Friday, May 25, 2007

இடஒதுக்கீடு கேட்பது மானமற்ற காரியமல்ல: கலைஞர் கருணாநிதி

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடிற்காக போராடுவது மானக் கேடான விஷயம் அல்ல என்று சென்னையில் நடந்த சமூக நீதி மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

சென்னை அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கத்தில், அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் சங்கங்களின் பேரவை சார்பில் சமூக நீதி மாநாடு நடந்தது.

இதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

தமிழகத்தில் இடஒதுக்கீடு பற்றி எண்ண கூடியவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். இடஒதுக்கீடு கேட்கும்போது நீதியே இடஒதுக்கீடு கேட்கிறது. நமக்கல்ல யாருக்கோ ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு நியாயமா என்று கேட்ட குரல் உங்களுக்கும் கேட்டிருக்கும்.

இங்கு பேசிய சிலர் என்னை குறிப்பிட்டு, கருணாநிதி கையில்தான் உள்ளது என்றனர். ஆனால் என் கையில் எதுவும் இல்லை. இன்று நேற்று அல்ல, 1916, 17, 18களில் முதன் முதலில் தமிழகத்தில் சமூக நீதிக்காக கொடி நாட்டப்பட்டது.

அவற்றுக்காக பாடுபட்டவர்களையெல்லாம் வழிநடத்திச் சென்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, தாழ்த்தப்படுத்தப்பட்ட மக்கள் வாழ அன்றைக்கு வழி வகுத்தவர் தந்தை பெரியார். அவர் வழி நின்று அண்ணாவும், அவருக்கு ஆதரவாக காமராஜரும் செயல்பட்டனர். அவர்களின் கடமை, லட்சிய உணர்வு, அவர்கள் விட்டு சென்ற பணியை தமிழக இளைஞர்கள் தொடர வேண்டும்.

இடஒதுக்கீடிற்காக போராடுவது மானமற்ற காரியம் அல்ல. போராடி வெற்றி பெற்றால் மானமுள்ள காரியம். போரடாடிக் கொண்டே இருந்தால், அதை விட மானமற்ற செயல் வேறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

எனவே அந்த மானத்தை காப்பாற்ற, இழந்ததை திரும்ப பெற இருப்பதை பறிக் கொடுத்தோம். இழந்ததை திரும்ப பெற நாம் களத்திற்கு வந்திருக்கிறோம். எதற்கும் அஞ்சாமல் வீரத்தோடு நடைபோடவேண்டும். நானே கூட அல்லது என்னைப் போன்று பதவிலேயே இருப்பவர்களும் கூட துச்சம் என மதிக்கிற காலம் வரும். அந்த காலம் என்று வேண்டுமானாலும் வரலாம்.

வேலை வாய்ப்பிலேயே எங்களுக்கு இத்தனை சதவீத கொடுங்கள் என்று கேட்டு கெஞ்ச வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இதுகுறித்து சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் மற்ற மத்திய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதுகிறேன்.

60 ஆண்டுகாலமாக போராடி பெற்ற இடஒதுக்கீட்டை டெல்லியில் வருகின்ற ஒரு உத்தரவு உடைத்து விடுகிறது.
இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என்றால், யாரையோ தனித்து பிரித்து விடுகிறோம். தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோர். எனவே இதர என்பது வேண்டாம். நாம் அனைவரும் பிற்படுத்தப்பட்டோர். இதர பிற்படுத்தப்பட்டோர் பாராளுமன்ற குழு அமைக்க வேண்டும் என்ற உங்கள் தீர்மானம் வரவேற்க கூடிய தீர்மானம். இதிலே இதர என்ற வார்த்தை தேவையில்லை.

பிற்படுத்தப்பட்டோருக்கான பாராளுமன்ற குழுவை உடனே அமைக்க வேண்டும் என போராடுவேன், வாதாடுவேன். அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டம் கூட்டி இது குறித்து முடிவு எடுத்து அதை டெல்லிக்கு எடுத்து செல்வேன்.

இது பாராளுமன்ற குழு அல்ல. பிற்படுத்தப்பட்டோருக்கான பாதுகாப்பு குழுவாக இருக்கும். ஆகவே அந்தகுழு அமைய நான் பாடுபடுவேன் என்ற உறுதியை இந் மாநாட்டில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மாநாட்டில் தி.க. தலைவர் கி.வீரமணி, மத்திய சமூக நலத்துறை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

2 Comments:

Blogger சிவபாலன் said...

நன்றி: தட்ஸ்தமிழ்

May 25, 2007 10:00 PM  
Anonymous Anonymous said...

ஆனால் இந்தி பேசும் சாதிகளுக்கு தமிழர்கள் என சொல்லுவது மானமற்ற காரியம்..

www.tn.gov.in/bcmbcmw/bclist.htm

தமிழ் பேசுபவர்களை 'அன்னியர்கள்' என புரளிப் போடுவது மானமற்ற காரியம்..

ஏழை 'முற்பட்டத்' தமிழர்கள் அல்லது பின் தள்ளப்பட்ட தமிழர்களை அரசாங்கம் ஒதுக்குவது மானமற்ற காரியம்..

தமிழ் சமுதாயத்தைப் பிரித்துவிட்டு 'தமிழ்ப் பற்றாளன்' என நடிப்பது மானமற்ற காரியம்..

அர்ஜுன் ஸிங் போன்ற இந்தி அரசியல்வாதிகளின் காலடியை மிகவும் மானமற்ற காரியம்..

கலைஞர் தொலைக்காட்சியில் தமிங்கலம், கொச்சைத் தமிழ் என்றும் மொழிகள் வளர்ச்சி பெறுவது மானமற்ற காரியம்..

தமிழிநாட்டு விமான நிலையங்களில் இந்தி பேசுவோர்க்கு இடஒதுக்கீடு, தமிழ் அறிக்கைகளின் நீக்கம், தமிழ் அறிக்கைகள் கொண்டவருவதாக சொல்லியப் பொய் வாக்கு அனைத்தும் மானமற்ற காரியம்..

June 11, 2008 3:12 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv