Monday, June 11, 2007

கடவுளா நீ கல்லா- பெரியார் - வீடியோ

கடவுளா நீ கல்லா கடவுளா நீ கல்லா

மேலோர் என்று சிலரை படைத்து கீழோர் என்று பலரை படைத்தால்
கடவுளா நீ கல்லா
நாயும் பூனையும் நடந்தால் புண்ணியம் மனிதர் நடந்தால் பாவம் என்றால்
கடவுளா நீ கல்லா
தண்ணீர் விழுந்தால் பாறையும் கரையும் கண்ணீர் விழுந்தும் கரையவில்லையே

கடவுளா நீ கல்லா

எங்கள் நிலங்களை அபகரித்தீர்
அபகரித்தீர் அபகரித்தீர்
எங்கள் குளங்களை மறுதலித்தீர்
மறுதலித்தீர் மறுதலித்தீர்


கால்நடை உலவிடும் வீதியில் எங்கள் கால்களை அபகரித்தீர்
வெளவ்வால் நுழைகிற கோயிலில் எங்கள் வாசலை அடைத்துவிட்டீர்
சூத்திரன் நுழைந்திட சாத்திரம் இல்லை என்று சூத்திரம் எழுதிவிட்டீர்
சூத்திரம் எழுதிவிட்டீர்


நீங்கள் மட்டும் நீங்கள் மட்டும் விந்து விழுந்து பிறந்தவர்கள்
நாங்கள் என்ன நாங்கள் என்ன எச்சில் விழுந்தா பிறந்தவர்கள்
எச்சில் விழுந்தா பிறந்தவர்கள்

கடவுளா நீ கல்லா

இந்த கோயிலை அமைத்தது யார்
அமைத்தது யார் அமைத்தது யார்

உச்சியில் கோபுரம் சமைத்தது யார்
அமைத்தது யார் சமைத்தது யார்


எங்கள் கைகளும் கால்களும் தீண்டியிராவிடில் கோயில்கள் ஏதுவும் இல்லை
எங்கள் தோளைத் தொடமால் கடவுளர் யாரும் கருவறை சேர்ந்ததில்லை
புழுதியில் உழுதவன் வேர்வையிலாவிடில் பூசைகள் ஏதுவும் இல்லை
பூசைகள் ஏதுவும் இல்லை


மனிதர் தர்மம் பொதுவாகட்டும் மனுதர்மங்கள் உடையட்டும்
வானவில்லில் மட்டும் இனிமேல் வர்ண பேதம் இருக்கட்டும்
வர்ண பேதம் இருக்கட்டும்

கடவுளா நீ கல்லா

மேலோர் என்று சிலரை படைத்து கீழோர் என்று பலரை படைத்தால்
கடவுளா நீ கல்லா
நாயும் பூனையும் நடந்தால் புண்ணியம் மனிதர் நடந்த்தால் பாவம் என்றால்
கடவுளா நீ கல்லா
தண்ணீர் விழுந்தால் பாறையும் கரையும் கண்ணீர் விழுந்தும் கரையவில்லையே

கடவுளா நீ கல்லா

படம்: பெரியார்
பாடல்: வைரமுத்து
இசை: வித்யாசாகர்
இயக்கம்: ஞான இராஜசேகரன்
குரல்: மதுபாலகிஷ்னன், மாணிக்க விநாயகம், சந்திரன், ரோஷினி
வருடம்: 2007


6 Comments:

Blogger சிவபாலன் said...

வைரமுத்துவின் வைர வரிகளும் வித்யா சாகரின் இசையும் அருமை.

June 11, 2007 11:11 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

சிவபாலன்,
பாடல் வரிகளைப் பகிர்ந்ததற்கு நன்றி.. பாட்டு தான் அலுவலகத்தில் பார்க்க முடியாது.. :(

நினைவிலிருந்து சில பிழைகள் இருப்பதாக தோணுது...
//உச்சியில் கோபுரம் அமைத்தது யார்//
'சமைத்தது யார்'னு பாடிருக்காங்கன்னு நினைச்சேன்..

//உறுதியில் உழுதவன் வேர்வையிடாவிடில் //
புழுதியில் உழுதவன் வேர்வையிலாவிடில்

அப்புறம் சிரமம் பார்க்காம, இந்த எழுத்துப் பிழைகளையும் சரி பண்ணிடுங்களேன்.. படிக்கும்போது இடறுது :(
// கண்ணீர் விழுந்தும் கறையவில்லையே//
- கரையவில்லையே

//எங்கள் குங்களை மறுதலித்தீர்//
- குளங்களை

June 11, 2007 11:16 PM  
Blogger சிவபாலன் said...

மிக்க நன்றி பொன்ஸ்!

June 12, 2007 7:44 AM  
Blogger ulagam sutrum valibi said...

சிவபாலன்,
கவிங்ஞர் வைரமுத்துவின் கவிதை அத்தனையும் வைரமே.சிறந்த கவிங்ஞனின் உள்ளுணர்வின்
எழுத்துரு அது.கடவுள் கல் அல்லவே அருபியாற்றே,நாமல்லவோ கல்ல அக்கினோம்.அவர் படைபில் மனிதன் ஒரு குலம் தானே.இப் பாட்டை வெளியிட்டதன் முலம் உங்களின் விரிந்த உள்ளத்தை காட்டுகிறது,நானோ உன்னத தந்தையை சாடுவதை
காணும் மகள் நிலையில் வேதும்புகிறேன்,ஏனோ தெரியவில்லை.

June 12, 2007 11:51 AM  
Blogger வவ்வால் said...

வணக்கம் சிவபாலன்!

நல்லப்பதிவு, மதம்,கடவுள் என்று ஜல்லியடிப்போர் அவசியம் கேட்க வேண்டிய பாடல் இது, எத்தனைக்கேட்டாலும் சிலருக்கு ஏறாது என்பது வேறு விஷயம்!

கடவுள் என்பது ஒரு குறியீட்டு சொல் , கட+உள் நம் மனதின் உள்ளே கடந்து செல்வது அதாவது நம் அந்தராத்மாவை அறிவதே கடவுளைக் காண்பது!

கடவுள் ஏன் கல்லானான் சில கல்லாய்ப் போன மனிதர்களால் தானோ!

June 12, 2007 2:44 PM  
Blogger ulagam sutrum valibi said...

திரு. வவ்வால் அவர்களே,
அந்தராத்மா என்றால் எது

June 12, 2007 3:57 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv