அன்னை தெரசா - வைரமுத்து பதில்கள்
கேள்வி: பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு முதல் தகுதி என்ன?
வைரமுத்துவின் பதில்:
அவமானம் தாங்குதல்.
சுயமானமே பெரிதென்று கருதுகின்றவர்கள் பொதுமானம் காக்க முடியாது.
அனாதைப் பிள்ளைகளுக்கு நிதி திரட்டக் கடை வீதிக்குப் போகிறார் அன்னை தெரசா. ஒரு கடைக்காரன் கஞ்சன், தேனிலவுக்குக் கூடத் தனியாய்ப் போய்வந்தவன். அவனிடம் கையேந்துகிறார் அன்னை...
‘‘ஏதாவது கொடுங்கள் என் பிள்ளைகளுக்கு...’’
‘‘ஒண்ணும் தரமுடியாது; ஓடிப்போ கெழவி’’ ஏந்திய கை மடங்கவில்லை.
‘‘ஏதாவது கொடுங்கள்... என் பிள்ளைகளுக்கு...’’
‘‘சொன்னாக் கேக்கமாட்ட...’’
ஏந்திய இடக்கையில் வந்து விழுகிறது அவன் காறித்துப்பிய கற்றை.
எச்சில் விழுந்த இடக்கையை மூடிக்கொண்டு
‘‘நீ காறித்துப்பியது எனக்கு; என் பிள்ளைகளுக்கு...’’ என்று வலக்கை நீட்டுகிறார் அன்னை.
எழுந்து நின்று கும்பிட்டு, கண் துடைத்துக்கொண்டே காசு போடுகிறான் கடைக்காரன்..
2 Comments:
//எழுந்து நின்று கும்பிட்டு, கண் துடைத்துக்கொண்டே காசு போடுகிறான் கடைக்காரன்..//
இப்படி இன்ஸ்டன் மனமாற்றம் சாத்தியமா?
கொஞ்சம் கற்பனைபோலத்தான் தோன்றுகிறது.
கற்பனைய இல்லை சிறீல்,இது உண்மை சம்பவம் .எச்சில் உமிழ்தவனே கூறியிறுக்கிரான்.அன்னை தெரசாவைப் பற்றிய புத்தகத்தில் அவர் போறுத்துப் போகும் குணத்தைப்பற்றி கூறியிருக்கிறது நீங்கள் விரும்பினால்,ஜுலை இந்தியா செல்கிறேன் வாங்கி அனுப்புகிறேன்.
Post a Comment
<< Home