Wednesday, December 06, 2006

திரு. குமரன் முடிவு - தமிழ்மண வாசகர்களுக்கு இழப்பு!



என்னடா இவன் லீவு என்று சொல்லிட்டு போனானேன்.. திரும்பி வந்துட்டானேனுன்னு யோசிக்கிறீங்களா!!

இன்றுஇப்படி ஒரு பதிவைப் படித்தேன். மிகவும் வருத்தமளிக்கும் செய்தி.



குமரன் சார், நீங்கள் இப்படி ஒரு முடிவு எடுப்பது உங்கள் தனிப்பட்ட உரிமை & விருப்பம்..


இருப்பினும் ஒரு நல்ல பதிவர் மற்றும் நல்ல தமிழ் பதிவர், ஒரு பெரிய ஊட்கத்திலிருந்து விலகுவது நிச்சயம் தமிழ் கூறும் நல் உலகிற்கு பெரிய இழப்பே!!

புதிதாக வரும் வாசகர்கள் உங்கள் பதிவை படிக்க முடியாமல் போகலாம். அது நல்லதல்ல..

இது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த இழப்பு இல்லாவிடினும் மற்றவர்களுக்கு இது கசப்பு செய்தியே!

அந்த கசப்பு செய்தி, வதந்தியாக இருக்கட்டும்..

உங்கள் முடிவை மறுபரிசிலனை செய்யுமாறு அன்புடன் வேண்டுகோள்விடுக்கிறேன்.. வேண்டுமென்றால் சிறிய ஓய்விற்கு பிறகு மீன்டும் வாருங்கள்!!

மீன்டும் நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..

30 Comments:

Blogger Thekkikattan|தெகா said...

சிவா, எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், குமரன் ஒரு குடும்பத் தலைவர் என்ற முறையில் அவருக்கு இருக்கும் பிரட்சினைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பாரேயானால், இதில் நம் சொல்வதற்கு ஒன்று மில்லை.

அப்படி இல்லாத பட்சத்தில் வேறு காரணங்களால் கட்டாயத்தின் பேரில் இந்த முடிவு எடுத்திருந்தால், இத் தருணத்தில் குமரனுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோல்; தயவு செய்து re-consider your decision, please!

அன்புடன்,

தெகா.

December 06, 2006 1:41 PM  
Blogger Sivabalan said...

தெகா

உங்களை வழிமொழிகிறேன்.

December 06, 2006 1:45 PM  
Blogger VSK said...

தமிழ்மணத்தில் வரும் பதிவுகள் அனைத்தும் அனைவராலும் படிக்கப்படுவதில்லை.

குமரனைப் படிப்பவர்கள் அவர் பதிவு தேடிப் படிக்க முடியும்.

அவரும் வழக்கமாகப் படிப்பவர்களுக்கு தகவல் தெரிவிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

அவரை அவர் போக்கில், விடுவதே சரியெனப் படுகிறது.

தனி மனித உணர்வுகள் அனைவராலும் புரிந்து கொள்ளப் படுவதில்லை, சிபா!

நீங்களே வருவதற்கு முன் எவ்வளவு யோசித்தீர்கள்!!

இதைச் சொல்லாமலே கூட விலகியிருக்க முடியும் அவரால்!

பதிவுகளைத் தமிழ்மணத்தில் இணைப்பு கொடுக்காமல்!

நான் ஒன்றும் தவறாகச் சொல்லவில்லையென நினைக்கிறேன்.

December 06, 2006 1:56 PM  
Blogger Sivabalan said...

SK அய்யா

வலைப் பதிவு ஊடகங்களில் நல்ல தமிழ் மற்றும் நல்ல பதிவர்கள் இருப்பது மிக அவசியம்.

தமிழ் மணம், தேன் கூடு போன்ற ஊடகங்களுக்கு தினமும் நிறைய புதியவர்கள் சமீபகாலமாக அதிகமாக வருகிறார்கள். இது போன்ற சூழ்நிலையில் திரு.குமரன் போன்ற பதிவர்கள் நிச்சயம் தேவை. அதைத்தான் நான் குறிப்பிட விருப்புகிறேன்.

நன்றி

December 06, 2006 2:04 PM  
Blogger VSK said...

This comment has been removed by a blog administrator.

December 06, 2006 2:10 PM  
Blogger VSK said...

நாமெல்லாம்.... சரி, சரி... நானெல்லாம் பெரிய எழுத்தாளன் இல்லை.

ஏதோ நமக்குத் தெரிந்ததை பதிவிடலாமே என ஆரம்பித்தது.

அதைப் பலரும் படிக்க வசதியாக இருக்கும் ஒரு பொது அமைப்பான தமிழ்மணத்தில் இணைத்தது.

இதன் மூலம், எனது தனி மனித சுதந்திரம் பாதிக்கப்பட்டு, தானும், தனது குடும்பமும் அவமானப்படும் போது ஒருவவரை என்ன செய்யச் சொல்லுகிறீர்கள்?

என் பதிவில் மட்டும் எழுதிவிட்டு அல்லது எழுதாமலேயே விட்டுவிட்டுப் போக வேன்டியதுதான்.

எய்தவர் இருக்க அம்பை நோகிறீர்கள் எனக் கருதுகிறேன், சிபா.

உங்கள் உணர்வு எனக்குப் புரிகிறது.

அவர் நிலையில் இருந்து அணுகிப் பாருங்கள்.

உண்மை புரியும்.

மீண்டும் ஒருமுறை அவர் சொல்லியிருக்கும் காரணங்களைப் படிக்கவும்.
நன்றி

December 06, 2006 2:16 PM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

நாமெல்லாம் என்பதுதான் சரி.. :)

உங்கள் வாதத்தை நான் ஏற்கிறேன்.

திரு.குமரன், அவசரமாக எடுத்த முடிவு என்று இன்னும் நான் நம்புவதால்தான் மீன்டும் அழைப்பு விடுக்கிறேன்.

நன்றி

December 06, 2006 2:22 PM  
Anonymous Anonymous said...

சிவபாலன் !
என் பிளக் இயங்காததால்; நான் தனியாக எதுவும் எழுதமுடியவில்லை. நான் தமிழ்மணத்தில் முதல் படித்ததே!!குமரன் பதிவு; அவரைப் பதிவுகளால் அறிவேன்.
அவர் விலகுவதற்கான காரணம் புரியமுடிகிறது. தனிமனித தாக்குதல்கள்; ஏன் என்பது புரியவில்லை.
குமரன் நல்ல பதிவர்;அத்துடன் நல்ல வாசகர்.
தமிழ் மணம் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்துக்குரிய இடமாக மீண்டும் வரவேண்டுமென்பதே!
என் அவா!!
யோகன் பாரிஸ்

December 06, 2006 2:24 PM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரன்

காலையில் பணி மிகுதியிலும், உங்கள் தனி மடல் கண்டதில் இருந்து, கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது! Silent Spectator ஆக, இங்கே என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டு தான் இருந்தேன்!
அடியேன் சில வார்த்தைகள் சொல்ல விழைகிறேன்!

இந்த முடிவை நீங்கள் இரண்டு மாதங்கள் முன்பு எடுத்து இருந்தீர்களே ஆனால், எனக்கு குமரன் என்பவர் யார்? அவர் என்ன பதிவு இடுகிறார் என்பதே தெரிந்து இருக்காது! ஏன் என்றால் நான் புதியவன்; அப்போது தான் வந்தேன்!

இங்கு பல பேர், உங்கள் மனம் அமைதி பெற வேண்டும்! உங்கள் தனிக் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சொன்னார்கள்; முற்றிலும் உண்மை! கிஞ்சித்தும் மறுப்பதற்கு இல்லை!

ஆனால் இது வரை தமிழ்மணம் அறிமுகம் இல்லாது, இனி மேல் வரப்போகும் பதிவர்களை நாம் நினைத்துப் பார்க்கவும் வேண்டாமா? அவர்கள் உங்கள் பதிவினை நிச்சயம் இழப்பார்கள்! நான் அவர்கள் நிலையில் தான் என்னை வைத்துப் பார்க்கிறேன்!

உங்கள் முடிவு சீர்தூக்கி எடுக்கப்பட்ட முடிவாகவே இருக்கும் என்றாலும் நீங்கள் சில மாற்று ஏற்பாடுகளாவது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!

உங்கள் ஆன்மிகப் பதிவுகள்/தமிழ்ப் பதிவுகள் இனி வரும் பதிவர்களுக்குத் தெரிய என்ன வழி?
இதற்கு மட்டும் உங்கள் நண்பர் என்ற முறையில், உங்களிடம் விளக்கமோ மாற்று ஏற்பாடோ வேண்டுகிறேன்!

நான் சுயநலமாகப் பேசுவதாக தயவு செய்து எண்ணவேண்டாம்!
உங்கள் ஆதங்கம், மனவேதனைக்கு எங்களால் ஏதாவது மருந்திட முடியுமா என்றும் சொல்லுங்கள்!

உங்களுக்கு மிகவும் பிடித்த ஆண்டாள் பாசுரம் இதோ:
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா நீதாராய் பறையேலோ ரெம்பாவாய்!

December 06, 2006 3:17 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

குமரன் அவர்களே,

நான் எவ்வளவு தாக்கப்பட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே உங்கள் வேதனையை என்னால் முழுக்க புரிந்து கொள்ள முடிகிறது என்பதை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள்.

நான் கூறுகிறேன். நீங்கள் விலக வேண்டுமென்பதே எதிரியின் நோக்கம். அந்த வெற்றியை அவனுக்கு தந்து விடாதீர்கள். போடா ஜாட்டான் என்று போய்க்கொண்டே இருங்கள்.

நான் உங்கள் பதிவுகளில் வந்து பின்னூட்டங்கள் அதிகம் போட்டவனில்லை. ஏனெனில் நீங்கள் தொடும் ஆன்மீக விஷயங்கள் எனது லெவலுக்கு மிக உயர்ந்தவை. அவ்வளவுதான்.

நீங்கள் தாக்கப்பட்டதற்கு நானும் மறைமுகக் காரணம் என்று எனக்கு படுவதாலும் இப்பின்னூட்டத்தை இங்கு இடுகிறேன்.

அதற்கு மேல் உங்கள் விருப்பம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

December 06, 2006 7:04 PM  
Blogger Sivabalan said...

யோகன் பாரிஸ் அவர்களே,

வருகைக்கு நன்றி

December 06, 2006 8:35 PM  
Blogger Sivabalan said...

ரவிசங்கர்,

வருகைக்கு நன்றி

December 06, 2006 8:35 PM  
Blogger Sivabalan said...

டோண்டு ராகவன் அவர்களே,

வருகைக்கு நன்றி

December 06, 2006 8:36 PM  
Blogger BadNewsIndia said...

sivabalan, kumaran padhivil ezudhiya en comment.

//
Kumaran,

What is all this?

If you are quiting for personal reasons, I would have not commented on that.
Leaving blog aggregator is not going to solve any problem other than temporarily hiding from the 'problem makers' sight.

If someone is blackmailing you, let me know and we can find a solution for that.
But, if you are just taking this step to move away from stupid anonymous emails, I pity you.
You cannot be soft hearted these days, especially in a public forum.

Learn to face it. Quiting is not an option.

-BNI




//

December 06, 2006 10:02 PM  
Blogger ரவி said...

சரியான நேரத்தில் நல்ல பதிவு..

December 06, 2006 11:00 PM  
Blogger மணியன் said...

சிவபாலன், உங்கள் வேண்டுகோள் சரியானது. குமரன் செவி சாய்ப்பார் என நம்புவோம்.

December 07, 2006 12:26 AM  
Blogger குமரன் (Kumaran) said...

தங்கள் அன்பிற்கு நன்றி சிவபாலன். நான் கேட்டுக் கொண்டதையும் மீறி இந்தப் பதிவை இட்டு தங்கள் அன்பினை வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

தமிழ்மணம் ஒரு பெரிய ஊடகம் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் அடியேனைப் போன்றவர்கள் இங்கே இருக்கும் படியான சூழல் குறைந்து கொண்டே வருகிறது என்பது என் எண்ணம். அதனால் மற்றவர்களைக் குறைக் கூறிக் கொண்டிராமல் நான் ஒதுங்கிக் கொள்கிறேன். அவ்வளவு தான். இது ஒரு பெரிய நிகழ்ச்சி இல்லை. ஒரு பெருங்கடலில் ஒரு சிறு துளி மண்ணில் மறைந்தது போல் மறைந்து போவேன்.

புதியதாக வரும் வாசகர்கள் என் பதிவினைப் படிக்க எத்தனையோ வேறு வழிகள் இருக்கின்றன. தமிழ்மணத்தில் இருப்பதாலேயே என் பதிவுகள் நிறைய பேரைச் சென்றடைகின்றன என்று நான் நம்பவில்லை. இங்கே இருக்கும் சண்டைப் பதிவுகள் நடுவில் நல்ல பதிவுகள் (என் பதிவுகள் என்று சொல்லவில்லை. பொதுவாக நல்ல பதிவுகள்) காணாமல் போய்விடுகின்றன. தமிழ்மணத்தில் இல்லாவிட்டாலும் நல்ல பதிவுகள் வாசகர்களைத் தானாகப் பெறும் என்பதிலும் ஐயமில்லை. அதனையும் நான் வேறு இடங்களில் கண்டிருக்கிறேன்.

மீண்டும் நான் தமிழ்மணத்திற்கு வருவேனா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். தங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் நன்றி.

December 07, 2006 10:31 AM  
Blogger குமரன் (Kumaran) said...

தெகா. நீங்கள் சொன்ன மாதிரி தல என்ற முறையில் (குடும்பத்தலைவர்ன்னு சொன்னேங்க) கவனத்தை இன்னும் முக்கியமான செயல்களில் திருப்பவும் இந்த எண்ணத்தை மனத்தில் ஆராய்ந்து கொண்டிருந்தேன். நாம் சந்தித்தபோது உங்களிடம் சொன்னேனா இல்லையா என்று நினைவில்லை.

தமிழ்மணத்தில் சேர்வதற்கோ விலகுவதற்கோ கட்டாயப்படுத்த முடியாது தெகா. சில நிகழ்வுகளால் நானே இந்த முடிவை எடுத்தேன். அவ்வளவு தான். உங்களுக்கும் அந்த நிகழ்வுகளைப் பற்றி மின்னஞ்சல் செய்திருந்தேனே. படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

December 07, 2006 1:39 PM  
Blogger குமரன் (Kumaran) said...

எஸ்.கே. ஒவ்வொரு வரியையும் நன்கு சிந்தித்து இட்டிருக்கிறீர்கள் உங்கள் பின்னூட்டத்தில். மிக்க நன்றி.

December 07, 2006 1:40 PM  
Blogger குமரன் (Kumaran) said...

நன்றி யோகன் ஐயா.

December 07, 2006 1:41 PM  
Blogger குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். இதே பின்னூட்டத்தை என் பதிவிலும் இட்டிருந்தீர்கள். அதற்கு அங்கே பதில் சொல்லியிருக்கிறேன்.

December 07, 2006 1:42 PM  
Blogger குமரன் (Kumaran) said...

டோண்டு இராகவன் ஐயா. தாங்களும் இந்தப் பின்னூட்டத்தை என் பதிவிலும் இட்டிருக்கிறீர்கள். உங்களுக்கும் பதில் அங்கேயே சொல்லியிருக்கிறேன்.

December 07, 2006 1:43 PM  
Blogger குமரன் (Kumaran) said...

BNI,

உங்களுக்கும் அப்படியே.

December 07, 2006 1:43 PM  
Blogger குமரன் (Kumaran) said...

செந்தழல் இரவி. எந்தப் பதிவைச் சொல்கிறீர்கள்? தமிழ்மணத்தை விட்டு விலகுவதாக நான் சொன்னப் பதிவைத் தானே? :-) ஆமாம். சரியான நேரத்தில் நல்ல பதிவு. :-)

December 07, 2006 1:44 PM  
Blogger குமரன் (Kumaran) said...

நன்றி மணியன். நாட்கள் செல்லட்டும்.

December 07, 2006 1:45 PM  
Blogger Sivabalan said...

BNI,

வருகைக்கு நன்றி

December 07, 2006 1:48 PM  
Blogger Sivabalan said...

செந்தழல் ரவி,

வருகைக்கு நன்றி

December 07, 2006 1:49 PM  
Blogger Sivabalan said...

மணியன் சார்

வருகைக்கு நன்றி

December 07, 2006 1:49 PM  
Blogger Sivabalan said...

குமரன் சார்

வந்து விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி!!

காலம் கனியட்டும்..!!!

அனைவருக்கும் பதில் அளித்தமைக்கு நன்றி

December 07, 2006 1:51 PM  
Blogger நெல்லை சிவா said...

//குமரன் அவர்கள் பதிவில் இட்ட பின்னூட்டம், இங்கும் உதவியாய் இருக்கும் என்ற எண்ணத்தில், மீண்டும்!//

நீங்கள் தமிழ்மணத்தில் பதிவு செய்யாவிடினும், உங்கள் புதிய பதிவுகளை, நீங்கள் பதியப்பதிய, உடனடியாக உங்கள் வாசகர்கள் படிக்க, கூகிள் ரீடரைப் பயன்படுத்தலாம்.

எப்படி என்பதனை என்னுடைய பதிவில் விளக்கியிருக்கிறேன்.

வேண்டுபவர்கள், படிக்க:

http://vinmathi.blogspot.com/2006/12/blog-post_116556380962128596.html

December 08, 2006 10:35 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv