Thursday, June 14, 2007

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ


கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ

நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

பாடல்: கண்கள் இரண்டும் என்று
திரைப் படம்: மன்னாதி மன்னன்
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
நடிகை: பத்மினி

11 Comments:

Blogger சிவபாலன் said...

நன்றி: http://psusheela.org/

June 14, 2007 9:16 AM  
Blogger வவ்வால் said...

என்னோட எப்பொழுதும் பிடித்தமான பாடல்களில் இதுவும் ஒன்று,எங்கு ஒலித்தாலும் நின்று கேட்பேன். அடிக்கடி இது போல பாடல்களைப் போடுங்கள்.வேறு ஒரு வலைப்பதிவில் எனது நண்பர் இதே பாடலை தனது சொந்த குரலில் பாடி பதிவு செய்துள்ளார்.

June 14, 2007 9:27 AM  
Blogger கோவி.கண்ணன் said...

சிபா,

சிக்சுவேசனை மறக்க வைக்கும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.

அருமையான பாடல்.

- அன்புடன்
ஜிகே

June 14, 2007 9:36 AM  
Blogger VSK said...

பி.எஸ்.வீரப்பா வில்லன்.
அவர் கூடரத்தில் பத்மினி கைதியாக.
சாட்டையைச் சொடுக்கிய வண்ணாம் வில்லன் கட்டளையிட, பத்மினி ஆடுவது போல காட்சி.
மிகவும் வேகமான ஆட்டம்.
சும்மா சுழன்று, சுழன்று ஆடுவார்.
பின்னணி ம்யூஸிக்கில் எம்ஜிஆர் குதிரையில் பறந்து வருவார்!

எனக்குப் பிடித்த முதல் பத்து பாடல்களில் இதுவும் ஒன்று!

அளித்தமைக்கு நன்றி, சிபா!

June 14, 2007 10:05 AM  
Blogger மங்கை said...

அருமையான பாட்டு...

ஆனா இது தான் கோயமுத்தூர் குசும்புங்கண்ணா.. நீங்க மட்டும் ஏனுங்க அமைதியா இருக்கீங்க..நடத்துங்க நடத்துங்க..:-))

June 14, 2007 10:11 AM  
Blogger கோவி.கண்ணன் said...

சிபா,
பாட்டு
இங்கே இருக்கு !

June 14, 2007 10:25 AM  
Blogger சிவபாலன் said...

வவ்வால்,

வாங்க..

நிச்சயம் முயற்சிக்கிறேன்.

வருகைக்கு நன்றி

June 14, 2007 2:51 PM  
Blogger சிவபாலன் said...

GK,

என்ன பதிவு போட்டாலும் சிவாஜிதான் முன்நிலையில் இருக்கிறார்

June 14, 2007 2:52 PM  
Blogger சிவபாலன் said...

VSK அய்யா

மிக்க மகிழ்ச்சி. அந்த காட்சியை கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள். நன்றி

June 14, 2007 2:53 PM  
Blogger சிவபாலன் said...

மங்கை,

என்னங்க நீங்களே சிக்கவைத்திடுவீன்க போல.. Ha Ha Ha..

அமைதி தேடி...

June 14, 2007 8:39 PM  
Blogger சிவபாலன் said...

GK,

சுட்டிக்கு நன்றி

June 14, 2007 10:46 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv