Saturday, March 10, 2007

கமலுக்கு "வாழும் வரலாறு" விருது


அகில இந்திய வர்த்தகர் சங்கம், "வாழும் வரலாறு" என்ற பட்டத்தை கமல்ஹாசனுக்கு வழங்குகிறது.

வரும் 28-ம் தேதி மும்பையில் நடக்கும் விழாவில் மத்திய தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி இவ்விருதை வழங்குகிறார்.


தொழில் அதிபர்களையும், கார்ப்பரேட் அமைப்புகளையும் உறுப்பினர்களாக கொண்ட எப்.ஐ.சி.சி.ஐ இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:

கலை வாழ்க்கை மட்டுமல்லாமல் தன் செயல்பாடுகள் அனைத்திலும் தனித்தன்மையும், நேர்மையும் கலந்து சிறப்புறச் செயல்படுபவர் கமல். திரைத்துறையின் முன்னேற்றத்தை நல்லதோர் எதிர்காலம் நோக்கி இட்டுச் செல்பவர்களில் முக்கியமானவர்.
இவரது தொழில் சிரத்தை மக்களும், சினிமாத்துறையினரும் நன்கு அறிந்த ஒன்று. சம்பாத்தியத்தை எல்லாம் தன் துறையிலேயே செலவிடும் வெகு சிலரில் கமல் ஒருவர்.


திரைக்கதைகள் யுக்தியாலும், கருத்துக்களாலும், வியத்தகு திரைக்கதையாளராக அவரை ஆக்கியுள்ளது. ஒரு இயக்குனராக பலதுறை வித்தகங்களை நெருடலின்றி ஒரே சீராக படைக்கும் திறமை இவரை இந்தியாவின் மிக முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெறச் செய்திருக்கிறது. தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றிய உலகத்து முதல் நடிகர்.


இவரது தலைமையில் இயங்கும் இவ்வியக்கம் சமுதாய கலாசார மாறுதல்களை தமிழகத்திலும் இந்தியாவிலும் ஏற்படுத்தும் என்பது உறுதி. தற்போது எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காகவும் கமல்ஹாசன் தலைமையில் இவ்வியக்கம் அமைதியாக அழுத்தமான தொண்டு செய்து வருகிறது.


பகுத்தறிவுவாதியான கமலுக்கு கும்பிடும் உருவமாக, மதமாக, மனிதம் மட்டுமே விளங்குவது ஆச்சர்யமாகவும், நிகழும் இந்திய அரசியலில் சார்பற்று இருந்து கொண்டே தேச சேவையில் ஈடுபடும் போக்கு வியக்கத்தக்கதாகவும் உள்ளது.

14 Comments:

Blogger கோவி.கண்ணன் said...

கமல் சாதி மதங்களைக் கடந்த நடிகர் என்பதால் மட்டுமல்ல, நல்ல கலைஞன் என்பதாலும் எனக்கு மிகவும் பிடிக்கும் !

March 10, 2007 10:10 AM  
Blogger யாழினி அத்தன் said...

ella nikazvukalume, mudinthu ponathukku appuram varalaaraaga vaazhthukonduthaan irukkinrana..

"Vaazhum varalaaru" - mmm...Varalaatrin artham purinthu koLLappadavillai endru therikirathu..

March 10, 2007 10:29 AM  
Blogger தென்றல் said...

சரியான தேர்வு தான்!

செய்திக்கு நன்றி, சிவபாலன்.

March 10, 2007 11:19 AM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

கமலுக்கு வாழ்த்துக்கள்.

:)

March 10, 2007 11:21 AM  
Blogger தருமி said...

congrats - அவருக்கு

March 10, 2007 11:59 AM  
Blogger மங்கை said...

ஓ..ரொம்ப சந்தோஷம் சிவா...

படம் அருமையா இருக்கு..நான்..
கமலின் தீஈஈஈவிர ரசிகை...:-))..

March 10, 2007 8:08 PM  
Blogger ஜோ / Joe said...

தமிழ் திரையுல வரலாற்றில் கமல் ஒரு அருமையான அத்தியாயம் . தொடரட்டும் .வாழ்க கலைஞானி கலை.

March 11, 2007 8:50 AM  
Anonymous Anonymous said...

கமலுக்கு வாழ்த்துக்கள்!

March 11, 2007 12:27 PM  
Blogger தங்கவேல் said...

கமலுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு நன்றி.

March 12, 2007 6:47 AM  
Blogger சிவபாலன் said...

GK,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

March 13, 2007 12:05 PM  
Blogger சிவபாலன் said...

யாழினி அத்தன், தென்றல்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

March 13, 2007 12:06 PM  
Blogger சிவபாலன் said...

சிறில்,

வருகைக்கு நன்றி

March 13, 2007 12:07 PM  
Blogger சிவபாலன் said...

தருமி அய்யா,

வருகைக்கு நன்றி

March 13, 2007 12:08 PM  
Blogger சிவபாலன் said...

மங்கை, ஜோ, narmadha, தங்கவேல்

வருகைக்கு நன்றி

March 13, 2007 12:10 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv