"இந்தியா" - உயிர் காக்கும் காவலன் - இறுதி பகுதி
முதல் பகுதிக்கு "இங்கே செல்லுங்க.."
அதன் தொடர்ச்சி...
ஏறக்குறைய ஒன்பதாயிரம் காப்புரிமை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. எல்லாமே, பழைய மருந்துகளில் சிறு மாற்றம் செய்து தயாரிக்கப்பட்ட புது மருந்துகளுக்கான காப்புரிமை விண்ணப்பங்கள். “நோவர்ட்டிஸ் நிறுவனத்துக்கு காப்புரிமை வழங்கிவிட்டால், அவ்வளவுதான்! இதைக் காட்டியே, அனைத்து உயிர் காக்கும் மருந்து, மாத்திரைகளுக்கும் காப்புரிமை பெற்றுவிடும். அதன்பிறகு, இவை ஏழைகளுக்கு எட்டாக் கனியாகிவிடும்“ என்கிறது இந்த அமைப்பு.
நோவர்ட்டிஸ் போலவே கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் தனது எய்ட்ஸ் தடுப்பு மருந்தான கோம்பிவிர் மருந்துக்கும் பொரீங்கர் இன்ஜெல்ஹீம் தனது நெவராபைன் மருந்துக்கும் காப்புரிமை கேட்டுள்ளது.
கிளியட் சயின்ஸ் நிறுவனம் விர்ரியட் மருந்துக்கும் அப்போட் நிறுவனம் ரிட்டோனாவிர், லோப்பினாவிர், கலெட்ரா மருந்துகளுக்கும் காப்புரிமை கேட்டுள்ளன.
இவையெல்லாமே பழைய மூலக் கூறுகளில் சிறு மாற்றம் செய்து தயாரித்த புதிய மருந்துகள்.
இந்தியாவில் இந்த மருந்துகளை சிப்லா, ரான்பாக்சி லேப்ஸ், ஸ்டிரைட்ஸ் ஆர்கோலேப், ஹெட்ரா டிரக்ஸ் போன்ற நிறுவனங்கள் தயாரித்து, மிகவும் குறைந்த விலையில் உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகின்றன.
உலகம் முழுவதும் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு, எம்எஸ்எப் போன்ற தொண்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களிடம் இருந்து எய்ட்ஸ் மருந்துகளை வாங்கி இலவசமாக வழங்கி வருகின்றன.
இந்திய மருந்துகளுக்கு ஆகும் செலவு ஒரு நோயாளிக்கு ஓராண்டுக்கு வெறும் ரூ.5,940தான். ஆனால், காப்புரிமை பெற்றுவிட்டால் ரூ.4.69 லட்சம் செலவாகும். அதனால்தான் இந்திய அரசின் நிலைக்கு ஆதரவாக பன்னாட்டு தொண்டு அமைப்புகள் களத்தில் இறங்கியுள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்படும் எய்ட்ஸ் மருந்துகள் அனைத்துமே இந்திய காப்புரிமைச் சட்டம் பிரிவு 3-டியின் கீழ் வருகின்றன. அதாவது, பழைய மூலக் கூறுகளில் மாற்றம் செய்து தயாரிக்கப்படும் புதிய மருந்துகளுக்கு காப்புரிமை தருவதில்லை என்ற விதிமுறைதான் இது.
இதைத்தான் இப்போது பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்க்கின்றன. வழக்கு போடுகின்றன. அவை வெற்றி பெற்றுவிட்டால், தோல்வி இந்திய நோயாளிகளுக்கு மட்டு மல்ல... உலகம் முழுவதும் இந்தி யாவில் தயாராகும் மலிவு விலை மருந்துகளை பயன்படுத்தும் அனைவருக்குக்குமே தான்.
மலிவு விலை மருந்துகளில் ஏறக்குறைய 50 சதவீதத்திற்கு மேல் இந்தியாவில்தான் தயாரிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதுக்குமே விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக தென் ஆப்ரிக்கா, கென்யா, உகாண்டா, வங்கதேசம், இலங்கை போன்ற ஏழை நாடுகளுக்கு, இந்தியாவில் இருந்துதான் அதிக அளவில் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
எல்லாமே தொழில்தான்.
ஆசிரியர் தொழிலுக்கு எப்படி ஒரு புனிதம் இருக்கிறதோ அதேபோல், மருத்துவத் தொழிலுக்கும் ஒரு மகத்துவம் இருக்கிறது. நம் வாழ்க்கையின் சில நேரங்களில் டாக்டர்தான் கடவுள். அவர் கொடுக்கும் மருந்துதான் நம் உயிர். பணம் முக்கியம்தான். ஆனால், அது அடுத்தவரின் உயிரைப் பணயம் வைத்து அதில் கிடைக்கும் பணமாக இருக்கக் கூடாது என்பதை மருந்து நிறுவனங்கள் உணர வேண்டும். உணரும் நேரம் வரும்!?

8 Comments:
இந்தியா தொடர்ந்து இது போன்று எவ்வளவு நாள் தள்ளமுடியும். ம்ம்ம்
PhRMA has mentioned that India should adopt a patent law which offers immediate product patent protection for pharmaceuticals in line with the highest international standards, and offer protection for all products not yet available in the Indian market. It is submitted that this is a demand that goes beyond India's obligations under the TRIPS Agreement as India is availing the full transition period therein. The ten year transition period available for providing product patents to pharmaceutical products is within WTO rules and a unilateral examination on the part of USA should not be allowed to overrule this multilateral understanding. Regarding the provision of the mailbox and EMR facility, PhRMA is aware that the issue has been taken up in the WTO and India has committed itself to implementation of the recommendations of the panel/appellate body.
Please see this also..
http://www.indianembassy.org/
special/ipr/ipr.htm
இந்திய நீதிமன்றம் நியாயம் வழங்குமா? பொறுத்திருந்து பார்ப்போம். பன்னாட்டு நிறுவனங்கள் வெற்றி பெற்றால், ஏழை நாடுகள் பாடு அதோ கதிதான்!
வைசா
வைசா
உண்மைதான்.. அதுவும் ஏழை நாடுகளுக்கு அப்படி ஒரு நிலை வருமாயின் அது உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐய்யமில்லை.
வருகைக்கு நன்றி
//இந்திய மருந்துகளுக்கு ஆகும் செலவு ஒரு நோயாளிக்கு ஓராண்டுக்கு வெறும் ரூ.5,940தான். ஆனால், காப்புரிமை பெற்றுவிட்டால் ரூ.4.69 லட்சம் செலவாகும். அதனால்தான் இந்திய அரசின் நிலைக்கு ஆதரவாக பன்னாட்டு தொண்டு அமைப்புகள் களத்தில் இறங்கியுள்ளன.
//
நல்ல தகவல் சி.பா. முதல் பகுதி படிச்சப்ப ரெண்டு பக்கமும் நியாயம் இருகறதா தோனுச்சு. ஆனா இந்த பதிவு அதை பொய்யாக்கிடுச்சு. நன்றி.
மணி
ஆமாங்க. நானும் முழுகட்டுரையை படித்த பிறகுதான் பல விசயங்கள் புரிந்த்தது.
அதனால்தான் இங்கே பகிர்ந்துகொண்டேன்.
வருகைக்கு நன்றி
அப்படியே குமுதத்துல வந்த, இந்த மேட்டரையும் படிச்சுப் பாருங்க...
மாத்திரைல பல விவகாரம் இருக்கு...
http://www.kumudam.com/magazine/Kumudam/2007-03-07/pg23.php
zidovudine, stavudine,lamivudine,
nevirapin போன்ற மருந்துகள் கூட்டு மருந்துகளாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து வருகிறார்கள். நீங்கள் குறிப்பிட்டிருக்கிற Niverpine, எச்ஐவி கிருமி தாயிடமிருந்து சேய்க்கு வராமல் தடுக்க கொடுக்கப்படுகிறது..
இப்பொழுது மாதத்திற்கு 1000-1500 ரூபாய் மருதுகளுக்க்காக செலவு செய்பவர், இவர்கள் வெற்றி பெற்றால் 15000 ரூபாய் செலவு செய்ய வேண்டும்
பல நாடுகள் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று இது..
patent rights விட pateints' rightsஐ மனதில் வைத்து தீர்ப்பு வந்தால் நன்றாக இருக்கும்
OXFAM/MSF நிறுவனங்கள் 150 நாடுகளில் 300,000 மக்கள் கை எழுதிட்ட ஒரு மனுவை நோவர்டிஸ் நிறுவணத்திற்கு அனுப்பி இருக்குறார்கள்...வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி..
நல்ல தீர்ப்பாய் வரும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்...ஹ்ம்ம்
Post a Comment
<< Home