பரிதிமாற்கலைஞர் நூல்கள் நாட்டுடமை
பரிதிமாற்கலைஞர் எழுதிய நூல்கள் நாட்டுடமையாக்கி, அவரது மரபுரிமை பெற்ற 19 பேருக்கு ரூ.15 லட்சம் நிதியை முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார்.
தமிழ் உயர் தனிச் செம்மொழி என்று முதல் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர். தமிழ் ஆசிரியரான அவர், சூரியநாராயண சாஸ்திரி என்ற தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என்று அழைத்துக் கொண்டவர்.
கலாவதி, மதிவாணன், நாடகவியல், தமிழ் மொழியின் வரலாறு, தமிழ்ப் புலவர் சரித்திரம், சித்திரக் கவி விளக்கம் உட்பட 13 நூல்களை பரிதிமாற் கலைஞர் எழுதியுள்ளார். பரிதிமாற் கலைஞரின் தமிழ்ப் பணியைப் போற்றும் வகையில், அவரது நூல்களை நாட்டுடமையாக்கப்பட்டன.
மறைமலையடிகள் பேத்திக்கு உதவி
மறைமலையடிகளாரின் பேத்தியும், தமிழ் அறிஞர் புலியூர்க் கேசிகனின் மனைவியுமான சுந்தரத்தம்மை, வயது முதிர்ந்த நிலையில் சிரமப்படுகிறார்.
புலியூர்க்கேசிகன் சேமித்து வைத்திருக்கும் அரிய தமிழ் நூல்களை தமிழ் வளர்ச்சி இயக்ககம் பெற்றுக்கொண்டு, அவற்றுக்கு ஈடாக சுந்தரத்தம்மைக்கு ரூ.1 லட்சமும், மருத்துவ செலவிற்கு ரு.50 ஆயிரமும் வழங்கவும், மறைமலையடிகளாரின் கொள்ளுப்பேத்தி கலைச்செல்விக்கு தமிழ் வளர்ச்சித்துறையில் முதுநிலை ஒப்பச்சர் பணி நியமனம் வழங்கவும் முதல்வர் கருணாநிதி அனுமதி அளித்தார்.
3 Comments:
சூரிய நாராயண சாஸ்திரி,
பரிதி (சூரியன்)
மாற் (மால், திருமால், நாரணன்)
கலைஞர் (சாஸ்திரி)
ஆனார்
அதே போல, ஸ்வாமி வேதாசலம்,
மறை (வேதம்)
மலை (அசலம்)
அடிகள் (ஸ்வாமி)
ஆனார்
தனித்தமிழ் இயக்கப் பெருந்தொண்டு புரிந்த பெரியவர்களுக்குச் சிறப்பு செய்துள்ளது,
பாராட்ட வேண்டிய ஒன்று!
கலைஞரே நன்று!!
ரவிசங்கர்
அருமையாக விளக்கம் கொடுத்துட்டீங்க..
வருகைக்கு நன்றி
சிபா,
பரிதிமார் கலைஞர் பற்றி நானும் அதிகம் படித்திருக்கிறேன். தமிழ் மீண்டு வருவதற்கு அவர் ஆற்றிய தொண்டுகள் அளவிட முடியாது. சிறுவயதிலேயே அன்னார் மறையாமல் இருந்திருந்தால் தமிழ்தாய்க்கு இன்னும் அதிகம் செய்திருப்பார்.
Post a Comment
<< Home