Ha Ha Ha//

சிவபாலன் அய்யா,

ha ha ha..

தவறு செய்து விட்டீர்களய்யா.

பெரியார் பேசியது உண்மை என்று பீலா விட்டுக்கொண்டு மோசடி வியாபாரம் செய்யும் திராவிட அரசியல் வியாதிகள் மேல் ஏற்படும் கோபம்.

பாலா

December 02, 2006 10:50 PM  
Blogger ஓகை said...

பாலா,அவரது பிரச்சார உத்தியின் வெற்றியைப் பற்றி மட்டுமே நான் சொல்லியிருக்கிறேன். ஒன்று சொல்கிறேன் கோபித்துக் கொள்ளாதீர்கள். உங்கள் விமர்சனத்தின் மொழியில் எனக்கு உடன்பாடு இல்லை. உங்கள் மொழியால் உங்கள் விமர்சனம் மிக நீர்த்து போகிறது என்பதை உணர்வீர்களா?

December 02, 2006 10:52 PM  
Blogger பகுத்தறிவு said...

//சிவபாலன்,
பதிவுக்கு நன்றி. பெரியாரின் உரைகள் ஒலிப்பதிவு/ஒளிப்பதிவு வடிவில் இருக்கின்றனவா? ஏதாவது இணையத்தளங்களிலேனும். இருந்தால் சொல்லுங்கள். இதுவரை பெரியாரின் படைப்புக்கள் எதையும் படிக்கவில்லை. பலரும் அவர் பற்றி வியந்து போற்றுவதால் அவரின் குரலைக் கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறது. //

Checkout periyar.org. this site contains more details.

Also please visit

unmaionline.com
viduthalai.com

December 02, 2006 10:52 PM  
Blogger SP.VR.சுப்பையா said...

பெரியார் அதிகமாகப் பேசியது

1.சமநீதி
2.இறையின்மை (கடவுள் இல்லை)

இரண்டாவதைத்தான் அதிமான மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை1

அது தெரிந்துதான் அவருடைய சீடரான புரட்சித்தலைவர் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு அரசியலில் பெரும் வெற்றியை பெற்றார்.மேலும் அவர் இருந்தவரை அவரை யாராலும் அசைக்க முடியவில்லை!

December 02, 2006 10:57 PM  
Blogger SK said...

மாற்றுக் கருத்துகளைக் கூட நாகரீகமாகச் சொல்ல வேண்டும் என்னும் ஓகையாரின் கருத்துடன் நான் உடன்படுகிறேன்.

கல்கி செய்தது போல!

பாராட்ட வேண்டியதை மட்டும் பாராட்டி மற்றவற்றை விடுவது சற்று ஆரோக்கியமன சூழல் வளர வழி வகுக்கும்.

December 02, 2006 11:03 PM  
Blogger Sivabalan said...

வெற்றி

தேடிப் பார்க்கிறேன். கிடைத்தவுடன் தருகிறேன்.

பகுத்தறிவு அவர்கள் சில சுட்டியை கொடுத்துள்ளார் அங்கும் சென்று பார்க்கலாம்.

நேரம் கிடைக்கும் போது நிச்சயம் அவருடை கருத்துகளை படியுங்கள். ஒவ்வொரு மனிதன் தெரிந்துகொள்ள நிறைய விடயங்கள் அவரிடம் உள்ளது.

வருகைக்கு மிக்க நன்றி

December 02, 2006 11:03 PM  
Blogger வசந்த் said...

சிவபாலன் அவர்களே,

மிகவும் நன்றி அடிக்கடி பெரியார் பெயரை இணையத்தில் உலவ விடுவதற்கு. புதிதாக பதிவுகள் படிப்பவர்களுக்கு அவரை பற்றி அறிந்து கொள்ள ஆவல் பிறக்கும்.

நன்றி
வசந்த்

December 02, 2006 11:06 PM  
Blogger dondu(#4800161) said...

"அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்குத் தமிழ்நாட்டுப் பிரசங்கிகளுக்குள்ளே முதன்மை ஸ்தானம் தயங்காமல் அளித்து விடுவேன்..."

குறைகளைக் கூட மென்மையாகக் குறிப்பிடுகிறார். அதுதான் கல்கி. எதிர்க் கருத்துடையவர்களை கொச்சையாகப் பேசித் தாக்காது எழுதும் கல்கி அவர்கள் ஒரு மாமனிதர் என்பது வெள்ளிடை மலை. தமிழை உண்மையாகவே வளர்த்தவர்களில் அவர் முக்கியமானவர் என்று கூறவும் வேண்டுமோ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

December 02, 2006 11:13 PM  
Anonymous Anonymous said...

சிவபாலன்!
இன்றுவரை தன்னைப் பேசும்படி வைத்துள்ளாரே!!!அதுதான் பெரியார்!!!
பெரியாரின் பெருமையைக் கூறித் தான் ஓர் உயர்ந்த மனிதன்;"மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மணமிருக்கும்" என்பதனை உணர்பவர் என்பதனைக் கல்கி நிரூபித்துள்ளார்;. அவர் தமிழ் இசை வேண்டு மென்பது பற்றிய கட்டுரைகள் மிகச் சிறப்பான வாதங்கள்.
பதிவிட்டதற்கு நன்றி!
யோகன் பாரிஸ்

December 02, 2006 11:57 PM  
Anonymous Anonymous said...

Kalki was not like these Tamil pappan Bala character.He wanted Tamils to realize the greatness of Tamil.So he arranged for a big meeting well advertised and attended in marina beach.The big scholars like Ra.Pi.Sethu didnot show up.The youngest with a M.A. in Economics,C.N.Annadurai timidly told Kalki if he didnot object he will talk on all the topics.Kalki asked him "can you do it?".CNA said he will try.After listening to him Kalki said "You are not Anna,You are ARINGAR ANNA!".which has stood well.
Kalki invited Periyar for his daughter's wedding.When Periyar showed up Kalki was so excited that he himself took care of Periyar until he left.
These imbeciles should learn first from Kalki before coming to Periyar.
Sorry for writing in English,in Thamizh very soon.
Nandri Sivabalan.

December 03, 2006 12:59 AM  
Blogger bala said...

//Kalki was not like these Tamil pappan Bala character//

Dear Mr half witted imbecile Tamizhan,

Why did you foreget to mention that Kalki was a gentleman and not like the rabidly virulent Periyaar who preached hatred.

Why you guys have not revered Kalki so far?

You have erected statues for Periyaar all over the place but generally will hide contributions to Tamil by great people like Kalki/UV Saminaatha Iyer etc.

You have also proved that you are a half baked neo Dravidian and generally what I said you are viz a half witted imbecile.

Since Sivabalan allowed your vitriol I hope he will allow this personal abuse also.

bala

December 03, 2006 8:21 AM  
Blogger Sivabalan said...

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.

தயவு செய்து ஆரோக்கியமான விவாதங்களை வையுங்கள். அனைவருக்கும் நன்மை பயக்கும்.

வருகைதந்து பின்னூடமிடும் அனைவருக்கும் நன்றி.

தனித்தனியாக நன்றியும் சொல்லப்படும :)

December 03, 2006 8:30 AM  
Blogger bala said...

//மாற்றுக் கருத்துகளைக் கூட நாகரீகமாகச் சொல்ல வேண்டும் என்னும் ஓகையாரின் கருத்துடன் நான் உடன்படுகிறேன்.

கல்கி செய்தது போல//

This advice cannot be faulted. But one of the subjects of this discussion is Periyaar who was singularly guilty of violating all norms of decent discussion and debate.His language always had been crude (in the name of being to the point)

In my view, since Priyaar preached hatred against one particular set of people, and encouraged violence against them, as per the UN definition on terrorism ,it turns out that he was more a terrorist than a reformist or humanist.


bala

December 03, 2006 8:43 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

கடவுள் மறுப்பு பெரியாரின் முக்கிய கொள்கை அல்ல, ஆதிக்க சக்திகளை ஒழிக்க அவர்களுடைய புரட்டுக்களை ஒழிக்க வேண்டியதற்காக பெரியார் கையில் எடுத்ததுதான் கடவுள் மறுப்பு கொள்கை. இன்றைக்கு காசு கொடுத்தாவது கருவரைவறை செல்லமுடிகிறதென்றால் அது பெரியார் போராடி பெற்றுத் தந்த உரிமைதான்.

எம்.ஜி.ஆரின் வெற்றியென்பதில் மாபெரும் பங்கு என்பது படிப்பறிவு அற்றவர்களின் திரைமோக மூலதனம் தான். எம்ஜிஆர் ஆத்திகர் என்றாலும் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை எதிர்த்துதான் அவர் மாபெரும் வெற்றி பெற்றதாக அவரே எங்கும் குறிப்பிடவில்லை.

ஆத்திகர்கள் கூற்றுப்படி மக்கள் மனதில் மாற்றம் ஏற்படுத்துவர், வாழ்வியலுக்கு வழிசொல்பவர் எல்லாம் கடவுள் அவதாரம் என்றால், என்னைப் பொருத்தவரை

பெரியாரும் ஒரு அவதாரமே !

December 03, 2006 8:46 AM  
Blogger ஓகை said...

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்புவன்(ஒரு திட்டல் - நினைவுக்கு வரவில்லை)
கடவுளை வணங்குபவன் ஒரு காட்டு மிராண்டி

ஆனால் காசு கொடுத்து கருவரை செல்ல உதவியது பெரியார். ஆஹா!!

அவதாரங்கள் எல்லாம் பொய்யும் புரட்டும். ஆனால் சிலரைப் பொருத்தவரை பெரியார் ஒரு அவதாரம். ஆஹா!!

December 03, 2006 9:17 AM  
Blogger tamilreber said...

ஆத்திகர்கள் கூற்றுப்படி மக்கள் மனதில் மாற்றம் ஏற்படுத்துவர், வாழ்வியலுக்கு வழிசொல்பவர் எல்லாம் கடவுள் அவதாரம் என்றால், என்னைப் பொருத்தவரை

பெரியாரும் ஒரு அவதாரமே


This is an insult to Periyar.But
you are fit to join DK.If you praise Veeramani like this you
have a bright future there.

December 03, 2006 9:33 AM  
Blogger Sivabalan said...

இதில் எங்கே வீரமணி வந்தார்.. என்னங்கப்பா!! உங்க ரவுசுக்கு ஒரு அளவே இல்லையா?!

என்னமோ போங்க..

பெரியாரை வீரமணியுடன் மட்டும் அடக்க முயலும் உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

என்னுடைய முந்தய பதிவுகளில் சிந்தனையாளர் ஆனைமுத்து பற்றி பதிவிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது படியுங்க. அதில் நன்பர் மகேந்திரனின் பின்னூடத்தையும் படியுங்க..

December 03, 2006 9:52 AM  
Anonymous Anonymous said...

Anbu Sivabalan avargalae,
I respect your request and will abide.One has to understand that every action has a reaction.
Periyar didnot hate any individual and was always respectful and answered all their questions even the insulting ones.One should visualize being a young boy and see a little boy insult his educated dad "Dey Rama bring me this".All because that little boy was born from the face of god and the other one from the feet!Try that scene with your kids then you will understand why Periyar was mad at that sysyem.
When a parpanar complained to Periyar that he didnot get admission in his teacher training school,Peryar told the manager to give 3% seats to them.
Come on argue point by point in a civil way and we will discuss and see whose side the Justice and Truth is.

December 03, 2006 10:14 AM  
Blogger Sivabalan said...

தமிழன்

உங்கள் அருமையான பின்னூடத்திற்கு மிக்க நன்றி.

உங்கள் கருத்து ஏற்புடையதே

December 03, 2006 10:19 AM  
Blogger Sivabalan said...

பாலா

பீலாவுக்கா இவ்வளவு கோபம்?! ( பொதுவா உண்மையை சொன்னால்தான் கோபம் வரும் என்பார்கள்)

December 04, 2006 11:04 AM  
Blogger Sivabalan said...

பகுத்தறிவு

சுட்டிக்கு நன்றி.

வருகைக்கு நன்றி

December 04, 2006 11:06 AM  
Blogger Sivabalan said...

SP.VR.SUBBIAH அய்யா,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

December 04, 2006 11:07 AM  
Blogger Sivabalan said...

SK அய்யா

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

December 04, 2006 11:07 AM  
Blogger Sivabalan said...

வசந்த்

நல்ல விசயங்கள் படித்தால் சரிதான்.. எதோ நம்மால் ஆனதை செய்வோம்..

வருகைக்கு நன்றி

December 04, 2006 11:09 AM  
Blogger Sivabalan said...

டோண்டு ராகவன் அவர்களே,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

December 04, 2006 11:10 AM  
Blogger Sivabalan said...

யோகன் பாரிஸ் அவர்களே,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

December 04, 2006 11:11 AM  
Blogger Sivabalan said...

GK,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

December 04, 2006 11:12 AM  
Blogger Sivabalan said...

tamilreber ,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

December 04, 2006 11:12 AM  
Blogger மங்கை said...

சிவா...

சொல்ல வந்த விஷயம் 10 வரியில இருந்தாலும், அதன் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்குன்னு நான் சொல்ல வேண்டியது இல்லை...

இதுவும் அவருக்கு வெற்றி தான்...

அவரோட கருத்துக்கள் எந்த அளவிற்கு ஆராயபட்டிருக்கு பாருங்க

UN definition of terrorism வரைக்கும் போய்டுச்சு..:-)))

December 04, 2006 11:42 AM  
Blogger Sivabalan said...

மங்கை

உண்மை தாங்க.. :)

பெரியாரின் கனவான சமூத்துவம் பெருக வேண்டும்.. மனிதன் மீன்டும் மனிதனாக வேண்டும்..

வருகைக்கு மிக்க நன்றி

December 04, 2006 11:49 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv